Inspiration

என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப் போவதில்லை

என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப் போவதில்லை, நான் இஸ்ரவேலின் நடுவில் இருக்கிறவரென்றும், நானே உங்கள் தேவனாகிய கர்த்தர், வேறெருவர் இல்லையென்றும் அறிந்து கொள்வீர்கள். என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப் போவதில்லை. யோவேல் 2:26,27. கிறிஸ்துவில் அன்பான வாலிபத்தம்பி, தங்கைகளே, அவமானத்தை எண்ணாமல் சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தில் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிற நம் ஆண்டவர் இயேசுவின் நாமத்தில் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். பத்தாம் வகுப்பில் 460-க்கு மேல் மார்க் எடுத்து, பன்னிரண்டாம் வகுப்பில் மார்க் குறைந்ததால் விரும்பியபடி என்ஜினியரிங்க்கு அல்ல்ப்ஹ் கூட பண்ணமுடியாமல் ராஜாவின் பெற்றோர்கள் திகைத்து நின்றார்கள். ஏனென்றால் அப்பா வேலை பார்த்த மில்லும் சரியாக ஓடவில்லை. அவன் அக்கா ஆழ்ஹய்ஸ்ரீட் டர்ள்ற் ஞச்ச்ண்ஸ்ரீங்-ல் ஙஹள்ற்ங்ழ்-ஆகத்தான் வேலை பார்த்தார்கள். அவன் அண்ணனும் என்ஜினியரிங் படித்ததால் அவனுக்கும் ஙங்ள்ள் ஊங்ள்ள் கட்டி இவனையும் படிக்க வைக்க முடியாது. பத்தாம் வகுப்பு மார்க் வைத்து இவனுக்கும் டர்ள்ற் ஞச்ச்ண்ஸ்ரீங் -ல வேலை வாங்கவேணடியது தான் என்று முடிவு பண்ணினார்கள். இரண்டு பிள்ளைகளை படிக்க வச்சிட்டு, மூன்றாவது பிள்ளையாகிய இவனை படிக்க வைக்கலனா பின்னாடி என்னைய மட்டும் படிக்க வைக்கலன்னு வேதனைப்படுவானே எப்படியாவது படிக்க வையுங்க என்று மற்றவர்கள் சொன்னாலும், அவனின் அம்மாவோ என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப் போவதில்லை-னு ராஜாவின் படிப்புக்காக தேவன் சொன்னாரே, அந்த வார்த்தையை அவர் நமக்கு நடத்திக் காண்பிக்களையே என்று அங்கலாய்த்து அன்று 2004-ஆம் வருடம் மே மாதம் 3-வது சனிக்கிழமை சர்ச்சில் நடந்த உபவாச கூட்டத்தில் கலந்து கொண்டு ஆண்டவரே எங்களோடு பேசும் என்று காத்திருந்தார்கள். செய்தியின் நேரத்திலே பாஸ்டர் மூலம் ஆண்டவர் சொன்னார் இங்கு வந்திருக்கிற நிறைய பேர் நீங்க கேட்கிற கேள்விக்கு ஆண்டவரும் தனது கேள்வியின் மூலம் உங்களுக்குப் பதில் தருகிறார். எடுத்து வாசியுங்கள் மீகா 2:7 என்றார். யாக்கோபு வம்சம் என்று பேர் பெற்றவர்களே, கர்த்தரின் ஆவி குறுகியிருக்கிறதோ?, அவருடைய கிரியைகள் இவைகள் தானோ?, செம்மையாய் நடக்கிறவனுக்கு என் வார்த்தைகள் நன்மை செய்யாதோ? இந்த வார்த்தையைக் கேட்டு அவன் அம்மா தன்னோடு தான் ஆண்டவர் பேசுகிறார் என்று அதை அப்படியே விசுவாசித்து, அவருடைய ஜனமாகிய எங்களுக்கு நிச்சயம் அவர் வார்த்தை நன்மை செய்யும், அவர் எங்களை வெட்கப்பட்டுப் போக விடமாட்டார் என்று நம்பிக்கையைப் பெற்று, விசுவாசத்தோடு என்ஜினியரிங் படிப்பிற்கு அல்ல்ப்ஹ் பண்ணினார்கள். அதுவரை ஆழ்ஹய்ஸ்ரீட் டர்ள்ற் – ல் ஙஹள்ற்ங்ழ் வேலை பார்த்த அவன் அக்காவுக்கு ஆச்சரியமாய் டர்ள்ற்ஹப் அள்ள்ண்ள்ற்ஹய்ற் வேலை உயர்வு கிடைத்தது. அவனுக்கு ஊங்ங்ள் கட்டுவதற்கான வழியை தேவன் உண்டாக்கினார். ஆஉ, ஙஆஅ முடித்து இன்றைக்கு சொந்தமாக சென்னையில் ( சஉஉப, ஒஉஉ ) எல்லாப் படிப்பும் மற்றும் தேர்வுக்கான கோச்சிங் சென்டர் நடத்திக் கொண்டிருக்கிறான். படிக்க வைக்க முடியலையே என்ற வெட்கத்திலும், வேதனையிலும் இருந்த அவருடைய ஜனங்கள் வெட்கப்பட்டுப் போக விடவில்லை. அநேகர் படிப்பு, வேலையில் உயர்வு பெற கற்றுக் கொடுக்கும் ஒரு ஆசிரியராக, வழிகாட்டுபவராக உயர்த்தி, திருமண வாழ்க்கையில் ஏற்றதுணை, குழந்தையைத் தந்து ஆசீர்வதித்தார். நானே உங்கள் தேவன், நீங்கள் என் ஜனம் என்று அறிந்து கொள்ளச் செய்தார். ஆகையால் ஆபிரகாமை மீட்டுக்கொண்ட கர்த்தர் யாக்கோபின் வம்சத்தைக் குறித்து, இனி யாக்கோபு வெட்கப்படுவதில்லை, இனி அவன் முகம் செத்துப் போவதில்லை என்றார். ஏசாயா 29:22. இதை வாசிக்கிற உங்கள் வாழ்க்கை சரித்திரம் எல்லாம் இதே மாதிரி தானா?, இன்னும் மோசமா? உங்கள் வெட்கத்திற்கு சில காரணம் இருக்கலாம், உங்களுடைய இளவயதின் தவறுகள், கவனக்குறைவு, பலவீனம், மற்றவர் செய்த தீமைகள், பெற்றோரின் இயலாமை, சாத்தானின் தந்திரங்கள் எதுவாயிருந்தாலும், உங்கள் பள்ளி, கல்லூரி, ஆபீஸ், கூடப்பிறந்தவர்கள், நண்பர்கள், உறவினர்கள் இன்னும் சபையில் எங்கே? எப்படிப்பட்ட சூழ்நிலையில நீங்க வெட்கத்தில் தலை குனிந்தீர்களோ, அதே இடத்தில உங்க தலையை உயர்த்தும்படி, நம் வெட்கத்தை, அவமானத்தை அவர் சிலுவையிலே சுமந்து தீர்த்ததினாலே இனி நீங்க வெட்கம் அடைவதில்லை. பயப்படாதே, நீ வெட்கப்படுவதில்லை ஏசாயா 54:4. உன் வெட்கத்திற்குப் பதிலாக இரண்டத்தனையான பலன் வரும் ஏசாயா 61:7. அவர்கள் வெட்கம் அனுபவித்த சகல தேசங்களிலும், அவர்களுக்கு புகழ்ச்சியும், கீர்த்தியும் உண்டாகச் செய்வேன். செப் 3:19 என்று நம் ஆண்டவர் இயேசு உங்களைபó பார்த்துச் சொல்லுகிறார். இந்த ஆண்டிலே, இனிவரும் நாட்களிலே நீங்கள் வெட்கப்பட்டுப் போவதில்லை. நீங்கள் வெட்கம் அடைய அவர் விடமாட்டார். உங்கள் தேவன் என்று சொல்ல அவர் வெட்கப்படுவதே இல்லை எபி 11:16. ஆனால் நீங்கள் அவருடைய ஜனமாய் இருக்க வேண்டும் என அவர் எதிர்பார்க்கிறார். அவரின் ஜனமாயிருக்கிற நீங்கள், நாம் என்ன செய்ய வேண்டும்?. இயேசுவை விசுவாசிக்க வேண்டும். (கர்த்தராகிய இயேசுவை) அவரை விசுவாசிக்கிறவன் எவனோ, அவன் வெட்கப்படுவதில்லையென்று வேதம் சொல்லுகிறது. ரோமர் 10:11 இயேசு தான் இந்த உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்த்தவர். என் பாவத்திற்காக, (சாபம், வியாதி—-) நான் தண்டிக்கப்படுவதற்குப் பதிலாக, எனக்காக சிலுவையிலே மரித்து உயிரோடு எழுந்தவர். இயேசுவே நீர் எனக்கு வேண்டும், நீர் என் பாவங்களை மன்னித்து, உம் இரத்தத்தால் கழுவும், என்னை உம் பிள்ளையாய், உம் ஜனமாய் ஏற்றுக்கொள்ளும். நீரே என் ஆண்டவர், என் இரட்சகர் என்று தன் இருதயத்தில் நம்பி, விசுவாசித்து ஏற்றுக் கொண்டு வாயினாலே அறிக்கை பண்ணுகிறானோ, சொல்லுகிறானோ அவன் வெட்கப்படுவதில்லை. கர்த்தராகிய இயேசுவை நீ, உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று, உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய். நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்பு உண்டாக வாயினாலே அறிக்கை பண்ணப்படும் ரோமர் 10:9,10. நீங்கள் செய்த துணிகரமான, மறைவான பாவங்கள், முன்னோர்கள் செய்த பாவத்தினால் வந்த சாபங்கள், வியாதிகள், பிரச்சனைகள் எல்லாவற்றிலிருந்தும் இயேசுவே உங்களை விடுதலையாக்குபவர். உங்களை மன்னித்து வாழ வைப்பவர் என்று விசுவாசத்தோடு வாயினாலே இப்பொழுதே சொல்லுங்கள். இயேசு உங்கள் பழைய பாவக்கறைகளையெல்லாம், வெட்கத்தையெல்லாம் நீக்கி உங்கள் தலையை நிமிரச் செய்வார். இதோ, தெரிந்து கொள்ளப்பட்டதும், விலையேறப் பெற்றதுமாயிருக்கிற மூலைக்கல்லைச் சீயோனில் வைக்கிறேன். அதின் மேல் விசுவாசமாயிருக்கிறவன் வெட்கப்படுவதில்லை. ஆகையால் விசுவாசிக்கிற உங்களுக்கு விலையேறப் பெற்றது. 1 பேதுரு 2:5,6. நீங்கள் இயேசுவின் பிள்ளைகள் இனி சாத்தானோ, மனிதர்களோ உங்களைக் குற்றப்படுத்தவோ வெட்கப்படுத்தவோ முடியாது. எனவே நீங்கள் சொல்லுங்கள் கர்த்தராகிய ஆண்டவர் எனக்குத் துணை செய்கிறார். என்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார்?. நான் வெட்கப்படேன், வெட்கப்பட்டுóப் போவதில்லையென்று அறிந்திருக்கிறேன் என்று அறிக்கையிடுங்கள். அவரை விசுவாசிக்கிற நீங்கள் வெட்கப்பட்டுப் போவதில்லை என்று அறிக்கையிடுங்கள். அவரை விசுவாசிக்கிற நீங்கள் வெட்கப்பட்டுப் போவதில்லை. கற்பனைகளைக் கைக்கொள்ள வேண்டும். நான் உம்முடைய கற்பனைகளையெல்லாம் கண்ணோக்கும் போது, வெட்கப்பட்டுப் போவதில்லை சங் 119:6. இயேசுவை நம் தேவனாக எப்படி நீங்கள் விசுவாசித்து ஏற்றுக் கொண்டீர்களோ, அதைப் போல அவர் வார்த்தையையும் அப்படியே நம்பி விசுவாசித்து ஏற்றுக் கொண்டு கடைபிடிக்கும் போது நிச்சயமாய் நீங்கள் வெட்கப்பட்டுப் போவதில்லை. ஏனென்றால் வேத வாக்கியமெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது. அவருடைய வார்த்தை ஆவியாயும், ஜீவனாயும் இருக்கிறது. (எபி 4:12, 2 தீமோத் 3:16, யோவான் 6:39) இயேசுவுக்கு ரூபமொன்றுமில்லை, இயேசுதான் வார்த்தை, வார்த்தை தான் இயேசு. அவர் சொல்லிய வார்த்தைகளை விசுவாசித்து நம்பிய ராஜாவும், குடும்பமும் வெட்கப்பட்டுப் போகவில்லை. நீங்கள் கஷ்டத்தில், தேவையில், படிப்பு, வேலை, திருமணம், குடும்பம் மற்றவரிடம் சொல்ல முடியாத எந்த காரியத்திற்காகவும் கர்த்தரிடத்தில் ஒரு வார்த்தையைக் கேளுங்கள். இந்த புதிய ஆண்டின் துவக்கத்திலிருந்து தினந்தோறும் 5 அதிகாரம் படித்தால் முழுவேதத்தையும் ஒரு வருடத்தில் படித்து விடலாம். அப்படி வாசிக்கும் போது உங்களோடு அவர் பேசுவார். ஊழியர்கள், ஆவிக்குரிய புத்தகங்கள் மூலமும் பேசுவார். அந்த வார்த்தையைப் பற்றிக் கொண்டு ஜெபத்திலே, அடிக்கடி மனதிலே கேட்டுக் கொண்டே இருங்கள். அடுத்ததாக ஆண்டவர் இப்படிச் சொல்லியிருக்கிறாரே அதனால நான் கீழ்ப்படிகிறேன். அதனால நான் மன்னிக்கனும், இப்படிச் செய்யக் கூடாது என்று அவர் வசனத்தின்படி நடக்கும் போது நீங்கள் அவருடைய பிள்ளை, ஜனம், அவர் உங்களோடு இருக்கிறார் என்பதை நிருபிப்பதற்காகவே இந்த ஆண்டிலே இந்த வாக்குத்தத்தத்தை உங்களுக்கு அனுப்பியிருக்கிறார், என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப் போவதில்லை என்று வாக்குக் கொடுத்த கர்த்தர் தாமே உங்களோடிருந்து ஆசீர்வதித்து வழிநடத்துவாராக.

Youth Special - Sis. Prema David