Inspiration
அவர் தாமே சோதிக்கப்பட்டுப் பாடுபட்டதினாலே, அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவி செய்ய வல்லவராயிருக்கிறார்-
எபிரெயர் 2:18 கிறிஸ்துவில் அன்பான வாலிபத்தம்பி, தங்கைகளே, நம்முடைய பாடுகளை சிலுவையில் சுமந்து தீர்த்த நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்.
ஏன் தான் எனக்கு இந்த பாடோ! என்று உங்க அம்மா, அப்பா மட்டுமல்ல நீங்களும் சொல்லிட்டுத்தானே இருக்கீங்க! நான் ரொம்பவே Suffer ஆயிட்டேன், Over Stress என் மனசே வலிக்குது என்று நீங்கள் பெருமூச்சு விடுவதும் நன்றாக புரிகிறது. படிக்கிறதில ஆர்வமின்றி பரீட்சை பயத்தில, பெற்றோர், ஆசிரியர்கள், அதிகாரிகளின், வேதனையான வார்த்தைகளாலே Friends-களின் (தோழர்கள்) கலாய்ப்புகளாலே அடிக்கடி உடம்பு சுகமில்லாம போறதால, அம்மா, அப்பா,மருத்துவரிடம் கூட சொல்ல முடியாம கஷ்டப்படுகிறேனே… எனக்கு உதவி செய்ய யாருமேயில்லையா என்று கூப்பிட்டுக் கொண்டிருக்கிற உங்களுக்கு உதவி செய்வதற்காகவே பாடுபட்ட இயேசு இருக்கிறார். நம் எல்லாருடைய பாடுகளை தன்மேல் ஏற்றுக்கொண்டு நம் எல்லாரைப் போல Sufferings, Stress, Pain, மன அழுத்தம், துன்பம், வருத்தம், கஷ்டம், போன்ற வேதனையை அனுபவித்து சிலுவையில் மரித்து உயிரோடு எழுந்த இயேசுவால் மட்டுமே உங்கள் பாடுகளிலிருந்து உங்களை காப்பாற்ற முடியும். அவர் ஒருவர் மட்டும்தான் உங்களுக்கு உதவி செய்ய வல்லவராயிருக்கிறார். தான் பாடுபட்டாவது உங்களுக்கு உதவி செய்ய வேண்டும், உலகிலுள்ள எல்லாரையும் பாடுகள், பாவங்கள், பாதாள வல்லமையிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவே அவர் கல்வாரி சிலுவையிலே பாடுபட்டார். இயேசு பட்டபாடுகளிலிருந்து நாம் கற்றுக்கொள்வது என்ன? நாம் அறிந்து கொள்வது என்ன? அவர் குமாரனாயிருந்தும் பட்டபாடுகளினாலே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டு, தாம் பூரணரான பின்பு தமக்குக் கீழ்ப்படிகிற யாவரும் நித்திய இரட்சிப்பை அடைவதற்குக் காரணராகி
(எபி 5:8,9) ஆப்பிரிக்காவின் காட்டுப்பகுதியிலே ஒரு நாள் ஊழியர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருக்கும் போது, ஆவியானவர், மகனே!, இங்கே நின்று இந்த குரங்களுக்கு சுவிசேஷத்தைச் சொல் என்றார். இவருக்கு தலைச்சுற்றியது. ஆண்டவரே, பாஷை தெரியாதவர்களுக்குக்கூட சுவிசேஷம் சொல்லி விடலாம். ஆனால் குரங்களுக்கு….. எப்படி நான்? என்று கேட்டார். நான் சொல்கிறேன் நீ இந்த குரங்குகளுக்கு சுவிசேஷம் சொல்ல நான் உன்னோடு இருக்கிறேன் என்றார் ஆண்டவர். ஏனென்றால் அங்கே 20, 25 குரங்குகள் பேன் பார்த்துக்கொண்டு, வாலைப்பிடித்துக் கொண்டும், மரங்களில் தாவிக்கொண்டும், சேட்டைகள் செய்து கொண்டிருந்தன. அவர் தயங்கித்தயங்கி இயேசுவின் பாடு மரணம் உயிர்த்தெழுதலை, சுவிசேஷத்தைச் சொன்னார். குரங்குகளெல்லாம் இன்னும் மும்முரமாக சேட்டையைச் செய்தன. முடிவில் ஒப்புக்கொடுக்கும்படி முன்னே அழைப்பு கொடு என்றார் ஆண்டவர்.
ஊழியரும் குரங்குகளை நோக்கி, இயேசுவை சொந்த இரட்சகராக, தெய்வமாக ஏற்றுக்கொண்டவர்கள் முன்னால் வாருங்கள் என்றார். ஒரு குரங்காகிலும் முன்னே வரவில்லை அவர்களுக்காக ஜெபம் பண்ணு என்றார் ஆண்டவர். ஆண்டவர் சொன்னபடியே ஜெபம் செய்துவிட்டு கண்களைத் திறந்தார். பெரிய ஆச்சரியம்! புதர்களில் ஒளிந்திருந்த 18 கருப்பு காட்டு மனிதர்கள் இவர் முன்னால் முழங்காலில் நின்றனர். அனைவரும் தண்ணீரில் மூழ்கி ஞானஸ்நானம் பெற்றுக் கொண்டனர். அந்த ஊழியர் ஆண்டவரின் வார்த்தைக்கு அப்படியே கீழ்ப்படிந்ததால் 18 பேர் இரட்சிக்கப்பட்டனர். ஆண்டவர் சொன்னதை அப்படியே கேட்டுக் கீழ்ப்படிந்த அந்த ஊழியரின் கீழ்ப்படிதல் 18 ஆத்துமாக்கள் (நீக்ரோக்கள்) ஆண்டவரின் பிள்ளையாக மாற காரணமாயிற்று, ஆதாமின் பாவம் மனுக்குலம் முழுவதையும் பிடித்துக்கொண்டபோது, அவர்களை விடுவிக்க பிதா, இயேசுவை உலகிற்கு அனுப்பும் திட்டத்தை இயேசுவிடம் சொன்னபோது, அவர் அப்படியே அதை ஏற்றுக்கொண்டு தன்னைத் தாழ்த்தி, பிதாவுக்கு கீழ்ப்படிய தன்னை ஒப்புக்கொடுத்தார். ஆண்டவர் இயேசுவும் தம்முடைய ஜனங்களை பரிசுத்தம் செய்யும்படியாக, பாடுகளிலிருந்து விடுவிக்கும்படியாக எருசலேம் நகருக்கு வெளியே பாடுபட்டார். (எபி 13:12). அந்தப் பாடுகள் வீண் போகவில்லை, அவர் பாதாளத்தை, மரணத்தை சாத்தானை ஜெயித்து, மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தார். அதோடு கோடி கோடியான ஆத்துமாக்களை இரட்சித்தார் இன்றும் இரட்சித்து காப்பாற்றுகிறார். இயேசு கீழ்ப்படியாமல் மறுத்திருந்தால் நம் நிலை என்னவாயிருக்கும்? ஒரே மனுஷனுடைய கீழ்ப்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்டது போல, ஒருவருடைய கீழ்ப்படிதலினாலே அநேகர் நீதிமான்களாக்கப்படுவார்கள்.(ரோம5:19). நீங்களும் இயேசுவைப்போல தேவனுக்கும், பெற்றோர்களுக்கும் பயந்து சின்ன, பெரிய காரியத்தில் கீழ்ப்படிந்து ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ளுங்கள்,.மற்றவர்களும் நீதிமான்களாய் மாற உதவுங்கள். கர்த்தரோ, அவரை நொறுக்கச் சித்தமாகி, அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார் (ஏசா53:10). “தேவன் தம்முடைய ஒரே பேறானகுமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ, அவன் கெட்டுப்போகாமல், நித்திய ஜீவனை அடையும்படிக்கு அவரைத் தந்தருளி இவ்வளவாய்உலகத்தில் அன்பு கூர்ந்தார்” (யோவா.3:16). தம்முடைய சாயலாய் உருவாக்கப்பட்ட மக்கள் பாவம், சாபம், வேதனை, கண்ணீரில் மூழ்கினதைப்பார்த்து, என் ஜனங்கள் அப்படியே அதில் அழிந்து போவார்களே, கெட்டுப் போய்விடுவார்களே என்ற அவரின் அன்பும், மனதுருக்கமும் தான், தன் குமாரன் இயேசுவை நமக்காகச் சிலுவையில் நொறுக்கும்படி செய்தது, அவர் நொறுங்கினாலும் பரவாயில்லை. அவர் மரணத்தை, பாடுகளை, சாத்தானை ùஐயித்து மீண்டும் உயிர்த்தெழுந்து ஜனங்களை காப்பாற்றி விடுவார் என்ற பிதாவின் எண்ணத்தின்படியே இயேசு தன் ஆத்துமாவிலே, ஆவியிலே, சரீரத்திலே மனுக்குலம் முழுவதின், உங்களுடைய, என்னுடைய பாடுகளையும் சுமந்து கொண்டார். தமக்காகவும், தம்மாலேயும், சகலத்தையும் உண்டாக்கினவர் அநேகம் பிள்ளைகளை மகிமையில் கொண்டு வந்து சேர்க்கையில் இவர்களுடைய இரட்சிப்பின் அதிபதியை உபத்திவங்களினாலே (பாடுகளாலே) பூரணப்படுத்துகிறது அவருக்கேற்றதாயிருந்தது. (எபி2:10, ஏசா13:10). பாடுகளிலும், வேதனைகளிலும் உலக சிற்றின்பத்திலும், மயக்கத்திலும் குற்ற உணர்ச்சிகளிலும் இருக்காமல் உங்கள் மேல் அன்புகூர்ந்து தன் குமாரனையே பாடுகளுக்கு உட்படுத்தினவரிடம் சீக்கிரம் வாருங்கள். சிலுவை முன் நின்று இயேசுவே, எனக்காக பாடுபட்டவரே, என் பாடுகளை ஏற்றுக்கொண்டவரே, என் பாடுகளை மாற்றும், என் பாவங்களை மன்னியும் என்று கேளுங்கள். அவரின் பிள்ளையாய் மாறுங்கள். உங்களைப் பார்த்து தேவனின் உள்ளம் சந்தோஷப்படும். தொடர்ந்து தேவனுக்காகவே வாழுங்கள். தேவ அன்பையும், கீழ்ப்படிதலையும் தந்து கர்த்தர் உங்களை வழிநடத்துவாராக. உங்கள் பாடுகளிலிருந்து விடுதலை தருவாராக.
Youth Special - Sis. Prema David