Inspiration
ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பான சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள்.
நாம் இந்த பூமியில் குறிப்பிட்ட பகுதியில் வாழ்ந்து, நடந்து கொண்டிருந்தாலும் அவருக்கு முன்பாகத்தான் (தேவன்) வாழ்கிறோம். உத்தமனாயிரு என்றால் பழுதில்லாமல் தூய்மையான வாழ்க்கை வாழ்வது. நம் சிந்தனை, சொல், செயல் பாடுகள் எல்லாவற்றிலும் தூய்மை. இதில் தவறுகள் வரும்போது நாம் நம்முடைய பாவநிலையை உணர்ந்து அறிக்கை செய்து ஜெபம் பண்ணுகிறோம். உத்தமம் என்றால் மற்றொரு பகுதி உறுதியாய் இருக்கிறது.
யார் யார் உத்தமர்களாயிருந்தார்கள்
வேதத்தில் யோபுவைக் குறித்து வாசிக்கும் போது உத்தமனும், சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து பொல்லாப்புக்கு விலகுகிறவன் என்று கர்த்தரரிடத்தில் சாட்சிப் பெற்றõருக்கிறான் என்று யோபு 1:1-லும், 2:3-லும் சொல்லப்பட்டிருக்கிறது. தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகினால் நாம் உத்தமன் என்ற பெயரை வாங்க முடியும். ஆதி 6:9-ல் நோவா தன் காலத்தில் வாழ்ந்தவர்களுக்குள்ளே நீதிமானும், உத்தமனுமாயிருந்தான். நோவா தேவனோடு சஞ்சரித்துக் கொண்டிருந்தான். உத்தமன் தேவனோடு உலவுகிறவன், நடக்கிறவன். அவர் சொல்லுகிறதைச் செய்கிறதும், அவர் கட்டளையிடுகிறதை நிறைவேற்றுகிறதும் அவன் வேலை. சங்கீதக்காரன் தாவீது சொல்லும் போது கர்த்தாவே, யார் உமóமுடைய கூடாரத்தில் தங்குவான்?, யார் உமóமுடைய பரிசுத்த பர்வதத்தில் வாசம் பண்ணுவான்? உத்தமனாய் நடந்து, நீதியை நடப்பித்து, மனதாரச் சத்தியத்தைப் பேசுகிறவன் தானே. சங் 15:1-5. அவன் தன் தேவனோடு வாசம் பண்ணுவான். அவர் கூடாரத்தில் தங்கி உலவுவான் என்கிறான். ஆண்டவர் உபா 1:36-ல் காலேப் மாத்திரம் அதைக் காண்பான். அவன் கர்த்தரை உத்தமமாய் பின்பற்றினபடியால் நான் அவன் மிதித்த வந்த தேசத்தை அவனுக்கும், அவன் பிள்ளைகளுக்கும் கொடுப்பேன் என்று ஆணையிட்டார். உத்தமமாய் பின்பற்றின காலேப் என்று சொல்லி அந்த தேசத்தை சுதந்திரமாகக் கொடுத்தார். அந்த காலேப்பை பற்றி யோசுவா 14:8-ல் ஆனாலும் என்னோடே கூட வந்த என் சகோதரர் என் இருதயத்தை கரையப் பண்ணினார்கள். நானோ என் தேவனாகிய கர்த்தரை உத்தமமாய் பின்பற்றினேன் என்று சொல்லுகிறார். யோசுவா இஸ்ரவேல் ஜனங்களுக்கு ஆலோசனையாக நீங்கள் கர்த்தருக்குப் பயந்து, அவரை உத்தமும், உண்மையுமாகச் சேவித்து, உங்கள் பிதாக்கள் நதிக்கு அப்புறத்திலும், எகிப்திலும் சேவித்த தேவர்களை அகற்றிவிட்டு கர்த்தரை சேவியுங்கள் என்றான். நாமும் கர்த்தரை விட்டு விலகாமல் அவரையே உத்தமமாய் சேவிக்க வேண்டும் என்று சொல்லுகிறார். யோசுவா 24:14. கானான் தேசத்தை சுற்றிப்பார்க்க மோசே அனுப்பின பன்னிரெண்டு கோத்திரங்களின் தலைவர்களில் உத்தமமாய் என்னை பின்பற்றின கேனாசியனான எப்புனேயின் குமாரன் காலேப்பும், நூனின் குமாரன் யோசுவாவும் தவிர எகிப்தில் இருந்து வந்தவர்களில் ஒருவரும் என்னை உத்தமமாய்ப் பின்பற்றவில்லை என்று ஆண்டவர் சொல்லுகிறார். எண் 32:11,12.
உத்தமமாய் பின்பற்றுவது என்றால் என்ன?
அந்நிய தேவர்களை நம்மை விட்டு அகற்றி விட்டு, கர்த்தரையே சேவிப்பது தான் உத்தமமாய் பின்பற்றுவது. யார் நம்முடைய இருதயத்தைக் கரையப்பண்ணினாலும் ஆண்டவரையே நம்பி அவரையே உறுதியாய் பற்றிக்கொள்வது. 1 ராஜா 15:14-ல் ஆசா ராஜா உயிரோடிருந்த நாளெல்லாம் அவன் இருதயம் கர்த்தரோடே உத்தமமாயிருந்தது என்றும், 11-ஆம் வசனத்தில் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான் என்றும் சொல்லப்பட்டுள்ளது. களைகளை அகற்றி விட்டு அந்த நிலத்தை அப்படியே விட்டுவிட்டால் திரும்ப களைகள் முளைப்பது போல, நமக்குள் இருக்கும் தீமையான காரியங்களை நாம் விட்டுவிடுவது மட்டுமல்ல, நன்மையையும், செம்மையானதையும் செய்ய வேண்டும், உண்மையைப் பேசனும், என்னுடையதல்லாதப் பொருளை எடுக்கமாட்டேன் என்று தீர்மானிக்க வேண்டும். இச்சைகளை விட்டுவிடுவேன் என்று சொல்லி, பரிசுத்தமாய் சிந்திக்க, நடக்க ஆரம்பிக்க வேண்டும் இதைத்தான் தேவன் நம்மிடம் எதிர்பார்க்கிறார். சாலமோன் 1 ராஜா 8:61-ல் சொல்லும் போது ஆதலால் இந்நாளில் இருக்கிறது போல, நீங்கள் அவர் கட்டளைகளில் நடந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்ள, உங்கள் இருதயம் நம்முடைய தேவனாகிய கர்த்தரோடு உத்தமமாய் இருக்கக்கடவது என்றானó. எல்லாருக்கும் சொன்ன சாலமோன் ராஜாவால் உத்தமமாய் இருக்க முடியவில்லை?. காரணம் 1 ராஜா 11:4-ல் சாலமோன் வயது சென்ற போது, அவனுடைய மனைவிகள், அவன் இருதயத்தை அந்நிய தேவர்களைப் பின்பற்றும்படி சாயப்பண்ணினார்கள். அவன் இருதயம் தன் தகப்பனாகிய தாவீதைப்போல தன் தேவனாகிய கர்த்தரோடே உத்தமமாயிருக்கவில்லை என்று வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது. யோபு என் ஆவி பிரியும் மட்டும் என் உத்தமத்தை என்னை விட்டு விலக்கேன் என்று 27:5-ல் சொல்கிறார். ஆனால் யோபுவின் மனைவி இன்னுமா நீர் உம்முடைய உத்தமத்தில் உறுதியாய் இருக்கிறீர், தேவனை தூஷித்து விட்டு, ஜீவனை விடும் என்று சொல்லுகிறாள். ஆனால் அத்தனை உபத்திரவங்களிலும் சõல அங்கலாய்ப்புகள், வேதனைகளைச் சொல்லி புலம்பினாலும், பொறுமையோடே அத்தனை கஷ்டங்களையும், பாடுகளையும் சகித்துக் கொண்டான். தன் உத்தமத்தில் உறுதியாய் நின்றான். யோபுவைப் போல நாமும், நம் வாழ்க்கையில் எந்த சூழ்நிலை வந்தாலும் கர்த்தரை உத்தமமும், உண்மையுமாய் பின்பற்றõ, இழந்ததை எல்லாம் திரும்பப் பெற்றுக்கொள்வோம். எஸ்தர் வாழ்வில் கூட அவள் தன்னை அலங்கரித்துக் கொள்ள பிரதானி என்ன கொடுத்தாரோ அதைத் தவிர, தேவையற்ற அலங்காரங்கள் அவளிடத்தில் இல்லாததினால் பிரதானியிடத்திலும், ராஜாவினிடத்திலும் அவளுக்குத் தயவும், கிருபையும் கிடைத்தது. அவள் உத்தமமாய் இருந்ததால் தான் அவள் சிரசில் கிரீடம் சூட்டப்பட்டது. தாவீதைப் பாருங்கள் ஆண்டவரால் என் இருதயத்திற்கு ஏற்றவன், எனக்குச் சித்தமானதையெல்லாம் அவன் செய்வான் என்று பெயர் பெற்றவன். 1 நாளா 29:17-ல் என் தேவனே, நீர் இருதயத்தைச் சோதித்து, உத்தம குணத்தில் பிரியமாயிருக்கிறöர் என்பதை அறிவேன். நான் உத்தம இருதயத்தோடே மனப்பூர்வமாய்க் கொடுத்தேன். இப்பொழுது இங்கே இருக்கிற உம்முடைய ஜனமும் உமக்கு மனப்பூர்வமாய்க் கொடுக்கிறதைக் கண்டு சந்தோஷித்தேன் என்று தாவீது ராஜா சொல்லுகிறதை வாசிக்கிறோம். உத்தம குணத்தில் தேவனó பிரியமாய் இருக்கிறார். கொடுப்பதற்கு கூட நமக்கு உத்தம இருதயம் வேண்டும். பத்தில் ஒரு பகுதியை நாம் கர்த்தருக்குக் கெடுக்கனும், அதை நாமó திருடக்கூடாது. உத்தம குணம் எப்போதும் நமக்கு இருக்கனும், அதில் தேவன் பிரியப்படுகிறார். தாவீதை தேவன் இருதயத்துக்கு ஏற்றவன் என்றதற்கு காரணம் அவன் இருதயத்தில் கர்த்தரை உத்தமமாய் பின்பற்றினான். உத்தம இருதயத்தோடு கர்த்தருகóகு கொடுத்தான். தாவீதைப் போல உத்தம இருதயத்தோடு கர்த்தருக்காக மனப்பூர்வமாய் கொடுத்து தேவ ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொள்ள நமக்கும் தேவன் கிருபை செய்வார்.
எது உத்தமம்
சாமுவேல் வரத்தாமதமாகிற போது ஜனங்கள் எல்லாரும் சிதறிப் போகிறார்கள் என்று சவுல் கண்டு அவசர அவசரமாக கர்த்தருக்குப் பலி செலுத்துகிறான். என்ன செய்வது என்று தெரியாத பதட்டத்தில் நாம் கூட பல தவறுகளை செய்து விடுவோம்.. நான் இன்று தேவ சத்தத்தை கேட்டேனா? அவர் வார்த்தைக்கு கீழ்ப்படிந்தேனா? என்று பார்க்காமல் கர்த்தருடைய வார்த்தையை நிறைவேற்றினேன் என்று தனக்குள் நினைத்துக் கொண்டிருந்தான். 1 சாமு 15:22-ல் அதற்குச் சாமுவேல் கர்த்தருடைய சத்தத்திற்கு கீழ்ப்படிகிறதைப் பார்க்கிலும், சர்வாங்க தகனங்களும், பலிகளும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்குமோ? பலியைப்பார்க்கிலும், கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப்பார்க்கிலும் செவிகொடுத்தலும் உத்தமம் என்று சொல்லுகிறார். சவுல் கர்த்தருடைய சத்தத்திற்கு செவிகொடுக்கவில்லை. நாம் ஆண்டவருடைய வார்த்தைக்குச் செவிகொடுத்தால் நம் வாழ்வில் சமாதானம் நதியைப் போல இருக்கும். சங் 81:13,14 ஆ, என் ஜனம் எனக்குச் செவிகொடுத்து, இஸ்ரவேல் என் வழிகளில் நடந்தால் நலமாயிருக்கும். நான் சீக்கிரத்தில் அவர்கள் எதிராளிகளைத் தாழ்த்தி, என் கையை அவர்கள் சத்துருக்களுக்கு விரோதமாகத் திருப்புவேன் என்று தேவன் சொல்கிறார். நாம் தேவனுடைய வழிகளில் நடப்பது உத்தமம், அப்பொழுது தேவன் நம்முடைய சத்துருக்களுக்கு விரோதமாய் அவர் கையைத் திருப்பி, அவர்களைத் தாழ்த்திப்போடுவார். 2 கொரி 10:18 தன்னைத்தான் புகழுகிறவன் உத்தமன் அல்ல. கர்த்தராலó புகழப்படுகிறவனே உத்தமன். நாம் மனிதர்களால் புகழப்படுவதைப் பார்க்கிலும் கர்த்தரால் புகழப்படுகிறவர்களாக இருக்க வேண்டும். நீதி 16:32-ல் பலவானைப்பார்க்கிலும் நீடிய சாந்தமுள்ளவன் உத்தமன். பட்டணத்தைப் பிடிக்கிறவனைப் பார்க்கிலும் தன் மனதை அடக்குகிறவன் உத்தமன், தாயின் பால் மறந்த குழந்தையைப் போல், நம்மை அடக்கனும் என்று வேதம் சொல்லுகிறது. பிரசங்கி 7:8-ல் ஒரு காரியத்தின் துவக்கத்தைப் பார்க்கிலும், அதின் முடிவு நல்லது. பெருமையுள்ளவனைப் பார்க்கிலும் பொறுமையுள்ளவன் உத்தமன். நான் உத்தமனாக நீடிய பொறுமை வேண்டும். பெருமையல்ல பொறுமையே நமக்குள் உருவாக வேண்டும், அதற்குத் தான் நமக்கு அநேக உபத்திரவங்கள், பாடுகள் வருகிறது. உபத்திரவப்படும் போது பல சிரமங்களை அனுபவிக்கிற நாம் பொறுமையைக் கற்றுக் கொள்கிறோம். தாழ்மை நமக்குள் உண்டாகிறது. நீதி 16:16-ல் பொன்னைச் சம்பாதிப்பதிலும், ஞானத்தை சம்பாதிப்பது எவ்வளவு உத்தமம். எந்த ஒரு காரியத்திலும் ஞானம் நமக்கு தேவை. சிறுபிள்ளைகள் முதல் முதியோர் வரை இந்த ஞானத்தைப் பெறுவது அவசியம். ஞானம் இல்லாமல் எந்த ஒரு காரியத்தையும் செய்தால், அது நமக்கும் மற்றவர்களுக்கும் பல பாதிப்புகளை ஏற்படுத்தி விடும். இந்த ஞானத்தைக் கர்த்தர் நமக்குத் தருகிறார். அவரிடம் நாம் கேட்கனும், அப்போது தான் ஞானத்தை நாம் பெற்றுக்கொள்ள முடியும், சம்பாதிக்க முடியும். இந்த ஞானம் தான் எதை, எந்த நேரத்தில், எப்படிச் செய்யனும் என்று கற்பிக்கிறது. இதை இந்த நேரத்தில் இப்படி பேசி விடாதே, செய்துவிடாதே என்று போதிக்கிறது. இயேசுவே நமது ஞானம், வேதமே நமது ஞானம் என்று வேதம் சொல்லுகிறது. இயேசு நமக்குள் வர நாம் இடமளித்தால், வேத வசனங்களை நமக்குள் மனப்பாடம் செய்து, இருதயத்தில் ஏற்றிக் கொண்டால் நாம் படுத்தால் அது நம்மோடு சம்பாஷிக்கும், நடந்தால் இது தான் வழி என்று காட்டும், நாம் தவறுகிறவைகளைச் சுட்டி காட்டும். இந்த ஞானத்தைப் பெற்றிருப்பது உத்தமம் என்று வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது.
எப்படி நாம் உத்தமமாக முடியும்.
சங்கீதத்தில் தாவீது சங் 19:12,13 தன் பிழைகளை உணருகிறவன் யார்? மறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும். துணிகரமான பாவங்களுக்கு உமது அடியேனை விலக்கிக்காரும். அவைகள் என்னை ஆண்டு கொள்ள ஒட்டாதிரும். அப்பொழுது நான் உத்தமனாகி பெரும்பாதகத்துக்கு நீங்கலாயிருப்பேன் என்று ஜெபிக்கிறதைப் பார்க்கிறோம். இது நல்ல அருமையான ஜெபம். தன் பிழைகளை உணர்ந்து ஜெபிப்பது.. யாக்கோபு 1:12-ல் சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான், அவன் உத்தமனென்று விளங்கினபின்பு கர்த்தர் தம்மிடத்தில் அன்பு கூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான். சோதனையை சகிக்கும் போது நாம் உத்தமர்களாக விளங்கமுடியும். உன் தேவனாகிய கர்த்தர் சூரியனும், கேடகமுமனவர், கர்த்தர் கிருபையையும், மகிமையையும் அருளுவார், உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காதிரார் என்று சங் 84:11 சொல்லுகிறது. நம் தேவனாகிய கர்த்தர் பார்வையில் நாம் உத்தமமாய் வாழ நம்மை அர்ப்பணிப்போம். அதனால் தான் ஆண்டவர் நீ எனக்கு முன்பாக நடந்து கொண்டு உத்தமனாயிரு, உத்தமியாயிரு என்று சொல்கிறார். என் ஆண்டவர் தாமே இதை வாசிக்கிற ஒவ்வொருவரையும் அவரது பார்வையில் உத்தமர்களாக மாற்றுவாராக.
By Sis. Kala VincentRaj