Inspiration
கிறிஸ்துவில் அன்பான வாலிபத்தம்பி, தங்கைகளே, நம் ஒவ்வொருவருக்காக தன் உயிரையே கொடுத்த நல்ல நண்பனான நம் ஆண்டவர் இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள். ஒரு டட்ர்ய்ங் ரீஸிவர் படமும் அதன் பக்கத்தில் ஙஹ் சங்ஜ் ஆங்ள்ற் ஊழ்ண்ங்ய்க் என்று எழுதப்பட்டிருந்த ஒரு நோட்டு அட்டையை நான் பார்த்த போது பேனா, நண்பர்கள் என்ற அந்த காலம் போய், டட்ர்ய்ங் நண்பர்கள் என்ற இந்தக் காலத்தில் அவர்கள் உண்மையான நண்பர்களாயிருப்பார்களா? என்று யோசித்தேன். இன்றைக்கு நேருக்கு நேர் பேசுகிறது மாதிரி டட்ர்ய்ங்-ல தான் அதிகம் பேர் பேசிக்கொண்டே……யிருக்கிறதைப் பார்க்கிறோம். நீங்கள் எப்படி? உன் நண்பன் யாரென்று சொல், நீ யாரேன்று சொல்கிறேன் என்ற பழமொழியைக் கேட்டிருப்பீர்கள் தானே. உங்களது நண்பர்கள் என்பவர்கள் உண்மையிலே நல்லவர்களா?, வேதம் காட்டும் வழியில் நடக்கிறவர்களாக இருந்தால் நல்லது. நீங்கள் எப்படியும் தப்பி விடலாம். நீ குடிக்க வேண்டாம் சும்மா என்னோடே வா என்ற நண்பனின் பாசத்திற்கு இணங்கிச் சென்று, கூடப் போன யாராவது குடிக்காமல் வந்தார்களா? என்றால் இல்லை குடிக்கு அடிமையாய்ப் போனார்கள் என்பதே உண்மை. கோபக்காரனுக்கு தோழனாகாதே, உக்கிரமுள்ள மனுஷனோடே நடவாதே, அப்படிச் செய்தால் நீ அவனுடைய வழிகளைக் கற்றுக்கொண்டு, உன் ஆத்துமாவுக்குக் கண்ணியை வருவிப்பாய் நீதி 22:24,25. அதனால் தான் இஸ்ரவேல் ஜனங்களைப் பார்த்து ஆண்டவர் சொன்னார் அவர்களோடும், அவர்கள் தேவர்களோடும், (பழக்கங்கள், வழிமுறைகள்) நீ உடன்படிக்கை பண்ணாதிருப்பாயாக. அவர்கள் உன்னை எனக்கு விரோதமாகப் பாவம் செய்யப்பண்ணாதபடிக்கு, உன் தேசத்திலே குடியிருக்க வேண்டாம். நீ அவர்கள் தேவர்களைச் சேவித்தால், அது உனக்கு கண்ணியாயிருக்கும் யாத் 23:32,33. உங்கள் நண்பர்கள் அழிவின் பாதையில் செல்கிறவர்களாய், அதை செய்கிறவர்களாயிருந்தால் நீங்களும் எளிதில் அதை கற்றுக் கொள்கிறவர்களாய், அவர்களைப் போல, அவைகளைப் போல மாற வாய்ப்பு உண்டு. நீங்களே சிறந்த நண்பனாயிருந்து, சிறந்த தோழியாயிருந்து விட்டால் உங்களை நீங்களே காத்துக் கொள்ளலாம், அவர்களையும் காப்பாற்றிவிடலாம். அப்பொழுது அவர்களும், நீங்களும் ஒருவரையொருவர் பார்த்து சொல்லலாம் My New Best Friend என்று.
பாரபட்சமின்றி எல்லோரிடமும் பழகுங்கள்.
நன்றாய் படிக்கிறவனாக, குறைந்த மதிப்பெண் எடுக்கிறவனாக, அழகான, அழகில்லாத, வசதி படைத்த, வசதியில்லாதவராக, கிராமப்புற, நகர்ப்புற சூழ்நிலையுள்ளவராக, எந்த இனம், மதம் வித்தியாசமின்றி எல்லோரிடமும் நன்றாய் பேசுங்கள். உங்களால் முடிந்த படிப்பிலோ, பண உதவியோ, உணவோ கொடுத்து உதவி செய்யுங்கள். தவறான உதவி மட்டும் செய்து விடாதீர்கள். அந்தப் பையனை இந்தப் பெண்ணோடு Connect பண்ணிவிடாதீர்கள். நன்றாய்ப் பழகுங்கள் என்று சொல்வதாலே, எப்பவும் Friend, Friend வீடு என்றிருக்காதீர்கள். படிக்க ஊழ்ண்ங்ய்க் வீட்டிற்குப் போறேன்னு சொல்லிவிட்டு எங்கேயாவது போய் விளையாடி விடாதீர்கள். Friend-ஐ பிரிந்து என்னால் இருக்கவே முடியாது என்ற நிலைக்குப் போய் ஓரினச் சேர்கóகை பாவங்களில் சிக்கிக் கொள்ளாதீர்கள். குறிப்பாக ஜெபம், இயேசுவை விட்டுப் பிரிக்கும் நட்பு வேண்டாம் என விலகி விடுங்கள். பட்சபாதமுள்ளவர்களாயிருப் பீர்களானால், பாவஞ்செய்து, மீறினவர்களென்று நியாயப்பிரமாணத்தால் தீர்க்கப்படுவீர்கள் யாக் 2:9. நீங்கள் தவறான காரியங்களை பேசமாட்டீர்கள், தவறான இடத்திற்கு போக மாட்டீர்கள். தவறான காரியத்துக்கு ஒத்துப் போக மாட்டீர்கள் என்று உங்கள் நண்பர்களுக்கு தெரிந்திருப்பதாலே உங்கள் மதிப்பு கூடுமே தவிர, உங்கள் வாழ்க்கை எந்த விதத்திலும் குறைந்து போகாது. நான் School-ல படிக்கும் போது ஹாஸ்டலில் இருக்கிற அனைவரும் சினிமா பார்த்தாலும், நான் சினிமா பார்க்காமல், ஒரு சிலரை என்னோடு சேர்த்து ஜெபிக்க ஆரம்பித்தேன். பிóள்ளைகள் தங்களது மனக்கஷ்டங்களை, வீட்டுக் கஷ்டங்களை என்னிடம் சொல்ல ஆரம்பித்தார்கள். அவர்களுக்காக ஜெபிக்கும் போது கர்த்தர் அவர்களுக்கு விடுதலை கொடுத்தார். அவர்களும் ஜெபிக்க கற்றுக் கொண்டார்கள். இதைப் பார்த்த ஜெபத்திற்கு வராத பிள்ளைகள் ஒன்று சேர்ந்து ஏதோ பேசிக் கொண்டிருப்பார்கள். என்னைப் பார்த்தவுடன் பிரேமா வருது பேசாதீங்கப்பா என்பார்கள். எனவே தீய காரியங்களுக்கு மட்டும் உடன்படாமல் எல்லாரிடமும் நன்றாய் பழகுங்கள்.
இறுதிவரை அன்பான நண்பராயிருங்கள்
இயேசு இவ்வுலகத்தைவிட்டுப் பிதாவினிடத்திற்குப் போகும்படியான தம்முடைய வேளை வந்ததென்று அறிந்து, தாம் இவ்வுலகத்திலிருக்கிற தம்முடையவர்களிடத்தில் அன்பு வைத்தபடியே, முடிவு பரியந்தமும் அவர்களிடத்தில் அன்பு வைத்தார் யோவான் 13:1. Friend என்ற வார்த்தையில் ஒரு அர்த்தத்தை நான் தெரிந்து கொண்டேன். Friday- பள்ளி நாட்களில் வெள்ளிக்கிழமை வரை மட்டுமல்ல, அதாவது தேவைப்படும் போது மட்டுமல்ல, காசு இருக்கும் வரை அல்ல Week end- வார நாட்களின் இறுதி வரை கூட இருப்பவர்களே சிறந்த, நல்ல நண்பனாயிருக்க முடியும். பார்த்தவுடனே Friend பிடிக்கிறது, பார்க்காமலே Insta, Whatsapp, Face book Friends கேள்விக்குறி தான்? என்னோடு Classmate ஒரு வசதியான பெண். அம்மா, அப்பா, டீச்சர் என தொணத்தொண என்று பேசுவாள். எப்பொழுதும் படித்துக் கொண்டேயிருப்பாள். பிள்ளைகள் எல்லோரும் புத்தகப்புழு என்று கேலிபண்ணுவார்கள். அந்தச் சமயம், அவர்கள் வீட்டில் அம்மா, அப்பாவுக்கிடையே சண்டை, அவளுக்கு வேற சுகமில்லை, ஹோமியோபதி மாத்திரை எடுத்துக் கொண்டிருந்தாள். அவள் பேசினால் ஒரு Bed smell வரும். அதோடு அவளால் Concentrate பண்ணி படிக்க முடியாமல் பக்கத்திலிருக்கிற Box-ஐ எடுத்து முன்னால் வைப்பாள். முன்னால் வைத்த Box-ஐ பின்னால் வைப்பால், அவளால் கவனமாகப் படிக்க முடியாமல் மன நிலைமையும் பாதிக்கப்பட்ட, அந்தச் சூழ்நிலையில் நான் அவளுக்கு ஆண்டவரைப் பற்றிச் சொல்லி ஜெபித்தபின் அவளால் நன்கு படிக்க முடிந்தது. அந்த வருடம் 10th Public Exam எழுதுவாளா என்ற நிலையில் 434 மதிப்பெண் பெற்று வெற்றி பெற்றாள். அவள் வாய் நாறுதே, எப்படி நீ மட்டும் அவளிடம் பேசுகிறாய் என்று பிள்ளைகள் கேட்பார்கள். நன்றாயிருக்கும் போதல்ல துன்பத்திலும், இறுதிவரை நல்ல, சிறந்த நண்பராயிருங்கள். இயேசுவே நமக்கு சிறந்த முன்மாதிரி. நம்மீது அன்பு வைத்து, அன்பினாலே நமக்காக உயிரையே கொடுத்தவர். உங்களுக்கு சிறந்த நண்பர்களைத் தநóது, சிறந்த நண்பர்களாய் வாழ உதவி செய்வாராக
Youth Special - Sis. Prema David