Inspiration

Children's Special

ஹலோ குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா?

ரம்பா நன்றாக படிக்கக் கூடியவர் தான், ஆனால் இப்பொழுதெல்லாம் கவனமாய் படிப்பதுமில்லை, அம்மா சொல்லும் கேட்பதுமில்லை. படிக்க வேண்டிய நேரத்தில் ஒரே விளையாட்டு, வீட்டிற்கு வந்தா பய.  மாதப்பரீட்சை நாளைக்கு துவங்குகிறது, மணி (நேரம்) ஆகியும் இன்னும் விளையாடிக் கொண்டேயிருந்தாள். அம்மா சத்தம் போட்டு படிக்கச் சொன்னார்கள். சிறிது நேரத்திலே குடும்ப ஜெபம், பின்பு சாப்பாடு எல்லாம் முடித்து, சீக்கிரமாக தூங்கச் சென்று விட்டாள். காலையிலே 7 மணி ஆகியும் ரம்பா எழுந்திரிக்கவில்லை.  ரம்பா…. என்று அம்மா சத்தம் கேட்டுப் பயந்து எழுந்தாள் ரம்பா. சாயங்காலமும் சரியா படிக்கவில்லை, காலையிலாவது சீக்கிரம் எழுந்திரிச்சு படிக்காமல் இன்னும் தூக்கமா? என்று அம்மா அதட்டினாங்க இன்னைக்கு சாயங்காலம் நீ விளையாடப் போகக் கூடாது, பய போடக்கூடாது உங்க டீச்சரை நான் வந்து பார்க்கிறேன் என்று அப்பாவும் எச்சரித்தவுடன் தான் கொஞ்சம் பயம் வந்தது. அம்மா சாரிம்மா, அப்பா சாரிப்பா இனி மேல் நான் நேரத்தை வீணாக்காமல், அந்தந்த நேரத்தில் செய்ய வேண்டியதை செஞ்சிறேன் என்றாள் ரம்பா. ஆமா…. படிக்க வேண்டிய நேரத்தில படி, விளையாட வேண்டிய நேரத்தில விளையாடு அப்பத்தான் இயேசப்பா ஞானம், பெலன் தருவாங்க என்ன சரியா? என்றார் அப்பா. 

மழைக்காலத்தில வெளியே போக முடியாது என்பதால் எறும்புகூட, கோடை காலத்திலேயே உணவை சேர்த்து வைக்குதுன்னு நீதி 6:6-11, நீதி 30:25 பைபிள் சொல்லுது. நீ தினமும் விளையாடிட்டு, பரீட்சை நேரத்திலும் தூங்கிட்டு நேரத்தை வேஸ்ட் பண்றியே, எப்படி பரிட்சையில் மார்க் வாங்குவாய் என்று அம்மா கேட்டார்கள். சரிம்மா, சரிம்மா நான் இனிமே படிக்க வேண்டிய நேரத்தில படிக்கிறேன்மா என்றதும் யஉதவ எஞஞஈ ஸ்கூலுக்கு சீக்கிரம் கிளம்பு என்றார்கள் அம்மா. இப்பொழுதெல்லாம் அம்மா சொல்லாமலே ரம்பா செய்ய வேண்டிய வேலையை செய்ய வேண்டிய நேரத்தில செய்கிறாள். நீங்க எப்படி? ரம்பா மாதிரி உங்களையும் மாத்திக்குவீங்களா? இயேசப்பாவுக்கு அதுதான் பிடிக்கும் ஞஓ வா!

ஜெபம்

அன்புள்ள இயேசப்பா பய, விளையாட்டுன்னு நாங்க இஹழ்ங்ப்ங்ள்ள் இருக்கக்கூடாது. எறும்பைப் போல சுறுசுறுப்பாய் நேரத்தை சரியாய் பயன்படுத்த, அம்மா, அப்பாவுக்குக் கீழ்படிந்து நடக்க உதவி செய்யுங்க. இயேசுவின் நாமத்தில் ஆமென்.

மனப்பாட வசனம் 

சோம்பற்கையால் வேலை செய்கிறவன் ஏழையாவான். சுறுசுறுப்புள்ளவன் கையோ செல்வத்தை உண்டாக்கும்.

கோடை காலத்தில் சேர்க்கிறவன் புத்தியுள்ள மகன், அறுப்புக் காலத்தில் தூங்குகிறவனோ இலச்சையை உண்டாக்குகிற மகன். நீதி 10:4,5.