Inspiration

Children's Special

ஹலோ குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா! ஹேப்பி ஈஸ்டர், ரஷ்யா–உக்ரைன் போர்ன்னு நியூஸ் கேள்விப்பட்டீங்களா?, அங்கே கடவுளே இல்லைன்னு சொல்ற கம்யூனீஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஒரு அண்ணன் இருந்தாங்க. நம்ம கட்சி தானே ஆளும் கட்சின்னு துணிச்சலா போதைப் பொருட்களைக் கடத்தும் தொழிலைச் செய்து நிறைய சம்பாதிச்சாங்க, ஒருநாள் டர்ப்ண்ஸ்ரீங் கையிலே நல்லா மாட்டீட்டாங்க. கம்யூனீஸ்ட் கட்சியிலே இருந்துட்டு இப்படி செஞ்சதாலே, மூன்று நாளும் ஒரு சாப்பாடும் கொடுக்காம, அடி அடின்னு அடிச்சு, சதையெல்லாம் பிஞ்சு தொங்குற மாதிரி அடிச்சு ஜெயிலóல போட்டுட்டாங்க. அவரை போட்ட அறையில்ல, ஒரு சின்னப் பையனும் இருந்தான். அவனைப் பார்த்தவுடனே தெரிஞ்சிருச்சு, அவனையும் நல்லா அடிச்சிருக்காங்க என்று. ஏன்னா அவன் உடம்பெல்லாம் நல்லா காயம். அவனைப் பார்த்து அவர் கேட்டார். நீ என்ன செஞ்ச என்று, அதற்கு அவன் ஒன்றுமே பதில் சொல்லலை. கொஞ்ச நேரம் சென்று ஒரு சின்ன பீஸ் ரொட்டித்துண்டை ஜெயில்ல இருக்கிறவங்களுக் கெல்லாம் கொடுத்தாங்க. அந்த சின்னப் பையன் தனக்கு கொடுத்த ரொட்டித்துண்டை அவன் சாப்பிடாம அதை கொண்டு போய் கொடுத்தான். அந்த அண்ணனும் 3 நாளா ஒன்னும் சாப்பிடாம இருந்ததால, தனக்குக் கொடுத்ததையும், அந்த சிறு பையனுக்குக் கொடுத்ததையும் வாங்கி உடனே சாப்பிட்டாங்க. மறுநாளும் ரொட்டித்துண்டை வாங்கினவுடன் அந்த அண்ணனிடம் கொடுத்துவிட்டு, அங்கிள் உங்களுக்கு கொடுக்க என்ட்ட வேற ஒன்றுமே இல்லை. ஏன்ட்ட இருக்கிறதை மட்டும் தான் நான் தர முடியும், உங்களைப் பார்த்தா பரிதாபமா இருக்குது. எங்க அம்மா நம்ம எச்சிலே நம்மை சுகமாக்கிவிடும்னு சொல்லியிருக்காங்க. நான் உங்க காயங்கள துடைச்சு விடுவான்னு சொன்னவுடனே, அதற்கு அந்த அண்ணன் சரின்னு சொல்லுமுன்னே வாயினாலே நக்கி நக்கி துடைத்து விட்டான். அடுத்த நாளும் ரொட்டித்துண்டை நீங்க எடுத்துக்கோங்க, எனக்கு உள்ப்புண் அதிகமா இருக்கிற மாதிரி தெரியுது, நான் சீக்கிரம் இறந்திடுவேன்னு நினைக்கிறேன். எனவே நீங்க எடுத்துக்குங்க என்றான். உடனே அந்த அண்ணன் அவனைப் பார்த்து, நான் உன்னுடைய அப்பா கிடையாது. நான் உன்னை நேசிக்கவே இல்லையே. பின்ன ஏன்? எதுக்காக? என்னிடம் கொடுக்கிறாய்? என்றதும் அவன் சொன்னான். ஐ ஓய்ர்ஜ் ஙஹ் ஒங்ள்ன்ள், இயேசுவை எனக்குத் தெரியும், நான் இயேசுவை அறிந்திருக்கிறேன். உங்களுக்குத் தெரியுமா?. இயேசு நம் பாவங்களுக்காக சிலுவையிலே மரித்து, அடக்கம்பண்ணப்பட்டு, மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தார். இன்றைக்கும் உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார். இயேசுவுக்கு உங்களைக் கொடுப்பீங்களா? என்று இயேசுவைப் பற்றி அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே இரத்த வாந்தி எடுத்து, அந்த அண்ணனின் காலடியில் மரித்துப் போனான். அந்த ஜெயில் அதிகாரிகள் அவன் காலில் கயிற்றைக் கட்டி தர தரவென்னு நாயை இழுத்துச் செல்வது போலó இழுத்துச் சென்றார்கள். அதைப் பார்த்தவுடன் அந்த அண்ணனின் உள்ளம் உடைந்ததுதான் அவரை இயேசுவை ஏற்றுக்கொள்ள வைத்தது. இன்றைக்கு ரஷ்யாவில் இயேசுவின் பிள்ளையாய் ஒரு சபையிலே, ஊழியங்களைத் தாங்கக்கூடிய, ஒரு தொழில் அதிபராய் சாட்சியாய் வாழ்ந்து வருகிறார். அந்த சிறுபையனைப் போல நீயும், இயேசுவை மற்றவர்களுக்கு அறிமுகப் படுத்துவாயா? கொடுப்பாயா?. அது தான் இயேசப்பாவின் ஆசை. அதுதான் அவருடைய தேவையும் கூட, நீ செய்ய வேண்டியதெல்லாம் இயேசுவை, நீ முதலாவது உன் இருதயத்தில் ஏற்றுக்கொள், அடுத்ததா உன் நண்பர்கள், பெரியவர்களிடம் இயேசுவை எனக்குத் தெரியும், உங்களுக்குத் தெரியுமா? என்று மட்டும் சொல், இயேசுவை சொல்லிவிடு. உன்னைக் கொண்டு அநேகர் இயேசுவின் பிள்ளையாக மாறுவார்கள். ஜெபம் – அன்புள்ள இயேசப்பா நீங்க தான் என்னை பாவத்திலிருந்து காப்பாற்றும் இரட்சகர் என்பதை நம்புகிறேன். என் உள்ளத்திற்குள் வாங்க. இயேசப்பா உங்கள மற்றவர்களுக்குச் சொல்ல எனக்கு உதவி செய்யுங்க. ஆமென். மனப்பாட வசனம் – வெள்ளியும், பொன்னும் என்னிடத்தில் இல்லை, என்னிடத்தில் உள்ளதை உனக்குத் தருகிறேன். அப்போஸ்தலர் 3:6