Inspiration

என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப் போவதில்லை

நான் இஸ்ரவேலின் நடுவில் இருக்கிறவரென்றும், நானே உங்கள் தேவனாகிய கர்த்தர் வேறெருவர் இல்லையென்றும் அறிந்து கொள்வீர்கள். என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப் போவதில்லை. யோவேல் 2:27.

கிறிஸ்துவுக்குள் அன்பான வாலிபத்தம்பி, தங்கைகளே நம் வெட்கங்களையும், வேதனைகளையும் சிலுவையில் சுமந்து தீர்த்தவராகிய ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள். கடந்த மாதத்தில் என் ஜனமாகிய நீங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப் போவதில்லை, அவருடைய ஜனமாயிருக்க நாம் கர்த்தராகிய இயேசுவை விசுவாசிக்க வேண்டும், அவருடைய கற்பனைகளை கண்ணோக்கவும், கைக்கொள்ளவும் வேண்டும் என்றும் பார்த்தோம். இந்த மாதத்திலும் அவருடைய ஜனமாகிய நாம் என்ன செய்தால் வெட்கப்படமாட்டோம் அல்லது யார் வெட்கப்படுவதில்லை என்று பார்ப்போம்?.

இயேசுவை நோக்கிப் பாருங்கள் நீங்கள் வெட்கப்படுவதில்லை.

அவர்கள் அவரை நோக்கிப் பார்த்து பிரகாசமடைந்தார்கள், அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை. சங் 34:5. இராணுவத்தில் வேலை பார்த்த ஒரு சகோதரன் இயேசுவை ஏற்றுக்கொண்டாó. முரடான அவர் வாழ்க்கை மாறியது. பேச்சு, நடை, பார்வை பழக்கவழக்கங்கள் மாறியது. அவர் பெயரையும் கூட மாற்றிக் கொண்டார். அவர் கூட வேலை செய்கிறவர்களுக்கு இது பிடிக்க வில்லை. ஏனென்றால் தானó மாறினது மட்டுமல்லாமல், தங்களிடமும் இயேசுவைப் பற்றி, ஒழுக்கத்தைப் பற்றி கூறுகிறானே என்று இவனை எப்படியாவது அதிகாரியிடம் மாட்டிவிட வேண்டும் என்றும், ஜெஜட்டில் பெயர் மாற்றாமல் தன் பெயரை மாற்றிக் கொண்டான். இவனுக்கு வரும் கடிதங்கள் கிறிஸ்தவ பெயரில் வருகிறது. இவன் மூலம் இராணுவ ரகசியம் வெளியே செல்கிறது என்று புகார் அளித்து, இவனுக்கு நல்ல தண்டனை கிடைக்க வேண்டும் இல்லையென்றால் வேலையிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று காத்துக் கொண்டிருந்தார்கள். 

அதிகாரிகள் இவரை அழைத்து விசாரிக்கிறதற்கான நாளுக்கு முந்தினநாள் உபவாசத்தோடு ஆண்டவரை நோக்கிப் பார்த்து ஜெபம் பண்ணினார். தன் இருதயத்திலிருந்து உண்மையாய் இயேசுவே நீர் எனக்கு உதவி செய்யும் என்று விண்ணப்பம் செய்தார். மறுநாள் அதிகாரிகளுக்கு முன் நின்றார். ஒரு சீக்கிய அதிகாரி அவரிடம் ஏன் பெயரை மாற்றினாய்? என்று கேட்டபொழுது தன் வாழ்க்கையை மாற்றிய இயேசுவைப் பற்றியும், தான் ராணுவத்திற்கு எதிரான ஒரு செயலையும் செய்யவில்லை என்றும் சொன்னார். படிப்பு அதிகம் இல்லாத அவர், கொஞ்சம், கொஞ்சம் ஹிந்தி பழகியிருந்த அவர், அந்த அதிகாரி புரிந்து கொள்ளும் விதத்தில் பேசியது ஆச்சரியமே. அவரை விசாரித்த அதிகாரி சொன்னார் உன்னாலó எந்த ராணுவ ரகசியமும் வெளியே போகவில்லை, இயேசு உன் வாழ்க்கையை மாற்றியிருக்கிறாரே. இவ்வளவு உண்மையான உனக்கு உயர்வு கொடுத்தால் நல்லாயிருக்குமே என்று அவருக்கு பிரமோஷன் கொடுத்தார்களாம். வெளியே காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு …. ஒரே வெட்கம், ஆனால் இயேசுவை நோக்கிப் பார்த்தவருடைய முகம் வெட்கமடையவில்லை, அவருடைய வாழ்க்கை, முகம் பிரகாசமாயிற்று. எங்கள் முன்னோர்கள் உம்மை நோக்கிக் கூப்பிட்டு தப்பினார்கள். உம்மை நம்பி வெட்கப்பட்டுப் போகாதிருந்தார்கள். சங் 22:4,5 இந்த வசனம் அப்படியே அவர் வாழ்வில் நிறைவேறிற்று.

வேதத்தில் யாக்கோபு தன் தகப்பனை, சகோதரனை ஏமாற்றி ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொண்டவனாய், தன் தாய் தகப்பனால் உயிரைக் காத்துக் கொள்ள மாமா வீட்டிற்கு அனுப்பப்பட்டான். அங்கே தன் சாதுரியத்தினால் மாமாவையும் ஏமாற்றி ஆசீர்வாதமாய் வாழ, உயர்வடைய முயற்சி செய்தான். ஏமாற்றுபவன் என்ற அர்த்தமுடைய பெயரைக் கொண்ட யாக்கோபு மற்றவர்களை ஏமாற்றின, தவறுதலான, பாவமான வாழ்க்கை வாழ்ந்த யாக்கோபு, இப்பொழுது தன் மாமாவால் ஏமாற்றப்படுகிறான். கஷ்டங்களை, வெட்கத்தை, வேதனைகளை சந்திக்கிறான். இந்த சூழ்நிலையில் ஏமாற்றின அண்ணனைச் சந்திக்க வேண்டிய ஒரு கட்டம் வந்த போது தான், அவன் தன் தேவனை நோக்கிப் பார்க்கிறான். இதுவரை  என்னுடைய ஞானம், பெலன், திறமை, சாதுரியம் என இருந்தேன், பழைய பாவங்களோடு, கெட்ட குணம், பழக்க வழக்கத்தோடு நான் வாழ முடியாது. உம் பிள்ளை, உம் ஜனம் என இனியும் நடக்க முடியாது. நீரே என் தேவன், என்னைத் தாழ்த்தி உம் கையில் கொடுக்கிறேன் என்றார். உம்முடைய ஆசீர்வாதம் தான் எனக்கு வேண்டும். அதுதான் வேதனை இல்லாதது. (நீதி 10:22) எனவே நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய நான் உம்மைப் போகவிடேன். (ஆதி 32:26) பூமியின் எல்லையெங்குமுள்ளவர்களே, என்னை நோக்கிப் பாருங்கள். அப்பொழுது இரட்சிக்கப்படுவீர்கள். (காப்பாற்றப்படுவீர்கள்). நானே தேவன் வேறொருவரும் இல்லை (ஏசாயா 45:22) என்று சொன்ன ஆண்டவரை நோக்கிப் பார்த்து கூப்பிட்ட போது, அவர் ஏமாற்றுகிற குணமுடைய அவன் பேரை, வாழ்க்கையை மாற்றினார். இனி உன் பேர் யாக்கோபு எனப்படாமல் இஸ்ரவேல் (தேவபிரபு, எல்லாவற்றிலும் வெற்றி பெறுபவர்) என்னப்படும். இனி யாக்கோபு வெட்கப்படுவதில்லை, இனி அவன் முகம் செத்துப் போவதில்லை ஏசாயா 29:22-ல் யாக்கோபை மட்டுமல்ல யாக்கோபின் தேவனை நோக்கிப் பார்க்கிற உங்கள் ஒவ்வொருவரின் முகமும் தொய்ந்து போவதில்லை. சர்ள்ங் ஸ்ரீன்ற் அடைவதில்லை, ஐய்ள்ன்ப்ற் பண்ணப்படுவதில்லை, உங்கள் முகம், வாழ்க்கை பிரகாசமடையும், பழைய குணம், பழக்க வழக்கங்களை விலக்கி உங்களைத் தாழ்த்தி அவரை நோக்கிப் பாருங்கள் புதியவைகள் தோன்றச் செய்வார். இனி நீங்கள் வெட்கப்படுவதில்லை. 

கர்த்தருக்கு காத்திருங்கள் நீங்கள் வெட்கப்படுவதில்லை

நான் கர்த்தர் எனக்குக் காத்திருக்கிறவர்கள் வெட்கப்படுவதில்லை ஏசாயா 40:23.  நம்முடைய ஆண்டவர் இயேசு ஒருவரே தெய்வம். அவரே நம் பாவங்களுக்காக மரித்து, சாத்தானை வென்று உயிர்த்தெழுந்த தெய்வம். உங்கள் பாவமான சிந்தனைகள், செயல்களிலிருந்து விடுதலை தந்து நீங்கள் பரிசுத்தமாக, ஒழுக்கமாக வாழ உதவி செய்கிறவர். அவரை உங்கள் சொந்த தெய்வமாக ஏற்றுக்கொண்டு, அவரையே நம்பி எதிர்காலத்திற்காகவும், எந்த நன்மைக்காகவும், உயர்வுக்காகவும், நீதி நியாயத்திற்காகவும் காத்திருக்கிற நீங்கள் வெட்கப்படுவதில்லை. எப்பொழுது என் வாழ்வு  விடியும் (சங்30:6) என்று நீங்கள் நீண்ட காலமாய் காத்திருந்து இளைத்துப் போனீர்கள் கவலைப்படாதிருங்கள் உங்கள் காத்திருப்புக்குப் பதில் வருகிறது. இதுவரை நீங்கள் கேட்டிராத, கண்டிராத, நீங்கள் நினைத்தே பார்க்காத வகையில் பெரிய நன்மையை ஆண்டவர் உங்களுக்கு செய்து உங்களை வெட்கத்திலிருந்து தூக்கியெடுப்பார். ஏசாயா 64:4. ஆபிரகாம் பொறுமையாய் காத்திருந்து வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட மகனை, தேசத்தைப் பெற்றான். எபி 6:15. சஙó 40:1-ல் கர்த்தருக்காய் பொறுமையாய் காத்திருந்தார். வெட்கப்பட்ட தகப்பன், சகோதரர் நடுவில் சவுல் ராஜா, ராணுவ வீரர்கள், கோலியாத், எதிரிகள் முன்  புகழ்ச்சியும், கீர்த்தியுமாக தாவீது உயர்த்தப்பட்டார். சங் 3:3, செப் 3:19  ஆண்டவர் இயேசு தாமே அவரையே நம்பி காத்திருக்கிற, அவரை நோக்கிப் பார்க்கிற உங்களை தலையை நிமிரச் செய்து முகங்களை, வாழ்க்கையை பிரகாசமடையச் செய்வாராக!.

Youth Special - Sis. Prema David