Inspiration

இருக்கிறவராகவே இருக்கிறேன்

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் சகோதரிகளுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள். காலங்கள் மாறினாலும், ஆண்டுகள் மாறினாலும் நம் ஆண்டவர் இயேசு இருக்கிறவராகவே இருக்கிறவர். கடந்த வருடங்களில் எல்லாம் நம் கூட இருந்து நம்மை குறைவில்லாமல் காத்து ஆசீர்வதித்து நடத்தினவர், இந்த புதிய வருடத்திலும் நம்மோடு இருந்து ஆச்சரியமாய் நம்மை நடத்துவார். இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தின் அடிமைத்தனத்தில் சிக்கித்தவித்தபோது நாம் இதிலிருந்து விடுபட முடியுமா? யார் நம்மைக் காப்பாற்றுவார் இந்த வேதனையிலிருந்து நாம் வெளியே வருவோமா? என்று கலங்கிக் கொண்டிருந்த அவர்கள் கூக்குரலைக் கேட்ட தேவன் மோசேயை அழைத்து, என் ஜனங்கள் அனுபவிக்கிற வேதனைகளை அறிந்திருக்கிறேன், அவர்கள் கூக்குரல் என் சந்நிதியில் வந்து எட்டினது. எகிப்தியர் அவர்களை ஒடுக்குகிற ஒடுக்குதலை கண்டேன். உன்னை பார்வோனிடத்தில் அனுப்புகிறேன் வா என்று அழைத்தார். மோசே கர்த்தரிடம் உங்கள் பிதாக்களின் தேவன் என்னை உங்களிடத்தில் அனுப்பினார் என்றால் அவருடைய நாமம் என்ன? என்று அவர்கள் என்னிடத்தில் கேட்பார்களே அவர்களுக்கு என்ன சொல்வேன் என்றான். யாத் 3:14,15–ல் அதற்கு தேவன், இருக்கிறவராக இருக்கிறேன் என்று மோசேயுடனே சொல்லி இருக்கிறேன் என்பவர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று இஸ்ரவேல் புத்திரரோடே சொல்வாயாக என்றார். மேலும் தேவன் மோசேயை நோக்கி ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாயிருக்கிற உங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தர் என்னை உங்களிடத்திற்கு அனுப்பினார் என்று இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்வாயாக என்றைக்கும் இதுவே என் நாமம், தலைமுறை தலைமுறைதோறும் இதுவே என் பேர்ப்பிரஸ்தாபம் என்றார். நான் இருக்கிறேன் என்று போய்ச் சொல்லு என்று மோசேயை அனுப்பி எல்லாவித அடிமைத்தனத்திலிருந்தும் அவர்களை வெளியே கொண்டு வந்தார். அதே தேவன் நாம் கடந்து வருகிற எந்த சூழ்நிலை நடுவிலும் நம்மைக் காப்பாற்றி, மீட்டு வெளியே கொண்டு வர அவர் இருக்கிறவராகவே இருக்கிறார். யோவான் 8:58-ல் அதற்கு இயேசு, ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். என்ன ஆகுமோ?, எப்படி நடக்குமோ? இதெல்லாம் நடக்குமா? என்று சோர்ந்து போகாதிருங்கள். ஐந்து அப்பம், இரண்டு மீன் தான் இருந்தது ஆனால் சாப்பிட ஐயாயிரத்திற்கும் அதிகமான பேர் இருந்தார்கள். எப்படிப்போதும்? நன்றாய் சாப்பிடக்கூடிய ஒரு நபருக்குத்தான் அது சரியாய் இருக்கும். ஆனால் இயேசு இருக்கிறார், அவர் இருந்தால் போதும் ஐயாயிரத்திற்கும் அதிகமான பேர் திருப்தியாய் சாப்பிட்டு மீதம் எடுக்க இயேசு போதுமானவராய் இருந்தார். அதே ஆண்டவர் இயேசு உங்களையும் நடத்த வல்லவர். நம்மிடம் உள்ள கொஞ்சத்தை ஆசீர்வதித்து, பெருகப்பண்ண இயேசு இருக்கிறவராகவே இருக்கிறார். 1.நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன் நாம் வாழுகிற இந்த கடைசி காலத்தில் தேசத்தில் நடக்கிற காரியங்களைக் காணும் போது பயம் சூழுகிறது. எத்தனை கொலைகள், கொள்ளைகள், பாலியல் வன்கொடுமைகள், ஏமாற்றுதல், லஞ்சம், ஊழல், மதுபானங்கள், போதை வஸ்துக்களின் பயன்பாடுகள் அதிகரிப்பது, முறைகேடான காரியங்கள், கலாச்சார சீரழிவுகள், அரசியலின் காரியங்கள், விலைவாசி உயர்வுகள் இதைப் பார்க்கும் போது இந்த பொல்லாத உலகில் பாதுகாப்பாய் வாழ முடியுமா? வரும் சந்ததிகளின் எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது?. திருச்சபைகள், ஊழியங்களின் நிலை என்னவாகும்? பயபக்தி நிலைநிற்குமா? பூமியில் சந்ததிகள் கர்த்தரை சேவிக்குமா? இன்னும் இது போன்ற ஜீ.எஸ்.டி வரிச்சுமைகள், பல்வேறு புதிய சட்டங்கள், வேத வசனத்தின் நிறைவேறுதல், ஆண்டவரின் வருகை சமீபம் இதையெல்லாம் யோசிக்கும் போது பயம் வருகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இருக்கும் நம்மைப் பார்த்துதான் ஆண்டவர் நீ பயப்படாதே! நான் உன்னுடனே இருக்கிறேன் என்று சொல்கிறார். ஏசாயா 41:10, ஏசாயா 43:5-லும் பயப்படாதே! நான் உன்னோடே இருக்கிறேன். நான் உன் சந்ததியைக் கிழக்கிலிருந்து வரப்பண்ணி, உன்னை மேற்கிலும் இருந்து கூட்டிச் சேர்ப்பேன் என்கிறார். 2 நாளா 20:3-ல் அப்பொழுது யோசபாத் பயந்து, கர்த்தரைத் தேடுகிறதற்கு ஒருமுகப்பட்டு, யூதாவெங்கும் உபவாசத்தைக் கூறுவித்தான் என்று பார்க்கிறோம். ஏன்? அவனைச் சுற்றிலும் ஏராளமான இராஜாக்கள் சூழ்ந்து விட்டார்கள். யோசபாத் பயந்தான் ஒரு பிரச்சனையா? சமாளித்து விடலாம். ஆனால் வாழ்க்கையே பிரச்சனை என்றால் சமாளிக்க முடியவில்லை என்பது போல யோசபாத் கர்த்தரை நோக்கி எங்கள் பிதாக்களின் தேவனே! ஒருவரும் உம்மை எதிர்க்கக்கூடாது. 12-ஆம் வசனத்தில் எங்கள் தேவனே, அவர்களை நியாயந் தீர்க்கமாட்டீரோ? எங்களுக்கு விரோதமாய் வந்த இந்த ஏராளமான கூட்டத்திற்கு முன்பாக நிற்க எங்களுக்குப் பெலனில்லை, நாங்கள் செய்ய வேண்டியது இன்னதென்று எங்களுக்குத் தெரியவில்லை. ஆகையால் எங்கள் கண்கள் உம்மையே நோக்கிக் கொண்டிருக்கிறது என்று ஜெபித்தான். கர்த்தருடைய ஆவியானவர் இறங்கி பேசினார். 15-ஆம் வசனத்தில் சகல யூதா கோத்திரத்தாரே, எருசலேமின் குடிகளே, ராஜாவாகிய யோசபாத்தே, கேளுங்கள், நீங்கள் இந்த ஏராளமான கூட்டத்திற்குப் பயப்படாமலும், கலங்காமலும் இருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். இந்த யுத்தம் உங்களுடையதல்ல, தேவனுடையது என்று யோசபாத்தோடு கர்த்தர் இருந்து, அவன் பயந்த விஷயத்தை ஒன்றுமில்லாமல் போகச்செய்து, ஜெயத்தைக் கொடுத்து காப்பாற்றினவர், நம்மையும், நாம் பயப்படுகிற எந்த காரியத்திலும் கைவிடாமல் நீ பயப்படாதே! நான் உன்னுடனே இருக்கிறேன் என்று கூட இருந்து தப்புவித்து, நடத்துவார். பயப்படாதிருங்கள், இயேசுவை நோக்கி யோசபாத்தைப் போல ஜெபியுங்கள். இஸ்ரவேலர் கானானைச் சுற்றிப்பார்க்க போனபோது எதிரிகளை கண்டு பயந்து விட்டார்கள். அவர்கள் நம்மை விட பெரியவர்கள், நாங்கள் அவர்கள் பார்வையில் வெட்டுக்கிளிகளைப் போல் இருந்தோம், எங்கள் பார்வையிலும் அப்படியே இருந்தோம் என்று தங்களும் தளர்ந்ததுமன்றி மற்றவர்களின் மனதையும் கரையப் பண்ணினார்கள். விசுவாசத்தை விட்டு வழுவப்பண்ணினார்கள். ஆனால் காலேபும், யோசுவாவும் தேசத்தைப்பற்றிய நல்ல செய்தியைக் கொண்டு வந்தார்கள், மற்ற பத்துபேரும், நாம் எகிப்துக்கே திரும்பிப் போய் விடுவோம் என்றார்கள். நாங்களும் எங்கள் குடும்பத்தினரும் வனாந்திரத்திலே செத்துப் போகும்படி எங்களைக் கொண்டு வந்ததென்ன என்று முறுமுறுத்து, அழுது மோசேக்கும், ஆரோனுக்கும் விரோதமாக எழும்பினார்கள். அப்போது தான் யோசுவாவும், காலேப்பும் எண் 14:9-ல் கர்த்தருக்கு விரோதமாக மாத்திரம் கலகம் பண்ணாதிருங்கள், அந்த தேசத்தின் ஜனங்களுக்கு நீங்கள் பயப்பட வேண்டியதில்லை. அவர்கள் நமக்கு இரையாவார்கள், அவர்களைக் காத்த நிழல், அவர்களை விட்டு விலகிப் போயிற்று. கர்த்தர் நம்மோடே இருக்கிறார், அவர்களுக்குப் பயப்பட வேண்டியதில்லை என்றார்கள். கர்த்தர் நம்மோடு இருகóகிறார், எதிரிகள் எவ்வளவு பலம் நிறைந்தவர்களாய் இருந்தாலும் நாம் அவர்களுக்குப் பயப்பட வேண்டாம். எரேமியாவை கர்த்தர் அழைத்த போது, நீ சிறுபிள்ளை என்று சொல்லாதே என்றார். எரே 1:8-ல் நீ அவர்களுக்குப் பயப்பட வேண்டாம், உன்னைக் காக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன் என்று கர்த்தர் சொன்னார். எரே 15:20-ல் உன்னை இந்த ஜனத்துக்கு எதிரே அரணான வெண்கல அலங்கமாக்குவேன். அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தம் பண்ணுவார்கள், ஆனாலும், உன்னை மேற்கொள்ள மாட்டார்கள். உன்னை இரட்சிப்பதற்காகவும், உன்னைத் தப்புவிப்பதற்காகவும் நான் உன்னுடனே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். உபா 20:1-ல் நீ உனó சத்துருக்களுக்கு எதிராக யுத்தஞ்செய்யப் புறப்பட்டுóப் போகையில் குதிரைகளையும், இரதங்களையும், உன்னிலும் பெரிய கூட்டமாகிய ஜனங்களையும் கண்டால், அவர்களுக்குப் பயப்படாயாக. உன்னை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார். உபா 7:17-21 வரை வாசிக்கும் போது அந்த ஜாதிகள் என்னிலும் ஜனம் பெருத்தவைகள், நான் அவர்களைத் துரத்தõவிடுவது எப்படி முடியும் என்று சொல்வாயானால் பார்வோனுக்கும், எகிப்தியர் யாவருக்கும் செய்ததையும் நினைத்துக் கொள், அவர்களுக்குப் பயப்படாதிரு, நீ பார்த்துப் பயப்படுகிற எல்லா ஜாதிகளுக்கும் உன் தேவனாகிய கர்த்தர் அப்படியே செய்வார். அவர்களைப் பார்த்து பயப்பட வேண்டாம். உங்கள் தேவனாகிய கர்த்தர், உங்களுக்குள்ளே இருக்கிறார் என்று மோசே ஜனங்களைப் பெலப்படுத்தினதை வாசிக்கிறோம். நமக்கு எதிராக பார்வோனின் சேனை வந்தாலும், குதிரைகளும், இரதங்களும் வந்தாலும் பயப்படாமல் கர்த்தர் என்னோடு இருக்கிறார். எதõர்ப்புகளை, எதிரிகளை அவர் முறியடிப்பார் என்று தைரியமாக இருங்கள். பாலாக் என்ற ராஜா பிலேயாம் என்ற தீர்க்கதரிசியை அழைத்து எனக்காக இந்த இஸ்ரவேலை சபிக்க வேண்டும் என்றான். பிலேயாம் சபிக்க முயன்ற போது எண் 23:20,21-ல் இதோ, ஆசீர்வதிக்கக் கட்டளை பெற்றேன், அவர் ஆசீர்வதிக்கிறார், அதை நான் திருப்பக்கூடாது. அவர் யாக்கோபிலே அக்கிரமத்தைக் காண்கிறதும் இல்லை. இஸ்ரவேலிலே குற்றம் பார்க்கிறதும் இல்லை. அவர்களுடைய தேவனாகிய கர்த்தர் அவர்களோடே இருக்கிறார். ராஜாவின் ஜெயகெம்பீரம் அவர்களுக்குள்ளே இருக்கிறது. நம்முடைய பிள்ளைகள் தவறு செய்தால் நாம் எவ்வளவு கண்டிப்போம். ஆனால் அடுத்தவர் நம் பிள்ளை மீது கை வைக்க நாம் அனுமதிப்பதில்லை. நம் தேவன் இஸ்ரவேலாகிய நமக்குத் தகப்பன், அவர் நம்மை மன்னித்து, நமக்கு இரங்குகிறவர். நம்மிடம் உள்ள குறைகளை, அக்கிரமத்தை மன்னித்து, நம்மை நேசித்து, நம்மை ஆசீர்வதிக்கிறவர். நாம் மட்டும் நம் இருதயத்தை தாழ்த்தி, நம்மை ஆராய்ந்து, உமக்குப் பிரியமில்லாத ஒன்றும் எனக்கு வேண்டாம். உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்கு எப்பொழுதும் உதவி செய்யும் என்று ஜெபித்து அர்ப்பணிக்க வேண்டும். சங் 139:7,8-ல் உம்முடைய ஆவிக்கு மறைவாக எங்கே போவேன்?, உம்முடைய சமூகத்தை விட்டு எங்கே ஓடுவேன்?. நான் வானத்திற்கு ஏறினாலும், நீர் அங்கே இருக்கிறீர். நான் பாதாளத்தில் படுக்கை போட்டாலும், நீர் அங்கேயும் இருக்கிறீர் என்ற வார்த்தையின்படி நாம் எங்கு சென்று, என்ன செய்தாலும் அங்கே அவர் இருக்கிறார் என்ற பயத்தோடு வாழ அர்ப்பணிப்போம். 2.யேகோவா ஷம்மா சுற்றிலும் இருக்கிறார். நாம் எங்கு வாழ்ந்தாலும், என்ன செய்தாலும் நம்மை சுற்றிலும் இருக்கிறவர் நம் தேவனாகிய கர்த்தர் இயேசு. சங் 125:2-ல் பர்வதங்கள் எருசலேமைச் சுற்றிலும் இருக்குமாப்போல், கர்த்தர் இதுமுதல் என்றென்றைக்கும் தம்முடைய ஜனத்தைச் சுற்றிலும் இருக்கிறார் என்று சங்கீதக்காரன் சொல்கிறார். எசே 48:31-35 வரை வாசித்தால் இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களுகóகு வாசல் நகரத்தில் இருக்கிறது. அதைச் சுற்றிலும் அளவு பதினெண்ணாயிரம் கோலாகும் அந்நாள் முதல் நகரம் யேகோவா ஷம்மா என்று பெயர் பெறும். கர்த்தர் நம்மைச் சுற்றிலும், சூழ்ந்து நம் கூடவே இருக்கிறவர் என்று வாசிக்கிறோம். ஆயிரம் வருட அரசாட்சியில் எருசலேமுக்கு கொடுக்கப்படுகிற பெயர். தமிழ் வேதாகமத்தில் யேகோவா ஷம்மா என்றால் கர்த்தர் அங்கே இருக்கிறார் என்று கொடுக்கப்பட்டுள்ளது. பர்வதஙóகள் எருசலேமைச் சுற்றிலும் இருக்கிறது போல கர்த்தர் நம்மைச் சுற்றிலும் இருக்கிறார். சங் 46:5-ல் தேவன் அதின் நடுவில் இருக்கிறார், அது அசையாது, அதிகாலையில் தேவன் அதற்குச் சகாயம் பண்ணுவார். பூமி நிலைமாறினாலும், மலைகள் நடுசமூத்திரத்தில் சாய்ந்து போனாலும், ஜலங்கள் கொந்தளித்துப் பொங்கி, அதின் பெருக்கினால் பர்வதங்கள் அதிர்ந்தாலும் நாம் பயப்படோம். ஏனென்றால் தேவன் அதின் நடுவில் இருக்கிறார். தாவீது வாழ்க்கையைப் பாருங்கள் சங் 23:4-ல் நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன், தேவரீர் என்னோடே கூட இருக்கிறீர். எந்த பொல்லாப்பின் பாதையில் நான் நடந்தாலும் என் தேவன் என்னோடு இருக்கிறீர் என்றான். சங் 56:9-ல் நான் உம்மை நோக்கிக் கூப்பிடும் நாளில் என் சத்துருக்கள் பின்னிட்டுத் திரும்புவார்கள். தேவன் என் பட்சத்தில் இருக்கிறார் என்பதை அறிவேன் என்கிறான். சங் 118:6,7-ல் கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார், நான் பயப்படேன், மனுஷன் எனக்கு என்ன செய்வான்? எனக்கு அனுகூலம் பண்ணுகிறவர்கள் நடுவில் கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார். என் சத்துருக்களின் சரிகட்டுதலைக் காண்பேன். எத்தனை சத்துருக்கள் எதிராக வந்தாலும் தேவன் என் பட்சத்தில் இருக்கிறார் என்று அறிந்து விசுவாசிக்கும்படி சங்கீதக்காரனின் வாழ்க்கை இருந்தது. இன்று நாம் அப்படி விசுவாசித்துச் சொல்லுகிறோமா? தேவன் என் பட்சத்திலிருந்தால் எனக்கு விரோதமாய் இருப்பவன் யார்? அப் 2:25-ல் தாவீது, கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக நிறுத்தி நோக்கிக் கொண்டிருக்கிறேன், நான் அசைக்கப்படாதபடி, அவர் என் வலதுபாரிசத்திலே இருக்கிறார். என்றான். நாம் மாத்திரம் அல்ல மற்றவர்களும் தேவன் நம்மோடிருப்பதைக் காண்பார்கள். தாவீது கர்த்தர் தன்னோடு இருக்கிறார் என்று அவன் மாத்திரமல்ல, 1 சாமு 16:18-ல் அப்பொழுது சவுலின் வேலைக்காரரில் ஒருவன் பிரதியுத்தரமாக இதோ, பெத்லெகேமியனாகிய ஈசாயின் குமாரன் ஒருவனைக் கண்டிருக்கிறேன், அவன் பராக்கிரமசாலி, யுத்தவீரன், காரியசமர்த்தன், சவுந்தரியமுள்ளவன் கர்த்தர் அவனோடே கூட இருக்கிறார் என்றான். 1 சாமு 18:12-ல் கர்த்தர் தாவீதோடே கூட இருக்கிறார் என்று சவுல் கண்டான். 2சாமு 7:3-ல் அப்பொழுது நாத்தான் தீர்க்கதரிசி தாவீதை நோக்கி, நீர் போய் உம்முடைய இருதயத்தில் உள்ளபடியெல்லாம் செய்யும், கர்த்தர் உம்மோடு இருக்கிறாரே என்றான். யாக்கோபோடு தேவன் இருந்தார். ஆதி 31:5-ல் தன் மனைவிகளை அழைத்து உங்கள் தகப்பனுடைய முகம் நேற்று முந்தைய நாள் இருந்தது போல இருக்கவில்லை என்று எனக்குத் தோன்றுகிறது. ஆனாலும் என் தகப்பனுடைய தேவன் என்னோடேகூட இருக்கிறார் என்றான். யாக்கோபின் வாழ்வில், குடும்ப உறவில் ஏற்பட்ட துன்பத்தை மாற்றி அவனோடு இருந்து நன்மை செய்தார். ஆதி 28:15-ல் நான் உன்னோடே இருந்து, நீ போகிற இடத்திலெல்லாம் உன்னைக் காத்து இந்தத் தேசத்துக்கு உன்னைத் திரும்பி வரப்பண்ணுவேன். நான் உனக்குச் சொன்னதைச் செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை என்றார். ஆண்டவர் யாக்கோபுக்கு கொடுத்த வாக்கை அப்படியே நிறைவேற்றினார். நான் உன்னோடு இருந்து, இந்த தேசத்துக்குத் திரும்பப் பண்ணுவேன் என்று சொல்லி அப்படியே நிறைவேற்றினார். யோசேப்பின் வாழ்விலே கர்த்தர் இருந்தார். ஆதி 39:2,3-ல் கர்த்தர் யோசேப்போடே கூட இருந்தார். கர்த்தர் யோசேப்போடே இருக்கிறார் என்பதை அவன் எஜமான் போத்திபார் கண்டு, எல்லாப் பொறுப்பையும் அவனிடம் ஒப்படைத்தான். சங் 14:5-ல் அங்கே அவர்கள் மிகவும் பயந்தார்கள். தேவன் நீதிமானுடைய சந்ததியோடே இருக்கிறாரே என்ற வார்த்தையின்படி நம்முடைய முற்பிதாக்களோடே இருந்த தேவன் நம்மோடும் இருந்து எல்லா தீமைக்கும் விலக்கிக் நம்மைக் காப்பார். 3.பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடு இருக்கிறார். இந்த வார்த்தையை கிதியோன் கேட்டபோது எந்த மகிழ்ச்சியும் அவனிடம் இல்லை. காரணம் பல இழப்புகள். தேசம் பாழாகி, குடும்பங்கள் சிதறி, வாழóவாதாரம் பாதிக்கப்பட்டு மீதியானியர் கைகளிலிருந்து கோதுமையைக் காப்பாற்ற ஆலைக்கு மறைவாக போரடித்துக் கொண்டிருந்தான். அப்பொழுது தேவனுடைய தூதனானவர் நியாய 6:12,13-ல் அவனுக்குத் தரிசனமாகி பராக்கிரமசாலியே, கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார். அப்பொழுது கிதியோன் அவரை நோக்கி, ஆ! என் ஆண்டவனே, கர்த்தர் எங்களோடே இருந்தால், இவையெல்லாம் எங்களுக்கு நேரிடுவானேன்?, கர்த்தர் எங்களை எகிப்திலிருந்து கொண்டுவந்தார் என்று எங்கள் பிதாக்கள் எங்களுக்கு விவரித்துச் சொன்ன அவருடைய அற்புதங்களெல்லாம் எங்கே?. எங்களை மீதியானியர் கையில் ஒப்புக் கொடுத்தாரே என்றான். 16-ஆம் வசனத்தில் அதற்குக் கர்த்தர் நான் உன்னோடே இருப்பேன், ஒரே மனுஷனை முறிய அடிப்பது போல நீ மீதியானியரை முறிய அடிப்பாய். இது தான் வாக்குதத்தம், கிதியோனுக்கு தேவன் பேசினார். அவன் பெரிய பராக்கிரமசாலி அல்ல, உண்மையில் பயப்படுகிறவன், அது ஆண்டவருக்கும் தெரியும். நியாய 7:10-ல் போகப்பயப்பட்டாயானால், அந்த சேனையிடம் நீயும், உன் வேலைக்காரனும் போய் என்ன பேசுகிறார்கள் என்பதை கவனி என்கிறதிலிருந்து ஆண்டவருக்கு இவன் பயப்படுகிறவன் என்று தெரியும் என்று அறியலாம். அப்படி பயப்பட்ட பலவீனமான அவனைக் கொண்டுதான் தேவன் இஸ்வேலை மீதியானியரின் கைக்கு நீங்கலாக்கி இரட்சித்தார். இன்றைக்கும் நமக்கு பலவிதமான பலவீனங்கள் இருக்கலாம் ஆனால் நம்மோடு இருக்கிற கர்த்தர் பலவீனமானவரல்ல. அவர் நம்மோடு இருந்து நம்மை பலப்படுத்தி, தம்முடைய பெரிய இரட்சிப்பை செய்யப் போகிறார். அன்றைக்கு மீதியானியர் கையில் இஸ்ரவேலர் அகப்பட்டு, பாதிக்கப்பட்டது போல இன்றைக்கு நமது பூமியில் பலவிதமான சத்துருவின் பிடியில் அகப்பட்டு விடுதலை பெற முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிற, ஒவ்வொருவரையும் விடுவிக்க நம்மைத் தான் தேவன் அழைக்கிறார். பராக்கிரமசாலியே! என்ற இடத்தில் உங்கள் பேரைப் போட்டு வாசித்துப் பாருங்கள். உன் குடும்பத்தை, பட்டணத்தை, தேசத்தை கிராமத்தை மீட்க கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்று சொல்லுங்கள். ஆகாயó 2:4-ல் பிரதான ஆசாரியரை ஆண்டவர் திடப்படுத்தினார். வேலையை நடத்துங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். நான் உன்னோடே இருக்கிறேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். ஆகாய் 1:13-லும் அதையே சொல்லுகிறார். ஏசாயா 61:1-4 வரை வாசிக்கும் போது கர்த்தராகிய தேவனுடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார். சிறுமைப்பட்டவர்களுக்கு சுவிசேஷத்தை அறிவிக்க கர்த்தர் என்னை அபிஷேகம் பண்ணினார். அந்த அபிஷேகம் தான் நம்மைப் பெலப்படுத்தி, இருதயம் நொறுங்குண்டவர்களை, கட்டுண்டவர்களை, சிறைப்பட்டவர்களை, துயரப்பட்டவர்களை காப்பாற்றும். அதை நம்மைக் கொண்டு தேவன் செய்வார். அதற்காகத் தான் அவர் நம்மோடு இருக்கிறார். இந்த செய்தியை வாசிக்கிற ஒவ்வொருவரோடும் தேவனாகிய கர்த்தர் இயேசு கூடவே இருந்து நம்மை ஆசீர்வதிப்பாராக!.  

By Sis. Kala VincentRaj