Inspiration

நீ விடுதலையாகி பறந்திடு, வெற்றி சிறந்திடு

கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றி சிறக்கப்பண்ணி, எல்லா இடங்களிலும் எங்களைக் கொண்டு, அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம். 2 கொரி 2:14 கிறிஸ்துவுக்குள் அன்பான வாலிபத்தம்பி, தங்கைகளே நம்மை விடுதலை பண்ணுவதற்காக, நமக்காக மரித்து மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்த நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள். ஒரு ஈஸ்டர் ஞாயிறு அன்று போதகர் ஒருவர் ஒரு பழைய கிளிக்கூண்டை ஆலயத்திற்குக் கொண்டு வந்து பிரசங்கப் பீடத்திற்கு மேல் வைத்தார். சபை மக்கள் எல்லாம் கேள்விக் குறியோடு பார்த்ததும் போதகர் பேசத் தொடங்கினார். நான் ஆலயத்திற்கு வரும்பொழுது ஒரு சிறுவன் இந்தக் கிளிக்கூண்டை கையில் பிடித்தவாறு சுற்றிக் கொண்டே வந்தான். அக்கூண்டின் அடியில் மூன்று கிளிகள் பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். அச்சிறுவனிடம் அதில் என்ன? உள்ளது என்று கேட்டேன். வயதான மூன்று கிளிகள் என்றான். இதை வைத்து என்ன செய்யப் போகிறாய் என்று கேட்டதற்கு, அவன் சிரித்துக் கொண்டே இவைகளை வீட்டிற்கு கொண்டு சென்று விளையாடுவேன், அவற்றின் இறகுகளையெல்லாம் பிடுங்கியெடுத்து, அவைகளை கோபமூட்டி ஒன்றோடென்று சண்டையிடச் செய்து வேடிக்கைப் பார்ப்பேன். கடைசியில் அவைகளை நான் வளர்க்கும் பூனைக்கு உணவாகக் கொடுப்பேன் என்றான். மகனே இவைகளை எனக்கு விலைக்குத் தருவாயா? என்று அவர் கேட்டதற்கு, அவன் ஐயா, இது பாடாது, அழகாகவும் இல்லை. இவைகள் சாதாரணமானவைகள் என்றான். அதற்கு நான் விலையை மட்டும் சொல் என்றேன். ரூபாய் 100 என்றான். நான் கூண்டுடன் மெல்ல நடந்தேன். சிறுவனோ பணத்துடன் பறந்தான். நான் ஆலயத்தின் அருகில் இருந்த மரத்தில் பறவைகளை விடுதலையோடு பறக்க விட்டேன் என்று சொல்லி பிரசங்கத்தைத் தொடர்ந்தார். 1. விலைக்கிரயம் செலுத்தப்பட்டால் நீ, விடுதலையாய் வாழ முடியும் ஆதலால் பிள்ளைகள் மாம்சத்தையும், இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும், அவர்களைப் போல மாம்சத்தையும், இரத்தத்தையும் உடையவரானார். மரணத்திற்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கு, ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைதனத்திற்குள்ளானவர்கள் யாவரையும், விடுதலை பண்ணும்படிக்கு அப்படியானார். எபிரே 2:14,15 தனóனுடைய பிள்ளைகளாகிய ஆதாமையும், ஏவாளையும் தன் வலையில் சிக்க வைத்தப்பின், சாத்தான் இயேசுவை பார்த்து இயேசுவே, நான் முழு உலகத்தையும், என் ஆளுகைக்குள் கொண்டு வந்து விட்டேன். வயது வரம்பில்லாமல் அனைவரையும் பிடித்து விட்டேன். ஒருவர் கூட என்னை எதிர்த்து நிற்கவில்லை என்றான் ஆனவத்தோடு, இயேசு அமைதியான குரலில் அவர்களை வைத்து என்ன? செய்யப் போகிறாய் என்று கேட்டார். ஓ!, அதுவா, நான் அவர்களுக்கு சண்டையிடுவது எப்படி, குடிப்பது, புகைப்பது எப்படி என்றெல்லாம் சொல்லித் தருவேன். இதுமட்டுமா, எப்படி துப்பாக்கிக் குண்டுகள் செய்வது, எப்படி கொலை செய்வது, கொள்ளையடிப்பது என்றெல்லாம் சொல்லித் தருவேன் என்றான். இயேசு வேதனையோடு பிறகு என்றார். அவர்களைத் தற்கொலைக்கு நேராக நடத்தி கொன்று விடுவேன். விபத்துக்கள், ஆபத்துக்களை ஏற்படப்பண்ணி மரிக்கச் செய்து நரகம் கொண்டு செல்வேன் என்றான். விலைக்கிரயமாக நான் உனக்கு என்ன தந்தால் நீ, எனக்கு இவர்களைத் தருவாய் என்று கேட்டார் இயேசு. அதற்கு சாத்தான் ஐயா, இவர்கள் உங்களுக்கு வேண்டாம், இவர்கள் நல்லவர்கள் இல்லை. உங்கள் முகத்தில் துப்புவார்கள், உங்களைச் சபித்து, காயப்படுத்தி சிலுவையில் அறைந்து கொன்று விடுவார்கள் என்று மூச்சு விடாமல் சொன்னான். இது எதையும் காதில் வாங்காமல் இயேசு சாத்தானை, உனக்கு எவ்வளவு வேண்டும் அதை மட்டும் சொல் என்றார். சாத்தான் ஏளனத்தோடு இயேசுவைப் பார்த்து விலைக்கிரயமாய் உம் கண்ணீர் முழுவதும், உம் சரீரத்தில் உள்ள இரத்தம் முழுவதும் என்று கேட்டான் என்று அந்த போதகர் தன்னுடைய செய்தியில் சொல்லிய பின்பு, அந்த கூண்டின் கதவுகளைத் திறந்து காலியாக உள்ள கூண்டை சபையாருக்கு காண்பித்து, இப்படித்தான் இயேசுவும் நம்மை விடுதலையாக்கி இருக்கிறார் என்றார். இது ஒரு பக்தருடைய சிலுவை தியானம் மட்டுமல்ல யோபுவின் வாழ்க்கையில் நடந்த உரையாடலைப் போலத்தான் இயேசுவின் வாழ்க்கையிலும் நடந்திருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பாவமான எண்ணங்களிலிருந்தும், பாவபழக்க வழக்கங்கள் அதன் தண்டனைகளிலிருந்தும் நாம் இருக்கிறதற்கு சாகலாம், வாழவே பிடிக்கல என்று உங்களுக்கு, நீங்களே சொன்ன சாபங்கள், பெற்றோரோ, பெரியவரோ சொன்ன, செய்த பாவ சாபங்கள், தேவனுடைய கட்டளைகளை மீறும் போதும், சாத்தானின் தீய செயல்களோடு தொடர்பு வைத்துக் கொள்ளும் போதும், வரும் விளைவுகளிலிருந்தும் உங்களை விடுதலையாக்கவும், மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனை அழிக்கும்படிக்கும், மாம்சத்தையும், இரத்தத்தையும் உடைய உங்களை நேசித்து, அவரும் உங்களைப் போலவே, நம்மைப் போலவே மாமசமும், இரத்தமும் உடையவராய் மனுஷனாகப் பிறந்து, நம்மைப் போலவே பல கஷ்டங்களைப்பட்டு பாவம் மட்டும் செய்யாமல் நமக்காக பலியானார். இயேசு எனக்காகத்தான் மரித்தார், என்னை வாழவைக்கவே உயிரோடு எழுந்தார் என்று இருதயத்தில் நம்பி, உங்கள் வாயைத்திறந்து இயேசுவே என் பாவங்களை மன்னியும், நீரே என் இரட்சகர் என்று உண்மையாய்ச் சொல்லும் போது, அவர் தன் உயிரையே விலைக்கிரயமாய் செலுத்தினதால் இப்பொழுது நீங்கள் விடுதலையாக்கப்படுகிறீர்கள். பாவமோ, சாத்தானோ உங்கள் மேல் ஆதிக்கம் செலுத்த முடியாது. இயேசு என் பாவத்தை மன்னித்து விட்டார் என்ற நம்பிக்கையும், சமாதானமும் உங்கள் உள்ளத்திலே வரும். இதற்குப் பெயர் தான் இரட்சிப்பு. இனி நீங்கள் பாவி அல்ல பரிசுத்தமாகிவிட்டீர்கள் 2. இயேசு வெற்றி சிறந்ததால், நீ வெற்றியாய் வாழ முடியும் நமக்கு எதிரிடையாகவும், கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும், இருந்த கையெழுத்தைக் குலைத்து, அதை நடுவிலிராதபடிக்கு எடுத்து சிலுவையின்மேல் ஆணியடித்து, துரைத்தனங்களையும், அதிகாரங்களையும் உரிந்து கொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின் மேல் சிலுவையிலே வெற்றி சிறந்தார். கொலோ 2:14,15 இயேசு என் பாவத்தை மன்னித்து விட்டார். ஆனால் நான் விழுந்து, விழுந்து எழுகிறேனே, இன்னும் நற்ங்ஹக்ஹ் ஆகலயே?. நான் பாவம் செய்யக் கூடாது என நினைக்கிறேன், ஆண்டவருக்குப் பிரியமா நடக்கனும் என்று விரும்புகிறேன் ஆனால்….. என்கிறீர்களா? இயேசுகிறிஸ்துவின் இரத்தம் உங்களையும், என்னையும் பாவத்திலிருந்தும், சாபத்திலிருந்தும், சாத்தானிடமிருந்தும் காப்பாற்றி, விடுதலை பண்ணினது மட்டுமல்ல ஆதாம், ஏவாளிடமிருந்து சாத்தான் பறித்துக் கொண்ட ஆளுகை, அதிகாரம், தேவமகிமை எல்லாவற்றையும் அவனிடமிருந்து மீட்டு, அவனைத் தோற்கடித்து சிலுவையிலே வெற்றி சிறந்து விட்டார். சாத்தான் நினைத்தான், இயேசுவை சிலுவையிலே அறைஞ்சிட்டா அதோடு அவர் கதை முடிஞ்சிருச்சு, எந்த மனிதனையும் அவர் காப்பாற்றவே முடியாது, அவரே என் காலடியில் தான் என்று மமதையாக நினைத்துக் கொண்டிருக்கும் போதே ஸ்திரியின் வித்தாக கன்னியீன் வயிற்றில் பிறநóத, என் குதிங்காலைத் தான் நீ நசுக்க முடியும், சிலுவை மரணத்தைத்தான் ஏற்படுத்த முடியும், ஆனால் நானோ உன் தலையை நசுக்கி, நீ திரும்ப எழுந்திருக்க முடியாதபடி, ஜெயிக்க முடியாதபடி உன்னை தோற்கடிப்பேன் என்று இயேசு அவன் மேல் வெற்றி பெற்று விட்டார். (வெள 1.18) இதை நீ விசுவாசித்து, பாவ எண்ணங்களோ, பாவச்செயல்கள் செய்ய சந்தர்ப்பமோ (சாத்தான், மனிதர்கள் மூலமாக) வரும்போது, நான் இயேசுவின் பிள்ளை, நான் அவருடையவன் (ள்) சாத்தானே, நீ என்னைத்தொட முடியாது அப்பாலே போ, சாத்தானே என்று அவனைத் துரத்துங்கள். அடுத்து அவருடைய வார்த்தையை தினமும் வாசித்து, தினமும் ஜெப நேரத்தில் அவரை சந்தித்துப் பேசி இயேசுவே பாவம் செய்யாதபடி எனக்கு உதவி செய்யும், காத்துக் கொள்ளும் என்று கேளுங்கள். எனக்காக உயிரையே விலைக்கிரமாய் கொடுத்து, எனனை அவருக்கென்று வாங்கியிருக்கிறார். அவருக்காக நான் நன்றியோடு வாழ வேண்டும் என்று உறுதியான தீர்மானத்தோடு இருங்கள். பரிசுத்தாவியானவரைப் பெற்றுக் கொள்ளுங்கள். எந்தப்பாவமும், சாத்தானும் உங்களை மேற்கொள்ளவே முடியாது. எல்லா நேரத்திலும், எந்த இடத்திலும் உங்களை வெற்றி சிறக்கப் பண்ணவே, இயேசு வெற்றி சிறந்து விட்டார். சுதந்திரதினம், குடியரசு தினம், போன்று வருடா வருடம் மட்டுமல்ல தினந்தோறும் நீங்கள் இயேசு பெற்ற வெற்றியினால் நீங்களும் வெற்றி பெறமுடியும். எர்ர்க் ஊழ்ண்க்ஹஹ் என்பது விலைக்கிரையத்தையும், விடுதலையையும் உணர்த்துகிறது. உஹள்ற்ங்ழ் இயேசு வெற்றி சிறந்ததையும், நாம் வெற்றியாய் வாழ வேண்டும், வாழமுடியும் என்பதையும் உணர்த்துகிறது. அர்த்தமுள்ள, வெற்றி அனுபவமுள்ள கொண்டாட்டங்களை கொண்டாடுங்கள் என்று வாழ்த்துகிறோம். ஜெபிக்கிறோம். எப்பொழுதும், எல்லா இடங்களிலும், உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் இயேசுவின் நாமத்தினல் வெற்றி சிறப்பீர்களா?.

Youth Special - Sis. Prema David