Inspiration

இனி நீ தொய்ந்து போவதில்லை

ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்.
வாழ்க்கையில் நாம் சந்திக்கும் அன்றாடப் பிரச்சனைகள் நடுவில், போராட்டத்தின் மத்தியில் எப்படி இவைகளை சமாளிப்பது என்ற கலக்கத்தில் மனம் தளர்ந்து நாம் தொய்ந்து போகிறோம். அப்படிப்பட்ட நம்மைப் பார்த்து எரே 31:11,12-ல் கர்த்தர் யாக்கோபை மீட்டு, அவனிலும் பலத்தவனுடைய கைக்கு அவனை நீங்கலாக்கி விடுவிக்கிறார். அவர்கள் வந்து, சீயோனின் உச்சியிலே கெம்பீரித்து, கர்த்தர் அருளும் கோதுமை, திராடசரசம், எண்ணெய், ஆட்டுக்குட்டிகள், கன்றுக்குட்டிகள், எனóபவைகளாகிய இந்த நன்மைகளுக்காக ஓடிவருவார்கள், அவர்களுடைய ஆத்துமா நீர்ப்பாய்ச்சலான தோட்டம் போலிருக்கும், அவர்கள் இனி தொய்ந்து போவதில்லை என்கிறார். நீண்ட நாட்களாய் திருமணத்திற்கு காத்திருப்பது, வேலைக்காக எதிர்பார்த்திருப்பது, குழந்தைக்காக இந்த மாதமாவது நல்ல செய்தி வராதா என ஏங்குவது, வீட்டின் கவலை, பிள்ளைகளைப் பற்றின கவலை, வருமானத்தைப் பற்றிய மனசோர்வு இப்படி நாம் தொய்ந்து போக பல காரணங்கள் இருக்கிறது. ஆனால் ஆண்டவரின் வார்த்தை சொல்கிறது இனி நீ தொய்ந்து போவதில்லை. நான் உன்னைப் பலப்படுத்துகிற தேவன் என்று சொல்கிறார்.

 

ஏன் நமக்கு தொய்வு ஏற்படுகிறது.

நமது வருமானம் பத்தாயிரம் என்றால் செலவு பதினைந்தாயிரம் ஆகி விடுகிறது. அந்த தேவைக்கு அந்த இடத்தில் பள்ளம், தொய்வு ஏற்படுகிறது. ஒரு கொடி கட்டி துணிகளைக் காயப்போடுகிறோம். எவ்வளவு பளு அதன் மேல் ஏற்றுகிறோமோ நாளாக நாளாக கொஞ்சம் கொஞ்சமாய் அது தொய்வு ஏற்பட்டு இறங்கி விடுகிறது. வேலைப்பளு அதிகமாகிறதினால் சரீரத்தில் ஒரு தொய்வு ஏற்படுகிறது. சங் 57:6-ல் என் கால்களுக்குக் கண்ணியை வைத்திருக்கிறார்கள். என் ஆத்துமா தொய்ந்து போயிற்று, சத்துருவினால் வரும் மறைவான கண்ணி. நமக்கே தெரியாமல், நமக்கு விரோதமாய் கால்களுக்கு, நாம் நடந்து போகிற பாதையில் கண்ணியை வைத்துத்தான் நம்மை இடறப்பண்ணுகிறார்கள். பிள்ளைகள் நன்றாய் படித்துக் கொண்டு வரும்போதே எனக்குப் படிக்க பிடிக்க வில்லை, நான் இனி படிக்க போக மாட்டேன் என்று அடம் பிடிக்கிறார்கள் ஏன்? பிள்ளைகளுக்கு என்ன ஆலோசனை சொன்னாலும் கேட்கவில்லை. வாலிப வயதில் முரட்டாட்டம், நீ என்ன சொல்வது நான் அதை கேட்க வேண்டுமோ எனக்குத் தெரியும் என்பார்கள். சில பேர் இவளைத்தான், அவனைத்தான் திருமணம் செய்வேன் என்று பிடிவாதம் பண்ணுவார்கள். திடீர்ரென்று நன்றாய்ப் போன தொழில் நஷ்டமடைந்து விட்டது. வியாபாரமே நடக்க மாட்டேன்கிறது ஏன்? என்ன சூன்யமோ எல்லாமே எதிராய் நடக்கிறது என்று கலங்குகிறீர்களா? சங் 57:6-ன் பிற்பகுதியைப் பாருங்கள் எனக்கு முன்பாக குழியைய வெட்டி அதின் நடுவிலே விழுந்தார்கள். இது தான் நமக்கு எதிராய் கண்ணியை வைத்தவர்களுக்கு நேரிடும் பேராபத்து. சங் 107:5-ல் பசியாகவும், தாகமாகவும், ஆத்துமா தொய்ந்ததாகவும் அலைந்து திரிந்தார்கள். 2-ஆம் வசனத்தில் கர்த்தரால் சத்துருவின் கைக்கு நீங்கலாக்கி மீட்கப்பட்டு ——என்கிறது. அப்படியானால் சத்துருவின் தாக்குதலில் இருந்த போது அவர்கள் பசியாகவும், தாகமாகவும் ஆத்துமா தொய்ந்ததாகவும் அலைந்து தõரிந்தார்கள். சங் 88:9 துக்கத்தினால் என் கண் தொயóந்து போயிற்று, கர்த்தாவே, அனுதினமும் நான் உம்மை நோக்கிக் கூப்பிட்டு, உமக்கு நேராக என் கைகளை விரிக்கிறேன். ஏதோ ஒரு துக்கம், ஏதோ ஒரு பாதிப்பு, இதினிமித்தம் உண்டாகிற தொய்வு. துக்கம் மனதில் இருக்கும் போது தூக்கம் வராது. தூங்காத கண்களைப் பாருங்கள், பார்த்த உடனே தெரியும். அதில் ஒரு சோர்வு, தொய்வு, சரியாய் தூங்காததினால் அஜீரணம் சாப்பிட முடியாது. அது அடுத்த பலவீனங்களுக்குள் கொண்டு போய் விடுகிறது. யோவான் 11:11,12-ல் இயேசு, சீஷர்களை நோக்கி, நம்முடைய சிநேகிதனாகிய லாசரு நித்திரையடைந்திருக்கிறான் நான் அவனை எழுப்பப்போகிறேன் என்றார். அதற்கு அவருடைய சீஷர்கள், ஆண்டவரே, நித்திரையடைந்திருந்தால் சுகமடைவான் என்றார்கள். அவர் தூங்கி இளைப்பாறுகிறதைப் பற்றி சொல்கிறார் என்று நினைத்தார்கள். தூங்கி இளைப்பாறினால் நல்ல உடல் ஆரோக்கியம் உண்டாகும். எங்கே தூங்க மடிகிறது. நாளைய தினத்தைக் குறித்த கவலை, பிள்ளைகளைக் குறித்த கவலை, விலைவாசி உயருகிறதைக் குறித்த கவலை, செய்ய வேண்டியதைப் பற்றிய கவலை, செய்ய முடியாததை, செய்ய தவறியதை நினைத்து கவலை இவைகளைப் போன்று இன்னும் எத்தனையோ பாரங்கள், இவைகளை நினைத்து துக்கத்தினால் என் கண்கள் தொய்ந்து போய்கிறது. அவைகளின் மத்தியில் இந்த சங்கீதக்காரன் வேறு எந்த உதவியையும் நாடாமல், யாரையும் நம்பாமல் கர்த்தரை நோக்கி கூப்பிட்டு கைகளை விரிக்கிறான். கர்த்தரை நோக்கிக் கூப்பிட்ட ஒருவரையும் அவர் கைவிடுவதிலலை. வெட்கப்பட விடுவதில்லை.

ஆலோசனையை கேளுங்கள்

மோசே நல்ல தலைவன், அவனை வைத்து பல லட்சம் ஜனங்களை விடுதலைக்குள் நடத்தின, நல்ல தேவனோடு நடக்கிற, தேவ சத்தம் கேட்கிற மனிதன். எகிப்தில் தேவ ஜனங்களை விடுதலை ஆக்க, அவன் பட்ட பிரயாசங்கள், சந்தித்த அவமானங்கள் கொஞ்சமல்ல. அவன் இன்று விடுதலையாகி விடலாம் என்று ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்தான். ஆனால் பார்வோனின் இருதயம் கடினப்பட்டது. தாமதமாகிக் கொண்டே போகிறது, அரண்மனைக்கும், வீட்டிற்கும், தேவ ஜனத்திற்கும் என்று நடந்து கொண்டே இருந்தவன். இவைகளின் நடுவில் மனைவி, பிள்ளைகளை தன் மாமன் வீட்டிற்குத் திரும்பி அனுப்பி விட்டிருந்தான். இப்போது மோசேக்கும் இஸ்ரவேல் ஜனங்களுக்கும் தேவன் செய்ததைக் கேட்டு, தன் மகள் சிப்போராளையும், பேரப்பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு மோசேயைப் பார்க்க எத்திரோ என்ற மாமன் வருகிறான். ஆண்டவரை மகிமைப்படுத்தி சந்தோஷப்படுகிறார்கள். மறுநாள் காலமே எழுந்து மோசே, ஜனங்களை நியாயம் விசாரிக்கத் தொடங்கினான். சாயங்காலம் மட்டும் ஜனங்கள் மோசேக்கு முன்பாக நின்றார்கள். யாத் 18:13-24 வரை சொல்லப்பட்டுள்ளது. எத்திரோ இதைப் பார்த்து நீர், ஜனங்களுக்குச் செய்கிற இந்த காரியம் என்ன? நீர் ஒன்றியாய் உட்கார்ந்திருக்கவும் ஜனங்கள் காலமே துவங்கி சாயங்காலமட்டும் உமக்கு முன்பாக நிற்க வேண்டியதென்ன? என்றான். உடனே மோசே நான் ஊழியம் செய்கிறேன், ஜனங்கள் தேவனிடத்தில் விசாரிக்கும்படி என்னிடத்தில் வருகிறார்கள். அவர்களுக்குள்ள காரியங்கள், வழக்குகள் இவைகளை கொண்டு வரும்போது, நான் அதை தீர்த்து தேவ கட்டளைகளையும், பிரமாணங்களையும் அவர்களுக்கு தெரிவிக்கிறேன் என்றான். அதற்கு மோசேயின் மாமன் நீர் செய்கிற காரியம் நல்லதல்ல. நீரும் உம்மோடே கூட இருக்கிற ஜனங்களும் தொய்ந்து போவீர்கள். இது உமக்கு மிகவும் பாரமான காரியம். நீர் ஒருவராய் அதைச் செய்ய உம்மாலே கூடாது. இப்பொழுது என் சொல்லைக் கேளும், உமக்கு ஒரு ஆலோசனை சொல்லுகிறேன், தேவனும் உம்மோடு கூட இருப்பார். நீர் தேவ சந்நிதியில் ஆலோசனைக்காக இரும், விசேஷித்தவைகளை தேவனிடத்தில் கொண்டு போய் ஜெபம் பண்ணுவதில் நீர் இரும். அதற்கென்று ஆட்களை நியமிதóது, தேவனுக்குப் பயந்த, உண்மையான, பொருளாசையை வெறுக்கிற திறமையுள்ள மனிதரை தெரிந்து ஏற்படுத்தும் அவர்கள் அதையெல்லாம் பார்த்துக் கொள்ளட்டும். தங்களால் தீர்க்க முடியாத பெரிய காரியங்களை மட்டும் உம்மிடம் கொண்டு வரட்டும். சிறிய காரியங்களை அவர்கள் பார்த்துக் கொள்ளட்டும். இப்படி இந்த பாரத்தை சுமந்தால் உமக்கு இலகுவாயிருக்கும். நீரும் போகும் இடத்துக்கு சுகமாய் போய்ச் சேரலாம் என்றான். மோசே தன் மாமன் சொல்கேட்டு அவன் சொன்னபடியெல்லாம் செய்தான். சரியான நேரத்தில், சரியான ஆலோசனை யார் மூலமாகவும் வரலாம். சிறுபிள்ளையிடம் இருந்து கூட வரலாம். அந்த ஆலோசனையை நாம் ஏற்றுக்கொண்டு அதன்படி நாம் செய்கிறபோது நமக்கு இலகு உண்டாகும். ஆனால் நீ என்ன சொல்லுகிறது? நான் அதைக் கேட்க முடியாது என்பதனால் தான் அநேகக் குடும்பங்களில் பிரச்சனை ஏற்படுகிறது. நான் தேவ ஆலோசனையைக் கேட்பேன், மனித ஆலோசனையை கேட்க வேண்டியதில்லை என்று சொல்ல முடியாது. தேவ ஆலோசனையைத் தான் கேட்க வேண்டும். சில வேளைகளில் இதைப்போல மனித ஆலோசனைகள் நமக்குத் தேவை. அவை தரப்படும்போது தாழ்மையோடு ஏற்றுக்கொண்டு, தேவனிடம் ஜெபித்து நல்லவைகள், சரியானவைகளை நாம் செய்யத் தொடங்கினால் நமக்கும் இலகு உண்டாகும், சுமை குறையும், நமது பயணம் சுகமானதாய் இருக்கும். தடுமாறத் தேவையில்லை. அதைத்தான் எத்திரோ, நீர் போகும் இடத்திற்கு சுகமாய் போய்ச் சேரலாம் என்றான். நமக்கு ஆலோசனை சொல்லுகிறவர் சிறியவரோ, பெரியவரோ அது சிறிய ஆலோசனையோ, பெரிய ஆலோசனையோ, பெரிதானதோ, நல்ல ஆலோசனை, சரியான ஆலோசனைகளுக்கு செவி கொடுத்து செயல்பட்டால் இந்த தொய்விலிருந்து வெளியே வரலாம். அது ஆவிக்குரிய ஆலோசனையாக இருந்தாலும், உலகப் பிரகாரமான ஆலோசனையாக இருந்தாலும் செவி கொடுத்து இந்த தொய்வை சரி செய்யுங்கள்.

கர்த்தரை நோக்கிக் கூப்பிடுங்கள்.

பல நேரங்களில் பாடுகள் சூழ்ந்திருக்கும் வேளைகளில் முதல் முயற்சியாக நாம் மனிதர்களை கூப்பிடுவோம். எனக்கு ஏதாவது செய்யுங்கள் என்பதாக எதிர்பார்ப்போம். ஆனால் மனிதர்களால் முடியாமல் போகும் போது தான் தெய்வத்தை நோக்கி கூப்பிடுவோம். ஆனால் சங் 143:7-ல் கர்த்தாவே, சீக்கிரமாய் எனக்குச் செவிகொடும், என் ஆவி தொய்ந்து போகிறது. நான் குழியில் இறங்குகிறவர்களுக்கு ஒப்பாகாதபடிக்கு, உமது முகத்தை எனக்கு மறையாதேயும் என்று சொல்லி சங்கீதக்காரன் ஜெபிக்கிறான். கர்த்தாவே, சீக்கிரமாய் எனக்கு செவிகொடும் என்று சொல்லும் போது ஏதோ ஒரு அவசரமாய் நிறைவேற வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறான் அல்லது நீண்ட நாட்களாய் காதóதுக் கொண்டிருக்கிறான், இப்போது உடனே நடக்க வேண்டிய கட்டாய சூழ்நிலைகளில் இருக்கிறான். அதனால் தான் கர்த்தாவே நீ எனக்கு சீக்கிரமாய் செவிகொடும், என் ஆவி தொய்ந்து போகிறது என்று கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு விட்டான். நமக்கு இப்படிப்பட்ட சூழலில் நாமும் கர்த்தரை நோக்கி கூப்பிடுகிற போது அவர் நமக்கு செவிகொடுத்து நம்முடைய இன்னல்களை மாற்றி, நம் ஆவி தொய்ந்து போகாதபடி காப்பார். சங் 61:2-ல் என் இருதயம் தொய்யும் போது பூமியின் கடையாந்தரத்திலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுவேன். எனக்கு எட்டாத உயரமான கனóமலையில் என்னைக் கொண்டு போய் விடும் என்றான். இவன் இருதயம் தொய்யும் போது எங்கிருக்கிறான் என்றால் பூமியின் கடையாந்தரங்களில் இருக்கிறானாம். எங்கோ ஒரு மூளையிலிருந்து கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறான். எனக்கு எட்டாத உயரமாகிய கன்மலையில் என்னைக் கொண்டு போய் விடும்ó என்ற அவனை தேவன் கைவிடவில்லை ராஜசிங்காசனத்தில் உயர்த்தினார். முடிந்தது அவ்வளவு தான் என்று நினைக்கிற ஒருவர் வாழ்வை உயர்த்தக்கூடிய ஒருவர் தான் நம் ஆண்டவர் இயேசு. யோனா தேவ மனிதன், ஆனால் தேவசத்தம் கேட்டு, அவர் சித்தத்தின்படி வாழாதவன். ஆண்டவர் ஒரு பக்கம் போகச் சொன்னால் வேறு திசையில் சென்றவன். அவனைத் தன் திசையில் திருப்ப சில சிட்சையில் நடத்த வேண்டியதாயிருந்தது. ஒரே கொந்தளிப்பு, அத்தனை கொந்தளிப்பும் வந்தும் அவன் அதைப்பற்றி கவலைப்படாமல் கப்பலின் அடித்தட்டில் தூங்கிக் கொண்டிருந்தான். மற்றவர் எழும்பின பிறகுதான், தன் நிமித்தம் தான் இந்த கொந்óதளிப்பு என்று அறிந்து கொண்டான். அதற்கு என்ன நிவாரணம்? கொந்தளிப்பு நிற்க என்னை தூக்கி கடலில் எறிந்து விடுங்கள் என்றான். அப்படியாவது இதிலிருந்து தப்ப நினைத்தான். ஆனால் நான் வானத்துக்கு ஏறினாலும் நீர் அங்கேயும் இருக்கிறீர், பாதாளத்துக்குச் சென்று படுக்கையைப் போட்டாலும் அங்கேயும் நீர் இருக்கிறீர் என்று தாவீது சொல்கிறது போல, பாதாளத்துக்குப் போனால் தேவ சத்தத்திற்கு தப்பிவிடலாம் என்று நினைத்த அவனை விழுங்க ஒரு மீனுக்கு தேவன் கட்டளையிட்டார். மீன் மூச்சு விடும்போதெல்லாம் தண்ணீர் அவனை நிறைத்தது. கடல் பாசிகள் அவனைச் சுற்றி சூழ்ந்தது. அவனால் மூச்சுவிட முடியவில்லை ஒரு திராணியும் இல்லை. யோனா 2:7-ல் என் ஆத்துமா என்னில் தொய்ந்து போகையில் கர்த்தரை நினைத்தேன், அப்பொழுது என் விண்ணப்பம் உமது பரிசுத்த ஆலயத்திலே உம்மிடத்தில் வந்து சேர்ந்தது. 2-ஆம் வசனத்தில் என் நெருக்கத்தில் நான் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன், அவர் எனக்கு உத்தரவு அருளினார். நான் பாதாளத்தின் வயிற்றிலிருந்து கூக்குரலிட்டேன். நீர் என் சத்தத்தைக் கேட்டீர் என்கிறான். அவன் இருதயம் தொய்யும் போது கர்த்தரை நினைத்தான். நான் ஒழுங்காக தேவன் போகச் சொன்ன இடத்துக்கு போயிருந்தால் இப்போ இந்த இடத்துக்கு வந்திருக்கமாட்டேன் என்று அவரை நோக்கி கூக்குரலிட்டான். தேவனே என்னைக் காப்பாற்றும், இந்த நாற்றம் எனக்கு குமட்டுகிறது மீன் அங்கும் இங்கும் ஓடுகிறது எனக்கு தலைசுற்றுகிறது, இந்த தண்ணீரிலே என் வாழ்வு முடியப்போகிறதா? இன்னும் என்ன சொல்லி கதறினானோ தெரியாது. தேவன் மீனுக்குக் கட்டளையிóட்டார், போதும் யோனா மனம் வருந்திவிட்டான். அவனைக் கரையில் கொண்டு போய் விட்டுவிடு என்றார். மீன் கரையில் கக்கிவிட்டது. பாதாளத்தின் வயிற்றிலிருந்து கூப்பிடுகிற ஒவ்வொரு குரலையும் ஆண்டவர் கேட்கிறவர். உங்கள் வாழ்வில் மிகவும் தொய்ந்து போனீர்களா? இனி எழும்ப முடியுமா என்று எண்ணுகிறீர்களா? இன்னும் உங்களுக்கு நம்பிக்கை உண்டு, கர்த்தரை நோக்கி கூப்பிடுங்கள் இந்த நெருக்கத்தில் உங்களை அவர் விடுவிப்பார்.

தேவ வார்த்தைக்கு செவிகொடுங்கள்.

இயேவைத் தேடி திரளான ஜனங்கள் கூடி வந்தார்கள். அவர்களை இயேசு கண்டபொழுது, அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப் போலத் தொய்ந்து போனவர்களும், சிதறப்பட்டவர்களுமாய் இருந்தபடியால், அவர்கள் மேல் மனதுருகி, தம்முடைய சீஷர்களை நோக்கி, அறுப்பு மிகுதி வேலையாட்களோ கொஞ்சம், ஆதலால் அறுப்புக்கு எஜமான் தமது அறுப்பிக்கு வேலையாட்களை அனுப்பும்படி வேண்டிக் கொள்ளுங்கள் என்றார் மத்தேயு 9:36-38, இதை மாற்கு 6:34-ல் அவர்கள் மேல் மனதுருகி, அநேக காரியங்களை, அவர்களுக்கு உபதேசிக்கத் தொடங்கினார். நாம் தொய்ந்து போகும் போது தேவ வார்த்தையை வாசிக்க, தியானிக்க ஆரம்பித்தால் அந்த வார்த்தையில் இருக்கும் ஜீவன் நம்மை வாழ வைக்கிறது. சங் 39:3-ல் என் இருதயம் எனக்குள்ளே அனல் கொண்டது, நான் தியானிக்கையில் அக்கினி மூண்டது, அப்பொழுது என் நாவினால் விண்ணப்பம் செய்தேன். தேவனுடைய வார்த்தையால் நமக்கு அனல் மூட்டப்படுகிறது. அப்படியில்லாமல் நம் ஆத்துமாவில் அனல் இல்லாவிட்டால், ஆத்தும ஆகாரத்தை நாம் கொடுக்காவிட்டால் நம் ஆத்துமா தொய்ந்து போகும். அதனால் தான் மேய்ப்பனில்லாத ஆடுகளைப் போல தொய்ந்து போயிருந்த திரளான ஜனங்களோடு இயேசு பேசி அவர்களைப் பெலப்படுத்தினார். அவர் வழியாக பேசிய தேவ ஆவியானவர் இருதயங்களை ஆற்றி தேற்றி நல்வழிப்படுத்தி சீர்படுத்தினார். இன்றைக்கும் ஆண்டவர் நம்மோடு இப்படி பேசி நம்மை ஆவியானவர் வழியாய் திடப்படுத்துகிறார். எரே 31:25-ல் நான் விடாய்த்த ஆத்துமாவைச் சம்பூரணமடையப்பண்ணி, தொய்ந்த எல்லா ஆத்துமாவையும் நிரப்புவேன் என்று ஆண்டவர் சொல்óலுகிறார். இதுவரை நாம் எப்படிப்பட்ட சூழலில் போயிருந்தாலும் எரே 31:10-12-ன்படி இஸ்ரவேலை சிதறடித்தவர் அதை சேர்த்துக் கொண்டு ஒரு மேய்ப்பன் மந்தையைக் காக்கும் வண்ணமாய் அதைக் காப்பார் என்று சொல்லுங்கள். மேய்ப்பன் இல்லாத ஆடுகளாக அவைகள் தொய்ந்து போவதில்லை. கர்த்தர் யாக்கோபை மீட்டு அவனிலும் பலத்தவனுடைய கைக்கு அவனை நீங்கலாக்கி விடுவிக்கிறார். அவர்கள் வந்து சீயோனின் உச்சியிலே கெம்பீரித்து, கர்த்தர் அருளும் கோதுமை, திராட்சரசம், எண்ணெய், ஆட்டுக்குட்டிகள், கன்றுக்குட்டிகள் எனபவைகளாகிய இந்த நன்மைகளுக்காக ஓடி வருவார்கள். அவர்களுடைய ஆத்துமா நீர்ப்பாய்ச்சலான தோட்டம் போலிருக்கும், அவர்கள் இனித் தொய்ந்து போவதில்லை என்கிறார். ஆத்துமா தொய்ந்து போனதா? தொய்ந்து போன நிலையை மாற்றுகிற இயேசு நம் கூக்குரலைக் கேட்டு, நம் நிலையைப் பார்த்து நம் சிறையிருப்புகளை மாற்றி பல வித நன்மைகளை நமக்கு அருளுவார். நாம் தொய்ந்து போவதில்லை. என் ஆண்டவர் தாமே நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதித்து பலப்படுத்தி நிறுத்துவாராக.

By Sis. Kala VincentRaj