Inspiration
நீங்களும் தேவனுடைய பொக்கிஷமாயிருக்கிறீர்கள்
எழும்பிப் பிரகாசி, உன் ஒளிவந்தது, கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது.இதோ, இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடும், ஆனாலும் உன்மேல் கர்த்தர் உதிப்பார், அவருடைய மகிமை உன்மேல் காணப்படும். ஏசாயா 60:1,2.
ஆண்டவரும் உலக இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள். தேவனுடைய வார்த்தையின் மூலமாய் உங்களைச் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
இன்றைக்கு உலகம் முழுவதும் உள்ள ஜனங்களை காரிருள் மூடிக்கொண்டிருக்கிறது, பூமியை அந்தகாரம் சூழóந்து கொண்டிருக்கிறது. எங்கு பார்த்தாலும் இருள்சமாதானம் இல்லை,வேலையில் பிரச்சனை, தொழிலில் பிரச்சனை, வியாதி,பெலவீனம். மருத்துவர் சொல்லுகிறார் வியாதி ரொம்ப முத்திவிட்டது, எலும்பெல்லாம் அரித்து விட்டது, அந்த உறுப்பை எடுக்க வேண்டும் என்று சொல்லி நம்மை பயமுறுத்துகிறார்கள்.மருத்துவர்களால் ஒரு பக்கம் வேதனை, வியாதியினால் ஒரு பக்கம் வேதனை, எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்று தெரியாது. திடீர் திடீரென்று மாற்றங்கள் நம் தேசத்தில் நடந்து கொண்டிருக்கிறது. நிலச்சரிவுகள், புயல்கள்,வெள்ளங்கள், தொற்று நோய்கள், உயிர்இழப்புகள், பொருட்சேதங்கள் ஏற்படுகிறது. காரிருள் ஜனங்களை மூடிக்கொண்டு இருக்கிறது. உண்ண உணவு, குடிக்க தண்ணீர் இல்லை, எங்கு பார்த்தாலும் யுத்தங்களும், யுத்தங்களின் செய்திகளும் கேள்விப்படுகிறோம். அப்பாவி ஜனங்கள் பாதிக்கப்படுகிறார்கள், காரிருள் மூடி அவர்களை வேதனைப்படுத்துகிறது.
கடந்த சில வருடங்களுக்கு முன்பாக இலங்கையில் பயங்கரமான வறுமையான சூழ்நிலை உண்டானது. உணவு பொருள்களின் விலை அதிகமானது, ஜனங்கள் மிகவும் பாதிக்கப்பட்டார்கள். வாழ வழி தெரியாமல் திகைத்தார்கள். சில மாதங்களுக்கு முன்பாக வங்காள தேசத்திலும் இருளால் அந்த தேச மூடப்பட்டதனால் அங்கும் ஒரே புரட்சி, போராட்டம் ஏற்பட்டது. இப்படியாக இன்னும் பல தேசங்களிலும் இந்த மாதிரியான நிலைமைகள் நீடித்துக் கொண்டிருக்கிறது. தேசங்கள் காரிருளுக்குள் கடந்து சென்று கொண்டிருக்கிறது. உலகத்தின் பல பகுதிகளிலும் இப்படிப்பட்டதான வேதனையான சம்பவங்களும், வேதனையான காரியங்களும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. என் ஆட்சி நிலைக்கும், என் தொழில் நிலைக்கும், என் குடும்பம் நிலைக்கும், என் பிள்ளைகள் நிலைப்பார்கள் என்று கற்பனை உலகத்தில் ஓடிக் கொண்டிருக்கிற மனிதனுக்கு எப்பொழுது சடுதியாக என்ன சம்பவிக்கும் என்றும்,என்ன ஆபத்து, அழிவு வரும் என்றும் தெரியாது. அப்படிப்பட்ட உலகத்திலே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எழும்பிப் பிரகாசி, உன் ஒளிவந்தது, கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது.இதோ, இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடும், ஆனாலும் உன்மேல் கர்த்தர் உதிப்பார், அவருடைய மகிமை உன்மேல் காணப்படும். ஏசாயா 60:1,2. இருள் பூமியையும், காரிருள் ஜனங்களை மூடி கொண்டிருக்கிறது. ஆனால் ஒரு சின்ன கூட்டத்திற்கு கர்த்தர் சொல்லுகிறார் எழும்பி பிரகாசி, உன் ஒளி வந்தது,உன் வேளை வந்து விட்டது என்று. கர்த்தரை அறியாத, கர்த்தரை தேடாத, கர்த்தரை நம்பாத மனிதனுக்குத் தான் காரிருள் ஜனங்களை மூடும் என்று வேதம் சொல்லுகிறது. தேவனுடைய மகிமையான ஒளி, வெளிச்சம் உங்கள் மேல் வரும் போது, உங்கள் வாழ்க்கையில் நடக்கும் மாற்றங்களை இப்பொழுது பார்ப்போம்.
1. இருளான வாழ்க்கை வெளிச்சமானது
இயேசு என்ற நாமத்தை சொல்லி யாராவது ஜெபித்தால், பிரசங்கம் செய்தால்அவர்களைதுன்பப்படுத்தவும், கொல்லவும் வேண்டும் என்று சொல்லி, அரசாங்க கட்டளையை வாங்கிக் கொண்டு நண்பகலிலே குதிரையிலே தமஸ்கு பட்டணத்திற்குசவுல் பிரயாணம் பண்ணினான். அவனோடு கூட 72 பேர் சென்றார்கள் என்று ஒரு சரித்திர புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ளது. அப்படி செல்லும்போது நண்பகல் வேளையிலே சூரியனை காட்டிலும் பிரகாசமான ஒரு ஒளி வானத்திலிருந்து அவனை சுற்றி பிரகாசித்தது. இதுவரை அவன் பார்த்திராத ஒளி அது.இதுவரை அவன் அடிதடியிலே வாழ்ந்த ஒரு மனிதன், சண்டை போட்டவன், ஆணவமாய் வாழ்ந்தவன், என்னை அசைத்துப் பார் என்று சவால் விடுகிறவன். இன்றைக்கும் கூட இப்படிப்பட்ட மனிதர்கள் நம் நடுவில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
இயேசுவின் நாமத்தை சொல்லி தொழுது கொள்ளுகிற எல்லாரையும் துன்பப்படுத்தி, அவர்களை இனி இயேசுவின் நாமத்தை சொல்லாதவாறு கிறிஸ்தவத்தை முடக்கி விட வேண்டும் என்று சென்றவன். கிறிஸ்தவத்தை, கிறிஸ்தவர்களை ஒருநாளும் ஒருவரும் முடக்கி விட முடியாது. அப்படி முடக்கம் முயன்றால் தேவன் யார் என்று அவர்களுக்கு தெரிய வரும். சவுல் தன்னைச் சுற்றி பிரகாசித்த ஒளியின் மத்தியிலிருந்து வந்த ஒரு சத்தத்தை கேட்டான். சவுலே, சவுலே நீ, என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய் என்று. அதற்கு அவன் ஆண்டவரே நீர் யார் என்றான்,அதற்கு கர்த்தர், நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே, முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாம் என்றார். தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை என்று வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது. நான் அவரை கண்டபோது செத்தவனைப் போல விழுந்தேன் என்று யோவான் சொல்லுகிறார்.அவருடைய வார்த்தைகளின் சத்தத்தைக் கேட்டேன், அவருடைய வார்த்தைகளின் சத்தத்தை நான் கேட்கும்போது, நான் முகங்கவிழ்ந்து, நித்திரை போகிறவனாய்த் தரையிலே முகங்குப்புற விழுந்துகிடந்தேன். என் உடம்பெல்லாம் நடுங்கினது என்று தானியேல் சொல்லுகிறான். நாம் ஆராதிக்கின்ற தேவன் வல்லமையும் பராக்கிரமமும் நிறைந்தவர்.
தேவனுடைய ஒளியின் பிரகாசத்தினால் நிற்க முடியாமல் கீழே விழுந்த அவன், அப்பொழுது கூட அவனுடைய ஆணவம் குறையவில்லை. நீர் யார் என்று சொல்லி கேட்கிறான். சிலருக்கு ஒரு பெரிய டிபார்ட்மெண்ட்ல வேலை செய்தால் தலைகனம் இருக்கும், நான் எங்கு வேலை செய்றேன் தெரியுமா என்பார்கள். இதே போல தான் சவுல் கீழே விழுந்தும் நான் யார் தெரியுமா என்றும், நீர் யார் என்று அவரை கேள்வி கேட்கிறான்.அந்த ஒளியின் பிரகாசத்தினால் கண்களை இழந்தான். தேவனை அவனால் பார்க்க முடியவில்லை. அவருடைய வார்த்தையை மாத்திரம் தான் கேட்டான். மனந்திரும்பின பின்பு கலாத்தியர் நிரூபத்தை எழுதும்போது நீங்கள் எனக்காக உங்கள் கண்களையும் பிடுங்கி கொடுக்க மனதாய் இருந்தீர்கள் என்று எழுதுகிறான். சில பிரச்சனைகளை நாம் சந்திக்கும் போது நம்முடைய சரீரத்தில் வலியும், மனதில் வேதனையும் ஏற்படும். ஆனால் பவுல்அப்போஸ்தலன் மனந்திரும்பின பின்பு தன்னுடைய நிருபங்களில் எழுதுகிறார் நான் விசுவாசித்திருக்கிறவர் இன்னார் என்று அறிவேன் என்று.சவுலாக வாழ்ந்த வாழ்க்கையை விட்டுவிட்டு தேவனுக்கு பிரியமானவாழ்க்கை வாழ பவுல் அப்போஸ்தலனóதன்னை அர்ப்பணித்தார். இதுவரைக்கும் முள்ளாக இருந்த உங்கள் வாழ்க்கையை கர்த்தர் அற்புதமாக, அடையாளமாக மாற்றப் போகிறார். உங்களுக்குள்ளும் ஒரு வெளிச்சம் இன்றைக்கு உதிக்கிறது.
2. தேவ இரக்கத்தினால் வாழ்க்கை பொக்கிஷமானது
முன்னே நான் தூஷிக்கிறவனும், துன்பப்படுத்துகிறவனும், கொடுமை செய்கிறவனுமாயிருந்தேன், அப்படியிருந்தும், நான் அறியாமல் அவிசுவாசத்தினாலே அப்படிச் செய்தபடியினால் இரக்கம்பெற்றேன்.1 தீமோத் 1:13பவுல் அப்போஸ்தலன் தமஸ்கு போவதற்கு முன், இயேசுவை அறிகிறதற்கு முன் இயேசுவை ஏற்றுக் கொண்டவர்களை துன்பப்படுத்துகிறவனாக, தூசிக்கிறவனாக, கொடுமைப்படுத்துகிறவருமாய் இருந்தேன் என்கிறார். சில வீடுகளில் கூட கொடுமையான வார்த்தைகளை பேசுவார்கள். அது கணவனாக இருக்கலாம் அல்லது மனைவியாக கூட இருக்கலாம். எங்கே போயிட்டு வருகிறாய்? யார் பின்னாடி சுத்திட்டு வருகிறாய்? ஏன் இவ்வளவு லேட்டா வருகிறாய் என்று சொல்லி சின்ன சின்ன விஷயத்தை கூட பெருசா பேசி, பிரச்சனையை பெரிதாக்கி விடுகிறார்கள். இன்றைக்கு பைபிளை தூக்கிக்கொண்டு சபைக்கு போகின்ற குடும்பங்களில் கூட இப்படிப்பட்ட சண்டைகள், பிரச்சனைகள், போராட்டங்கள் நடந்து வருகின்றது. பிறஜாதிகளுக்குள்ளே உங்களால் தேவனுடைய நாமம் தூஷிக்கப்படுகிறது என்று வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது. பவுல் அப்போஸ்தலன் முன்னே நான் துன்பப்படுத்துகிறவனாக,தூஷிக்கிறவனாக, கொடுமைப்படுத்துகிறவனாயிருந்தேன், ஆனால் இப்பொழுது தேவனிடத்தில் நான் இரக்கம் பெற்றேன் என்று சொல்லுகிறார்.
இன்றைக்கு இயேசு உங்களுக்குள் வர வேண்டுமென்றால், ஒரு வெளிச்சம் உங்களுக்குள் உதயமாக வேண்டும் என்றால் நீங்களும் இந்த இரக்கத்தை பெற்றிருக்க வேண்டும். நம்முடைய தேவன் மனதுருக்கத்தின் தேவன், இரக்கத்தில் ஐசுவரியம் உள்ளவர்.பணக்கார வாலிபன் இயேசுவின் இடத்தில் வந்து நித்திய ஜீவனைப் பெற நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டான். ஐயா இந்த உலகம் முழுவதும் எனக்கு சொந்தம், என் பேரில் எத்தனையோ தொழிற்சாலைகள் இருக்கிறது, எத்தனையோ வேலைகாரர்களுக்கு நான் சம்பளம் கொடுக்கிறேன். ஆனால் எனக்குள் சமாதானம் இல்லை, நான் நித்திய ஜீவனைப் பெற என்ன செய்ய வேண்டும் என்று கேட்டான்.லூக்கா 18:22-ல் நாம் வாசித்துப் பார்த்தோம் என்றால் அங்கு இயேசு அந்த வாலிபனை பார்த்து, உனக்குள்ளதெல்லாம் விற்று தரித்திரருக்கு கொடு என்றுசொல்லுகிறார்.
இன்றைக்கு நாம் நமக்கென்று ஒரு சபையை உருவாக்கிக் கொண்டு, ஒரு ஊழியத்தை ஏற்படுத்திக் கொண்டு அதில் உறுதியாக நின்று கொண்டிருக்கிறோம். ஆபிரகாமை தேவன் அழைத்து,இந்த தேசத்தை விட்டு புறப்பட்டு போ என்றார். அவன் தேவனுடைய வார்த்தைக்கு கீழ்படிந்து சென்றபோது அவனை ஆண்டவர் வெளிச்சமாக (ஒளியாக) மாற்றினார். இன்றைக்கு நாம் ஏன்? வெளிச்சமாக மாற, பிரகாசிக்க முடியவில்லை. ஏனென்றால் நமக்கென்று ஒரு செட்டப் பண்ணிக் கொண்டோம். சிலர் ஆண்டவருக்காக எல்லாவற்றையும் குப்பையும் நஷ்டமுமாக எண்ணுகிறார்கள். பவுல் அப்போஸ்தலன் தான் ஒரு ரோமன் என்று சொல்லுகிறார். ஒரு ரோமன் என்றுஅந்த காலத்தில் பட்டம் வாங்க வேண்டும் என்றாலும், ரோமன் என்ற குடியுரிமை பெற வேண்டும் என்றால் குறைந்தது 250 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் அவருக்கு இருக்க வேண்டும். அந்த சொத்தை வைத்து தான் அவர் தன்னை ரோமன் என்று சொல்லுகிறார்.இப்படிப்பட்ட அந்தஸ்துள்ள வாழ்க்கை வாழ்ந்த போது தான் தமஸ்குவில் தேவன் தன்னை சந்தித்தவுடன் எல்லாவற்றையும் குப்பையும் நஷ்டமுமாக எண்ணி தூக்கி எரிந்தார். மூன்று வருஷமும் ஆறு மாதமும் அரபி தேசத்தில் போய் தேவனோடு தனித்து ஜெபம் பண்ணினார். அவருடைய ஜெபத்தை கேட்டு தேவன் அவரை மூன்றாம் வானம் வரைக்கும் எடுத்துச் சென்றார்.ஆனால் அவருடன் தமஸ்கு சென்ற ஒருவருக்கும் அந்த வெளிச்சம் உதிக்கவில்லை அவர்களுக்குள் இருள் தான் இருந்தது.ஆனால் சவுல் பவுல் ஆக மாறின போது அவர்கள் எல்லாருக்கும் இந்த ஒளி, வெளிச்சம் பவுல் மூலமாக அவர்களுக்குள் கடந்து சென்றது.
இந்நாட்களில் நம் மேல் கர்த்தருடைய ஒளி, வெளிச்சம் உதயமாக வேண்டும், இந்த ஒளியை நாம் மற்றவர்களுக்கு கொண்டு செல்ல வேண்டும்.அவர்களையும் ஒளியின் பிள்ளைகளாய் மாற்ற வேண்டும். இன்றைக்கு இந்த நாட்களில் உங்களுக்குள் அந்த வெளிச்சம் உங்கள் சிந்தையில் தோன்ற வேண்டும், பலரை நல்வழிப்படுத்துகிறவர்கள், ஜெபிக்கிறவர்கள் உபவாசிக்கிறவர்கள், ஊழியம் செய்கிறவர்கள், கர்த்தருக்காக ஓடுகிறவர்கள் எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் இருக்கிறவர்கள்.நட்சத்திரங்களைப் போல பிரகாசிக்கிறவர்களாக இருக்கிறார்கள். நாம் பெற்ற ஒளி, நமக்குள் இருக்கிற ஒளி இருளாய் போகாதபடிக்கு நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்களில் இருக்கிற ஒளி இருளாய் போகாதபடிக்கு எண்ணெய் உற்றப்பட வேண்டும் பரிசுத்த ஆவியானவருடைய அபிஷேகம் உன்மேல் ஊற்றப்பட வேண்டும்.
பவுல் அப்போஸ்தலனுக்குள் வெளிச்சம் வந்தது, அவன் பிரகாசிக்க ஆரம்பித்தான்.அதற்குக் கர்த்தர்: நீ போ, அவன் புறஜாதிகளுக்கும் ராஜாக்களுக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் என்னுடைய நாமத்தை அறிவிக்கிறதற்காக நான் தெரிந்துகொண்ட பாத்திரமாயிருக்கிறான்.அவன் என்னுடைய நாமத்தினிமித்தம் எவ்வளவாய்ப் பாடுபடவேண்டுமென்பதை நான் அவனுக்குக் காண்பிப்பேன் என்றும்,அப் 9:15,16 வாசித்துப் பார்த்தால் அன்றைக்கே ஆண்டவர் பவுல் அப்போஸ்தலனுக்கு ஒரு ப்ளூ பிரிண்ட் கொடுத்து எங்கே ஊழியம் செய்யணும், எப்படி செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டார். என்ன பாடுகள் வரும், என்ன உபத்திரவம் வரும், நீ எனக்காக எல்லாவற்றையும் சகிக்க வேண்டும் என்று சொல்லிவிட்டார். நீ எனக்காக சூரியனைப் போல பிரகாசிப்பாய் என்றார்.ரோம குடியுரிமை வாங்கி ஒரு ஜமீன்தாராக இருந்த பவுல் இப்பொழுது கர்த்தருடைய பொக்கிஷமாக மாறிவிட்டார். நாம் ஆண்டவருடைய பிள்ளையாக மாறிவிட்டோமானால் பூமியும் அதன் நிறைவும் கர்த்தருடையது என்று சொல்லப்பட்ட அந்த வார்த்தையின்படி அதை அவர் நம்முடையதாக மாற்றி தந்து விடுவார்.நீங்கள் தேவனுக்கு முன்பாகஉங்களை தாழ்த்தும்போது அவருடையவெளிச்சம்உங்களுக்குள் உதிக்கும்,
3. நீங்கள் அவருடைய பொக்கிஷமாக மாறுவீர்கள்
நீங்கள் ஒன்றுமில்லாதவர்களாய் இந்த உலகத்தில் வாழ்ந்தாலும் கர்த்தர் அவருடைய பொக்கிஷமாக உங்களை மாற்றப் போகிறார். கர்த்தருடைய பெட்டகமாக, ஒரு டாக்குமெண்டாக நீங்கள் மாறப் போகிறீர்கள். இயேசு மரிக்கும்போது ஐசுவரியவானாக இருந்தார். அது என்ன ஐசுவரியம் என்றால் கிருபையின் ஐசுவரியம், மகிமையின் ஐசுவரியம். ஆனால் இயேசு கிறிஸ்து இந்த பூமியில் வாழ்ந்த நாட்களில் நரிகளுக்கு குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்கு கூடுகளும் உண்டு, மனுஷகுமாரனுக்கே தலை சாய்க்க இடம் இல்லை என்று சொன்னார். அன்றைக்கு சாஸ்திரிகள் பொக்கிஷங்களை திறந்து இயேசுவுக்கு முன்பாக வைத்தார்கள், இன்றைக்கு பொக்கிஷம் என்பது நீங்கள்தான், ஏசாயா 53:12-ல்அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றி, அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டு, அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து, அக்கிரமக்காரருக்காக வேண்டிக்கொண்டதினிமித்தம் அநேகரை அவருக்குப் பங்காகக் கொடுப்பேன்; பலவான்களை அவர் தமக்குக் கொள்ளையாகப் பங்கிட்டுக்கொள்வார். நம்முடைய பாவத்துக்காக, அக்கிரமத்துக்காக தாமே தண்டனையை சுமந்த தேவன். இதோ என் மகன், மகள்வந்துவிட்டான்(ள்), இதுவரைக்கும் பாவியாக, துன்மார்க்கனாக, தூசிக்கிறவனாக இருந்தான். இப்பொழுது தான் செய்தது பாவம் என்று ஒத்துக் கொண்டு மனம் திரும்பி வந்து விட்டான். அவன்(ள்) ஒன்றையும் எனக்குமறைக்கவில்லை, பாவங்களையெல்லாம் அறிக்கை செய்து விட்டு விட்டான் என்றுஅக்கிரமக்காரர்களுக்காக வேண்டிக்கொண்டு அக்கிரமங்களை எல்லாம் தாமே சுமந்ததினாலே அநேகரை அவருக்குப் பங்காக கொடுப்பேன். பலவான்களை அவருக்கு கொள்ளைப் பொருளாக பங்கிட்டுக் கொள்வார் என்று வேதம் சொல்லுகிறது. இயேசு கிறிஸ்துவின் இரத்தம் இன்றைக்கு நம்மை பலவான்களாக மாற்றி இருக்கின்றது.
ஏசாயா 45:3,4-ல் உன்னைப் பெயர்சொல்லி அழைக்கிற இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் நானே என்று நீ அறியும்படிக்கு, வெண்கலக் கதவுகளை உடைத்து, இருப்புத் தாழ்ப்பாள்களை முறித்து, அந்தகாரத்தில் இருக்கிற பொக்கிஷங்களையும், ஒளிப்பிடத்தில் இருக்கிற புதையல்களையும் உனக்குக் கொடுப்பேன், நான் என் தாசனாகிய யாக்கோபினிமித்தமும், நான்தெரிந்துகொண்ட இஸ்ரவேலினிமித்தமும், நான் உன்னைப் பெயர்சொல்லி அழைத்து, நீ என்னை அறியாதிருந்தும், உனக்கு நாமம் தரித்தேன் என்று சொல்லப்பட்ட வார்த்தையின்படி உங்களுடைய கண்களுக்கு தெரியாத, பிசாசு உங்களுக்கு வர வேண்டிய நன்மைகளை மறைத்து வைத்திருந்த, ஏமாற்றி கொள்ளையடித்து பறித்து வைத்திருந்த எல்லாவற்றையும்தேவன் திரும்பத் தருவேன் என்று சொல்லுகிறார். உங்களுக்கு வரவேண்டிய நன்மைகள் அனைத்தையும்அவன் பறித்து வைத்துக் கொண்டு உங்களை கஷ்டத்திலும், கடனிலும், வியாதியிலும் கஷ்டப்படுங்கள் என்று வைத்திருக்கிறான். அவன் திருடி வைத்திருக்கின்ற அத்தனை ஆசீர்வாதங்களையும் தேவன் உங்களுக்குதருவார். ஆண்டவர் அந்தகாரத்தில் இருக்கின்ற பொக்கிஷங்களை இன்றைக்கு உங்களுக்கு தந்து. உங்களை மேன்மைப்படுத்தப் போகிறார்.
உங்களுடைய வாழ்வில் இருக்கும் தரித்திரங்கள், பற்றாக்குறைகள் எல்லாம் நீங்கும். வேதத்தில் நீதி 15:6-ல் நீதிமானுடைய வீட்டில் அதிக பொக்கிஷம் உண்டு என்று சொல்லப்பட்டுள்ளது. ஆபிரகாம் வாழ்க்கைப் பாருங்கள், லோத்து ஆபிரகாமை விட்டு பிரிந்து செல்லும்போது ஆபிரகாம் சொல்லுகிறார் நீ வலது பக்கம் போனால், நான் இடது பக்கம் போகிறேன், நீ இடது பக்கம் போனால் நான் வலது பக்கம் போகிறேன் என்று. லோத்து தன் கண்களை ஏறெடுத்துப் பார்த்து சோதோம் கொமோரா பட்டணம் செழிப்பாகவும், பசுமையாகவும் இருக்கிறதை கண்டு சோதோமை தெரிந்தெடுத்து சென்றான். அவனுடைய பொக்கிஷமாக அவன் அதை தெரிந்தெடுத்தான். முடிவில் அந்த பட்டணம் அக்கினியினாலும் கந்தகத்தினாலும் எரிக்கப்பட்டது. அவன் மனைவி உப்பு தூணாக மாறினாள்.பிள்ளைகளின் வாழ்க்கை தாறுமாறாக மாறினது. ஆனால் ஆபிரகாம் கர்த்தருடைய சித்தத்தை அறிந்து சென்றார், கர்த்தர் அவனை ஆசீர்வதிக்க வேண்டும் என்று அவன் விரும்பினான். நீங்களும் கர்த்தருடைய விருப்பத்தை அறிந்து செயல்படுவீர்களானால் உங்களுடைய வீட்டிலும் அதிகமான பொக்கிஷங்கள் இருக்கும். வேலையில்லாமல் அலைகின்ற நீங்கள் அநேகருக்கு வேலை கொடுக்கக்கூடியவர்களாய்மாறுவீர்கள். யோசேப்பு வாழ்க்கையை பாருங்கள் காணாமல் போன, தொலைந்து போன, கேட்பாரற்று கண்டுபிடிக்க முடியாத நிலையில், கைதியாக, அடிமையாக வாழ்ந்த அவனை தேவன் எகிப்து தேசத்திற்கு ஒரு பொக்கிஷமாக மாற்றினார். மோசேயின் வாழ்க்கையைப் பாருங்கள் எகிப்து தேசத்தில உள்ள அனைத்து மேன்மையையும், அநித்தியமான பாவசந்தோஷங்களை அனுபவிப்பதை பார்க்கிலும், தேவனுடைய பிள்ளைகளோடு இருப்பதையே தெரிந்து கொண்டார். இனி வரும் காலங்கள் உங்கள் வாழ்க்கையிலும் மேன்மையாக இருக்க போகின்றது, ஆண்டவர் உங்களை அவருடைய பொக்கிஷமாக வைத்திருக்கிறார். உங்கள் எதிரிகள் ஒருவரும் உங்களை மேற்கொள்ளாதபடிக்கு பேச்சில் வல்லமையும், ஞானத்தையும் உங்களுக்கு தருவேன் என்று சொல்லுகிறார். தேவனுடைய ஞானத்தை ஒருவராலும் எதிர்த்து நிற்க முடியாது.இன்றைக்கு கர்த்தர் உங்களை ஞானத்தின் ஆவியினால் நிரப்புவார்.
ஏசாயா 33:6-ம் வசனத்தில் பூரணரட்சிப்பும் ஞானமும் அறிவும் உன் காலங்களுடைய உறுதியாயிருக்கும்; கர்த்தருக்குப் பயப்படுதலே அதின் பொக்கிஷம் என்று சொலல்லப்பட்டுள்ளது. இந்த பொக்கிஷங்களை இயேசு உங்களுக்கு தர வேண்டும் என்றால் நீங்கள் அவரை நோக்கி கூப்பிட வேண்டும். ஆண்டவர் நம்மை பொக்கிஷமாக, மகிமையாக மாற்றி இருக்கும்போது நாம் வீணானவைகளுக்கு மகிமையைகொடுக்கக் கூடாது. இன்றைக்கு நமக்குள் ஜெபமாகிய பொக்கிஷம், விசுவாசம் என்ற பொக்கிஷம் இருக்க வேண்டும். யோபுவின் வாழ்க்கையை பாருங்கள் தேவனிடத்தில் நன்மையை பெற்ற நாம் தீமையே பெற வேண்டாமோ என்று யோபு தன் மனைவியிடம் சொல்லுகிறார். அவருடைய விசுவாசத்தை பாருங்கள், தகப்பன் சிட்சியாத புத்திரர் உண்டோ, அவர் யாரை சிட்சிக்கிறாரோ அவர்களிடத்தில் அவர் அன்பு கூறுகிறார். நாம் நம்மை சரி செய்ய உபவாசித்து ஜெபிக்க வேண்டும். ஆனால் இன்று ஒரு சிலர் இருக்கிறார்கள் நான் உபவாசித்து ஜெபிக்க மாட்டேன், ஆனால் நான் விரும்புகிறது, நான் கேட்பது எல்லாம் தேவன் எனக்கு தர வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அவர் என்னை சோதித்த பின்பு நான் பொன்னாக விளங்குவேன் என்று யோபு சொல்லுகிறார். மத் 6:21-ல் உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. நம்முடைய இருதயம் இயேசுவை நாடி இருக்க வேண்டும். 2 கொரிந்தியர் 4:7-ல் இந்த மகத்துவமுள்ள வல்லமை எங்களால் உண்டாயிராமல், தேவனால் உண்டாயிருக்கிறதென்று விளங்கும்படி, இந்தப் பொக்கிஷத்தை மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம். இந்த மகிமையை, மேன்மையை, பொக்கிஷத்தை மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம். மண்ணுக்குள் ஒரு பொன் இருக்கிறது, அவர்தான் இயேசு, அவர்தான் இரட்சகர்.
பாடுகள் மத்தியிலும் யோபு என் மீட்பர் உயிரோடு இருக்கிறார் என்று கர்த்தரை துதித்தான். கர்த்தர் அவனை உத்தமனாக விளங்கப் பண்ணினார். ஜீவகிரீடத்தை அவனுக்கு கொடுத்தார். அந்த ஆண்டவர் இன்றைக்குஉங்களையும் கிரீடமாக, பொன்னாக பொக்கிஷமாகமாற்றுகிறார். இதோ வாசற்படியில் நின்று கதவை தட்டுகிறேன். ஒருவன் என் சத்தத்தை கேட்டு கதவைத் திறந்தால் நான் அவனுடன் போஜனம் பண்ணுவேன், அவனும் என்னோடு போஜனம் பண்ணுவான், அவனுக்கு பரலோக மண்ணாவை புசிக்க கொடுப்பேன். என்னுடைய காரியங்களை அவனுக்கு வெளிப்படுத்துவேன்என்றவர் இன்றைக்கு உங்களை பொக்கிஷமாக மாற்றப் போகிறார், மாற நீங்கள் ஆயத்தமாக இருக்கிறீர்களா? அவருக்குள் ஞானம் அறிவு என்பவைகளாகிய பொக்கிஷங்களெல்லாம் அடங்கியிருக்கிறது என்றுகொலோ2:3-ல் கர்த்தருடைய வார்த்தை சொல்லுகிறது. உங்களை பொக்கிஷமாக மாற்றத்தான் இயேசு பரலோகத்தில் இருந்து இந்த பூமிக்கு இறங்கி வந்தார். ஐசுவரியவானாக இருந்த அவர் உங்களுக்காக தரித்திரர் ஆனார். உங்களை உயர்த்த அவர் எளிமையானவரானார். அவருடைய தரித்திரத்தினால் நீங்கள் இன்றைக்கு ஐசுவரியவான்களாகுகிறீர்கள். நீங்கள் உயர்த்தப்படுகிறீர்கள். உங்களது வறுமை, தரித்திரம், பலவீனம், பற்றாக்குறைகள் எல்லாம் மாறுகின்றது. உபாகமம் 28:12-ல் ஏற்றகாலத்தில் உன் தேசத்திலே மழை பெய்யவும், நீ கையிட்டுச்செய்யும் வேலைகளையெல்லாம் ஆசீர்வதிக்கவும், கர்த்தர் உனக்குத் தமது நல்ல பொக்கிஷசாலையாகிய வானத்தைத் திறப்பார்; நீ அநேகம் ஜாதிகளுக்குக் கடன்கொடுப்பாய், நீயோ கடன் வாங்காதிருப்பாய்.பொக்கிஷம் சாலையை கர்த்தர் உங்களுக்காக திறந்து, உங்களை ஆசீர்வதித்து உயர்த்துவார். என் ஆண்டவராகிய தேவன் தாமே உங்களை இந்த உலகத்திற்கு ஒளியாகவும், தம்முடைய பொக்கிஷமாகவும் வைத்து ஆசீர்வதித்து நடத்துவாராக.