Inspiration

வெற்றியோ? தோல்வியோ? இருக்கின்றதோ, இல்லையோ, விட்டுவிடாதிருங்கள்! நம்பிக்கையை!

கிறிஸ்துவின் அன்பை விட்டு நம்மை பிரிப்பவன் யார்?…..இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்பு கூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே ரோமர் 8:37. ஆகையால், மிகுந்த பலனுக்கேதுவான உங்கள் தைரியத்தை விட்டுவிடாதிருங்கள். எபிரே 10:35.
கிறிஸ்துவில் அன்பான வாலிபத்தம்பி, தங்கைகளே என்ன நடந்தாலும் நம்மில் அன்பு கூர்ந்து, அனைத்திலும் பெரும் வெற்றியை நமக்குத் தருகிற நம் ஆண்டவர் இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள். இரு கைகளும், இரு கால்களும் இல்லாதவராக ஆஸ்திரேலியாவிலுள்ள மெல்போர்னில் நிக்கோலஸ் ஜேம்ஸ் பிறந்தார். கால்கள் இருக்க வேண்டிய இடத்தில் பாதமும் இரண்டு விரல்களுமே இருந்தது. இவ்வித உடல் குறைபாட்டைத் தவிர, ஆரோக்கியமாகவே இவர் இருந்தார். இவர் பிறந்தவுடன் அம்மா, அப்பாவால் முதலில் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனாலும் ஈண்ள்ஹக்ஷப்ங்க் ஸ்ரீட்ண்ப்க்-ஆகப் பார்க்காமல் நல்ங்ஸ்ரீண்ஹப் இட்ண்ப்க்-ஆகவே தேவன் தங்களுக்குத் தந்ததாகவே அவரின் தாயும், தகப்பனும் அவரை வளர்த்தார்கள். இயேசு என்னை நேசிக்கிறார் என்ற பாடலை ஞாயிறு தோறும் சிறுவயது முதல் பாடினாலும் இயேசு என்னை நேசித்திருந்தால் ஏன் இப்படி கையும், காலுமில்லாதவனாய் என்னைப் பிறக்க வைக்க வேண்டும். கடவுள் அற்புதங்களைச் செய்வார் என்றால் ஏன்? எனக்கு கையையும், காலையும் கொடுத்து என் வேதனையைப் போக்கக் கூடாது தேவன் என்னுடைய எந்த ஜெபத்திற்கும் பதில் கொடுக்கவில்லை. கடவுள் என்று ஒருவர் இல்லை என்று ஜேம்ஸ் நினைக்கத் தொடங்கினார். அவருடைய 8 வயது முதல் 12 வயது வரை அவருக்கு கடினமான நாட்களாகவே இருந்தது. அவருடைய பள்ளியில் முதல் மாற்றுத்திறனாளி அவரே. கையும், காலுமில்லாதவனாய் இருசக்கர நாற்கலியில் அமர்ந்து செல்லும் போது எல்லாருடைய கவனமும், பார்வையும் அவர் மீதே இருந்தது. அதனால் தன்மீது அவருக்கே வெறுப்பாயிருந்தது. பரியாசமும், கேலியும் மனச்சோர்வடையப் பண்ணிற்று. தனிமையை உணர்ந்து 10 வயதில் தற்கொலை செய்ய முயற்சி செய்து தண்ணீர் தொட்டியில் 3 முறை விழுந்தார். மூன்றாவது முறை கல்லறையில் நின்று அவருக்காய் பெற்றோர் அழுவது போலிருந்தது. அப்படியொரு வேதனையை பெற்றோர்களுக்கு கொடுக்கக் கூடாது என்று அதைக் கைவிட்டார். எவ்வளவோ பணமோ, படிப்போ, நண்பர்களோ, வாழ்க்கைக்கு தேவையான எந்தப் பொருடகளோ துளியும் அவரை சந்தோஷப்படுத்த முடியவில்லை. அவரால் மனச்சோர்விலிருந்து வெளியே வரவும் முடியவில்லை. இந்நிலையில் அவரது 15-வது வயதில் தேவன் அவருடைய ஜெபத்தைக் கேட்டார். யோவான் 9-ஆம் அதிகாரத்தை வாசித்துக் கொண்டிருந்த போது பிறவிக் குருடனைக் குறித்து அங்கே எழுதப்பட்டிருந்தது. அந்த அதிகாரத்தில் இவருடைய வாழ்க்கைக் கஷ்டத்தைப் போலவே பிறவிக் குருடனுடைய நிலையும் இருந்தது. அந்தக் குருடனின் கஷ்டத்தை இவர் உணர்ந்தார். மக்கள் அவன் குருடனாய் ஏன்? பிறந்தான் என்று இயேசுவைப் பார்த்துக் கேட்டனர். அதற்கு அவர் தேவமகிமையை வெளிப்படுத்துவதற்காகவே இவன் இப்படிப் பிறந்தான் என்றார். (யோவான் 9:2,3). அவருக்குள்ளே ஒரு விசுவாசம் வந்தது. அந்த வசனத்தைக் குறித்த அறிவு அவருக்குள்ளே விசுவாசத்தைக் கொடுத்தது. விசுவாசம் என்பது நமக்குள்ளே நாம் உருவாக்கிக் கொள்ளுவது அல்ல. அது தேவனிடத்திலிருந்து வருகிற ஈவு. தேவனுடைய வாக்குத்தத்தங்களைக் (வசனத்தைக்) கேட்கும் போது நமக்குள்ளே தேவனிடத்திலிருந்து வருகிற விசுவாசம் உருவாகுகிறது. (ரோமர் 10:17) அதுவே அவர் வாழ்க்கையை மாற்றியது. இயேசு அவர் மனதை குணமாக்கினார். இயேசுவின் கையில் அவர் ஒரு கருவியாய் இருந்து, தேவனின் பலம் இவருடைய பலமாக அற்புதமாய் வந்து நிரப்புவதை உணர்ந்தார். அற்புதமாக உலகின் பல்வேறு இடங்களில் சென்று சாட்சி கூறி வருகிறார். தேவனால் தனக்கு ஒரு அற்புதம் நடந்து கைகளும், கால்களும் உடையவனாய் நான் சாட்சி சொன்னாலும், இப்படி கை, கால் இல்லாமலே முகத்தில் புன்னைகையோடு என்னால் வல்லமையாய் சாட்சி சொல்ல முடியாது என்பதற்கு என் சாட்சியே மிகப்பெரிய சாட்சி என்று அவர் கூறும்போது சொல்கிறார். என்னைப் போல ஏதாவது குறையுள்ளவர்கள் இருப்பீர்களானால் நன்றாய் கேளுங்கள். ஆண்டவர் என்னை ஒரு நோக்கமில்லாமல் படைத்து விட்டார். என்னால் என்ன செய்ய முடியும் என்று நினைக்கிறீர்களோ? கை கால் இல்லாத என்னையே அவருடைய கை காலாக பயன்படுத்த முடியுமானால் உங்களையும் பயன்படுத்த முடியும். ரோமர் 8:28-ன்படி சகலமும் நன்மைக்கேதுவாக நடக்கிறது. என்னுடைய இயலாமை தான் என் கஷ்டம் என நினைத்தேன், உன்னுடைய இயலாமை உன்னுடைய பிரச்சனை அல்லவே அல்ல. எல்லாவற்றையும் நன்மைக்காகவே செய்கிறார் என்ற சிந்தை இல்லாமலிருப்பதே உனக்குப் பிரச்சனை. நம் தேவன் சர்வ வல்லமையுள்ளவர், மிகவும் பெரியவர், நம் வாழ்வின் எந்த மோசமான நிலைமையையும், காரியத்தையும் மிகவும் நன்மையாய் மாற்ற அவரால் முடியும். நான் கைகளும், கால்களும் இல்லாமல் பிறந்திருப்பது ஏதோ ஒரு ஆத்துமாவுக்கு, இரட்சிக்கப்படுவதற்குக் காரணமாயிருந்தால் எனக்கு கால்களும், கைகளும் வேண்டாம். ஒரு ஆத்துமா இரட்சிக்கப்பட்டால் போதும். இதை வாசித்துக் கொண்டிருக்கும் உங்களின் தற்போதைய நிலைமை என்ன? உங்கள் உள்ளத்தின் ஆறாத காயங்களா? சரீரத்தில் குறைபாடா? படிப்பு, வேலை, திருமணம்……எதிலும், எல்லாவற்றிலும் வெற்றியா? தோல்வியா? வறுமையா? வியாதியா?…. எதுவாயினும் நிக்கோலஸ் ஜேம்ஸ், பவுலைப் போல இவையெல்லாவற்றின் மத்தியிலும் இயேசு என்னை நேசிக்கிறார் என்பதை ஏற்றுக் கொண்டு அவரில் அன்பு கூருங்கள். ஏன் பிறந்தேன் என கேட்காதீர்கள். இருப்பதற்கு சாகலாம் என்று தவறான யோசனைக்கும், முடிவுக்கும் செல்லாதீர்கள். அவருடைய வார்த்தையை நம்புங்கள். சகலமும் நன்மையாய் மாறிவிடும். செய்வதை முழுபலத்தோடு செய்யுங்கள். ஜேம்ஸ் தனது இடது பாதத்திலுள்ள இரு விரல்களால் கம்யூட்டர் டைப் பண்ணப்பழகினார், டென்னிஸ் விளையாடுவது, வாத்தியக்கருவி வாசித்தல்……பள்ளியின் ஏழாவது ஆண்டில் பள்ளி மாணவத் தலைவனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பல பட்டப்படிப்புகளைப் படித்து கண்ச்ங் ஜ்ண்ற்ட் ர்ன்ற் ப்ண்ம்க்ஷள்-என்ற தொண்டு நிறுவனத்தை ஆரம்பித்து உலகெங்கும் சிறந்த உற்சாகமூட்டும் பேச்சாளராக, சிறந்த பிரசங்கியாராக இருக்கிறார். இவருக்குத் திருமணமாகி 4 குழந்தைகள் உண்டு. உங்களுக்கும் ஒரு எதிர்காலம் இருக்கிறது. நிச்சயமாகவே முடிவு உண்டு, உன் ( கர்த்தர் மேலுள்ள) நம்பிக்கை வீண்போகாது. நீதி கர்த்தருடைய பலம், உங்களின் பலமாக வந்து நிரப்பும். உங்களைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே, எல்லாவற்றையுஞ்செய்ய உங்களுக்குப் பெலனுண்டு.(நீதி 23:18, பிலி 4:13) கர்த்தர் தாமே உங்களைக் கரம் பிடித்து நடத்துவாராக.

Youth Special - Sis. Prema David