Inspiration
Children's Special
ஹலோ, குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா, ஹேப்பி நியூ இயர்!,
ஸ்காட்லாந்து தேசத்தில் பழமையான ஆலயம் ஒன்று இருந்தது. பார்ப்பதற்கு அழகாக, சூப்பராக இருந்தது. ஆனால் ஒரு சிலர் தான் இந்த ஆலயத்திற்கு வருவாங்க. பெஞ்சுó மற்றும் தரையில் இருக்கும் துசியை துடைத்து. சுத்தம் செய்து டழ்ஹஹ்ங்ழ் நடத்திவிட்டு செல்வார்கள். ஆனால் உயரத்தில் மாட்டியிருந்த படத்தை எடுத்து யாரும் சுத்தம் செய்ததில்லை. அது என்ன படம் என்று கூட தெரியாத அளவிற்கு தூசியால் மூடியிருந்ததால், அந்த படத்தை எடுத்து சுத்தம் பண்ணுவது கடினமான வேலை என்று நினைத்து யாருமே அதைச் செய்யவில்லை. அந்த நேரத்தில் ஒரு குழுவினர் ஆலயத்திற்குச் சென்று, ஒரு வாரம் தங்கியிருந்து ஆலயம் முழுவதையும் சுத்தம் செய்ய தீர்மானித்தனர். மேலே இருந்த படத்தைப் பார்த்து, இந்த படத்தையெல்லாம் எடுத்து கீழே போட்டு விடலாம் என்று சொன்ன போது இன்னொருவர் அது என்ன படம் என்று பார்ப்போம் என்று சொல்லி, தூசியைத் தட்டி, தண்ணீரால் சுத்தம் செய்து, துணியை வைத்து துடைத்துவிட்டுப் பார்த்தால் அழகான படமாக காட்சியளித்தது. என்ன படம் என்று பார்க்கும் போது, இயேசப்பா கடைசியாக சீஷர்களுக்கு அப்பம் மற்றும் திராட்சரசம் கொடுத்த படம். இந்த படத்தை யார் வரைந்தது என்று பார்த்த போது உலக புகழ் பெற்ற மைக்கேல் ஏஞ்சலோ வரைந்த படம் என்று எல்லோரும் ஆச்சரியப்பட்டுப் போனார்கள். இது எவ்வளவு விலை உயர்ந்தது. இது 50 கோடிக்குக் கூட போகும். இது ரொம்ப முக்கியமானது என்று அதை ஆலயத்தில் மாட்டி வைத்தார்களாம்.
குடóடீஸ், நமக்குள்ளேயும், விலையுயர்ந்த அழியாத ஆத்துமா இருக்கிறது. பொய் சொல்லுவது, திருடுவது, கெட்ட வார்த்தை பேசுவது, கீழ்ப்படியாதது—- இதெல்லாம் தூசி மாதிரி நம் உள்ளத்தை, ஆத்துமாவைக் கறைபடுத்தி மறைத்து விடுகிறது. கறைபட்ட நம் உள்ளத்தை கழுவி புதுபிள்ளையாக, இயேசுவின் பிள்ளையாக மாற்றத்தான் இயேசப்பா நமக்காக இரத்தம் சிந்தி மரித்தார். அது மட்டுமல்ல நம்மை விசேஷித்தவர்களாக, விலையேறப் பெற்றவர்களாக மாற்றுகிறது. குட்டீஸ், நீங்களும் இயேசபóபாவுடைய பிள்ளையாக மாற ஆசையா? அப்ப இந்த ஜெபத்தைச் சொல்லுங்க.
ஜெபம்
அன்புள்ள இயேசப்பா நான் செய்த தப்பு எல்லாத்தையும் மன்னித்து, உங்க இரத்தத்தாலே என் பாவ அழுக்கை கழுவி, இந்த புது வருஷத்தில் புதுப்பிள்ளையாய், விலையேறப் பெற்ற பிள்ளையாய் மாற்றிவிடுங்க. நன்றி இயேசப்பா, இயேசுவின் நாமத்தில் பிதாவே ஆமென்.
மனப்பாட வசனம்.
ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால், புதுச்சிருஷ்டியாயிருக்கிறான். பழையவைகள் ஓழிந்து போயின, எல்லாம் புதிதாயின. 2 கொரி 5:17.