Inspiration

உலகத்தின் ஆவியை அல்ல தேவனுடைய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்

நாங்களோ உலகத்தின் ஆவியைப்பெறாமல், தேவனால் எங்களுக்கு அருளப்பட்டவைகளை அறியும்படிக்கு தேவனிலிருந்து புறப்படுகிற ஆவியையே பெற்றோம். 1கொரி 2:12

அப்போஸ்தலனாகிய பவுல் ரொம்ப அருமையான ஒரு வார்த்தையைச் சொல்லிருக்கிறார். நாங்களோ உலகத்தின் ஆவியைப் பெறாமல், தேவனாலே எங்களுக்கு உண்டு பண்ணப்பட்ட, ஆயத்தம் செய்யப்பட்ட, தேவனால் அருளப்பட்டவைகளை நாங்கள் அறியும்படி, தேவனிடத்திலிருந்து புறப்படுகிற ஆவியை பெற்றிருக்கிறோம் என்று ஒரு அருமையான சத்தியத்தை பவுல் அப்போஸ்தலன் சொல்கிறார். இன்றைக்கு நவீன உலகத்தில் பாருங்கள், இப்போது பள்ளிக்கூடம் திறந்து இருக்கிறார்கள். பரீட்சை எழுதி பாஸ் பண்ணினவர்கள் அடுத்த வகுப்பு போறாங்க. ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் அடுத்து நான் என்ன படிச்சு, வாழ்க்கையில் முன்னேறலாம், சம்பாதிக்கலாம் என்று அவர்கள் அதை எதிர்பார்த்து வாழ்க்கையில் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். ஒரு தொழில் செய்பவர்கள், வியாபாரம் செய்பவர்கள் எல்லாரும் ஒரே நோக்கம் குறிக்கோளோடு தான் உலகத்தில் வாழ்கிறார்கள், ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் அப்போஸ்தலனாகிய பவுல் சொல்கிறார் நாங்கள் வீணாக ஓடியதும் இல்லை, வீணாக ஆண்டவரைத் தேடவும் இல்லை, வீணாக ஆண்டவரை தேடுங்கள் என்று சொல்லவும் இல்லை. நாங்கள் தேடுவதற்கு, வாழ்வதற்கு, இந்த உலகத்தில் ஜீவிப்பதற்கு ஒரு நோக்கம் இருக்கிறது என்று சொல்கிறார். உலகத்தில் அடுத்து என்ன சம்பவிக்கும். எந்த ஏரியா (முன்னேற்றப்படுத்தப்படும்) விரிவுபடுத்தப்படும், பலர் எந்த வேலைக்கு போனா எவ்வளவு சம்பாதிக்கலாம், உலகத்தில் கொடி கட்டி பறக்கலாம் என்று சொல்லி உலகத்தைக் குறித்தே சிந்திக்கிறது, உலகத்தைக் குறித்தே பேசுவதுமாக இருந்து தேவனை மகிமைப்படுத்துமில்லை. தேவனுக்கு அடுத்த காரியங்களில் நாம் நுழைவதுமில்லை. இந்த உலக காரியங்கள் நமக்குப் பைத்தியமாக தெரியும்,

பவுல் அப்போஸ்தலன், அவர் சாதாரணமான ஆள் அல்ல, அந்த காலத்திலே ஆசியாவிலேயே ஒருத்தர் கமாலியேல் பாதத்தில் போய் உட்கார்ந்து படிக்க வேண்டும் என்றால். அவருக்கு எத்தனையோ ஆயிரம் கோடி சொத்து இருக்க வேண்டும். அந்த காலத்தில் பவுலுடைய வாழ்க்கையில் அவர் பெரிய பண்ணையார், ஜமீன்தார் என்ற மாதிரி ஆசியாவில் ஒரு பெரிய பணக்காரர்.அவ்வளவு பெரிய பணக்காரர் அந்த ஆசியாவிலேயே அவருக்குத்தான் கால்பங்கு சொத்து இருந்ததாம். அந்த காலத்தில் தமிழ்நாட்டை ஆண்ட ராஜாவுக்கு கால்நாடு இருந்தது. ஒரு ஊரின் பெயர் கானாநாடு காத்தான் என்று உள்ளது. கமாலியேல் பாதத்தில் உட்கார்ந்து படிப்பவர்களும் இப்படிப்பட்டவர்களாய் இருப்பார்கள். டாக்ட்ரேட் வாங்கனும், நான் பெரிய மேதை என்பதை காட்ட வேண்டும் என்று எல்லாம் கொடிகட்டி பறத்த அந்த மனிதனுக்கு, தமஸ்கு போய் கொண்டிருக்கும் போது திடீரென்று இயேசு அவருக்கு தோன்றினார்.

பவுல் அப்போஸ்தலன் இதுவரை உலகத்திற்காகவே ஓடினார், உலகத்திற்காகவே வாழ்ந்தார், இப்பொழுது இயேசுவை ஆதாயமாக்கிக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார். பிலி 3:8-11-ல் அதுமாத்திரமல்ல, என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக்கொண்டிருக்கிறேன். நான் கிறிஸ்துவை ஆதாயப்படுத்திக் கொள்ளும்படிக்கும், நியாயப்பிரமாணத்தினால் வருகிற சுயநீதியை உடையவனாயிராமல், கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினால் வருகிறதும் விசுவாசமூலமாய் தேவனால் உண்டாயிருக்கிறதுமான நீதியை உடையவனாயிருந்து, கிறிஸ்துவுக்குள் இருக்கிறவனென்று காணப்படும்படிக்கும், இப்படி நான் அவரையும் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும், அவருடைய பாடுகளின் ஐக்கியத்தையும் அறிகிறதற்கும், அவருடைய மரணத்திற்கொப்பான மரணத்திற்குள்ளாகி, எப்படியாயினும் நான் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்திருப்பதற்குத் தகுதியாகும்படிக்கும், அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன், குப்பையுமாக எண்ணுகிறேன். கிறிஸ்துவை ஆதாயப்படுத்திக் கொள்ளவும் அவரோடு இணைந்து வாழவும், எல்லாவற்றையும் குப்பையும் நஷ்டமும் என்று எண்ணுகிறேன் என்று சொல்கிறார். பவுல் உறுதியாக, நம்பிக்கையோடு சொல்கிறார் உலகத்தின் ஆவியைப் பெறாமல், எப்படி சம்பாதிக்கலாம் என்று இதே குறிக்கோலில் வாழாமல், தேவன் அருளின, தேவனிடத்திலிருந்து புறப்படுகிற ஆவியைப் பெற்றிருக்கிறோம். இன்றைக்கு இந்த உலகத்திற்கு அவசியமானது, அவசரமானது, முக்கியமானது என்றால் அது பரிசுத்த ஆவியானவர். அந்த ஆவியானவர் இருந்தால் தான் நம்மை சகல சத்தியத்திற்குள்ளும் நடத்துவார். நிறை உண்மையை நோக்கி கிறிஸ்தவ வாழ்க்கையில் நடத்துவார்.

1. வழி விலகப்பண்ணுகிற ஆவி

ஏவாள் ஆதாமுக்குத் தெரியாமல் போய் பழத்தை வாங்கி வந்து விட்டாள், அந்த பழத்தில் விஷம் இருக்கிறது என்று தெரியாமல். நல்ல ஒரு ஆண்மகன் என்றால் இதை எங்கே வாங்கினாய் எனக்குத் தெரியாமல், நான் எங்கே போயிருந்தேன் என்று கேட்டிருக்க வேண்டும். சில ஆண்கள் ஆதாமுக்கு அப்பாவாக இருப்பார்கள், பாக்கெட்டில் பணம் இருக்காது, வீட்டிற்கு கை செலவுக்கு பணமும் கொடுக்க மாட்டார்கள் ஆனால் சாப்பாடு வேண்டும் என்று நினைப்பார்கள். குடித்துவிட்டு பணத்தையெல்லாம் செலவு செய்துவிட்டு ரோட்டில் அலைவார்கள். அப்படிப்பட்ட இந்த உலகத்தில் ஏவாள் கொடுத்த கனியை சாப்பிட்டதால் இருவரும் ஏதேன் தோடóடத்திலிருந்து துரத்தப்பட்டார்கள். அனனியா சப்பீராள் கதையும் இதே போலத்தான். இப்படி இவர்களைச் செய்ய வைப்பது இந்த உலகத்தின் ஆவி. தேவனை அறிய வேண்டும் என்ற வாஞ்சை, தாகம், ஆசை அவர்களுக்குள் வரவில்லை. இந்த சம்பாத்தியம் போதும், இந்த வருஷத்தை நடத்திடலாம் என்று சொல்வதை விட, நித்தியம் வரை போகும் வாழ்க்கையாக நமóமுடைய வாழ்க்கை மாற வேண்டும். முடிவுபரியந்தம் நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான் என்ற வார்த்தையின்படி நாம் முடிவுபரியந்தம் தேவனை நேசித்து அவரைப் பின்பற்றி வாழ்நóது, அவருக்குள் கட்டப்பட வேண்டும்.

இன்றைக்கு நமக்குள் இருக்கும் ஆவி எப்படிப்பட்ட ஆவி என்று நாம் சோதித்துப் பார்க்க வேண்டும். நம்முடைய சுபாவத்தை சோதித்து பார்க்க வேண்டும் என்று இயேசு சொல்கிறார். கோபம் வருது, சண்டை வருது, டென்ஷன் வருது, எரிச்சல் வருது, அதனால் தான் சீஷர்கள் இயேசுவிடம் வானத்திலிருந்து அக்கினியை விழப்பண்ணும் உம்மை இந்த ஊரார் ஏற்றுக்கொள்ளவில்லையே என்றார்கள். நம் ஊழியத்தை இந்த ஊரார் நேசிக்கவில்லை, ஆதரிக்கவில்லை என்று சீஷர்களுக்கு கோபம். இயேசு அவர்களைப் பார்த்துச் சொன்னார் லூக் 9:54,55-ல் அவருடைய சீஷராகிய யாக்கோபும் யோவானும் அதைக் கண்டபோது: ஆண்டவரே, எலியா செய்ததுபோல, வானத்திலிருந்து அக்கினி இறங்கி இவர்களை அழிக்கும்படி நாங்கள் கட்டளையிட உமக்குச் சித்தமா என்று கேட்டார்கள். அவர் திரும்பிப்பார்த்து, நீங்கள் இன்ன ஆவியுள்ளவர்களென்பதை அறியீர்கள் என்று அதட்டினார்.பேதுரு மூன்று முறை இயேசுவை மறுதலித்த போது இயேசு திரும்பிப் பார்த்தார். பேதுரு தலையை கீழே போட்டார். இன்று நீங்கள் இயேசுவை திரும்பிப் பார்க்கிற மாதிரி வைத்திருக்கீங்களா? அல்லது மனமகிழ்ச்சியோடு முகத்தைக் காட்டுகிற மாதிரி வைத்திருக்கீங்களா? கோபத்தில் என் முகத்தை அவர்களுக்கு மறைப்பேன் என்று ஆண்டவர் சொல்கிறார். சீஷர்கள் இயேசுவிடம் நீங்க சொன்னீங்கனா நாங்கள் வானத்திலிருந்து அக்கினி இறங்கி அவர்களை எரிக்கும்படி செய்வோம் என்றார்கள். நம் தேவன் சாபத்திற்குத் தேவன் அல்ல, ஆசீர்வதிக்கும் தேவன். இயேசு திரும்பி பார்த்து நீங்கள் இன்ன ஆவி உள்ளவர்கள் என்று அறியீர்கள் என்கிறார்.

இந்த உலகத்தில் நிறைய ஆவிகள் இருக்கிறது. நாம் எல்லா ஆவிகளையும் நம்பாமல் நல்ல ஆவி எது என்று சோதித்துப் பார்க்க வேண்டும். நாம் தங்கம் வாங்கப் போனால் தரம் பார்க்க 916, ஹால்மார்க் என்று வைத்திருப்பார்கள், அது போல நாம் ஆவிகளைப் பகுத்தறிய வேண்டும். மார்த்தாள் பற்பல வேலைகளைச் செய்வதில் வருத்தமடைந்து கோபப்பட்டு விட்டாள், இன்று நமக்குள் என்ன ஆவியுடையவர்களாய் இருக்கிறோம். எங்கே எப்படி நடந்து கொள்கிறோம். தேவனுடைய வீட்டில் எப்படி நடக்க வேண்டும், வேலை செய்கிற இடத்தில், குடும்பத்தில், ஊழியம் செய்கிற இடத்தில் எப்படி நடக்கிறோம், இருக்கிறோம். 1 யோவான் 4:1-3-ல் பிரியமானவர்களே, உலகத்தில் அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனாலுண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள். தேவஆவியை நீங்கள் எதினாலே அறியலாமென்றால்: மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணுகிற எந்த ஆவியும் தேவனால் உண்டாயிருக்கிறது. மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத எந்த ஆவியும் தேவனால் உண்டானதல்ல, வருமென்று நீங்கள் கேள்விப்பட்ட அந்திக்கிறிஸ்துவினுடைய ஆவி அதுவே, அது இப்பொழுதும் உலகத்தில் இருக்கிறது. அந்த ஆவிகள் தேவனால் உண்டானதா, இயேசுவை உயர்த்துகிறதா, தேவனுடைய வார்த்தைக்கு ஒத்திருக்கிறதா என்று நாம் அறிய வேண்டும்.

2. ஆவியை அவித்துப்போடாதிருங்கள்.

1தெச5:18,19-ல் எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்து தேவனுடைய சித்தமாயிருக்கிறது. ஆவியை அவித்துப்போடாதிருங்கள். கணவன் ஒன்று மனைவி ஒன்று நினைக்கக்கூடாது, தேவசித்தம் தேவ திட்டம் என்று வந்துவிட்டால் இருவரும் ஒன்று போல் யோசித்து செயல்பட வேண்டும். நாம் உலகத்தின் ஆவிக்குள் போய்விடக்கூடாது அவருடைய சித்தத்திற்குள் வாழ வேண்டும். நீங்கள் ஒவ்வொரு நாளும் தேவ ஆவியை எதினாலே அறியலாம் என்றால் மாம்சத்தில் வந்த இயேசு கிறிஸ்துவை அறிக்கை பண்ணுகிற எந்த ஆவியும் தேவனிடத்திலிருந்து வந்தது. ஒரு ஊரில் கூட்டம் நடத்தப் போயிருந்தேன், கூட்டம் தேவ கிருபையால் நடந்து கொண்டிருந்தது. இடையில் தேவ ஊழியர் ஒருவர் கூட்டத்தை கொஞ்ச நேரம் நிறுத்த வேண்டும். காற்று அதிகமாக மாசு அடைவதால் 8 மணி முதல் 8.05 வரை லைட் எல்லாம் அணைத்து நாம் மவுன அஞ்சலி செலுத்த வேண்டும் என்றார். கூட்டம் முடிந்து செலுத்தி கொள்ளுங்கள், இப்ப அதை செலுத்த நிறைய பேர் இருக்கிறார்கள் என்று சொன்னேன். அவருக்குள் இருந்தது எந்த ஆவி. நாம் ஒரு எழுப்புதல் வர வேண்டும், ஜனங்கள் இரட்சிக்கப்பட வேண்டும். குடிகாரர்கள் மனந்திரும்ப வேண்டும் என்று இயேசுவின் சிலுவையைப் பற்றி கூட்டத்தில் பேசுகிறேன். அவர் லைட் அணைப்பதில் குறியாக இருந்தார். மாம்சத்தில் வந்த இயேசுவை அறிக்கை பண்ணாத எந்த ஆவியும் தேவனால் உண்டானதல்ல, வருமென்று நீங்கள் கேள்விப்பட்ட அந்திக்கிறிஸ்துவினுடைய ஆவி அதுவே. அது அமைதியாக இருக்கும், கைதட்டாது, சத்தமாக பாடாது, அந்நிய பாஷை எல்லாம் கிடையாது என்று சொல்லும், இப்படிப்பட் நிறைய ஆவிகள் இருக்கிறது.

3. பொய்யின் ஆவி

2 நாளாகமம் புத்தகத்தில் இரண்டு ராஜாக்கள் யுத்தத்திற்குப் போவதைப் பற்றி பேசிக் கொள்கிறார்கள், அப்பொழுது யூதா தேசத்தின் ராஜா சொல்கிறார் கர்த்தருடைய ஆவியானவர் சொல்லாமல் நான் உன்னோடு யுத்தத்திற்கு வர முடியாது என்கிறார். அப்பொழுது கர்த்தருடைய தீர்க்கதரிசி மீகாவை அழைத்து வரச் சொன்னார்கள். அவரை அழைக்கச் சென்றவன் ஐயா 399 பேர் இஸ்ரவேலó ராஜாவுக்கு சாதகமாக தீர்க்கதரிசனம் சொல்லி விட்டார்கள், நீங்கள் மட்டும் மாற்றி சொல்லி விடாதீர்கள், அவர்களைப் போல நீரும் இசைந்து ராஜாவுக்கு சாதகமாக, அவருக்கு பிரியமாக சொல்லும் என்றான். மீகா தீர்க்கதரிசிக்கு கோபம் வந்துவிட்டது. 2 நாளா 18:20,21-ல் அப்பொழுது ஒரு ஆவி புறப்பட்டு வந்து, கர்த்தருக்கு முன்பாக நின்று, நான் அவனுக்குப் போதனை செய்வேன் என்றது, எதினால் என்று கர்த்தர் அதைக்கேட்டார். அப்பொழுது அது, நான் போய், அவனுடைய தீர்க்கதரிசிகள் எல்லாரின் வாயிலும் பொய்யின் ஆவியாய் இருப்பேன் என்றது. அதற்கு அவர், நீ அவனுக்குப் போதனை செய்து அப்படி நடக்கப்பண்ணுவாய், போய் அப்படியே செய் என்றார்.

ஒருவன் பொய் பேசுகிறான் என்றால் அவனை பொய்யின் ஆவி தாக்கியிருக்கிறது என்று அர்த்தம். எங்கே வருகிறாய் என்று கேட்டால் இந்தா வந்துகிட்டே இருக்கிறோன் என்று சொல்லுவார்கள் ஆனால் கிளம்பியே இருக்க மாட்டார்களó, நாளைக்கு காலையிலேயே வந்திடுவேன், உங்களிடம் வாங்கினதை இந்தா தந்திடுவேன் என்று சொல்லி ஏமாற்றிக் கொண்டே இருப்பார்கள். ஒரு மனிதனை எனக்கு அறிமுகப்படுத்தினார்கள் இதே யோவான் 8:44 வருகிறார் என்று. நான் ஆச்சரியப்பட்டேன் இவர் அந்த அளவுக்கு வேதத்தை கற்று அறிந்தவர் என்று நினைத்தேன். பினóபு தான் தெரிந்தது, அவர் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாக இருக்கிறார் என்று. சதóதியமே அல்லாமல், உண்மையே அல்லாமல் வேற எதையும் நாம் பேசக் கூடாது.உலகத்தில் அநேக ஆவிகள் இருக்கிறது, திருட்டுத்தன ஆவி, ஏமாத்துகின்ற ஆவி, கள்ள உறவுள்ள ஆவி, நடிக்கிற ஆவி இப்படிப்பட்ட ஆவிகளை நம்பக்கூடாது. நாங்களோ உலகத்தின் ஆவியைப் பெறாமல் தேவனிடத்திலிருந்து புறப்படுகிற ஆவியைப் பெற்றோம் என்று சொல்லிக் கொண்டு சரியாக நாம் ஜெபிக்காமல், வேதத்தை வாசிக்காமல், ஐக்கியத்தில் இணையாமல், சபைக்குப் போகாமல், வேலை, உலகம் பணத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தால் நம்முடைய இரட்சிப்பு கேள்விக்குறியாகி விடும். அந்த ஆவி நம்மை வேறு விதமாக நடத்திவிடும்.

4. பொல்லாத ஆவி

சவுலை முதல் ராஜாவாக தேவன் அபிஷேகம் பண்ணினார். அவன் தன் ஆவியில் தேவனுக்குப் பிரியமாக நடக்காமல், அவன் இஷ்டத்திற்கு யுத்தம் பண்ணினான், ஆட்டை வெட்டினான், இப்படி நடந்ததால் தேவனால் கிடைத்த இரட்சிப்பு அபிஷேகம் எல்லாவற்றையும் தேவன் திரும்ப வாங்கிவிட்டார். விளக்கை கொளுத்தி மரக்காலில் மூடக்கூடாது, அது வெளிச்சம் கொடுக்கும்படி அதை விளக்குத் தண்டின் மேல் வைக்கவேண்டும். சிலர் இரட்சிக்கப்பட்டு தேவனுக்காக எதுவும் செய்யாமல் வீணாக இருப்பார்கள். ஒரு மனிதன் இருக்கிறார் அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவருக்கு குடும்பம், பிள்ளைகள் இருக்கிறார்கள். ஆனால் வாரத்தில் மூன்று நாள் வேலைக்குப் போவார், மூன்று நாள் ஊழியம் செய்வார். தேவன் அவருடைய மரணப்படுக்கையை மாற்றி அவரை சாட்சியாக வாழ வைத்தார். சவுல் ஆண்டவரை கனம்பண்ணி அவருக்கு முக்கியத்துதுவம் கொடுக்காமல், தேவபிரசன்னத்தை அனுபவிக்காமல், அடுத்து இந்த இராஜ்யத்தை எப்படி விரிவு படுத்துவது என்று சொல்லி, உட்கார்ந்து பேசி பேசி, தேவனுடைய ஆலோசனையை கேட்காமல், கடைசியில் அவனை ஒரு ஆவி பிடித்துவிட்டது. அதனால் எப்பொழுதும் தன் கையில் ஒரு ஈட்டி வைத்திருப்பான். 1 சாமு 16:23-ல் அப்படியே தேவனால் விடப்பட்ட ஆவி சவுலைப் பிடிக்கும்போது, தாவீது சுரமண்டலத்தை எடுத்து, தன் கையினால் வாசிப்பான்; அதினாலே பொல்லாத ஆவி அவனைவிட்டு நீங்க, சவுல் ஆறுதலடைந்து, சொஸ்தமாவான். 1 சாமு 16:15,16-ல் அப்பொழுது சவுலின் ஊழியக்காரர் அவனை நோக்கி: இதோ, தேவனால் விடப்பட்ட ஒரு பொல்லாத ஆவி உம்மைக் கலங்கப்பண்ணுகிறதே. சுரமண்டலம் வாசிக்கிறதில் தேறின ஒருவனைத் தேடும்படிக்கு, எங்கள் ஆண்டவனாகிய நீர் உமக்கு முன்பாக நிற்கிற உம்முடைய அடியாருக்குக் கட்டளையிடும்; அப்பொழுது தேவனால் விடப்பட்ட பொல்லாத ஆவி உம்மேல் இறங்குகையில், அவன் தன் கையினால் அதை வாசித்தால் உமக்குச் சவுக்கியமுண்டாகும் என்றார்கள்.

கர்த்தருக்குப் பரியமான ஒரு வாழ்க்கை வாழவில்லை என்றால் வெளியே மாற்றவர்களுக்கு முன்பாக கிறிஸ்தவர்கள் மாதிரி, ஆவிக்குரியவர்கள் மாதிரி வாழ்வோம், ஒரு கலங்கப்பண்ணுகிற ஆவி நம்மை கலங்கப்பண்ணுகிறதாய் இருக்கும். தூங்கவிடாது அலையப்பண்ணும் பொல்லாத ஆவி கலங்கப்பண்ணும், வழிதப்பப்பண்ணும் வேசித்தன ஆவி, நிறைய ஆவிகள் உலகத்தில் அலை மோதிக்கொண்டிருக்கிறது. சவுலுக்குள்ளும் இப்படிப்பட்ட ஆவி இருந்ததினால் சுரமண்டலத்தை வாசிக்கும் போது அது அவனை விட்டு நீங்கும், அவன் ஆறுதல் அடைவான். நாம் பரிசுத்த ஆவியில் நிறைந்து, பாட்டுப்பாடி, தேவனைத்துதிக்கும் போது சாத்தான் ஆட ஆரம்பித்து விடுவான். அவனால் நிற்க முடியாது. நாம் தேவனை மனதார பாடும் போது அசுத்த ஆவிகள் அலறி ஓடும். ஆகவே தான் பவுல் சொல்லுகிறார் தேவனிடத்திலிருந்து புறப்பட்ட ஆவியைப் பெற்றிருக்கிறோம் என்று. அந்த ஆவியை மனிதர்களாகிய நமக்குக் கொடுக்கத்தான் இயேசு இந்த பூமிக்கு இறங்கி வந்தார். அவர் இந்த உலகத்தில் இருக்கும் போதே சொல்கிறார் நான் போவதே நலம், நான் சாவதே, உங்களுக்காக உயிரைக் கொடுப்பதே நலம் என்கிறார். நான் போனால் தான் பரிசுத்த ஆவியானவரை அனுப்பமுடியும் என்கிறார்.

5. சத்திய ஆவியாகிய தேற்றரவாளன்

யோவான் 14:16,17-ல் நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார். உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள். என்றென்றைக்கும் உங்கள் வாழ்விலும், தாழ்விலும், உயர்விலும் உங்களோடு இருக்கும்படியான ஒரு தேற்றரவாளனை உங்களுக்கு அனுப்புவேன். என்றென்றைக்கும் நம்மோடு இருக்கிறவர் யார் என்றால் பரிசுத்த ஆவியானவர் தான். 73-ஆம் சங்கீதத்தில் தாவீது சொல்கிறார் எனக்கோ தேவனை அண்டிக் கொண்டிருப்பது நலம் என்கிறார். கிறிஸ்தவ வாழ்க்கை என்பது இந்த சரீரத்தோடு முடிந்து விடுகிறது அல்ல, நமக்குள் ஒரு ஆத்துமா இருக்கிறது, ஒரு ஆவி இருக்கிறது அது தன்னைத்தந்த தேவனிடத்தில் போகிற வரைக்கும் இந்த ஆவியானவர் நம்மை நடத்த வேண்டும். இந்த பூமியில் நமக்கு உறவுகள் இல்லாமல் இருக்கலாம், பரலோகத்தில் உங்கள் வாழ்க்கையை காண ஆயிரம் ஆயிரமான தேவ தூதர்கள்உங்களை உற்று நோக்கிக் கொண்டிருக்கிறார்கள். தேவனுக்குப் பயந்து உலகத்தில் வாழந்து, உலகத்தால் கரைபடாமல், மரியாளைப் போல தன்னை விட்டு எடுபடாத நல்ல பங்கை தெரிந்து கொள்கிற உங்களை தேவதூதர்களும் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

பரலோகத்திலிருந்து, தேவனிடத்திலிருந்து வந்திருக்கிற ஆவியானவர்தான் நமக்கு பரலோகத்தை நினைப்பூட்டுவார். தேவனை நினைப்பூட்டுவார். தேவனை மறந்து கொஞ்சம் தூங்கிவிட்டால் நம்மோடு இடைபடுவார். நமக்கு பரிசுத்த ஆவியானவர் வேண்டும், அதிகாலமே அவரை தேட வேண்டும். நமக்கு தேவனோடு உறவு, ஐக்கியம் நற்சீர் பொருந்த வேண்டும். ஜெப நேரம் அதிகமாக வேண்டும். ஜெபத்திற்கு சாக்குப்போக்கு சொல்லுகிற ஆவி நமக்குள் இருக்கக்கூடாது. இயேசு இந்த பூமியில் இருந்த போது சகலத்தையும் சரியாக நேர்த்தியாக செய்து முடித்து சிலுவையில் தொங்கும் போது எல்லாம் முடிந்தது என்று சொல்லி ஜீவனை கொடுத்தார். அவர் மரித்து உயிர்த்தெழுந்து பின்பு தன்னைத் தெரியாது என்று மறுதலித்த பேதுருவை, மற்ற சீஷர்களையும் மீன் பிடிக்க அழைத்துச் சென்றவனை தேடிப் போய் மீண்டும் எருசலேமிற்கு அழைத்து வந்து நீங்கள் போய் உன்னதத்திலிருந்து ஆவி அருளப்படும் மட்டும் இந்த மேல் வீட்டறையிலே காத்திருங்கள் என்றார். காத்திருந்த அவர்கள் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக் கொண்டார்கள், தேவனுக்காக எழும்பி செயல்பட்டார்கள், சாட்சிகளாக வாழ்ந்தார்கள். இன்றைக்கு நாமும் தேவனிடத்திலிருந்து வருகிறவரான பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டவர்களாக, தேவனுக்காக வைராக்கியமாக, பரிசுத்தமாக, அவருக்கு சாட்சிகளாக, சீஷர்களாக வாழ்ந்து தேவனுடைய நாமத்தை மகிமைப்படுத்த தேவன் கிருபை செய்வாராக.