Inspiration
நீ பழகிப் பெருகி பூமியை நிரப்புங்கள்
நீ பழகிப் பெருகி பூமியை நிரப்புங்கள் நீ பயப்படாதே நான் உன்னோடு இருக்கிறேன்.
யாத்திராகமம் 1:7
நீங்கள் பலுகிப் பெருகி பூமியை நிரப்புங்கள். ஆதி 9:1
ஆண்டவரும் உலக இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். தேவனுடைய பெரிதான கிருபையினால் இந்த புதிய வருஷத்தில் அடியெடுத்து வைக்கிற உங்களை இயேசுவின் நாமத்தில் ஆசீர்வதிக்கிறேன். வருஷங்கள் வரும் போகும், மாதங்கள் வரும் போகும் ஆனால் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவோ மாறாதவர், அவருடைய வார்த்தையோ மாறாதவைகள், அவைகள் இன்றைக்கும் நிறைவேறுகிறது, நடந்து கொண்டிருக்கிறது. இயேசு சொன்னார் மத் 5:17-ல் நியாயப்பிரமாணத்தையானலும், தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக் கொள்ளாதேயுங்கள், அழிக்கிறதற்கு அல்ல நிறைவேற்றுகிறதற்கே வந்தேன் என்றார். அதனால் தான் நாம் தேவனுடைய வார்த்தையை நம்பி, மாதங்களிலும், வருஷங்களிலும் அதை நினைப்பூட்டி, அந்த வார்த்தைகளைப் பிடித்துக் கொண்டு அவை நிறைவேற ஜெபிக்க வேண்டும். இந்த புதிய வருஷத்திலே தேவன் நம்மைப் பார்த்து சொல்லுகிறார் நீங்கள் பலுகிப் பெருகி பூமியை நிரப்புங்கள் என்று. என்னுடைய மகிமையினாலே, என்னுடைய வல்லமையினாலே, என்னுடைய வார்த்தையினாலே, என்னுடைய கிரியைகளினாலே நிரப்புங்கள் என்றார். தேவன் பாவஞ்செய்த தூதர்களையும், பாவஞ்செய்து அவருக்கு விரோதமாய் வாழ்ந்த மனுகுலத்தையும் அழித்து சங்காரம் பண்ணினார். 2 பேதுரு 2:4,5-ல் பாவஞ்செய்த தூதர்களை தேவன் தப்பவிடாமல், அந்தகாரச் சங்கிலிகளினாலே கட்டி நரகத்திலே தள்ளி நியாயத்தீர்ப்புக்கு வைக்கப்பட்டவர்களாக ஒப்புக்கொடுத்து, பூர்வ உலகத்தையும் தப்பவிடாமல் நீதியைப் பிரசங்கித்தவனாகிய நோவா முதலான எட்டுப் பேரைக் காப்பாற்றி, அவபக்தியுள்ளவர்கள் நிறைந்த உலகத்தின்மேல் ஜலப்பிரளயத்தை வரப்பண்ணினார். அதனால் முழுமனுக்குலமும் அழிந்து பூமியிலே வெறும் எட்டுப்பேர் மாத்திரம் சஞ்சரித்தார்கள். அதாவது எல்லாத் தலைமுறையும் அழிந்து புதிய ஒரு தலைமுறையை தேவன் உண்டாக்கினார். இதுவரை கூட இருந்தவர்கள், வாழ்ந்தவர்கள் எல்லாரும் பூமியை விட்டே கடந்து போய்விட்டார்கள், இப்பொழுது ஒரு புதிய வானம், புதிய பூமிக்குள் வந்துவிட்டார்கள். இந்த எட்டுப்பேரைப் பார்த்து, நீதியாய் வாழ்ந்து, நீதியைப் பிரசங்கித்த நோவாவைப் பார்த்து ஒன்றுமில்லாத இந்த உலகத்தில், வெறுமையான இந்த உலகத்தில் நீங்கள் பலுகிப் பெருகி பூமியை நிரப்புங்கள் என்றார். ஒரு காலத்தில் அவனோடு வாழ்ந்த ஜனங்கள் பொல்லாதவர்களும், முரட்டுத்தனமுள்ளவர்களும், அடங்காதவர்களும், தேவனை தூஷிக்கிறவர்களும், மனம்போன போக்கில் வாழ்ந்தவர்களுமாய் இருந்தார்கள். இப்பொழுது அப்படியல்ல இவர்கள் தான் ராஜா, இவர்கள் தான் மந்திரி, இவர்கள் தான் அதாவது இந்த எட்டுப்பேர் தான் எல்லாம். இவர்களைப் பார்த்து தான் தேவன் சொன்னார் நீங்கள் பலுகிப் பெருகி பூமியை நிரப்புங்கள் என்று. என்னால் நிரப்புங்கள், என்னுடைய மகிமையினால் நிரப்புங்கள், என்னுடைய நீதியினால், என்னுடைய வார்த்தையினால் நிரப்புங்கள் என்றார். இதுவரை பழைய உலகத்தில் வாழ்ந்த ஜனங்களை, சாத்தானó அசுத்தங்களால், அருவருப்புக்களால் நிரப்பி வைத்திருந்தான். அப் 13:10-ல் எல்லாக் கபடமும், எல்லாப் பொல்லாங்கும் நிறைந்தவனே, பிசாசின் மகனே, நீதிக்கெல்லாம் பகைஞனே, கர்த்தருடைய செம்மையான வழிகளைப் புரட்டுவதிலó ஓயமாட்டாயோ? என்றார். இன்றைக்கு நாம் வாழும் உலகமும் இப்படித்தான் கர்த்தருடைய செம்மையான வழியை விட்டு புரட்டி, எல்லாக் கபடமும், பொல்லாங்குகளினால் நிறைந்து, மனிதன் தீமைகளையும், அசுத்தங்களையும், அருவருப்புகளையும், பொல்லாத கிரியைகளால் நிறைந்து காணப்படுகிறான். இயேசு சொன்னார் இன்றைக்கு வாழும் மனிதர்கள் தங்கள் பாவங்களின் அளவை நிரப்பிக் கொண்டே இருக்கிறார்கள். மத் 23:32-ல் நீங்களும் உங்கள் பிதாக்களின் அக்கிரம அளவை நிரப்புங்கள், நிரப்புகிறீர்கள் என்றார். ஒரு மனிதனுடைய பாவமும், ஒரு தேசத்தினுடைய பாவமும் இந்த பூமியை நிரப்பும் போது, நிறைவாகும் போது என்ன நடக்கும்?, அங்குதான் தேவ கோபமும், அழிவும் உண்டாகிறது. இதைத்தான் நாம் வேதத்தில் பல இடங்களில் பார்க்கிறோம். ஆதி 15:16-ல் நாலாம் தலைமுறையிலே அவர்கள் இவ்விடத்துக்குத் திரும்பி வருவார்கள். ஏனென்றால் எமோரியருடைய அக்கிரமம், பாவம் இன்னும் பூமியிலே நிறைவாகவில்லை என்றார்கள். இந்த பூமியிலே மனிதனுடைய அக்கிரமங்களும், பிசாசின் கிரியைகளும் வானளவாய் பெருகிக் கொண்டிருக்கிறது. எங்கும் துன்மார்க்கம், எதிலும் துன்மார்க்கம், இப்படிப்பட்ட உலகத்திலே பழைய மனுக்குலத்தை அழித்து, புதிய சந்ததியை, பரிசுத்த சந்ததியை தேவன் உருவாக்கவும், நோவாவை உயிரோடு காப்பாற்றி, நீங்கள் எட்டுப்பேர் இந்த பூமியை நிரப்பி, பலுகிப் பெருகுங்கள், பூமியை நிரப்புங்கள் என்றார். இன்றைக்கு நாம் தேவனால், அவருடைய வல்லமையினால் நிரப்பப்பட வேண்டும். நாம் இந்த பொல்லாத உலகிலே மாண்டு, மடியாதபடி எத்தனையோ கொடிய கொள்ளை நோய்க்கும், தீங்கிற்கும் தேவன் நம்மை விலக்கிக் காத்து, பூமியிலே உயிரோடு நம்மை வைத்திருக்கிறார். சீர்கெட்ட இந்த பூமியை, இன்றைக்கு நாம் அவருடைய மகிமையினாலும், கிருபையினாலும் நிரப்ப வேண்டும். அதற்குத் தான் ஆண்டவராகிய தேவன் இன்னும் ஒரு புதிய வருஷத்தைக் கொடுத்து, ஆயுள் நாட்களைக் கூட்டிக் கொடுத்து நம்மை உயிரோடு விட்டு வைத்திருக்கிறார். நமக்கு பூமியிலே இன்னும் ஒரு தருணம் தந்திருக்கிறார். எதற்காக? உங்கள் காரியங்களை நடப்பிக்க, உங்கள் வேலையை மாத்திரம் செய்ய, உங்கள் காரியங்களைப் பார்க்க அல்ல நாம் தேவனுடைய காரியங்களை நடப்பிக்கத்தான். தேவன் நோவாவை பெருவெள்ளப் பெருக்கிலே இருந்து காப்பாற்றி, திரும்ப பூமியிலே வாழ, ஒரு வாய்ப்பைக் கொடுத்து நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்புங்கள் என்றார். இந்த புதிய வருஷத்திலே நாம் பலுகவும், பெருகவும், நிரப்பவும், நம்மை தேவனிடத்தில் அர்ப்பணித்தால் தேவன் நம்மைக் கொண்டு பூமியிலே என்ன செய்ய சித்தம் வைத்திருக்கிறாரோ அதைச் செய்து, அவருக்கு மகிமையாய் வாழும்படி நமக்கு கிருபை செய்வார். வேதம் சொல்லுகிறது மீகா 3:8-ல் நானோ, யாக்கோபுக்கு அவன் மீறுதலையும், இஸ்ரவேலுக்கு அவன் பாவத்தையும் அறிவிக்கும்படி, கர்த்தருடைய ஆவி அருளின பலத்தினாலும், நியாயத்தினாலும், பராக்கிரமத்தினாலும் நிரப்பப்பட்டிருக்கிறேன் என்றார். நம்மையும் அவருடைய மகிமையினாலும், கிருபையினாலும் நிரப்பி இந்த பூமியில் அவருக்காக ஜீவிக்க நம்மை உயிரோடு வைத்திருக்கிறார். அவருடைய வல்லமையினாலும், ஆற்றலினாலும் நம்மை நிரப்பி, நாம் இந்த பூமியை நிரப்ப, நம்மைப் பயன்படுத்துவாராக. இதைத்தான் தேவன் நோவாவுக்கு கட்டளையிட்டார், இதை செய்யுங்கள் என்றார். நாம் இந்த பூமியை இயேசுவின் நாமத்தினால் நிரப்பவும், அவருடைய வார்த்தையாகிய சுவிசேஷத்தினால் நிரப்பவும் தேவன் நமக்கு கட்டளையிட்டிருக்கிறார். அதைச் செய்யவே இந்த புதிய வருஷத்தை தேவன் கொடுத்திருக்கிறார். போகட்டும் எதைச் செய்ய வேண்டும், எதினாலே நிரப்ப வேண்டும் என்பதைப் பார்போம்.
1.உங்கள் ஆத்துமாவை நிரப்புங்கள்.
நான் விடாய்த்த ஆத்துமாவைச் சம்பூரணமடையப்பண்ணி, தொய்ந்த எல்லா ஆத்துமாவையும் நிரப்புவேன் என்றார் எரே 31:25. நம்மை பார்த்து பூமியை நிரப்புங்கள் என்றவர், அதற்கு முன்னதாக நம்மை நிரப்ப, நிறைவாக்க விரும்புகிறார். எபே 1:23-ல் எல்லாவற்றையும், எல்லாவற்றாலும் நிரப்புகிறவருடைய நிறைவாகிய சரீரமான சபைக்கு அவரை எல்லாவற்றிற்கும் மேலான தலையாகத் தந்தருளினார் என்று சொல்லப்பட்டுள்ளது. எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிறவர் நம்முடைய தேவன். எந்த ஒரு பூமியாக இருந்தாலும், எந்த ஒரு மனிதனுடைய இருதயமாக, ஆத்துமாவாக இருந்தாலும், அதை வெறுமையாக விடாமல் நிரப்ப சித்தம் கொண்டிருக்கிறார். பூமியானது ஒழுங்கின்மையும், வெறுமையுமாக இருந்தது. அப்படிப்பட்ட உலகத்தை தேவன் தேவஆவியினாலே நிரப்பினார். அந்த தேவன் இன்றைக்கு மனிதர்களுடைய ஆத்துமாவை நிரப்புவேன் என்கிறார். ஏனென்றால் சாத்தான் எந்தெந்த ஆத்துமா வெறுமையாக இருக்கோ, தேவனை அறியாமல், தேவனால் நிரப்பப்படாமல் இருக்கிறதோ, அந்த ஆத்துமாவை குறிவைத்து தாக்க ஆரம்பிக்கிறான், தேவனை விட்டு பிரிக்க ஆரம்பிக்கிறான். அப்பொழுது அந்த ஆத்துமா தொய்ந்து போய், பலவீனப்பட்டு தேவபிரசன்னத்தை அனுபவிக்க முடியாதபடி வெறுமையிலும், வேதனையிலும் வாழுகின்றது. நாம் எவ்வளவு தான் ஓடினாலும், உழைத்தாலும், சம்பாதித்தாலும் பொருளாதாரத்தில் முன்னேற முடியாமல் பற்றாக்குறையோடும் வேதனையோடும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நமக்கு நம் மேலே, நம்மைக் குறித்தே ஒரு திருப்தியில்லாமல் போய் விடுகிறது. வேதம் சொல்லுகிறது ஏசாயா 55:2-ல் நீங்கள் அப்பமல்லாததற்காகப் பணத்தையும், திருப்தி செய்யாத பொருளுக்காக உங்கள் பிரயாசத்தையும் செலவழிப்பானேன்?. நீங்கள் எனக்குக் கவனமாய்ச் செவிகொடுத்து, நலமானதைச் சாப்பிடுங்கள், அப்பொழுது உங்கள் ஆத்துமா கொழுப்பான பதார்த்தத்தினால் மகிழ்ச்சியாகும் என்றார். உலகமோ, நாம் வைத்திருக்கிற பொருட்களோ, வசதி வாய்ப்போ, பணமோ நம்மை திருப்தியாக்குவதில்லை. நம்முடைய ஆத்துமாவில் வந்து தேவன் தங்கி, அதை நிரப்பினால் தான் அது திருப்தியாகும். நம்மை புல்லுள்ள இடத்தில், தேவ பிரசன்னத்தில் திருப்தியாய் நடத்துகிறவர் பரிசுத்த ஆவியானவர் மாத்திரமே. அதனால் தான் தாவீது ராஜா சொல்லுகிறார் சங் 23:2,3-ல் அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் என்னைக் கொண்டுபோய் விடுகிறார். அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார் என்றார். இந்த புதிய வருஷத்தில் தேவன் நம்முடைய ஆத்துமாவை பரிசுத்த ஆவியானவரால், அவருடைய திட்டத்தால், அவருடைய வல்லமையினால் நிரப்பப் போகிறார். பெலவீனமுள்ள நம்முடைய ஆத்துமா, தொய்ந்துபோன நம்முடைய ஆத்துமா, அவருடைய பெலத்தால், வல்லமையினால் நிரப்பப்படவும், எல்லா தொய்ந்த ஆத்துமாவையும் நிரப்புவேன் என்றார். இந்த வருஷத்திலே நீங்கள் அவரால் நிரப்பப்பட்டால் தான், மற்றவர்களை தேவனுக்குள் வழிநடத்த முடியும். அவர்கள் வெறுமைகளை மாற்றி தேவஆவிக்குள் வழிநடத்த முடியும். அதற்கு முதலாவது உங்கள் ஆத்துமாவை தேவன் அவருடைய சகல ஞானத்தாலும், பெலத்தாலும், மகிமையினாலும் நிரப்ப வேண்டும். சங் 107:8-ல் தவனமுள்ள ஆத்துமாவைக் கர்த்தர் திருப்தியாக்கி, பசியுள்ள ஆத்துமாவை நன்மையினால் நிரப்புகிறார் என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த செய்தியை வாசித்துக் கொண்டிருக்கும் என் அன்பு சகோதர, சகோதரிகளே உங்கள் புத்தியில், உங்கள் மூளையில் உண்டான, உங்கள் இருதயத்தில், உங்கள் ஆத்துமாவில் உண்டான சகல திட்டங்களையும், எண்ணங்களையும் காóத்தர் மாற்றி, அதை உங்களிடத்திலிருந்து அப்புறப்படுத்தி, அவருடைய நோக்கத்தாலும், உன்னத திட்டத்தாலும் நிரப்ப விரும்புகிறார். ஆகவே தான் அவர் சொல்லுகிறார் நான் விடாய்த்த ஆத்துமாவை சம்பூரணமடையப்பண்ணி, தொய்ந்த எல்லா ஆத்துமாவையும் நிரப்புவேன் என்றார். அப்படி நிரப்பப்பட்டால் தான் நீங்கள் இந்த பூமியில் தேவனை வெளிப்படுத்தி, அவருடைய காரியங்களைச் செய்யவும், நிரப்பவும் முடியும். இப்படித்தான் அவர் உன்னத நோக்கத்தை தேவன், அவர் பிள்ளைகள் மூலமாகச் செய்தார். லூக்கா 1:15-ல் யோவான்ஸ்நானகன், இயேசுவுக்கு வழியை ஆயத்தப்படுத்த வரும்போது தேவனó அவரை பரிசுத்த ஆவியினால் நிரப்பி இருந்தார். அவர் தாயின் வயிற்றிலிருக்கும்போதே பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருந்தான். சீஷர்கள் வாழ்க்கையைப் பாருங்கள் இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குப் பின்பு தடுமாறி, அவரைப் பின்பற்ற முடியாமல் தவித்து, தொய்ந்து போன, துவண்டு போன அவர்களை தேவன் பரிசுத்த ஆவியினால் அளவில்லாமல் நிரப்பி, அவர்களைக் கொண்டு பலத்த காரியங்களைச் செய்தார். அப் 4:31-ல் அவர்கள் ஜெபம் பண்ணினபோது, அவர்கள் கூடியிருந்த இடம் அசைந்தது. அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு தேவவசனத்தைத் தைரியமாய்ச் சொன்னார்கள். ஆம் பரிசுத்த ஆவியினால் நம்முடைய ஆத்துமாவில் நிரப்பப்பட்டால் தான் நாம் இந்த பூமியில் அவருடைய செயல்களை, கிரியைகளை செய்து நிரப்ப முடியும். இதைத்தான் தேவன் நோவாவுக்கு கட்டளையிட்டார். நீங்கள் பலுகிப் பெருகி பூமியை தேவமயமாய், பரிசுத்த ஆவியின் வல்லமை மயமாய் நிரப்புங்கள் என்றார். தண்ணீர் கடலை நிரப்பி இருக்கிறது போல, பூமியில் வாழும் ஜனங்கள் என்னைப் பற்றும் அறிவினால் நிரப்பப்பட வேண்டும். என்னை அறிந்து கொள்ள வேண்டும். என்னை ஆவியோடும், உண்மையோடும் தொழுது கொள்ள வேண்டும் என்றார். அதைச் செய்யத்தான் ஆண்டவராகிய தேவன் இந்த புதிய வருஷத்தைக் கொடுத்திருக்கிறார். இந்த வருஷத்திலே நீங்கள் பலுகிப் பெருகி பூமியை நிரப்புங்கள் என்றார். என் ஆண்டவராகிய தேவன் தாமே உங்களை பலுகவும், பெருகவும் பண்ணி நிரப்புகிறவர்களாக மாற்றுவாராக.
2.வார்த்தையால் நிரப்புங்கள்.
இயேசு வேலைக்காரரை நோக்கி ஜாடியிலே தண்ணீர் நிரப்புங்கள் என்றார். அவர்கள் அவைகளை வாய் மட்டும் நிறைய நிரப்பினார்கள். இந்த புதிய வருஷத்தில் வெறுமையான கற்சாடிகளை தண்ணீரால் நிரப்புங்கள் என்றார். இதுவரை இல்லாத அளவுக்கு நாம் தேவனுடைய வார்த்தையால் நம்மை நிரப்பிக் கொள்ள வேண்டும். எபே 5:26-ல் தாம் அதை திருவசனத்தைக் கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்திகரித்óது, பரிசுத்தமாக்குகிறதற்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. தண்ணீராகிய தேவ வசனம் நம் வாழ்க்கையில் உள்ள எப்பேர்ப்பட்ட கறையாக, திரையாக இருந்தாலும் தேவனுடைய வார்த்தை அதை சுத்தப்படுத்திவிடும். இயேசு சொன்னார் யோவான் 15:3-ல் நான் உங்களுக்குச் சொன்ன உபதேசத்தினாலே நீங்கள் இப்பொழுதே சுத்தமாயிருக்கிறீர்கள் என்றார். ஆம் இயேசுவின் வார்த்தையை அனுதினமும் படிக்கும் போது, கேட்கும் போது அது நம்மை தூய்மைப்படுத்தி, சுத்திகரித்து, உலகத்தினால் கறைபடாமல் காத்து, தேவனுக்கு முன்பாக நம்மை நிறுத்தி விடும், இல்லை என்றால் நம்முடைய ஆத்துமா, மனம் வெறுமையாக இருக்கும் போது சாத்தான் தன்னிலும் பொல்லாத வேறு ஏழு ஆவிகளைத் தன்னோடே கூட்டிக் கொண்டு வந்து, உட்புகுந்து அங்கே குடியிருக்கும், அப்பொழுது அந்த மனுஷனுடைய முன்னிலைமையிலும், அவன் பின்னிலைமை அதிக கேடுள்ளதாயிருகóகும் மத் 12:45 அப்படிச் சொல்லுகிறது. அதனால் தான் தேவன் தம்முடைய மகத்துவமான வேதத்தை எழுதி நம்முடைய கையில் கொடுத்திருக்கிறார். நாம் அதை வாசிக்க வேண்டும். அதை நம்முடைய இருதயத்திலும், சிந்தையிலும் நிரப்ப வேண்டும். இதைத்தான் கானாவூரில் கல்யாண வீட்டில் திராட்சரசம் தீர்ந்தபோது இயேசு அவர்களை செய்யச் சொன்னார். இந்த கற்சாடிகளில் தண்ணீரை நிரப்புங்கள் என்றார். அவர்கள் அதை நிரப்பினார்கள் அற்புதம் நடந்தது. இன்றைக்கு நாம் நம்முடைய தேசத்தில், நம்முடைய குடும்பத்தில் தண்ணீராகிய வேதவசனத்தால் நிரப்ப வேண்டும். ஆதி 21:19-ல் அவள் தேவனை நோக்கி கத்தி கதறி துருத்தியிலே என் எஜமான் கொடுத்தனுப்பிய தண்ணீர் தீர்ந்து விட்டது, பிள்ளையும், நானும் பிழைப்பதற்கு தண்ணீர் இல்லை, பிள்ளை சாகிறதை நான் பார்க்க மாட்டேன் என்று சத்தமிட்டு அழுதாள். தேவன் அவளுடைய கண்களைத் திறந்தார், அப்பொழுது அவள் ஒரு தண்ணீர்த் துரவைக் கண்டு போய், துருத்தியிலே தண்ணீர் நிரப்பிக் கொண்டு வந்து பிள்ளைக்குக் குடிக்கக் கொடுத்தாள். நிரப்பினாள், குடிக்கக் கொடுத்தாள் இன்றைக்கு தேவனுடைய அற்புதங்களó பூமியிலே முடிந்து விடவில்லை. அது நடந்து கொண்டு தான் இருக்கிறது. அதற்கு நாம் இந்த பூமியை, மனிதர்களுடைய இருதயத்தை தேவனுடைய வார்த்தையினாலே நிரப்பி விடவேண்டும். இதைத்தான் ரெபெக்காள் செய்தாள். ஆபிரகாமின் வீட்டு விசாரனைக்காரராக இருந்த எலியேசர் ஈசாக்குக்கு பெண் பார்க்கப் போனபோது அவனுக்கும் தண்ணிர் தீர்ந்து விட்டது. அப்பொழுது ரெபெக்காள் என்ன செய்தாள்? ஆதி 24:17-20 வரையுள்ள வசனங்களில் உன் குடத்திலிருகóகிற தண்ணீரில் கொஞ்சம் குடிக்கத் தரவேண்டும் என்றான். அதற்கு அவள் குடியும் என் ஆண்டவனே என்று சீக்கிரமாய்க் குடத்தைத் தன் கையில் இறக்கிக்கொண்டு, அவனுக்குக் குடிக்கக் கொடுத்தாள். கொடுத்த பின், உம்முடைய ஒட்டகங்களும் குடித்துத் தீருமட்டும் அவைகளுக்கும் மொண்டு வார்ப்பேன் என்றாள். அவர்கள் நிரப்பப்படும் மட்டும், போதும் என்று சொல்லும் மட்டும் நிரப்பிக் கொண்டே இருந்தாள். இன்றைக்கு தண்ணீரில்லாத, அபிஷேகமில்லாத, பரிசுத்த அவியானவர் இல்லாத இந்த உலகத்திலே, இந்த பூமியிலே நாம் பரிசுத்த ஆவியானவராலும், அவருடைய வார்த்தையினாலும் இந்த பூமியில் வாழுகின்ற ஜனங்களை நிரப்ப வேண்டும். இதைதான் தேவன் இந்த வருடம் நம்மிடத்தில் எதிர்பார்க்கிறார். ஏசாயா 27:6-ல் யாக்கோபு வேர்பற்றி, இஸ்ரவேல் பூத்துக்காய்ந்து உலகத்தைப் பலனால் நிரப்பும் நாட்கள் வரும் என்றார். இனி இந்த உலகத்தை, அதில் வாழும் மனிதர்களை தேவனுக்குப் பலன் கொடுக்கிறவர்களாக மாற்றும் ஒரு உன்னதமான ஊழியத்தை நாம் செய்ய வேண்டும். அதற்காகத் தான் தேவன் நம்மை ஒரு புதிய ஆண்டிற்குள், புதிய வருஷத்திற்குள் நம்மை கொண்டு போகிறார். இந்த பூமியில் இப்பொழுது வாழும் சந்ததிமேல் தேவனுடைய ஆவி ஊற்றப்படும்படி நாம் செயல்பட வேண்டும். கிரியைச் செய்ய வேண்டும், ஊழியம் செய்ய வேண்டும். இதைத்தான் எலிசா செய்தார் 2 ராஜா 3 16,17-ல் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால் இந்த பள்ளத்தாக்கிலே எங்கும் வாய்க்கால்களை வெட்டுங்கள், நீங்கள் காற்றையும் காணமாட்டீர்கள், மழையையும் காணமாட்டீர்கள், அனாலும் நீங்களும், உங்கள் ஆடுமாடுகளும் உங்கள் மிருக ஜீவன்களும் குடிக்கும்படிக்கு, இந்தப்பள்ளத்தாக்கு தண்ணிரால் நிரப்பப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார். எவ்வளவு அருமையான ஒரு வழி நடத்துதல், எவ்வளவு அருமையான அற்புதம். பஞ்சத்திலும், பட்டினியிலும், பற்றக்குறையிலும் மூழ்கிய தேசத்தை தேவன் ஆசீர்வதத்தினால் நிரப்பினார், அற்புதத்தினால், தண்ணீரினால் நிரப்பினார். ஜனங்களுடைய வெறுமையை மாற்றி, வேதனையை மாற்றி அவர்கள் வாய்யைத் திறந்து துதிக்கும்படி தேவன் இறங்கினார். சங்கீதம் 81:10-ல் உன்னை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப் பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் நானே, உன் வாயை விரிவாய்த்திற, நான் அதை நிரப்புவேன் என்றார். அதைத்தான் ஆண்டவராகிய தேவன் இந்த புதிய வருஷத்தில் நம்மிடத்தில் எதிர்பார்க்கிறார். ஆகவே தான் நோவாவைப் பார்த்து நீங்கள் பலுகிப் பெருகி இந்த பூமியை நிரப்புங்கள் என்றார். இன்றைக்கு இந்த செய்தியை வாசிக்கின்ற என் அன்பு சகோதர சகோதரிகளே நாம் வாழும் இந்த காலத்தை, நாட்களை நாம் சரியாய் பயன்படுத்தி கர்த்தருக்கு மகிமையாக, அவர் கொடுத்த இந்த ஊழியத்தை நாம் நிறைவேற்றி, பூமியை அவருடைய வல்லமையினாலும், வார்த்தையினாலும் நிரப்பி அவருக்கு மகிமையைக் கொண்டு வருவோம். என் ஆண்டவராகிய தேவன் தாமே இந்த புதிய வருஷத்திலே நீங்கள் பலுகவும், பெருகவும், நிரப்பவும் உங்களை பயன்படுத்துவாராக. ஆமென்.