Inspiration

Children's Special

ஹலோ குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா!,
பிறக்கும்போதே கண்ணுத் தெரியாம பிறந்த ஒரு அண்ணனைப் பார்த்த சீஷர்கள், இயேசப்பாகிட்ட கேட்டாங்க, இவன் செஞ்ச பாவமா? இவன் அம்மா, அப்பா செஞ்ச பாவமா? யார் செய்த பாவம் இவன் இப்படிக் குருடனாய் பிறந்திருக்கிறானே என்றார்கள். அதுக்கு இயேசப்பா, இவன் செஞ்ச பாவமுமில்ல, இவன் பெற்றோர் செஞ்ச பாவமுமில்ல, இவன் மூலம் தேவனுடைய மகிமை வெளிப்படுவதற்கே என்றார். கண்ணுத்தெரியாத நிறைய பேருக்கு பார்வை கொடுத்த இயேசப்பா, இவருக்கும் பார்வை கொடுத்தாங்க. எப்படி? என்று தானே கேட்கிறீங்க, இயேசப்பா தரையில மண்மேலே உமிழ்நீரைத் துப்பி, அதைக் குழப்பி, அந்த மண்ணையெடுத்து அந்த அண்ணுடைய கண்கள் மேலேப் பூசிவிட்டு, நீ போய் சீலோவாம் என்கிற குளத்தில போய் கழுவுன்னு சொன்னார். அந்த அண்ணனும் அப்படியே போய் அங்கே கண்களைக் கழுவினாங்க என்ன ஆச்சரியம்! கண்ணு இரண்டும் நல்லா தெரிஞ்சிருச்சு. உடனே இயேசப்பா கிட்ட திரும்ப வந்தாங்க, அந்த அண்ணனைப் பார்த்த எல்லாரும் அவன் அந்தக் குருடன் தானே, அவன் அங்கே பிச்சை எடுத்துகிட்டு இருந்தவன் தானே என்றார்கள். அதற்கு ஒரு சிலர் ஆமாமா, அவன் தான் என்றும், அவன் மாதிரி இருக்குதுனும் சொல்லிக் கொண்டார்கள். அதற்கு அவன் நான் தான் அவன் இயேசப்பா இப்படி மண்ணைத் தடவி என்னைய கழுவச் சொன்னாங்க, பார்வைக் கிடைத்துவிட்டது என்று தேவனை மகிமைப்படுத்தினான். இயேசப்பாகிட்ட வந்த நிறைய பேருக்கு சுகம் கிடைச்சிருக்கு, கண்ணுத் தெரிஞ்சிருக்கு, காது கேட்டிருக்கு, கை,காலெல்லாம் சரியாயிருக்கு, அதனால யாருக்காவது முடியலைன்னா இயேசப்பாகிட்ட Prayer பண்ணுங்க இயேசப்பா நிச்சயம் சரியாக்கிடுவாங்க. அப்புறம் குட்டீஸ் உங்க வீட்டுப்பக்கத்தில, ஸ்கூல்ல, சர்ச்சுல யாராவது கண்ணுத் தெரியாம, சாய்ச்சு நடந்து, கொஞ்சம் குறைபாடா, குண்டா, ஒல்லியா இருந்தா அவங்கள கண்ணு தெரியாதவன்…. என்று கேலிபண்ணவோ, கஷ்டப்படுத்தவோ கூடாது. அவுங்களத்தான் இயேசப்பாவுக்கு ரொம்ப பிடிக்கும். அவுங்களுக்குத்தான் விசேஷித்த ஞானம், திறமையை தேவன் தந்து ஆசீர்வதிப்பாங்க. உங்களுக்குக்கூட ஏதாவது குறையிருந்தா இயேசப்பாகிட்ட Prayer பண்ணுங்க எல்லாம் சரியாயிடும். இல்லைன்னா அதை பெரிசா எடுத்துக்காம, நினைக்காம என்ன செய்யத் தெரியுமோ அதை நல்லா, சிறப்பா செய்யுங்க. இயேசப்பா உங்களுக்கு ஞானமும், பெலனுமó தருவாங்க. என்ன குட்டீஸ் சரியா!.
ஜெபம்.
அன்புள்ள இயேசப்பா யாராவது உடலிலேயோ, அறிவிலேயோ குறைபாட்டோடு இருந்தால் அவங்கள கேலிபண்ணாமல், அவங்களிடம் அன்பா பேசி, உதவி செய்யும் பிள்ளையாய் என்னை மாற்றுங்கப்பா. நன்றி இயேசப்பா ஆமென்.
மனப்பாட வசனம்.
நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள். லூக்கா 12:7.