Inspiration

காணாமல் போனவற்றை கண்டுபிடியுங்கள்

ஒரு மனுஷன் நூறு ஆடுகளை உடையவனாயிருந்து, அவைகளில் ஒன்று காணாமற்போனால், தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் வனாந்தரத்திலே விட்டு, காணாமற்போன ஆட்டைக் கண்டுபிடிக்குமளவும் தேடித்திரியானோ? – லூக் 15:4

லூக் 15:4 – ஒரு மனுஷன் நூறு ஆடுகளை உடையவனாயிருந்து, அவைகளில் ஒன்று காணாமற்போனால், தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் வனாந்தரத்திலே விட்டு, காணாமற்போன ஆட்டைக் கண்டுபிடிக்குமளவும் தேடித்திரியானோ?என்று சொல்லப்பட்டுள்ளது. காணாமற்போன மனிதர்களைக் கண்டுபிடிக்க வந்தவர் இயேசு. இந்த அதிகாரம் முழுவதிலும் ஆண்டவராகிய இயேசு தான் இந்த பூமியில் நிறைவேற்ற வந்த தேவதிட்டத்தை இங்கு சொல்லியிருக்கிறார். இன்றைக்கு உலகில் பல விமானங்கள் விழுந்து நொறுங்கி காணாமற் போனது அதை தேடியும் இன்றைக்கு வரை மீட்க முடியவில்லை. தொலைந்தால் தொலைந்தது தான், காணாமற் போனால் காணாமற்போனது தான். ஆனால் தேவனுடைய காரியங்களில் அப்படியல்ல, அதை கண்டுபிடிக்கும் வரை, மீட்கும் வரை தேடிக் கொண்டே இருப்பார்.இயேசு சொன்னார்லூக் 19:10-ல் இழந்து போனதைத் தேடவும், இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார்.

இழந்ததைத் தேட வந்த ஆண்டவராகிய தேவன் மனிதனை சிருஷ்டித்துப் படைத்து ஏதேன் தோட்டத்தில் தம்மோடு வைத்திருந்தார். நீ என்னோடு இருக்க வேண்டும், என்னை விட்டு விலகக்கூடாது, பிரியக்கூடாது என்று வைத்திருந்தார். ஆனால் சாத்தான் மனிதனை ஏமாற்றி, வஞ்சித்து தேவனிடத்திலிருந்து பிரித்து, அவர் சமூகத்திலிருந்து காணாமற்போகப் பண்ணிவிட்டான். அதனால் தான் இன்றைக்கு அநேகரை தேவ சமூகத்தில் காணமுடியவில்லை. ஜெபத்தில் பார்க்க முடிவதில்லை, பத்திரமாய், பாதுகாப்பாய் இருக்க வேண்டியவர்களை காணாமற்போகப் பண்ணி, தொலைத்து விட்டு ஒன்றும் தெரியாதவர்கள் போல இருக்கிறோம்.

சிம்சோன், தேவன் தன்னை விட்டு விலகினதை அறியாமல் இருந்தது போல இருக்கிறார்கள். அநேகம் பேருக்கு எனக்கு எல்லாம் இருக்கு, நான் நல்லா இருக்கிறேன், பத்திரமாய் இருக்கிறேன், சரியாய் இருக்கிறேன் என்ற எண்ணத்திலே எதை இழந்தோம், எதை தொலைத்தோம், எது காணாமற்போனது என்று தெரியாமல் ஓடிக்கொண்டே இருக்கிறோம். என்றைக்கு இல்லை, காணாமற் போய் விட்டது, தொலைந்து போய் விட்டது, வெறுமையாய் இருக்கிறது, ஒரு நிறைவு இல்லை என்று உணருகிறோமோ அனóறைக்குத் தான் நாம் தேட ஆரம்பிப்போம். சங்கீதக்காரர் சொல்லுகிறார்சங் 119:176-ல் காணாமற்போன ஆட்டைப் போல வழிதப்பிப் போனேன், உமது அடியேனைத் தேடுவீராக.ஆம் வழிதப்பி நடந்து, சுயபுத்தியில் சாய்ந்து, தேவன் வைத்த இடத்தில் இல்லாமல் அவருடைய கைக்குள் அடங்கி இராமல், அவர் சமூகத்தை விட்டு விலகி வெளியே போய்க் கொண்டிருக்கிற அலóலது உலக காரியங்களுக்காக, நமது வசதி வாய்ப்புகளுக்காக விற்றுப்போட்ட ஒரு வாழ்க்கை வாழ்கிறோம்.

யோசேப்பின் வாழ்க்கையைப் பாருங்கள் அவனுடைய சகோதரர்கள் அவன் மேல் பொறாமை கொண்டு இருபது வெள்ளிக் காசுக்கு விற்றுப் போட்டார்கள். உண்மையிலே விற்றது யோசேப்பை அல்ல பரிசுத்தத்தை, அவனுக்óகுள் இருந்த தேவ பயத்தை, தேவ ஞானத்தைத் தான் விற்றார்கள். கடத்தி விற்றுவிட்டு தொலைத்துவிட்டு தகப்பனுக்கு கொடிய மிருகம் பீறிட்டது என்ற தவறான தகவல்களைச் சொல்லி விட்டார்கள். பஞ்சத்திலே உணவு வாங்க எகிப்திற்குப் போன போது யோசேப்பு யார் என்று தெரியாமல் அவரிடத்தில் எங்óகளில் ஒருவன் காணாமற் போனான் என்று துணிகராமாய் சொல்லுகிறார்கள்.ஆதி 42:13-ல் உமது அடியாராகிய நாங்கள் பன்னிரண்டு சகோதரர், கானான் தேசத்தில் இருக்கிற ஒரு தகப்பபன் புத்திரர், இளையவன் இப்பொழுது எங்கள் தகப்பனிடத்தில் இருக்கிறான், ஒருவன் காணாமற் போனான்என்று அவரிடத்தில் துணிகரமாய் தாங்கள் தொலைத்ததை, விற்றதைச் சொல்லாமல் காணாமற் போனான் என்று சொல்லுகிறார்கள். திரும்ப அவரைத் தேடவோ, கண்டுபிடிக்கவோ அவர்கள் எந்த ஒரு முயற்சியும் எடுக்கவில்லை. காலமும், வருஷமும் தான் ஓடிக் கொண்டே இருந்தது. ஆனால் தேவன் நல்லவர், மனிதர்கள் மறந்தாலும், கைவிட்டாலும் கர்த்தர் மறக்காதவர், நம் நினைவாக இருப்பவர். அவர் நம்மைத் தேடி வந்தார், நம்மை வாழ வைத்தார், இன்றைக்கு நாம் உயிரோடு இருப்பது, நிர்மூலமாகாமல் இருப்பது அவருடைய கிருபை. அவரால் தான் நாம் வாழ்கிறோம், பிழைக்கிறோம், ஜீவிக்கிறோம்.

எசேக் 16:4-6-ல் உன் பிறப்பின் வர்த்தமானம் என்னவென்றால், நீ பிறந்த நாளிலே உன் தொப்புள் அறுக்கப்படவுமில்லை, நீ சுத்தமாவதற்குத் தண்ணீரினால் குளிப்பாட்டப்படவுமில்லை, உப்பால் சுத்திகரிக்கப்படவுமில்லை, துணிகளில் சுற்றப்படவுமில்லை, உனக்காகக் பரிதபித்து, இவைகளில் ஒன்றையாகிலும் உனக்குச் செய்ய ஒரு கண்ணும் உன் பேரில் இரக்கமாயிருந்ததுமில்லை. நீ பிறந்தநாளில் நீ அருவருக்கப்பட்டதினால் வெளியில் எறிந்து விடப்பட்டாய். நான் உன் அருகே கடந்து போகும் போது, மிதிக்கப்படுவதற்கு ஏதுவாய் நீ உன் இரத்தத்தில் கிடக்கிறதைக் கண்டு, உன் இரத்தத்தில் கிடக்கிற உன்னைப் பார்த்து, பிழைத்திரு என்றேன் என்றார். ஆம் மிதிக்கப்படுவதற்கு, சாவதற்கு ஏதுவாக கிடந்த நம்மை ஆண்டவராகிய இயேசு தேடி வந்து, தமது சொந்த இரத்தத்தைச் சிந்தி, தமது உயிரைக் கொடுத்து, நம்மை மீட்டு, நாம் பிழைத்திருக்கவும், வாழவும் செய்திருக்கிறார். அவர் மட்டும் இந்த பூமிக்கு வரவில்லை என்றால் நாம் எப்பவோ மடிந்து மண்ணோடு மண்ணாகப் போயிருப்போம். ஆம் அவர் நம்மைத் தேடி வந்து காணாமற் போன நம்மைக் கண்டு பிடித்து இன்றைக்கும் அவர் சமூகத்தில் வாழவும், பிழைக்கவும் வைத்திருக்கிறார். நாம் அவரால் தேடி கண்டு பிடிக்கப்பட்டவர்கள், மீட்கப்பட்டவர்கள். அதனால் தான் நாம் நிர்மூலமாகாமல் உயிர் வாழ்கிறோம். அவர் சமூகத்தில் ஜெபிக்கிறோம், அவரால் வழிநடத்தப்படுகிறோம். போகட்டும் எதை மனிதர்கள் தொலைத்தார்கள், எதை தேட வேண்டும், மீட்க வேண்டும் எப்படி இழந்ததை மீட்டுக் கொள்ள வேண்டும் என்பதைப் பார்ப்போம்.

1. காணாமற்போன ஆடுகள்

லூக் 15:4 ஒரு மனுஷன் நூறு ஆடுகளை உடையவனாயிருநóது, அவைகளில் ஒன்று காணாமற்போனால், தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் வனாந்தரத்திலே விட்டு காணாமற்போன ஆட்டைக் கண்டுபிடிக்குமளவும் தேடித்திரியானோ?என்று சொல்லப்பட்டுள்ளது. ஆட்டுக்கு ஒரு பழக்கம் உண்டு ஆயன், மேய்ப்பன் இல்லை என்றால் அது இஷ்டத்திற்குப் போய் விடும். இஷ்டத்திற்குப் போவது பிரச்சனை அல்ல. காணாமலே, தொலைந்து கொடிய மிருகங்களுக்கு இரையாகி விடும் பாதுகாப்பில்லாத ஜீவன். ஆண்டவராகிய இயேசு சொன்னார்ஏசாயா 53:6-ல் நாமெல்லாரும் ஆடுகளைப் போல வழிதப்பித் திரிந்து, அவனவன் தன் தன் வழியிலே போனோம், கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும்அவர்மேல் விழப்பண்ணினார்.தேவனை விட்டுப் பிரிந்து வழி தப்பி கொடிய மிருகங்களிடத்தில் சிக்கிக் கொண்டோம். காரணம் நமக்கு மேய்ப்பன் இல்லை, ஆயன் இல்லை, நம்முடைய ஆத்துமாவை வழிநடத்த பரிசுத்த ஆவியானவர் இல்லை, கோலும் தடியும் நமக்கு இல்óலை. ஆகவே கொடிய மிருகங்கள் நம்மை வேட்டையாடி நாம் பாதிக்கப்பட்டுப் போனோம்.

எசேக் 34:5-8-லóமேய்ப்பன் இல்லாததினால் அவைகள் சிதறுண்டுபோயின; சிதறுண்டுபோனவைகள் காட்டு மிருகங்களுக்கெல்லாம் இரையாயின.என் ஆடுகள் சகல மலைகளிலும் உயரமான சகல மேடுகளிலும் அலைப்புண்டு, பூமியின்மீதெங்கும் என் ஆடுகள் சிதறித்திரிகிறது; விசாரிக்கிறவனுமில்லை, தேடுகிறவனுமில்லை.ஆகையால் மேய்ப்பரே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.கர்த்தராகிய ஆண்டவராயிருக்கிற நான் என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; மேய்ப்பன் இல்லாததினால் என் ஆடுகள் சூறையாகி, என் ஆடுகள் காட்டுமிருகங்களுக்கெல்லாம் இரையாய்ப் போயின; என் மேய்ப்பர்கள் என் ஆடுகளை விசாரியாமற்போனார்கள், மேய்ப்பர்கள் மந்தையை மேய்க்காமல் தங்களையே மேய்த்தார்கள்.சுற்றித் திரிந்து மேய்ப்பன் இல்லாததினால் என் ஆடுகள் காட்டு மிருகங்களுக்கெல்லாம் இரையாயின. இப்படி வழி தப்பின ஆடுகளை காப்பாற்றவும், கண்டுபிடிக்கவும் தான் இயேசு கிறிஸ்து இந்த பூமிக்கு இறங்கி வந்தார். எசேக் 34:16-ல் நானó காணாமற் போனதைத் தேடி, துரத்துண்டதைத் திரும்பக் கொண்டு வந்து, எலும்பு முறிந்ததைக் காயங்கட்டி பாதுகாப்பேன் என்றார்.ஆம் நாம் அவருடைய கைகளில் உள்ள ஆடுகளாய் இருக்க வேண்டும். இல்லை என்றால் சிதறடிக்கப்படுவோம், காணாமற்போவோம், தொலைந்து போவோம் என்று சொல்லப்பட்டுள்ளது.

அதனால் தான் தாவீது சொல்லுகிறார் கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார், நான் தாழ்ச்சியடையேன். ஆம்ó அவர் நம் மேய்ப்பன், ஆயன். நாம் தாழ்ச்சியடையாதபடிக்கு, வஞ்சிக்கப்படாதபடிக்கு காணாமற்போகாதபடிக்கு அவருடைய சமூகத்தில் வாழ்ந்திருக்கிற, பிழைத்திருக்கிற ஆடுகளாய் காணப்பட வேணóடும். ஏன் தொண்ணூற்றொன்பது ஆடுகளை விட்டுவிட்டு, ஒரே ஒரு ஆட்டைத் தேடினார் என்றால் அந்த 99 ஆடுகளும் மனம் திருமóப அவசியமில்லாத ஆடுகள். தாங்கள் செய்வது சரி, மற்றவர்கள் செய்வது சரியல்ல என்று சொல்லுகிற ஆடுகள். அதனால் தான் மனந்திரும்ப அவசியமில்லாத 99 ஆடுகளைப் பற்றி கவலைப்படாமல் மனந்திரும்புகிற ஒரு ஆட்டின் நிமித்தம் மிகுந்த சந்தோஷம் உண்டாகும் என்றாரó. இன்றைக்கு மனந்திரும்புகிற ஆடாய் இயேசுவுக்கு அர்ப்பணித்த ஒப்புக் கொடுக்கப்பட்ட ஆடாய் வாழுமó போது தான் நாம் தேவனுடைய பார்வையில் தூக்கி விடப்படுவோம், கண்டுபிடிக்கப்படுவோம். அப்பொழுது தான் மந்தையில் சேரóக்கப்படுவோம். அவருடைய கைகளில் உள்ள ஆடுகளாய் இருப்போம், தோள்மேல் சுமத்தப்பட்ட ஆடுகளாய் இருப்போம், கண்டுபிடிக்கப்பட்ட ஆடுகளாய் இருப்போம். நாம் தொலைந்து போனவர்களாய், தேவ சமூகத்தை விட்டு ஓடினவர்களாய் கொடிய மிருகங்களின் கைகளில் அகப்பட்ட ஆடுகளாய் அல்ல, அவரே நமக்காக ஒரு ஆட்டுக் குட்டியைப் போல பூமிக்கு இறங்கி வந்தார்.

ஆபிரகாம் தன் மகன் ஈசாக்கைப் பலியிட சென்ற போது அங்கு தேவ சத்தம் உண்டாகி, உன் மகனாகிய ஈசாக்கை பலியிóட வேண்டாம், உன் மகனுக்குப் பதிலாக இதோ முட்புதரில் ஒரு ஆட்டுக்குட்டி மாட்டிக் கொண்டு நிற்கிறது அதைப் பிடித்துப் பலியிடு என்றார். நமக்காக அடிக்கப்பட்ட ஆட்டுக்குடóடியானவர் பலியானார்.யோவான் 1:29-ல் இதோ உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி இவரே என்று யோவான்ஸ்நானகன் சொல்லுகிறார். இன்றைக்கு அவருக்கு, ஆடுகளின் நிலமை நன்றாகத் தெரியும். கொடிய மிருகங்களின் மத்தியில், தண்ணீர் அற்ற நிலையில், மேய்ச்சல் அற்ற நிலையில் எப்படி கண்காணிக்க வேண்டும், எப்படி பாதுகாக்க வேண்டும் என்று ஒரு மேய்ப்பனாய் இருந்து கட்டாயம் தொலைந்துபோன, காணாமற்போன இந்த ஆட்டைக் கண்டு பிடித்து அவருடைய ராஜ்யத்தில் கொண்டு வந்து சேர்ப்பார். அதற்காகத் தான் அவர் உலகத்தின் பாவங்களை சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டியாக வந்தார். அதைத்தான் அவருடைய சீஷர்களுக்கும் கட்டளையிட்டு அதை தேடுங்கள் என்றார். மத் 10:6-ல் காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்தில் போங்கள் என்றார். இன்றைக்கு இந்த செய்தியை வாசித்துக் கொண்டிருக்கும் என் அன்பு சகோதரர்களே, சகோதரிகளே நீங்கள் அவர் சமூகத்தில் தேடப்பட்ட, கண்டுபிடிக்கப்பட்ட ஆடுகளாய், அவருடைய கண்காணிப்பில் உள்ள ஆடுகளாய், தேவன் உங்களை மாற்றி, அவரால் நீங்கள் வழிநடத்தப்பட்ட, அவர் உங்களுக்கு ஆயனாக, மேய்ப்பனாக இருப்பாராக. அவர் சமூகத்தில் வாழ்கிறவர்களாக, பிழைத்திருக்கிறவர்களாக தேவன் நம்மை மாற்றுவாராக.

2. காணாமற்போன வெள்ளிக்காசு

அன்றியும், ஒரு ஸ்திரீ பத்து வெள்ளிக்காசை உடையவளாயிருந்து, அதில் ஒரு வெள்ளிக்காசு காணாமற்போனால், விளக்கைக் கொளுத்தி, வீட்டைப் பெருக்கி, அதைக் கண்டுபிடிக்கிறவரைக்கும் ஜாக்கிரதையாய்த் தேடாமலிருப்பாளோ?கண்டுபிடித்தபின்பு, தன் சிநேகிதிகளையும் அயல்வீட்டுக்காரிகளையும் கூட வரவழைத்து: காணாமற்போன வெள்ளிக்காசைக் கண்டுபிடித்தேன், என்னோடுகூட சந்தோஷப்படுங்கள் என்பாள் அல்லவா? லூக் 15:8,9. காணாமற்போன ஆடு, அதை எப்படி கண்டுபிடித்தார் என்பதைபó பார்த்தோம். அடுத்ததாக காணாமற்போன வெள்ளிக்காசு. இஸ்ரவேலில் ஒரு பழக்கம் உண்டு, ஒரு மணப்பெண்ணை ஒரு மணமகன் நிச்சயம் செய்யும் போது வெள்ளிக்காசை அவளுக்கு கொடுத்து விட்டு செல்வார்கள். இது நிச்சயிக்கப்பட்ட மணமகன் கொடுக்கிற முதல் அன்பளிப்பு. அந்த பத்து காசை வாங்கிய நிச்சயிக்கப்பட்ட அந்த மணப்பெண், திருமணம் முடியும் வரை அதை பத்திரமாகப் பாதுகாத்திருக்க வேண்டும். ஏனென்றால் அந்த மணநாள் அன்று மணமகன் கணóடிப்பாய் நிச்சயமாக கேட்பார். நான் கொடுத்த வெள்ளிக்காசு எங்கே என்பார். அதைப் பத்திரப்படுத்தி மீண்டும் அவருடைய கைகளிலே கொடுக்கும் பெண் பாக்கியவதி. ஒருவேளை காணாமற்போனால், தொலைந்து போனால் அந்த திருமணம் நின்றுவிடும். பல வீண் பிரச்சனைகள் ஏற்பட்டு விடும். வெள்ளிக் காசைப் பத்திரப்படுத்தவும், பாதுகாக்கவும் அந்த காலங்கள் நியமிக்கப்பட்டிருக்கும், எப்பொழுது மணமகன் வந்தாலும், எப்பொழுது திருமணம் நடந்தாலும் தன் கையில் அதை பத்திரமாக வைத்திருக்க வேண்டும். அதைப் போலத்தான் நம்முடைய எஜமான், நம்முடைய மணவாளன், நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நம்மை இரட்சித்து, மீட்டெடுத்து காணாமற் போன ஆடுகளாகிய நம்மை மீட்டெடுத்óது மந்தையில் சேர்த்து விலையெறப்பெற்ற வெள்ளிக்காசுக்கு ஒப்பாக வைத்திருக்கிறார். நாம் அவருடைய கையில் பதóதிரப்படுத்தப்பட்ட, பாதுகாக்கப்பட்ட வெள்ளிக்காசாக இருக்க வேண்டும்.

அடுத்து வெள்ளிக்காசு என்பது என்ன? கர்த்தருடைய வார்த்தை சங் 12:6-ல் கர்த்தருடைய சொற்கள் மண் குகையில் ஏழுதரம் உருக்கிப் புடமிடப்பட்ட வெள்ளிக்கொப்பான சுத்தச் சொற்களாயிருக்கிறது.கர்த்தருடைய வார்த்தை சுத்த வெள்ளி, சுத்த தங்கம். அநóத வார்த்தையை நம்முடைய உள்ளத்தில், இருதயத்தில் பத்திரமாய் பாதுகாக்க வேண்டும். அதைத்தான் வேதம் சொல்லுகிறதுலூக் 8:15-ல் நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்டு, அதை உண்மையும், நன்மையுமான இருதயத்திலே காத்துப் பொறுமையுடனே பலன் கொடுக்கிறவர்களாயிருக்கிறார்கள்என்று சொல்லப்பட்டுள்ளது. அந்த தேவனுடைய வார்த்தை தான் நம்மைப் புடமிடும், நம்மை சுத்óதிகரிக்கும்.சங் 119:72-ல் அநேகமயிரம் பொன், வெள்ளியைப் பார்க்கிலும், நீர் விளம்பின வேதமே எனக்கு நலம்என்று சொல்லப்பட்டுள்ளது. கர்த்தருடைய வார்த்தை வெள்ளியையும், பொன்னையும் விட மேலானது. அது நம்மைச் சுத்தப்படுத்துகிறது, கண்டித்து உணர்த்துகிறது, மிகுந்த கனிகளைக் கொடுக்கும்படி கொத்தி எருப்போட்டு, நமக்குத் தேவனுடைய வார்த்தையைத் தண்ணீராகப் பாய்ச்சுகிறது. அந்த கர்த்தருடைய வார்த்தை தான் நம்மை பொன்னாக, வெள்ளியாக மாற்றுகிறது. அந்த தேவனுடைய வார்த்தையில் எவ்வளவோ ஆசீர்வாதங்களும், கிருபைகளும் உண்டு. அதை நாம் அனுதினம் தேடி வாசிக்க வேண்டும், தியானிக்க வேண்டும்.

ஒரு போதகர் வருஷா வருஷம் கன்வென்ஷன் கூட்டம் நடத்துவார். கூட்டம் முடிந்óதவுடனே வருகின்ற அவ்வளவு பேருக்கும் உணவு கொடுக்கப்படும். அதற்கு வேண்டிய அசிரி, பருபóபு, ஆடுகள் யாராவது கொண்டு வந்து கொடுத்து விடுவார்கள். கன்வென்ஷன் சிறப்பாக நடந்து முடிந்துவிடும். ஒருமுறை ஒருவர் அவரிடம் 75,000 ரூபாய் கொடுத்து அடுத்த கன்வென்ஷனுக்கு இந்த பணத்தை வைத்துக் கொள்ளுங்கள் என்று கொடுத்து விட்டு சென்றுவிட்டார். அந்த கன்வென்ஷன் நாட்கள் வந்தது. இவரிடத்தõல் 75,000 ரூபாய் இருந்தபடியால் எப்படியும் எல்லாம் வந்து விடும்ó என்று மேலோட்டமாக இருந்து விட்டார். ஊக்கமாக ஜெபிக்கவில்லை எப்படியோ கஷ்டப்பட்டு கூட்டத்தை நடத்தி முடித்துவிட்டார்.

எல்லாம் முடிந்த பிறகு அடுத்த நாள் ஆண்டவருடைய பாதத்தில் அமர்ந்து துதித்து, ஜெபித்து நீர் என்னை குறைவில்லாமல் நடத்தினீரே உமக்கு நன்றி என்றார். அப்பொழுது ஒரு தரிசனம் அவருக்கு உண்டானது. ஒரு மலைப்பாம்பு ஆட்டுக்குட்டி ஒன்றை விழுங்கிக் கிடந்தது. அவருக்கு இது ஏன் எனக்குத் தெரிகிறது என்று நினைத்துக் கொண்டே இருக்கும் பொழுது, மெதுவாக ஒரு சத்தம் உண்டானது. உனக்கு, உங்கள் கன்வென்ஷன் கூட்டத்திற்கு வரவேண்டிய ஆட்டை அந்த பாம்பு விழுங்கிக் கொண்டது. காரணம் நீ ஊக்கமாய் ஜெபிக்கவில்லை என்று மென்மையான குரல் உண்டானது. அப்பொழுது அந்த போதகர் தான் கையில் இருந்த 75,000 ரூபாய் வந்தவுடன் திருப்தியாகி ஊக்கமாய் ஜெபிக்காதபடியால் வந்த ஆசீர்வாதத்தை சாத்தான் தடுத்து, மலைப்பாம்பு விழுங்கி விட்டது என்று உணர்ந்தார். அதன் பிறகு ஊக்கத்தோடு, கண்ணீரோடு ஜெபித்தார், பிறகு மகிமையாய், கிருபையாய் சபையை நடத்தி வந்தார். இன்றைக்கு அதைப் போலத்தான் சாத்தான் நமக்கு வர வேண்டிய நன்மைகளை, ஆசீரóவாதங்களைத் தடுத்து, தாமதப்படுத்தி அல்லது விழுங்கி நாம் அனுபவிக்க முடியாமல் செய்கிறான், வைத்திருக்கிறான்.

இப்படியாகத்தான் பேதுருவுக்கு வரவேண்டிய ஆசீர்வாதத்தை, வெள்ளிப்பணத்தை அவன் விழுங்கி வைத்திருந்தான், தடுத்து வைத்திருந்தான். ஆகவேதான் ஆண்டவராகிய தேவன் வரிப்பணம் செலுத்த காசு இல்லாத போதுமத் 17:27-ல் நீ, கடலுக்குப் போய் தூண்டில் போட்டு, முதலாவது அகப்படுகிற மீனைப் பிடித்து, அதின் வாயைத் திறந்துபார், ஒரு வெள்ளிப் பணத்தைக் காண்பாய், அதை எடுத்து எனக்காகவும், உனக்காகவும் அவர்களிடத்தில் கொடு என்றார்.ஆம் இப்படி நமக்கு வரவேண்டிய ஆசீர்வாதங்கள், நன்மைகள், வெள்ளிக்காசை யாரோ எடுத்துக் கொண்டார்கள். அல்லது நாம் அதை தொலைத்து, காணாமற் போகப்பண்ணி, நிர்விசாரமாய் எனக்கென்ன என்று இருந்து விட்டோம். ஒன்பது வெள்ளிக் காசு இருக்கிறது என்று திருப்தியடையாமல், அந்த காணாமற்போன வெள்ளிக்காசை, காணாமற்போன சாந்தகுணத்தை, காணாமற்போன பரிசுத்தத்தை, காணாமற்போன கனிகளைக் கண்டுபிடிக்க வேண்டும். அழுகையோடும், விண்ணப்பங்களோடும் அவர் சமூகத்தில் நம்மைத் தாழ்த்த வேண்டும். அப்பொழுது தேவன் நாம் இழந்ததைப் பெற்றுக் கொள்ளவும், கண்டுகொள்ளவும் நமக்கு கிருபை செய்வார். தேவன் நம்மிடத்தில் கொடுத்த அந்த வெள்ளிக்காசை, நமது மணநாள் வரும் வரை பத்திரமாய் பாதுகாத்து மீண்டும் நாம் அவரிடமே கொடுத்து பாராட்டுப் பெற, பத்திரப்படுத்துங்கள். ஆண்டவராகிய தேவன், நீங்கள் எதையும் இழக்காமல் இருக்க உங்களைப் பாதுகாப்பாராக.

3. விளக்கைக் கொழுத்துங்கள்

அன்றியும், ஒரு ஸ்திரி பத்து வெள்ளிக்காசை உடையவளாயிருந்து, அதில் ஒரு வெள்ளிக்காசு காணாமற்போனால், விளக்கைக் கொளுத்தி, வீட்டைப்பெருக்கி அதை கண்டுபிடிக்கும் வரைக்கும் ஜாக்கிரதையாயóத் தேடாமலிருப்பாளோ? லூக் 15:8.காணாமற்போனதைத் தேட ஆண்டவர் கற்றுக் கொடுத்த வழி என்ன தெரியுமா? விளக்கைக் கொளுத்த வேண்டும். நம்முடைய ஆத்துமா விளக்கு, கர்த்தர் தந்த தீபம்.நீதி 20:27-ல் மனுஷருடைய ஆவி கர்த்தர் தந்த தீபமாயிருக்கிறது. அது உள்ளத்தில் உள்ளவைகளையெல்லாம் ஆராய்ந்து பார்க்கும்என்று சொல்லப்பட்டுள்ளது. அந்த விளக்கு இன்றைக்கு எரியாமல் இருளடைந்துள்ளது, நம்முடைய ஆத்துமா, மனம், இருதயம் எங்கே? எப்படிக் கிடக்கிறது என்று தெரியாமல் இருளடைந்து. குப்பையும், கூளமுமாக அல்லது தூஷியாக எங்கே கிடக்கிறது என்று தெரியாமல் பாழடைந்து கிடக்கிறது. அந்த கீழே விழுந்த வெள்ளிக் காசைக் கண்டுபிடிக்க, மீட்க, புதைந்து கொண்டிருக்கிற, அனையும் தருவாயில் இருக்கின்ற இந்த விளக்கை சரி செய்ய வேண்டும், பற்றி எரிய வைக்க வேண்டும்.

அதைத்தான் அப்போஸ்தலனாகிய பவுல் சொல்லுகிறார்1 தெச 5:19-ல் தேவ ஆவியை அவித்துப் போடாதிருங்கள்,அனைத்துவிட வேண்டாம் என்று சொல்லப்பட்டுள்ளது. நம் விளக்கு எரிந்தால் தான் நம்மிடத்தில் உள்ள விலையெறப்பெற்ற பொருட்கள் பத்திரமாக இருக்கும், பாதுகாப்பாய் இருக்கும். அதுமட்டுமல்ல காணாமற்போனாலும் கண்டுபிடிக்க முடியும். ஆகவே கொளுந்து விட்டு எரியத்தான், பிரகாசிக்கத்தான் ஆண்டவராகிய இயேசு பூமிக்கு இறங்கி வந்தார். பூமியில் அக்கினியைப் போட வந்தேன், தீயை மூட்ட வந்தேன், அது இப்பொழுதே பற்றி எரிய வேண்டும் என்றார். எரிகிற விளக்காய் இருந்தால், விளக்கைக் கொளுத்தினால் கண்டிப்பாய் தொலைந்துபோன, காணாமற்போன வெள்ளிக்காசைக் கண்டுபிடித்து விடலாம். வீட்டைப் பெருக்கி சுத்தம் செய்து குப்பைகளை, தூசிகளை அப்புறப்படுத்தி விடலாம். அதற்குத்தான் விளக்கைக் கொளுத்துங்கள் என்றார்.

சங்கீதத்தில் சங் 119:105-ல் உம்முடைய வசனம் என் கால்களுக்கு தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறதுஎன்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆம் தேவனுடைய வார்த்தை, வசனம் நம்முடைய கால்களுக்கு தீபமும், பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது. அந்த வசனம் நம்முடைய இருதயத்தில், ஆத்துமாவில் விழும்போது, அது பலனளிக்கும் போது நமக்குள் இருக்கும் பரிசுத்த ஆவியானவரைப்பற்றி எரியவும், பிரகாசிக்கவும் நம்மை வைக்கிறது. அப்பொழுது நாம் வீட்டைச் சுத்தம் பண்ணுகிறபோது காணாமற்போன வெள்ளிக்காசை தேடவும், கண்டுபிடிக்கவும் மீண்டும் பெற்றுக் கொள்ளவும் அதின்நிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாகவும், தேவனுக்கு மகிமையையும் உண்டாக்குகிறது. இதினிமித்தம் நாம் மட்டுமல்ல நம்மை சுற்றியிருக்கிறவர்களும் நமக்குள் உண்டாகுகிற மாற்றத்தைப் பார்த்து சந்தோஷமடைந்து தேவனை மகிமைப்படுத்துகின்றனர்.

சமீபத்தில் கிட்னி பழுதடைந்து டயாலிஸிஸ் பண்ணிய சகோதரன் ஆண்டவரை நோக்கி ஜெபிக்க ஜெபிக்க வாரத்தில் மூன்று நாளாக இருந்தது, பிறகு ஒரு நாளாக மாறியது. தற்போது எந்த டயாலிஸிஸ் செய்யாதபடி எல்லாம் நார்மலாக, கிட்னி நல்ல செயல்பட ஆரம்பித்துவிட்டது. என்னோடு அவர் பேசும்போது அவருடைய சந்தோஷத்திற்கு அளவேயிலóலை, கர்த்தரை மகிமைப்படுத்திக் கொண்டே இருந்தார். இனி அவருக்காக வாழுவேன், உழைப்பேன், ஊழியம் செய்வேன் என்றார். அதைப் போலத்தான் மனம் திரும்புகிற ஒரு பாவியின் நிமித்தம், காணாமற்போனதைக் கண்டுபிடிக்கிற ஒரு மனிதனின் நிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாகும். என் ஆண்டவராகிய தேவன் தாமேஅவர் சமூகத்தில் நீங்கள் வாழ்கின்றவர்களாகவும், பிழைத்திருக்கிறவர்களாகவும் கணóடுபிடிக்கப்பட்டவர்களாகவும் வாழக் கிருபை செய்வாராக. அவரிடத்தில் ஒப்புக் கொடுத்ததை அந்தநாள் வரை காத்து நடத்துவாராக.