Inspiration

சும்மா!! இருக்கீங்களா? நிற்கிறீங்களா?

பதினோராம் மணி வேளையிலும் அவன் போய் சும்மா நிற்கிற வேறு சிலரைக் கண்டு நீங்கள் பகல் முழுவதும் இங்கே சும்மா நிற்கிறதென்ன? என்று கேட்டான். அதற்கு அவர்கள், ஒருவரும் எங்களுக்கு வேலையிடவில்லை என்றார்கள். அவன் அவர்களை நோக்கி, நீங்களும் திராட்சைத்  தோட்டத்துக்குப் போங்கள். நியாயமானபடி கூலி பெற்றுக்கொள்வீர்கள் என்றான். மத்தேயு 20:6,7. கிறிஸ்துவில் அன்பான வாலிபத்தம்பி, தங்கைகளே, நமக்குள்ளே வல்லமையாய் கிரியை செய்கிற நம் ஆண்டவர் இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள். சும்மா என்ற வார்த்தையை தங்கள் உரையாடல்களில் உபயோகிக்காத தமிழ் மக்கள் இருக்கவே மாட்டார்கள். அதிலும் தெரு முனையில், கடை ஓரங்களில் நிற்கிற வாலிபர்களை பார்த்து, என்னப்பா தம்பி என்று கேட்டால் சும்மா…வந்தேன், சும்மா…நிற்கிறேன், சும்மா….பேசிட்டு இருந்தோம், சும்மாத்தான் சொன்னேன், சும்மாதான் இருக்கிறேன் என்று வார்த்தைக்கு வார்த்தை சும்மா என்று சொல்லிப் பழகி விட்டோம். இஸ்ரவேல் ஜனங்களின் பேச்சிலேயும் சும்மா என்ற வார்த்தை இருந்திருக்கிறது. 430 வருஷ அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாக்கப்பட்டு  கானானை நோக்கி இஸ்ரவேல் மக்கள் போய் கொண்டிருக்கும் போது, முன்னாள் செங்கடல், பின்னால் பார்வோன் சேணை துரத்திக்கொண்டு வரும்போது இஸ்ரவேலர் மோசேயைப் பார்த்து, ஏன் எங்களை அழைத்து வந்தீர்? சும்மா எங்களை விட்டு விடும் என்று சொன்னோமே என்று முறுமுறுக்கிறதைப் பார்க்கிறோம். வேதனையிலும், வெறுப்பிலும் நீங்கள் சும்மா நிற்கிறீங்களா? இருந்ததையெல்லாம் இழந்து வெறுமையாய் சும்மா இருக்கீங்களா? உங்களுக்காகவே இந்த நல்ல செய்தி.   

 

சும்மா இருக்கிற உங்களை இயேசு தள்ளுவதில்லை.  (யோவான் 6:37)

 

ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார். பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்து கொண்டார். உள்ளவைகளை அவமாக்கும்படி உலகத்தில் இழிவானவைகளையும், அற்பமாய் எண்ணப்பட்டவைகளையும், இல்லாதவைகளையும் தேவன் தெரிந்து கொண்டார். 1 கொரி 1:27,28 என்னிடம் ஒன்றுமேயில்லை, சர்ற்ட்ண்ய்ஞ், எதுவுமேயில்லை, ஒரு வேலையில்லை என்கிறதற்காக வெட்டியாய் சுத்திகிட்டு இருக்கிறவன்னு என்ன பேச்சு பேசுறாங்க, ஒரு தடவை மார்க் குறைஞ்சிடுச்சுனு, இந்த ஒரு தடவை லேட்டாயிருச்சுனு சொன்னா கேட்கவே மாட்டேங்குறாங்களே ஸ்கூல் போக, காலேஜ் போக, வேலைக்குப் போக பிடிக்கலை, பேசவே பிடிக்கலை, வாழவே பிடிக்கலை என்று குமிறிக் கொண்டிருக்கிறீர்களா? ஒன்றும் இல்லாத, பெலவீனமான, ஞானமற்ற உங்களைத்தான் இயேசு நேசிக்கிறார். ஏன் தெரியுமா? வேலை இல்லாம சும்மா கடைத்தெருவில் நின்றவர்களை அதிகாலமே தேடிச் சென்று, ஏன் சும்மா நிற்கிறீங்கன்னு விசாரித்து அவர்களுக்கு வேலையையும், கூலியையும் கொடுத்த எஜமானைப் போல, இயேசுவும் உங்கள் மேல் அன்பு வைத்து, உங்களைத் தெரிந்து கொண்டுள்ளார். அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால் உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்.” 1 பேதுரு 5:7  உங்களுக்கு என்ன இல்லை அதை அவரிடமே சொல்லுங்கள். அவர் இல்லாமையிலிருந்தும் ஒன்றை உருவாக்க வல்லவர். கொஞ்சத்தை பன்மடங்காக பெருகச் செய்ய வல்லவர். ஒன்னும் இல்லையே என்று உலகம் ஒதுக்கினாலும் உங்களுக்காக உயிர் கொடுத்த ஆண்டவர் உங்களையும் உங்கள் வேண்டுதலையும் தள்ளவே மாட்டார். பணத்தை கொட்டி படிக்க வைச்ச அம்மா அப்பா ஏசினாலும், பேசினாலும் படைத்தவர் உங்களை மறக்கமாட்டார். மாற்கு 11:2,3-லó பாருங்கள் மனுஷர் ஒருவரும் ஒருக்காலும் ஏறியிராத கழுதைக்குட்டியை ஆண்டவருக்கு வேண்டும் என்று அவிழ்த்துக் கொண்டு வரச் சொன்னார். அதின்மேல் வஸ்திரங்களைப் போட்டு அதின்மேல் ஏறிப்போனார். ராஜாதி ராஜாவை ஏற்றிச் சென்ற போது அந்த கழுதைக்கு எத்தனை மதிப்பு. உங்களை நேசிக்கிற, எனக்கு நீ வேண்டும் என்கிற இயேசுவை நீங்களும் உள்ளத்தில் ஏற்றுக்கொண்டு அவரிடம் உங்கள் இயலாமையையும் இல்லாமையையும் சொல்லுங்கள். செல்லுமிடமெல்லாம் அவரை சுமந்து செல்லுங்கள். உங்களுக்கும் உயர்வும், மதிப்பும் உண்டாகும். அதன்பின் நீங்கள் சும்மா வெறுமனே, வெறுமையாய் இருக்கமாட்டீர்கள். ஐயோ, நான் பண்ம்ங் ஜ்ஹள்ற்ங் பண்ணிட்டேனே, ச்ஹண்ப் ஆகிட்டேனே, கிடைச்சதையெல்லாம் ஏதாவது குறை சொல்லி விட்டுட்டேனே என்று கலங்காதீர்கள். உங்களுக்காகவே இப்பவும் இட்ஹய்ஸ்ரீங் கொடுக்க ஆண்டவர் காத்துக் கொண்டிருக்கிறார். 3, 6, 9, 11 ஆம் மணி வேளைகளிலும் வேலையைக் கொடுத்து கூலியைக் கொடுத்த எஜமானனைப் போல நம் ஆண்டவர் எந்தச் சூழ்நிலையிலும் உங்களைத் தள்ளாத ஆண்டவர் உங்களுக்கு வாய்ப்பையும், உயர்வையும் கட்டளையிடுவார். எனவே நம்பிக்கையை விட்டுவிடாதிருங்கள். சும்மா இருக்கிற உங்களை…இயேசு நேசிக்கிறார்.

 

சும்மா இருக்கிறதை இயேசு விரும்புவதில்லை 

 

ஒருவன் வேலை செய்ய மனதில்லாதிருந்தால் அவன் சாப்பிடவும் கூடாதென்று நாங்கள் உங்களிடத்தில் இருந்தபோது உங்களுக்குக் கட்டளையிட்டோமே. உங்களில் சிலர் யாதொரு வேலையும் செய்யாமல் வீண் அலுவற்காரராய் ஒழுங்கற்றுத் திரிகிறார்களென்று கேள்விப்படுகிறோம். இப்படிப்பட்டவர்கள் அமைதலோடே வேலை செய்து, தங்கள் சொந்த சாப்பாட்டைச் சாப்பிட வேண்டுமென்று நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே, அவர்களுக்கு கட்டளையிட்டுப் புத்தி சொல்லுகிறோம். 1 தெச 3:10 – 12. சும்மா நிற்கிறவர்களைத் தள்ளுவதில்லை, வெறுப்பதில்லை. ஆனால் சும்மா, எந்த முயற்சியும் செய்யாமல், எந்த வேலையும், உதவியும் செய்யாமல் சும்மா…டட்ர்ய்ங் மட்டும் பார்த்துக்கொண்டு சோம்பேறியாய் இருப்பதை அவர் விரும்புவதேயில்லை. வேலையில்லாம சும்மா இருக்கிறீங்களா என விசாரித்த அதே வார்த்தையில் அவருடைய கண்டிப்பும் கட்டளையும் தெரிகிறது. பகல் முழுவதும் இங்கே சும்மா நிற்கிறதென்ன? போங்கள். மிகுந்த சோம்பலினாலே மேல் மச்சுப் பழுதாகும். கைகளின் நெகிழ்வினாலே வீடு ஒழுக்காகும். பணமோ எல்லாவற்றிக்கும் உதவும். பிர 10:18 சோம்பேறியின் கை வேலை செய்ய சம்மதியாது. நீதி 21:25. ஒரு தகப்பனார் ம.எ முடித்த தன் பையனை காலை 9 மணிக்கு வெளியே சென்று இரவு 9 மணிக்குள் வீட்டிற்குள்ளாக வந்து விடவேண்டும். மேலும் மேற்படிப்பு படிப்பதற்கான செலவை நீயே பார்த்துக்கொள். ஏதாவது டஹழ்ற் ற்ண்ம்ங் ஒர்க்ஷ தேடிக்கொள் என்று சொன்னதாகச் சொல்லி அப்பதான் பொறுப்பு வரும். பணத்தையும், நேரத்தையும் ஜ்ஹள்ற்ங் பண்ணமாட்டாங்க என்றார். இன்றைக்கு பெற்றோர் உங்களிடமிருந்து எதிர்பார்ப்பது பணத்தையல்ல. நீங்கள் பொறுப்பாய், சிறப்பாய் உலகில், தேவசமூகத்தில் உயர்ந்து நிற்க வேண்டும் என்பதே. எனவே அம்மா, அப்பா கிட்ட உங்களுக்கிருக்கிற வருத்தத்தை, கோபத்தை விட்டுவிட்டு, உங்களைத் தள்ளாத, உங்களுக்காக யாவையும் செய்து முடிக்கிற இயேசுவின் துணையுடன் வேலைக்காகப் பிரயாசப்படுங்கள். படிப்பு மற்றும் எல்லாக் காரியங்களிலும் அப்படியே முயற்சி செய்யுங்கள். அதற்க்கேற்ற பலனைப் பெறுவீர்கள். இஸ்ரவேலர் எல்லாரும் மீதியானியர் என்ற எதிரிகளுக்குப் பயந்து ஒளிந்து கொண்டிருந்தபோது பலவீனமான, பயந்த சுபாவமுள்ள கிதியோன் மட்டும் கோதுமையைப் போரடித்துக் கொண்டிருந்தான். சும்மாயிருக்க அவனுக்கு மனது வரவில்லை. கையில் கிடைச்சதையாவது காப்பாற்றி விடவேண்டும். மக்களுக்கு உதவ வேண்டும் என்ற முயற்சியை, வேலையைக் கர்த்தர் கூட இருந்து ஆசீர்வதித்தார். எதிரிகள் கையினின்று மீட்ட தலைவனாய், ஞானத்தோடு செயல்பட்டு  வெற்றி பெற்ற வீரனாய் உயர்த்தப்பட்டார். அந்நிய தேசத்தில் அடிமையாய், ஒரு ஆதாரமும் இல்லாமல், ஒன்றுமில்லாமல் சென்ற யோசேப்பு, தானியேல், எஸ்தர் தங்கள் கடமைகளை, பொறுப்புகளை, வேலைகளை உண்மையோடும், உற்சாகத்தோடும் (நீதி31:13) செய்ததினால் உயர்ந்த பதவிகளில் ராஜாக்களோடு அமர்த்தப்பட்டார்கள். நான் வாங்குகிற சம்பளத்திற்கு இதை செஞ்சா போதும், இத என்ன ஞஜ்ய்ங்ழ், ஆர்ள்ள்  பார்க்கவா போறார் என்ற எண்ணங்களை மாற்றிக் கொள்ளுங்கள். தன் வேலையில் ஜாக்கிரதையாயிருக்கிறவனை நீ கண்டால், அவன் நீசருக்கு முன்பாக நில்லாமல் ராஜாக்களுக்கு முன்பாக நிற்பான். நீதி 22:29. தாலந்து உவமையில் 5, 2 தாலந்து வாங்கினவர்களின் உழைப்பைப் பாராட்டி இன்னும் அதிகமாய்க் கொடுத்து பாராட்டுகிறதைப் பார்க்கிறோம் மத் (25:15 – 30). ஆனால் ஒரு தாலந்து வாங்கினவனோ அதை வைத்து முன்னேற்றத்திற்காக எந்த வேலையும் செய்யாத போது எஜமானனின் கோபத்திற்குள்ளாகி, சோம்பேறியே என்ற பேச்சுடன் உள்ளததையும் இழந்து விடுகிறான். நீங்களும் இந்த நிலையிலிருந்தால் இயேசுவை நம்பி எழும்புங்கள், செயல்படுங்கள். உங்களுக்கு எதிரானவைகளை முறியடிக்கும்படி கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார். நீங்கள் சும்மாயிருப்பீர்கள். (பொறுமையோடும், நம்பிக்கையோடும் இருங்கள்) (யாத் 14:14). அதினதின் காலத்தில் நேர்த்தியாய் செய்கிற ஆண்டவர் தாமே எல்லாவற்றிலும் சுகமாய் வாழச் செய்வாராக!.

Youth Special - Sis. Prema David