Inspiration

ராஜ்யத்தை உங்களுக்கு கொடுப்பேன்

பயப்படாதே சிறுமந்தையே உங்களுக்கு ராஜ்யத்தைக் கொடுக்க உங்கள் பிதா பிரியமாயிருக்கிறார். லூக்கா 12:32

ஆண்டவரும் உலக இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள். தேவனுடைய பெரிதான கிருபையினால் இந்த மாத இதழ் வாயிலாக உங்களைச் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். வருஷத்தின் மையப்பகுதியில் வந்திருக்கிறோம். இந்தியாவில் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்ற நேரம். இப்படிப்பட்ட ஒரு முடிவின் நாட்களில் இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன்பு நமக்காக பூமிக்கு இறங்கி வந்த ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நமக்கு வாக்குக் கொடுத்திருக்கிறார், நம்மோடு சத்திய பிரமாணம் பண்ணியிருக்கிறார். அது என்னவென்றால் பயப்படாதே சிறுமந்தையே உங்களுக்கு ராஜ்யத்தைக் கொடுக்க உங்கள் பிதா பிரியமாயிருக்கிறார். லூக்கா 12:32 தேவன் அவருடைய ராஜ்யத்தை அவருடைய பிள்ளைகளுக்கு கொடுக்கப் பிரியமாயிருக்கிறார். ஆம் அவர் தான் வானத்திற்கும், பூமிக்கும் சொந்தக்காரர். பூமியும் அதன் நிறைவும் கர்த்தருடையது என்று சங் 24:1 சொல்லுகிறது. சங் 22:28-ல் ராஜ்யம் கர்த்தருடையது, அவர் ஜாதிகளை ஆளுகிறவர்.அவர் ராஜ்யத்திற்கு முடிவேயிராது.

ஒரு மனிதனுடைய ராஜ்யம், ஒரு முறை ஜெயித்தால் 5 வருடம், இரண்டு முறை ஜெயித்தால் 10 வருடம் அதன்பிறகு ஜனங்கள் அவர்களை தூக்கி எறிந்து விடுவார்கள். இந்த பூமியில் உள்ள மனித ராஜாக்கள் லஞ்சத்தில் ஊறினவர்கள். நாட்டை குத்தகைக்கு விடுபவர்கள். ஜனங்களை வரிப்போட்டு கசக்கி பிழிபவர்கள், கொடூரமானவர்கள். யாராவது எதிர்த்தால் அவர்களைக் கொன்று தடையம் இல்லாமல் செய்பவர்கள். இயேசு சொன்னார் யோவான் 18:36-ல் என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல என்றார். அது முடிவேயற்ற, அழியாத நித்திய ராஜ்யம்.லூக்கா 1:33-ல் அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவார். அவருடைய ராஜ்யத்துக்கு முடிவிராது என்றான். அது நித்திய ராஜ்யம், சதாகாலங்களிலும் உள்ள ராஜ்யம்.வெளி 21:4-ல் அந்த ராஜ்யத்தில் தேவன் தாமே அவர்களுடைய கண்ணீர் யாவையும் துடைப்பார். இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை முந்தினவைகள் பழயவைகள் ஒழிந்து போயின என்றார். அது ஒரு ஒளிமயமான தேசம். அங்கு இரவும் இல்லை பகலும் இல்லை..நெற்றி வியர்வை நிலத்தில் விழந்து பாடுபட வேண்டிய அவசியமுமில்லை. அவ்வளவு ஒரு அருமையான தேசம். அப்படிப்பட்ட ராஜ்யத்தை நமக்குக் கொடுக்கவும், நாம் அதை அனுபவிக்கவும் அந்த ராஜ்யத்தை நமக்கு கொடுக்கவும் வந்தார்.

இயேசு நமக்கு ஜெபிக்க கற்றுக் கொடுத்த போது கூட மத் 6:13-ல் ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகள் என்றார். ஆம் கர்த்தருடைய ராஜ்யம் பெரியது, அது மகிமையானது. அது மாம்சத்திற்கு உரியது அல்ல. அது நீதியானது. ரோமர் 14:17-ல் வேதம் சொல்லுகிறது தேவனுடைய ராஜ்யம் புசிப்பும், ழுடிப்புமல்ல. அது நீதியும், சமாதானமும், பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது. அந்த ராஜ்யத்தைப் பூமியில் ஏற்படுத்தத்தான், மனிதர்களுக்குள் ஸ்தாபிக்கத்தான், உண்டாக்கத்தான் இயேசு இந்த பூமிக்கு இறங்கி வந்தார். இப்பொழுது இருக்கிற கெட்டுóப்போன, சீரழிந்த, சாத்தானால் கெடுக்கப்பட்ட பூமியை அகற்றி தேவனுடைய ராஜ்யத்தை ஏற்படுத்தத்தான் இயேசு மனித அவதாரம் எடுத்து பூமிõக்கு இறங்கி வந்தார். அப்படி இறங்கி வந்த அந்த இயேசு சொன்னார்ஏசாயா 9:6-ல் கர்த்தத்துவம் அவர் தோளின் மேல் இருக்கும் என்றார். கர்த்தத்துவம் என்றால் ஆளுகிறவர், அரசாளுகிறவர் என்று அர்த்தம். ஒவ்வொரு மனித உள்ளத்தையும், ஒவ்வொரு மனிதனையும் ஆளுகை செய்து, தேவன் எதிர்பார்க்கிற வாழ்க்கையும், தேவன் விரும்புகிற ராஜ்யமும் இந்த பூமியில் உண்டாக வேண்டுமென்று அவர் இராஜாவாக இறங்கி வந்தார். ஆகவே தான் மத் 2:2-ல் யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே என்று அவரைத் தேடினார்கள். ஆம் தேவனுடைய ராஜ்யத்திற்கு ஒரு ராஜா வேண்டும் அந்த ராஜா இயேசு தான். அவர் தான் தேவனுடைய ராஜ்யத்தை ஸ்தாபிக்க முடியும். அந்த ராஜ்யத்தை ஜனங்கள் பெற்றுக் கொண்டு, ஏற்றுக் கொண்டு இந்த பூமியை தேவனுடைய ராஜ்யமாக மாற்ற வேண்டும் என்றார்.இதைத்தான் மத் 4:17,23-ல் அதுமுதல் இயேசு மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கிக்கத் தொடங்கினார். பின்பு இயேசு கலிலேயா நாடு எங்கும் சுற்றி நடந்து, அவர்களுடைய ஜெப ஆலயங்களில் உபதேசித்து, ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார் என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த ராஜ்யத்திற்காக இயேசு இந்த பூமிக்கு இறங்கி வந்தார்.

இயேசு எவ்வளவு காரியங்கள் இந்த பூமியில் செய்தாலும், அற்புதங்களைச் செய்தாலும் ராஜ்யத்தின் சுவிசேஷத்தை அறிவித்து ஜனங்களுக்கு நன்மை செய்து கொண்டே செய்தார். யோவான் 3:3-ஐ பாருங்கள் நீங்கள் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டீர்கள் என்றார். நாம் மறுபடியும் பிறக்க வேண்டும். அந்த தேசத்தை , ராஜ்யத்தை சுதந்தரிக்க வேண்டும், அனுபவிக்க வேண்டும். அதற்குத்தான் இயேசு நமக்கு வாக்குக் கொடுத்திருக்கிறார். பயப்படாதே சிறுமந்தையே தேவன் தம்முடைய ராஜயத்தை உங்களுக்கு கொடுக்க பிரியமாயிருக்கிறார் என்றார். இன்றைக்கு நாம் ஒவ்வொருவரும் இந்த ராஜ்யத்தை வாஞ்சிக்க வேண்டும், எதிர்பார்க்க வேண்டும். இதற்காக ஏக்கத்தோடும், தாகத்தோடும் ஜெபிக்க வேண்டும். இதை ஆண்டவராகிய தேவன் நமக்குத் தருவார். இது இல்லாதவர்கள், இதைப் பெற்றுக் கொள்ளாதவர்கள் கிறிஸ்தவர்கள் அல்ல. நாம் அதைத் தேடிப் பெற்றுக் கொள்ள வேண்டும். ஆகவே தான் ஆண்டவராகிய இயேசு சொன்னார்லூக்கா 12:31-ல் தேவனுடைய ராஜ்யத்தையே தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும் என்றார். ஆம் முதலாவது நாம் அவருடைய ராஜ்யத்தை தேடும் போது தேவன் இந்த பூமியில் அவருடைய ராஜ்யத்திற்குரியவர்களாக நம்மை மாற்றி ஆசீர்வதித்து நடத்துவார். போகட்டும் எது, எப்படி, எங்கே தோன்றும் அதை எப்படி நாம் பெற்று அனுபவிக்க முடியும் என்பதைப் பார்ப்போம்.

1. அது நமக்குள்ளே தோன்றும் ராஜ்யம்

லூக்கா 17:20,21-ல் தேவனுடைய ராஜ்யம் எப்பொழுது வருமென்று பரிசேயர் கேட்டபொழுது அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக தேவனுடைய ராஜ்யம் வெளிப்படையாக, பிரத்தியட்சமாய் வராது. இதோ, இங்கே என்றும், அதோ அங்கே என்றும் சொல்லப்படுகிறதற்கு ஏதுவிராது. இதோ, தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறதே என்றார். ஆம் முதலாவது நமக்குள் தேவனுடைய ராஜ்யம் உண்டாக வேண்டும். தேவன் விரும்பாத, தேவன் ஏற்படுத்தாத ஒரு ராஜ்யம் நமக்குள் இருக்கிறது அது யாருடையது என்றால் சாத்தானுடையது, அந்தகாரத்துடையது. கொலோ 1:13-ல் அப்போஸ்தலனாகிய பவுல் சொல்லுகிறார் இருளின் அதிகாரத்தினின்று நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்தினவருமாயிருக்கிற பிதாவை ஸ்தோத்தரிக்கிறோம் என்றார். இருளின் அதிகாரம், சாத்தானின் அதிகாரம் அவனுடைய ராஜ்யம் மனிதனுக்குள்ளும் பூமியிலும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அது உலகத்தைச் சார்ந்தவைகளும், மாம்சத்துக்குரியவைகளுமாய் இருக்கிறது. மாற்கு 7:21,22-ல் இயேசு சொன்னார் எப்படியெனில் மனுஷருடைய இருதயத்திறóகுள்ளிருந்து பொல்லாத சிந்தனைகளும், விபச்சாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும், களவுகளும், பொருளாசைகளும், துஷ்டத்தனங்களும், கபடும், காமவிகாரமும், வன்கண்ணும், தூஷணமும், பெருமையும், மதிகேடும் புறப்பட்டு வந்து மனிதனைத் தீட்டுப்படுத்துகிறது. அசுத்தவானாக, தேவனுக்கு விரோதியாக, பகைஞனாக, சத்துருவாக நம்மை மாற்றி விடுகிறது. இதன் விளைவாக சத்துருவின் ராஜ்யம் நமக்குள் உண்டாகி, அவனுடைய ராஜ்யத்திற்கு அடிமைப்பட்டு, அந்த ராஜ்யத்தின் பிள்ளைகளாக மாறி விடுகிறோம். 1 கொரிந்தியர் 6:9,10-ல் பவுல் சொல்லுகிறார் அநியாயக்காரர் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று அறியீர்களா? வஞ்சிக்கப்படாதிருங்கள்.வேசிமார்க்கத்தாரும், விக்கிரகாராதனைக்காரரும், விபச்சாரக்காரரும், சுயபுணர்ச்சிக்காரரும், ஆண் புணர்ச்சிக்காரரும், திருடரும், பொருளாசைகாரரும், வெறியரும், உதாசினரும், கொள்ளைக்காரரும் தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரிப்பதில்லை என்றார்

ஆம் எல்லாரும் எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்து விட்டு, நான் கர்த்தருடைய பிள்ளை தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரிப்பேன் என்று சொல்லிவிட முடியாது, அந்த ராஜ்யத்தை அனுபவிக்க முடியாது. பிசாசின் ராஜ்யமும் தேவனுடைய ராஜ்யமும் ஒன்றுக்கொன்றுஎதிராக, விரோதமாக இருக்கிறது. ரோமர் 7:15-17-ல் சொல்லுகிறார் எப்படியெனில் நான்செய்கிறது, பேசுகிறது, நடக்கிறது எனக்கே சம்மதி இல்லை, நான் விரும்புகிறதை செய்யாமல் நான் வெறுக்கிறதையே செய்கிறேன். இப்படி நான்விரும்பாததைசெய்கிறவனாய் இருக்க நான் அல்ல எனக்குள் வாசமாய் இருக்கிற பாவமே அப்படி செய்கிறது. ஆம் ஒன்றுக்கொன்று விரோதமாய் இருக்கிறது. இப்படிப்பட்ட வாழ்க்கைக்கு அடிமையானவர்கள் தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரிப்பதில்லைமாம்சத்திற்கென்று, இச்சைக்கு என்று வாழ்ந்து விட்டு, பூமிக்குரிய காரியங்கள், பூமிக்குரிய ராஜ்யங்களில் மூழ்கிக் கொண்டிருக்கிறோம். இதிலிருந்து விடுபட வேண்டும், இருளின் ராஜ்யத்தில் இருந்து வெளிவர வேண்டும், சாத்தானின் ராஜ்யத்தில் இருந்து விடுதலை ஆக வேண்டும். இந்த மாம்சத்தின் கிரியைகளை விட்டு ஒழிக்க வேண்டும், மனம் திரும்ப வேண்டும். தேவனுடையராஜ்யத்திற்கு நம்முடைய வாழ்க்கையை அர்ப்பணிக்க வேண்டும். ஆகவே தான் பவுல் கண்ணீரோடு நமக்கு ஆலோசனை சொல்லுகிறார் 1 கொரிந்தியர் 15:50-ல் சகோதரரே, நான் சொல்லுகிறதென்னவெனில்,மாம்சமும்,இரத்தமும் தேவனுடைய ராஜ்யத்தைச் சதந்தரிக்க மாட்டாது. அழிவுள்ளது, அழியாமையைச் சுதந்தரிப்பதுமில்லை என்றார் இன்னும் நாம் மாம்சத்திற்குரியவர்களாக, உலகத்திற்குரியவர்களாக, பிசாசிற்குரியவர்களாக, அவனுடைய காரியங்களுக்கு, அவனுடைய கிரியைகளுக்கு அடிமைப்பட்டவர்களாய் இராமல் விழித்தெழுந்து, நீதிக்கு என்று வாழ்வோம்.1 கொரிந்தியர் 15:34-ல் அதே பவுல் சொல்லுகிறார் நீங்கள் பாவஞ்செய்யாமல், நீதிக்கேற்க விழித்துக் கொண்டு, தெளிந்தவர்களாயிருங்கள். சிலர் தேவனைப் பற்றி அறிவில்லாதிருக்கிறார்களே என்றார்.

இன்றைக்கு ஆண்டவராகிய இயேசு நமக்குள் அவருடைய ராஜ்யத்தை ஏற்படுத்தவும் நமக்காக தேவனுடைய ராஜ்யத்தை இந்த பூமியில் பரவச் செய்யவும் தான், நம்மை இரட்சித்து, அபிஷேகித்திருக்கிறார். ஆகவே அந்த ராஜ்யத்திற்கு, அந்தக் கர்த்தத்துவத்துக்கு நம்மை அர்ப்பணிக்க வேண்டும். ஆம் ராஜ்யம் அவருடையது, வல்லமை அவருடையது, ஆளுகை அவருடையது. அவர் ராஜ்யம் நமக்குள் உண்டாகி, நீதி உண்டாகி, பரிசுத்தம் உண்டாகி, தேவனுடைய கிரியைகள் உண்டாகி பிசாசின் கிரியைகள் அளிக்கப்பட வேண்டும். ஆகவே தான் வேதம் சொல்லுகிறது1 யோவான் 3:8-ல் பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார். பிசாசினுடைய கிரியைகளை அழிக்க தேவனுடைய கிரியைகள் மூலம்தான் முடியும். நம்முடைய நீதியின் வாழ்க்கை மூலமாக, பரிசுத்த வாழ்க்கையின் மூலமாக அவன் கிரியைகளó அளிக்கப்பட்டு, தேவனுடையகாரியங்கள், ராஜ்யங்கள் நம் மூலமாக வெளிப்பட வேண்டும். அதற்குத்தான் கர்த்தருடைய ராஜ்யத்தை நமக்குள், நம் தோளின் மீது வைத்திருக்கிறார். இதற்குத்தான் பயப்படாதே சிறுமந்தையே தேவன் தம்முடைய ராஜ்யத்தை உங்களுக்கு கொடுக்க பிரியமாயிருக்கிறார்என்றார். இந்த செய்தியை வாசித்துக் கொண்டிருக்கிற என் அன்பு சகோதரனே, சகோதரியேஇன்றைக்கு நம் வாழ்க்கை எப்படி இருக்கிறது? நம்முடைய ராஜ்யத்தை கட்டுகிறோமா? குடும்பம், வேலை, வருமானம், பிள்ளைகள் இதற்கே காலமும், நேரமும்செலவாகின்றனவா அல்லது நம் மூலமாக தேவனுடைய ராஜ்யம் கட்டப்படுகிறதா? கர்த்தருக்கு மகிமை உண்டாகிறதா? நாம் அவருக்காகவாழவும், அவருடைய ராஜ்யத்தை கட்டவும் தான் தேவன் கிருபையாய்நமக்குஆயுசு நாட்களைக் கூட்டிக் கொடுத்திருக்கிறார். ஆகவே இந்த பூமியில் நம் மூலமாக தேவனுடைய ராஜ்யம் பரவுவதாக, கட்டப்படுவதாக.

2. ராஜ்யத்தை நமக்குள் வைத்து பரவச் செய்கிறார்

உன் சந்ததியை எழும்பப் பண்ணி, அவன் ராஜ்யத்தை நிலைப்படுத்துவேன்.2 சாமுவேல் 7:12.ஆம் தேவனுடைய ராஜ்யத்தை நமக்குள் நிலைப்படுத்துவேன் என்றார். சவுல் என்ற மனிதன்தன் தகப்பனுடைய கழுதை காணாமல் போனதை தேடினான். எவ்வளவோ தேடியும் கழுதையைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு வழியாக ஞானதிருஷ்டிக்காரன், சாமுவேல் தீர்க்கதரிசியினிடத்தில் போகும்போது கழுதைகண்டுபிடிக்கப்பட்டதுஎன்று சொல்லிவிட்டு, அப்பொழுது தான் கர்த்தருடைய ராஜ்யத்தைக் குறித்தும் அவருடைய ராஜ்யபாரத்தை இந்த பூமியில் கொண்டு வருவதைப் பற்றியும் அவனுக்குச் சொல்லப்பட்டது. அவன் மூலமாக இந்த பூமியில் கர்த்தருடைய ராஜ்யம் பரவ வேண்டும், ஆட்சி நடக்க வேண்டும் என்று தேவன் விரும்பினார். அதற்காக சவுலை ஆயத்தப்படுத்தி, அவனை தேவன் உருவாக்கிக் கொண்டிருந்தார். ஆனால் அவனே தன்னை முற்றிலும் தேவனுக்கு அர்ப்பணிக்காமல் கழுதையைப் பற்றிய கவலை. ஆண்டவராகிய தேவன் அழிக்கச் சொன்ன அமலேக்கியரை அழிக்காமல் விட்டு வைத்தான். பிசாசையும், பிசாசின் கிரியைகளையும் விட்டு வைத்தான். இதனால் அவனுடைய வாழ்க்கைமோசமானதாகவே இருந்தது. ஆவி மாம்சத்திற்கு விரோதமாகவும், மாம்சம்ஆவிக்கு விரோதமாகவும் இருந்தது. இதனால் தேவன்அவனை ராஜாவாக ஏற்படுத்தினதைக் குறித்து வேதனைப்பட்டார்.

அவருடைய ராஜ்யத்தை அவனால்இந்த பூமியில் கொண்டுவர முடியவில்லை. அதன் பொருட்டு அவன் பெற்றுக்கொண்ட ராஜ்யம் அவனுக்குள் நிலைக்கவில்லை. அவன் வாரிசு, அரசியலுக்காக, தன் பிள்ளைக்காகவே ராஜ்யபாரம் பண்ணி தாவீதைப் பகைத்து, வெறுத்து விரட்டினான். இதன் நிமித்தம் கர்த்தருடைய கோபத்திற்குள்ளாகி ராஜ்யத்தை இழந்தான், செயல்படாத ராஜாவாக இருந்தான். 1 சாமுவேல் 15:26-ல் சாமுவேல் சவுலை பார்த்து, நான் உம்மோடே கூடத் திரும்பி வருவதில்லை, கர்த்தருடைய வார்த்தையைப் புறக்கணித்தீர், நீர் இஸ்ரவேலின் மேல் ராஜாவாயிராதபடிக்கு கர்த்தர் உம்மையும் புறக்கணித்துத் தள்ளினார் என்றான்.ஆம் சவுலை ராஜாவாக இராதபடி தேவன் புறக்கணித்து தள்ளினார். அதன் பிறகு அவன் ராஜாவாக ஆட்சிசெய்தாலும்பொம்மையாக, டம்மியாக, செயல்படாத ராஜாவாக இருந்தான். அவனை வைத்து தேவன் எதுவுமே செய்ய முடியவில்லை. காரணம் சவுல் கர்த்தருடைய ராஜ்யத்தை அசட்டை பண்ணினான். தன் மேல் இருந்த தேவனுடைய கிருபையை, இரட்சிப்பை, அபிஷேகத்தை புறக்கணித்து, பணப்பிரியனாக, மகன் ராஜ்யத்திற்கு வரவேண்டும் என்று துணிகரமாக, தவறான சில காரியங்களைச்செய்தான்.

இன்றைக்கு கூட நம் வாழ்க்கையில் தேவன் நம்மை ஒரு நோக்கத்திற்காக சந்தித்து,இரட்சித்து, அபிஷேகித்து நம்மைஅவருடைய ராஜ்யத்திற்காக ஓடவும், உழைக்கவும், செயல்படவும் வைத்திருக்கிறார். அநேகர் அதைப்பற்றி கவலைப்படாமல் வேலை, வியாபாரம், தொழில், குடும்பம், பிழைப்புக்கடுத்த வேலைகளில் ஈடுபட்டு நமக்குள் இருக்கிற தேவனுடைய ராஜ்யத்தை பற்றி கவலையின்றி ஏனோதானோ என்று இருக்கிறோம். தேவன் பொறுமையோடு இருக்கிறார், இந்த வருஷம் இருக்கட்டும், இந்த மாதமும் இருக்கட்டும், எனக்காக ஏதாவது செய்வார்கள், பயன்படுவார்கள் என்று தேவைக்கு அதிகமான கிருபைகளை அளித்து, பொழிந்துஅளவில்லாமல்நிரப்பி வைத்திருக்கிறார். இயேசு சொன்னார்மத்தேயு 13:12 உள்ளவன் எவனோ அவனுக்குக் கொடுக்கப்படும், பரிபூரணமும் அடைவான் இல்லாதவன் எவனோ அவனிடத்தில் உள்ளதும் எடுத்துக் கொள்ளப்படும் என்றார். ஆம் நமக்குள்இருக்கிற தேவவல்லமைநமக்குள் இருக்கிற தேவனுடைய ராஜ்யத்தை குறித்து எனக்கென்று இருக்கக்கூடாது. நம் மூலமாக தேவனுடைய ராஜ்யம் பரவ வேண்டும், கர்த்தருடைய ராஜ்யம் பூமியில் வரவேண்டும். அதற்காக நாம் பாடுபட வேண்டும், உழைக்க வேண்டும், செயல்பட வேண்டும். அந்த ராஜ்யத்தைப் பரவச் செய்யத்தான் தேவன் நம்மை அழைத்து இருக்கிறார்.மத்தேயு 24:14-ல் ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும் என்றார்.

ஆம் நாம் தேவனுடைய ராஜ்யத்தை, சுவிசேஷத்தைஅறிவிக்க வேண்டும். இல்லை என்றால் அதை வாங்கி, பெற்றுக்கொண்டு எனக்கே, எங்கே நேரம் இருக்கிறது என்று பொறுப்பற்று இருந்தால் சவுலைப் போல அதை இழந்து போவோம். ஆகவே தான் மத்தேயு 21:43-ல் இயேசு சொன்னார்தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்திலிருந்து நீக்கப்பட்டு, அதற்கேற்ற கனிகளைத் தருகிற ஜனங்களுக்குக் கொடுக்கப்படும் என்றார்.ஆகவே இனியும் நாம் அசதியாக இராமல், எனக்கென என்று இருந்து விடாமல்கர்த்தருக்காக செயல்படவும், அவருடைய ராஜ்யத்திற்காக உழைக்கவும் உங்களையும், உங்கள் குடும்பத்தையும் அர்ப்பணியுங்கள்.. ஆண்டவராகிய தேவன் உங்களைஆசீர்வதித்துபயப்படாதே சிறுமந்தையே ராஜ்யத்தை கொடுக்க உங்கள் பிதா பிரியமாயிருக்கிறார் என்ற வார்த்தையின்படி தேவன் நம்மைப் பயன்படுத்தி ஆசீர்வதிப்பாராக ஆமென்.