Inspiration

நீ மண்ணாயிருக்கிறாய்

நீ மண்ணாயிருக்கிறாய் ஆதி 3:19

ஆண்டவரும் உலக இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள். தேவனுடைய பெரிதான கிருபையினால் இந்த செய்தியின் மூலம் உங்களைச் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இன்றைக்கு நாம் வாழும் இந்த விஞ்ஞான உலகில் மனிதன் கொடி கட்டி பறக்கிறான். சந்திர மண்டலத்திற்கு போனேன், வான மண்டலத்திற்குப் போனேன் நான் செய்யாத காரியம் இல்லை, நாங்கள் கண்டுபிடிக்காத காரியம் இல்லை, அதைச் செய்வோம், இதைச் செய்வோம் என்கிறார்கள். நாங்கள் பூமியின் எல்லையைக் காட்டிலும் உயர்ந்தவர்கள். நாங்கள் அசூர வேகத்தில் வளருகிறவர்கள். எங்களை மேற்கொள்ள ஒருவனும் இல்லை என்று தலைக்கு மேல் ஆணவத்தில் கொடிகட்டிப் பறக்கிற இந்த உலகத்தில், கடந்த சில வருஷங்களாக உலகம் முழுவதும் ஏற்பட்ட கொடிய கொள்ளை நோய் (கொரோனா) முழுஉலகத்தையும் மனிதனுடைய அறிவுக்கும், அகந்தைக்கும் ஒரு பெரிய முற்றுப் புள்ளியை வைத்தது. குதிரைக்கு மூக்கனாங் கயிறு போட்டது போல தேவன், மனிதனுடைய அறிவுக்கும் அகந்தைக்கும் மூக்கனாங்கயிறு போட்டு அறிவுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தார். இன்றைக்கு இந்த செய்தியை வாசிக்கிற ஒவ்வொருவரும், மனிதன் எங்கிருந்து தோன்றினான், எங்கிருந்து வந்தான் என்பதை அறிந்து கொண்டால், சற்று ஆட்டம் பாட்டம் எல்லாம் குறைந்து தன்னைக் படைத்த, உண்டாக்கின தேவனுக்கு முன்பாக பயபக்தியாக இருப்பான் என்பதை நம்புகிறேன். 

தேவன் மனிதனைப் படைப்பதற்கு முன்பாக, சிருஷ்டிப்பதற்கு முன்பாக தூதர்கள் உலகமாயிருந்தது. அதிலே மூன்று முக்கியமான தூதர்கள் இருந்தார்கள். மிகாவேல், காபிரியேல், லூசிபர் என்று மூன்று பேர். லூசிபர் என்ற தூதனை, தன்னை ஆராதிக்கவும், தேவனை மகிமைப்படுத்தவும் தேவன் ஏற்படுத்தி வைத்திருந்தார். மற்ற இரண்டு தூதர்களும் தேவன் தங்களுக்கு கட்டளையிட்ட யாவற்றையும் சரியாய் செய்து கொண்டிருந்தார்கள். அதாவது தேவன் கொடுத்த வேலையை கவனமாய் நேர்த்தியாய் செய்து கொண்டிருந்தார்கள்.  ஆனால் லூசிபர் என்ற தூதன் மட்டும் அகந்தை, பெருமை அடைந்து தேவனுக்கு விரோதமாய் பெருமை கொண்டு தனக்கு என்று, தன்னைத் தொழ, ஆராதிக்க ஒரு கூட்டத்தை, தூதர்களை தன் பக்கமாய் திருப்பினான் என்று வேதம் சொல்லுகிறது. எசேக்கியேல் 28-ஆம் அதிகாரத்தில் 14 முதல் 17 வரை நீ, காப்பாற்றுகிறதற்காக அபிஷேகம் பண்ணுப்பட்ட கேரூப். தேவனுடைய பரிசுத்த பர்வதத்திலó உன்னை வைத்தேன். அக்கினிமயமான கற்களின் நடுவே உலாவினாய், நீ, சிருஷ்டிக்கப்பட்ட நாள்துவக்கி உன்னிலó அநியாயம் கண்டு பிடிக்கப்பட்டது மட்டும், உன் வழிகளில் குறையற்றிருந்தாய். உன் வியாபாரத்தின் மிகுதியினால், உன் கொடுமை அதிகரித்தது. நீ, பாவஞ் செய்தாய், ஆகையால் நான் உன்னைத் தேவனுடைய பர்வதத்திலிருந்து ஆகாதவனென்று தள்ளி, காப்பாற்றுகிற கேரூபாய் இருந்த உன்னை அக்கினிமயமான கற்களின் நடுவே இராதபடிக்கு அழித்துப் போடுவேன் என்றார்.  வான மண்டலத்தில் இருந்த அந்த கேரூப் தூதனை  தேவன் பூமியின் மண்ணிலே தள்ளிவிட்டார். அது தேவனுடைய தண்டனை, சாபமாக இருந்தது.  

இயேசு சொன்னார் லூக்கா 10:18-ல் சாத்தான் மின்னலைப் போல வானத்திலிருந்து விழுகிறதைக் கண்டேன் என்றார். அவன் சபிக்கப்பட்டு கீழே விழுந்து அக்கினி கடலிலே, மண்ணிலே தள்ளப்பட்டான். அந்த மண் அவன் நிமித்தம் சபிக்கப்பட்டிருந்தது. 2 பேதுரு 2:4-ல் பாவஞ்செய்த தூதர்களைத் தேவன் தப்பவிடாமல், அந்தகாரச் சங்கிலிகளினாலே கட்டி நரகத்திலே தள்ளி நியாயத்தீர்ப்புக்கு வைக்கப்பட்டவர்களாக ஒப்புக்கொடுத்தார் என்று சொல்லப்பட்டுள்ளது. இப்படி லூசிபர் தூதன் பாவம் செய்து தள்ளப்பட்ட போது, அவன் இருந்த இடத்தில் அவன் காரியத்தை செய்ய, தேவனை துதிக்க, ஆராதிக்க  அந்த வாய்ப்பை தேவன் மனிதர்களுக்குக் கொடுத்தார். ஏசாயா 43:21-ல் இந்த ஜனத்தை எனக்கென்று ஏற்படுத்தினேன், இவர்கள் என் துதியைச் சொல்லி வருவார்கள் என்றார். இப்படி துதிக்கவும், தேவனைக் கனம் பண்ணவும் களிமண்ணினாலே பிசைந்த மண்ணினாலே  மனிதனை உண்டாக்கி, அப்படி பிசைந்த களிமண்ணிலே தம்முடைய காற்றை ஊதினார். உயிர் மூச்சை அவன் மேல் ஊதினார். அப்பொழுது மனிதன் உயிருள்ளவனாக மாறினான். ஆதி 2:7-சொல்லுகிறது தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான். நாம் மண்ணிலிருந்து வந்தவர்கள், மண்ணுக்கே திரும்ப வேண்டும் என்பது தேவனுடைய நியமம். 

இந்த மண்ணான சரீரத்திலே தேவனுடைய சுவாசத்தை, உயிர் மூச்சை நாம் பெற்றிருக்கிறோம். அந்த மூச்சை, அந்த சுவாசத்தை தேவன் திரும்ப வாங்கிக் கொண்டால் அவைகள் மண்ணுக்கு திரும்பும். சங் 104:29-ல் நீர், உமது முகத்தை மறைக்க, திகைக்கும், நீர், அவைகளின் சுவாசத்தை வாங்கிக்கொள்ள, அவைகள் மாண்டு, மண்ணுக்குத் திரும்பும் என்று சொல்லப்பட்டுள்ளது. ஆகவே இந்த செய்தியை வாசித்துக் கொண்டிருக்கிற என் அன்பு சகோதர, சகோதரிகளே என்னதாள் நாம் படித்திருந்தாலும், வசதி வாய்ப்புகள் இருந்தாலும், விஞ்ஞானதóதில் வாழ்ந்திருந்தாலும், கை நிறைய சம்பாதித்தாலும் வீண் பெருமையாய், அகந்தையாய் மற்றவர்களைப் பறக்கணித்து, அற்பமாய்த் தள்ளிவிட்டு, நான் மேலானவன் என்னைப் போல யார்? உண்டு என்று சொல்லாமல், நாம் மண்ணிலிருந்து வந்தவர்கள், மண்ணுக்கே போகிறவர்கள் என்பதை மறந்து போகாமல் தேவனுக்குப் பயந்து அவரை தொழுது, அவருடைய சாயலான மனிதர்களை நேசிக்கவும், மதிக்கவும், அன்பு செலுத்தவும், உதவி செய்யவும் வாழப் பழகிக் கொள்ளுவோம். சங் 103:14 சொல்லுகிறது நம்முடைய உருவம் இன்னதென்று அவர் அறிவார், நாம் மண்ணென்று நினைவு கூருகிறார்.  நம்முடைய ஆட்டம், பாட்டம் எல்லாம் மனிதர்களிடத்தில் தான் எடுபடும். இவர் பெரியவர், உயர்ந்தவர், சிறந்தவர், சூப்பரானவர் என்று. ஆனால் தேவனிடத்தில் எடுபடாது. ஏனென்றால் அவர் நம்மை சிருஷ்டித்தவர். களிமண்ணினாலே பிசைந்தவர். அவருடைய சுவாசத்தை, உயிர் மூச்சை நமக்கு இரவலாக கொடுத்திருக்கிறார். 

நாம் மண்ணென்று அவர் நினைவு கூருகிறார். அவருக்கு முன்பாக நாம் அடக்க ஒடுக்கத்தோடு, அவரைப் பணிந்து, அவர் நம்மை பூமியில் ஏற்படுத்திய நோக்கத்தை உணர்ந்து, அறிந்து அவரை பயத்துடனே சேவிக்கக்கடவோம். இதை யோபு என்ற பக்தர் கண்டுபிடித்தார். யோபு 10:9-ல் களிமண்போல என்னை உருவாக்கினீர் என்பதையும், என்னைத் திரும்பத் தூளாகப் போகப் பண்ணுவீர் என்பதையும் நினைத்தருளும் என்று, தேவனுக்கு முன்பாக தன்னைத் தாழ்த்தி  பணிந்து கொண்டு, அத்தனை பாடுகள், உபத்திரவங்களிலிருந்தும் வெளியே வந்தார். மட்டுமல்ல யோபு 28:2-ல்  இரும்பு மண்ணிலிருந்து எடுக்கப்படுகிறது போல, செம்பு கற்களிலிருந்து உருக்கி எடுக்கப்படும். இந்த மண்ணுக்குள் தான் செம்பு இருக்கிறது, பொன் இருக்கிறது, விலையேறப் பெற்ற பொக்கிஷம் இருக்கிறது. பொட்டாசியம், இரும்பு, இன்னும் நிறைய தாதுப் பொருட்கள் எல்லாம் மண்ணிலிருந்து தான் வருகிறது. ஆகவே தான் இதை உணர்ந்து அப்போஸ்தலனாகிய பவுல் சொல்லுகிறார் 2 கொரி 4:7-ல் இந்த மகத்துவமுள்ள வல்லமை எங்களால் உண்டாயிராமல், தேவனால் உண்டாயிருக்கிறதென்று விளங்கும்படி, இந்தப் பொக்கிஷத்தை மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம் என்றார். நாம் மண்ணான சரீரத்தில் தேவனுடைய இரக்கத்தை, பாவ மன்னிப்பை பெற்றபடியால் விலையேறப்பெற்ற ஞானம், கிருபை, தேவனுடைய தயவு, இரக்கம், அபிஷேகம், ஊழியம் இவைகளைப் பெற்றிருக்கிறோம். 

நீங்களó உயர்ந்தவர்கள், படித்தவர்கள், பரிசுத்தவான்கள், பக்தியுள்ளவர்கள், சிறந்தவர்கள் என்பதற்காக அல்ல, இது உங்களால் உண்டானதும் அல்ல தேவனுடைய ஈவு, தயவு. ஆகவே இந்த மண்பாண்டங்களில் தேவனுடைய பொக்கிஷங்களை பெற்றிருக்கிறோம். 2 கொரி 3:5-ல் எங்களால் ஏதாகிலும் ஆகும் என்பது போல ஒன்றை யோசிக்கிறதற்கு, நாங்கள் எங்களாலே தகுதியானவர்கள் அல்ல,  எங்களுடைய தகுதி தேவனால் உண்டாயிருக்கிறது என்றார். ஆகவே தான் தேவன் மனிதனைப் பார்த்து மனிதனே, நீ, மண்ணாக இருக்கிறாய், மண்ணுக்கே திரும்புவாய் என்றார். போகட்டும்ó இந்த மண்ணிலிருந்து நாம் என்ன செய்வது?, எப்படி தேவனைப் பின்பற்றுவது?,. பரலோகத்திற்குப் போவது? இந்த மண்ணினால் என்ன நன்மை என்பதைப் பார்ப்போம்.

நாம் விதைப்பதற்கு மண் தேவை.

சில விதைகள் அதிக மண்ணில்லாத கற்பாறை நிலத்தில் விழுந்தது. அதற்கு ஆழமான மண்ணில்லாததினாலே சீக்கிரத்தில் முளைத்தது. வெயில் ஏறினபோதோ, தீய்ந்து போய், வேரில்லாமையால் உலர்ந்துபோயிற்று. மாற்கு 4:5,6. தேவனாகிய கர்த்தர் களிமண்ணினாலே மனிதனை சிருஷ்டித்து, அவனை ஏதேன் தோட்டத்தில் வைத்தார். தன்னோடு இருக்கவும், தன்னுடைய ஜனம் களிப்பாய் இருக்கவும் சிங்காரத் தோட்டத்தில் வைத்திருந்தார். ஆனால் பிசாசு கோப வெறி கொண்டு தான் பூமியிலே தள்ளப்பட்டதையும், தன்னுடைய மேன்மையிலே மனிதன் இருப்பதையும் கண்ட அவன் எரிச்சலடைந்து, எப்படியாவது தேவனிடத்திலிருந்து மனிதனைப் பிரிக்க வேண்டும். அவர்கள் தேவனை விட்டுப் பிரிகிற, விலகுகிற வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்று பார்த்துக் கொண்டே இருந்தான். அதினாலே ஏவாளோடே பேசி இந்த பழத்தை புசிக்கும் நாளில் நீங்கள் தேவர்களைப் போல இருப்பீர்கள் என்று ஏமாற்றியது. ஆதி 3:5-ல் சொல்லப்பட்டபடி வஞ்சித்து, ஏமாற்றி தேவ கோபத்திற்குள்ளாக்கி விட்டான். அதன் விளைவாக அவர்கள் தேவனுடைய மகிமையை இழந்து, தேவனுடைய வல்லமை, அதிகாரத்தை இழந்து,  தேவ சமூகத்திலிருந்து துரத்தப்பட்டார்கள். தேவனுக்கு அருகில் இருந்தவர்கள், இப்பொழுது தூரமானார்கள், தேவ சமூகத்தை இழந்தார்கள் என்று வேதம் சொல்லுகிறது. 

அப்பொழுது தான் ஆண்டவர் அவர்களுக்கு தண்டனை கொடுத்து, பிசாசைப் போல் பூமியில் தள்ளாமல் ஆதி 3:23-ல் நீ, எந்த மண்ணிலிருந்து எடுக்கப்பட்டாயே அதே, மண்ணுக்குத் திரும்பிப் போ, அது மட்டுமல்ல, அவன் எடுக்கப்பட்ட மண்ணைப் பண்படுத்தவும், சீர்படுத்தவும், செப்பணிடவும் தேவனாகிய கர்த்தர் அவனை ஏதேன் தோட்டத்திலிருந்து அனுப்பிவிட்டார். பிசாசைப் போல மனிதனை சபித்து, பாதாளத்திற்குள் தள்ளாமல் அந்த தோட்டத்தை பண்படுத்தவும், சரி செய்யவும், கொத்தி எருப்போடவும், தண்ணீர் பாய்ச்சவும், நீ போய் பரலோகத்திற்கு வர, பாடுபட்டு மரித்து, என் கிரியைகளை செய்து, அடிபட்டு திருந்தி, என்னுடைய பரலோக மேன்மையை தெரிந்து கொண்டு வா. அப்பொழுது என் அருமை,  என் மேன்மை உனக்கு தெரியவும். இல்லை, புரியவும் இல்லை என்று ஏதேன் தோட்டத்திலிருந்து, தேவ சமூகத்திலிருந்து பூமிக்கு அனுப்பிவிட்டார். அதன் பிறகு தான் அந்த தோட்டத்தை, பரலோகத்தை, மேன்மையான இடத்தை சுடரெளி ஏந்திய கேரூபீன்களை வைத்து பாதுகாத்தார். ஒருவரும் போக முடியாதபடி ஜீவ விருட்சத்திற்கு போகும் வழியை அடைத்தார். 

அந்த வழியைத் திறக்கவும், நாம் மீண்டும் தேவனோடு  இணைக்கப்படவும் தான் இயேசு இந்த பூமிக்கு இறங்கி வந்து நானே வழி, பரலோகம் போக என்னையன்றி வேறு வழியில்லை. நானே சத்தியம், நானே ஜீவன் என்று சொல்லி நமக்காக சிலுவை பாடுகளை  ஏற்றுக் கொண்டு கெத்சமனே தோட்டத்தில் பலத்த சத்தத்தோடு ஜெபித்தார். யோபு 16:18-ல் பூமியே, என் இரத்தத்தை மூடிப்போடாதே, என் அலறுதலுக்கு மறைவிடம் உண்டாகாதிருப்பதாக என்று கதறினார்.  அப்பொழுது அவருடைய வியர்வை இரத்தத் துளிகளாக பூமியிலே, மண்ணிலே விழுந்தது.  லூக்கா 22:44-ல் அவர் மிகவும் வõயாகுலப்பட்டு, அதிக ஊக்கத்தோடே ஜெபம் பண்ணினார், அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந்தது. அதுவரை பூமி உன் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும், அது உனக்கு முள்ளுகளையும், குருக்கையும் முளைப்பிக்கும் என்ற அந்த சாபத்தை மாற்றி, இனி விதைப்பும், அறுப்பும் ஒழிந்து போவதில்லை என்று நம்முடைய நிலத்தை, நம்முடைய கல்லான இருதயத்தை, நம்முடைய குடும்பத்தை பண்படுத்த ஆரம்பித்தார். இன்றைக்கு அவருடைய வித்து, கெத்சமனே தோட்டத்தில் அவர் சிந்திய பலன், அந்த மண்ணின் ஆசீர்வாதம், நம்மேல் இறங்கி இருக்கிறது. நம்முடைய உள்ளத்தை, தரிசு நிலத்தை, முட்பூண்டுகளை மாற்றி இருக்கிறது. எபிரே 6:7,8-ல் எப்படியெனில் தன்மேல் அடிக்கடி பெய்கிற மழையைக் குடித்து, தன்னிடத்தில் பயிரிடுகிறவர்களுக்கேற்ற பயிரை முளைப்பிக்கும் நிலமானது தேவனால் ஆசீர்வாதம் பெறும். முள்செடிகளையும், முள்பூண்டுகளையும் முளைப்பிக்கிற நிலமோ தகாததாயும், சபிக்கப்படுகிறதற்கேற்றதாயுமிருக்கிறது. சுட்டெரிக்கப்படுவதே அதின் முடிவு என்று சொல்லப்பட்டுள்ளது. 

தரிசு நிலமாக, தண்ணீர் நிலமாக இருந்த மனிதனுடைய இருதயத்தை மண் உள்ளதாக, விதை விழுந்தால் முளைக்கிறதற்கான விளைச்சல் நிலமாக மாற்றினார். எரேமியா 4:3, ஓசியா 10:12-ல் நீங்கள் நீதிக்கெள்று விதை விதையுங்கள், தயவுக்கொத்ததாய் அறுப்பு அறுங்கள், உங்கள் தரிசு நிலத்தைப் பண்படுத்துங்கள். கர்த்தர் வந்து உங்கள் மேல் நீதியை வருஷிக்கப்பண்ணுமட்டும், அவரைத் தேடக் காலமாயிருக்கிறது என்றார். இன்றைக்கு தரிசு நிலத்தை, முள்ளுள்ள இந்த பாறை இடத்தை, அவர் சிந்திய இரத்தத்தினால் மண் உள்ள, உரமுள்ள, ஆரோக்கியமுள்ள விளைச்சளைக் கொடுக்கவும், சில விதைகள் மண்ணில் விழுந்து, நல்ல நிலத்தில் விழுந்து, ஒன்று  ழுப்பதும், அறுபதும், நூறு மடங்காகவும் பலன் கொடுத்தது போல தேவன் மாற்றுவார்,  இந்த தோட்டத்தைப் பண்படுத்தவும், பூமியிலே தங்களை சரிசெய்து கொண்டு மனம் திரும்பி, இரட்சிப்பை அடையவும், அதே மண்ணைப் பண்படுத்தவும், விளைச்சல் கொடுக்வும் தேவனுக்கு மகிமையாக வாழ்ந்து பரலோகம் போகவும் தேவன் இந்த பூமியிலே நம்மை அனுப்பினார். 

ஆகவே இந்த செய்தியை வாசிக்கின்ற என் அன்பு சகோதர, சகோதரிகளே  மண்ணு தானே இனி எனக்கு என்ன இருக்கு என்று ஏனோ தானோ என்று வாழ்ந்து விடாமல், அவருக்கு மகிமையாக ஜீவிக்காமல், நீ, மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்கே திரும்புவாய் என்ற வார்த்தையின்படி இந்த மண்ணிலே, இந்த பூமியிலே தேவனுக்காக பொன்னாக வாழ்ந்து, தங்கமாக வாழ்ந்து, விலையேறப்பெற்ற பாத்திரமாக, கனத்திற்குரிய பாத்திரமாக ஜீவித்து தேவன் பயன்படுத்திய, சரி செய்த மண்ணாக, பயன்படுத்தும் மண்ணாக மாறுங்கள். இதற்குத்தான் நீ மண்ணாய் இருக்கிறாய், மண்ணுக்கே திரும்புவாய் என்றார். நம்மை இந்த பூமியிலே விலையேறப்பெற்ற பாத்திரங்களாக மாற்றியிருக்கிறார். வேதம் சொல்லுகிறது 2 தீமோத் 2:20-ல் ஒரு பெரிய வீட்டிலே பொன்னும், வெள்ளியுமான பாத்திரங்களுமல்லாமல், மரமும், மண்ணுமான பாத்திரங்களுமுண்டு, அவைகளில் சில கனத்திற்கும், சில கனவீனத்திற்குமானவைகள் என்றார். நாம் கனவீனமாய் போகாதபடிக்கு கனத்திற்குரிய எஜமானுக்கு உபயோகமான பாத்திரமாய் மாற வேண்டும். நம்மை தாழ்த்தி ஏசாயா 64:8 சொலóலுகிறது போல  இப்பொழுதும் கர்த்தாவே, நீர் எங்களுடைய பிதா, நாங்கள் களிமண். நீர் எங்களை உருவாக்குகிறவர் என்ற வார்த்தையின்படி  இந்த களிமண்ணாகிய நம்மை அவருக்குப் பிரயோஜனமாக மாற்றி மகிமையடைவாராக. அதற்குத்தான் இந்த மண்ணை இந்த பூமியிலே உயிரோடே வைத்திருக்கிறார்.

மண்ணினாலே பலிபீடம்

மண்ணினாலே பலிபீடத்தை எனக்கு உண்டாக்கி, அதின் மேல் உன் ஆடுகளையும், உன் மாடுகளையும் சர்வாங்க தகன பலியாகவும், சமாதான பலியாகவும் செலுத்துவாயாக. நான் என் நாமத்தைப் பிரஸ்தாப்படுத்தும் எந்த ஸ்தானத்திலும் உன்னிடத்தில் வந்து உன்னை ஆசீர்வதிப்பேன் என்றார். யாத் 20:24. இந்த மண்ணினாலே சிருஷ்டிக்கப்பட்ட, உண்டாக்கப்பட்ட  இந்த மனிதன், தேவனுக்கு மண்ணினாலே ஒரு பலிபீடத்தை கட்ட வேண்டும். பொன்னினாலோ, தங்கத்தினாலோ, சில்வரினாலோ மரத்தினாலோ, சித்திர வேலையினாலோ கட்டாமல், கற்கள் பளிங்குகளினால் கட்டாமல் மண்ணினாலே அதாவது உடைகிறதாக, நொருங்குகிறதாக இருக்க வேண்டும் என்றார். அப்படி என்றால் நம்முடைய உடல் தான், சரீரம் தான் மண். இந்த மண்ணிலிருந்து, உடைத்து உருவாக்கப்பட்ட குணத்திலிருந்து, சுபாவத்திலிருந்து  தேவனுக்கு ஒரு பலிபீடம் கட்ட வேண்டும். அது பணத்தினாலோ, பளிங்குனாலோ அல்ல நாம் இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்டு, இரட்சிக்கப்பட்டு அதினால் உண்டாகிற மாற்றம், சுபாவம்,  குணங்கள், தேவனுடைய கிரியைகளால் அவருக்கு பலிபீடம் கட்ட வேண்டும். அதை கட்டுகிறவர் தேவன். 

இûத்தான் ரோமர் 9:21-ல், எரே 18:4,6 வசனத்தில் தேவன் சொல்லுகிறார். மிதியிட்ட ஒரே களிமண்ணினாலே குயவன் ஒரு பாத்திரத்தைக் கனமான காரியத்துக்கும், ஒன்றை கனவீனமான காரியத்துக்கும் பண்ணிகிறதற்கு மண்ணின் மேவ் அவருக்கு அதிகாரம் இல்லையோ? என்று தேவன் கேட்கிறார். நாம் மிதிக்கப்பட்ட களிமண்ணாக, தேவன் எது சொன்னாலும் செய்கிற சுபாவம் நிறைந்தவர்களாக வாழ்கிற, வனைகிற பாத்திரமாக, அவர் திருப்புகிற பக்கமெல்லாம் செல்லுகிற பாத்திரமாக இருக்க வேண்டும். இதற்காகத்தான் மண்ணினாலே ஒரு பலிபீடத்தை கட்டுங்கள் என்றார். இந்த மண்ணாகிய மனிதனுடைய இருதயத்திலிருந்து வருகிற துதி ஸ்தோத்திர ஜெபங்கள் தான் விலையேறப்பெற்ற பலிகள். இûத்தான் சங் 51:17-ல்  தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவடிதான், தேவனே, நொறுங்குண்டதும், நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர் என்று தாவீது ராஜா இருதயம் நொறுங்கி, உடைக்கப்பட்டு, நொறுக்கப்பட்டு தேவனால் வனைக்கப்பட்டு, சமாதானப் பலிகளை, ஒப்புரவாகுதலின் பலிகளை, மன்னிப்பின் பலியை, இரக்கத்தின் பலியை செலுத்துகிறார். இந்த மண்ணான மனிதனுடைய ஆத்துமாவிலே தேவனுடைய சுபாவசத்தினலே உண்டாகிற பலி தான் உயிருள்ள பலி. தேவன் ஏற்றுக்கொள்ளும்படி பலி செலுத்தத்தான் நாம் பூமியில் ஏற்படுத்தப்பட்டிருக்கிறோம். 

ஆகவே தான் அப்போஸ்தலனாகிய பவுல் ரோமர் 12:1-ல் சொல்லுகிறார் நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும், தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக் கொடுக்க வேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக் கொள்கிறேன் என்றார். நம்முடைய சரீரத்திலிருந்து, மண்ணிலிருந்து உண்டாகிற பலியே தேவனுக்கு ஏற்புடைய பலி. இதைத்தான் தேவன் நம்மிடத்தில் எதிர்பார்க்கிறார். வெறும் சிடி, டிவி-யில் பாடல்களைக் கேட்டால் போதாது. உன் வாயைத் திறந்து தேவனைத் துதிக்க, ஸ்தோத்தரிக்க வேண்டும். உள்ளத்தின் ஆழத்திலிருந்து வருகிற ஜெபமாக இருக்க வேண்டும். இன்றைக்கு இதை செய்ய முடியாமல், பலிபீடம் உடைக்கப்பட்டு, நொறுக்கப்பட்டு ஜனங்கள் தேவனை மறந்து, இருமனமுள்ளவர்களாக இருக்கிறார்கள். இப்படிப்பட்ட தேசத்தையும், ஜனங்களையும் தேவன் பக்கம் திருப்பத்தான், எலியா என்ற தேவ மனிதன் வானத்திலிருந்து அக்கினி இறங்கி வரப்பண்ணினான். அக்கினியினாலே உத்தரவு அருளும் தெய்வமே தெய்வம் என்றார். வணங்கா கழுத்துள்ளவர்கள், முரட்டுத்தனமானவர்கள், தேவனை மறந்தவர்கள், பாகாலைப் பின்பற்றினவர்கள் எல்லாரையும் கூடி வரச்செய்து உடைந்த பலிபீடத்தை, மறந்த பலிபீடத்தை சரி பண்ணினான். 1 இராஜா 18:30-33 அப்பொழுது எலியா சகல ஜனங்களையும் நோக்கி என் கிட்டே வாருங்கள் என்றான். சகல ஜனங்களும் அவன் கிட்டே வந்தபோது தகர்க்கப்பட்ட கர்த்தருடைய பலிபீடத்தை அவன் செப்பனிட்டு, உனக்கு இஸ்ரவேல்  என்னும் பெயர் இருப்பதாக என்று சொல்லி, கர்த்தருடைய வார்த்தையைப்பெற்ற யாக்கோபுடைய குமாரரால் உண்டான கோத்திரங்களுடைய இலக்கத்தின்படியே பன்னிரண்டு கற்களை எடுத்து, அந்தக் கற்களாலே கர்த்தருடைய நாமத்திற்கென்று ஒரு பலிபீடத்தைக் கட்டி, சுற்றிலும் தானியம் அளக்கிற இரண்டுபடி விதை விதைக்கத்தக்க இடமான ஒரு வாய்க்காலை உண்டாக்கினான்.

உடைந்த, இஸ்ரவேலர் நொருக்கிப் போட்ட, மறந்த பலிபீடத்தை சரி செய்து, மனம் திரும்பி பொல்லாத துர்குணத்தை விட்டு மக்களை தேவன் பக்கமாக திரும்பினான். இது தான் மண்ணினால் உண்டாக்கப்பட்ட பலிபீடம். இந்த பலிபீடம் சரி செய்யப்பட்ட போது தேவன் இறங்கி அக்கினியை அனுப்பி ஜனங்களின் மேல் சுடடெரிப்பின் ஆவியை ஊற்றினார். உடைந்த பலிபீடங்களை சரிசெய்து, சர்வாங்க தகன பலிகளையும், சமாதான பலிகளையும் செலுத்தி  ஜனங்களை தேவனோடு இணைத்தான். மண்ணைப் பொன்னாக மாற்றினான். இந்த செய்தியை வாசிக்கிற என் அன்பு சகோதர, சகோதரிகளே இன்றைக்கு இந்த பூமியிலே உயிரோடிருக்கும் நாம் எல்லாம் கர்த்தரை நேசித்து அவரை பின்பற்றி அவருக்கு உகந்த பாத்திரமாக மாறி, திரும்ப அந்த மண்ணுக்குப் போவதற்குள் கர்த்தருக்காக என்ன என்ன செய்ய முடியுமோ அதை எல்லாம் செய்யுங்கள். அப்பொழுது தேவன் உங்கள் மேல் பிரியமாயிருப்பார். உங்கள் பலிகளை ஏற்றுக் கொள்வார்.  இந்த மண்ணுக்குள் ஒரு பொக்கிஷத்தை வைத்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. கிருபையானது உங்கள் அனைவரோடும் இருப்பதாக. ஆமென்.