Inspiration

பழமையாகப் போகாத ஆசீர்வாதங்கள்

பழமையாய்ப் போகாத பணப்பைகளையும் குறையாத பொக்கிஷத்தையும் பரலோகத்திலே உங்களுக்குச் சம்பாதித்துவையுங்கள், அங்கே திருடன் அணுகுகிறதுமில்லை, பூச்சி கெடுக்கிறதுமில்லை. லூக்கா 12:33

ஆண்டவரும் உலக இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள். தேவனுடைய பெரிதான கிருபையினால் இநóத செய்தியின் மூலமாக உங்களைச் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். நம்முடைய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து வேதத்தில் பல காரியங்களை நமக்குச் சொல்லியிருக்கிறார். அதில் சில ஆழமான காரியங்களும், நம்முடைய மனதில் நாம் புரிந்து கொள்வதற்கு ஆச்சரியமான காரியங்களும் இருக்கின்றது. அப்படிச் சொன்ன காரியங்களில் ஒன்று தான் பழமையாய்ப் போகாதப் பணப்பை என்றார். ஆம் பழமையாய்ப் போகாதப் பணப்பை, இற்றுப் போகாத செல்வம் என்று சொல்லி இருக்கிறார். எவ்வளவு ஒரு மேன்மையான ஆசீர்வாதம். நம்முடைய தேவன் எந்த ஒரு காரியங்களையும் பழமையாய்ப் போகவோ அல்லது பலவீனமடையவோ விடமாட்டார். காரணம் அவர் நாட்களுக்குத்தக்கதாகப் பெலன் தருவார். உபா 33:25-ல் உன் நாட்களுக்குத்தக்கதாக உன் பெலன் இருக்கும் என்றார்.மட்டுமல்லஏசா 40:31-ல் கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ, புதுபெலன் அடைந்து, கழுகுகளைப் போல செட்டைகளை அடித்து எழும்புவார்கள், அவர்கள் ஓடினாலும், இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்து போகார்கள்என்று சொல்லப்பட்டுள்ளது. ஆம் நாம் சோர்ந்துபோகவோ, பலவீனமடையவோ, பழையதாய்ப் போகவோ, ஒன்றுமõல்லாமல் போகவோ தேவன் விடமாட்டார். அதே பெலன், அதே வல்லமை, அதே கிருபை, அதே ஆசீர்வாதம் என்றென்றைக்கும் நம்மேல் தங்கும்படி ஆசீர்வதிப்பார்.

யோசுவாவுக்கு வயது சென்றாலும் தேவன் அவனைப் பலவீனமடைய விடவில்லை. மோசே 120 வயதானாலும்உபா 34:7-ல் அவன் கண்கள் இருளடையவுமில்லை, அவன் பெலன் குறையவுமில்லை.அந்த அளவுக்கு தேவன் அவருடைய பிள்ளைகளைப் பெலனாகவும், புதியவர்களாகவும் வைத்திருந்தார். இதைத்தான் அப்போஸ்தலனாகிய பவுலும் சொன்னார்2 கொரி 5:17-ல் ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான், பழையவைகள் ஒழிந்து போயின, எல்லாம் புதிதாயின என்றார். ஆம் நாம் பழைமையானவர்கள் அல்ல, பழைய சடங்காச்சாரங்களைப் பின்பற்றுகிறவர்கள் அல்ல. பழையதை விரும்பி புதியதை விடுபவர்கள் அல்ல. நாம் பழமையாய்ப் போகாத தேவனுடைய திட்டங்களையும், தரிசனங்களையும் பெற்றவர்கள். ஆகவே தேவன் நம்மை கட்டாயம் ஆசீர்வதித்து, ஒரு புதிய காரியங்களுக்குள் கொண்டு போவார். அப்போஸ்தலனாகிய பவுல் சொல்லுகிறார் எபே 4:22-ல் அந்தப்படி, முந்தின நடக்கைக்குரிய மோசம் போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனுஷனை நீங்கள் களைந்துபோட்டு, புதிய மனுஷனைத் தரித்துக் கொள்ளுங்கள் என்றார்.பழையது சிறந்தது என்று புதியவைகளை விட்டு விடாதிருங்கள்.

இயேசு சொன்னார் லூக் 5:37-39-ல்ஒருவனும் புது திராட்சரசத்தைப் பழந்துருத்திகளில் வார்த்து வைக்கமாட்டான். வார்த்து வைத்தால் புதுரசம் துருத்திகளைக் கிழித்துப்போடும், இரசமும் சிந்திப்போம், துருத்திகளும் கெட்டுப்போம். புதுரசத்தைப் புது துருத்திகளில் வார்த்óது வைக்க வேண்டும். அப்பொழுது இரண்டும் பத்திரப்பட்டிருக்கும் என்றார்.சிலர் பழையதை விரும்பி, புது ரசத்தை விரும்ப மாட்டார்கள் என்றார். ஆனால் நம்முடைய ஆண்டவராகிய தேவனோ பழையதாய்ப் போகாத ஆசீர்வாதங்களையும், அதே நேரத்தில் புதிய காரியங்களையும் நமக்குச் செய்து,நம்மை ஆசீர்வதித்து வழிநடத்தி வருகிறார். இதைத்தான் அவர் வேதத்தில் பல இடத்தில் சொல்லியிருக்கிறார்.லேவி 26:10-ல் போன வருஷத்துப் பழைய தானியத்தைச் சாப்பிட்டு, புதிய தானியத்துக்கு இடமுண்டாகும்படி, பழையதை விலக்குவீர்கள் என்றார்.புதிய தானியத்திற்கு இடம் உண்டாகும்படி பழையதை உங்களை விடóடு விலக்குவீர்கள் என்றார். ஆம் நம் தேவன் பழைமையாய்ப் போகாத ஆசீர்வாதங்களையும், இற்றுப்போகாத பணப்பைகளையும் நமக்குத் தந்து அவரே நம்முடைய பொக்கிஷமாக, சொத்தாக இருந்து நம்மை ஆசீர்வதித்து நடத்துவார். போகட்டும் எப்படி புதிதாக்குகிறார், பழைமையாய் போகாமல் எப்படி நடதóதுகிறார் என்பதைப் பார்க்கப் போகிறோம்.

1. புதிய வஸ்திரம்

இந்த நாற்பது வருஷம் உன் மேலிருந்த வஸ்திரம் பழையதாய்ப் போகவும் இல்லை, உன் கால் வீங்கவும் இல்லை என்றுஉபா 8:4-ல் சொல்லப்பட்டுள்ளது.உபா 29:5-ல் கர்த்தராகிய நான் உங்கள் தேவன் என்று நீங்கள் அறிந்து கொள்ளும்படிக்கு, நான் நாற்பது வருஷம் உங்களை வனாந்தரத்தில் நடத்தினேன். உங்கள் மேலிருந்த வஸ்திரம் பழையதாய்ப் போகவும் இல்லை, உங்கள் காலிலிருந்த பாதரட்சைகள் பழையதாய்ப் போகவும் இல்லை, நீங்கள் அப்பம் சாப்பிடவும் இல்லை, திராட்சரசமும், மதுவும் குடிக்கவும் இல்லை என்றார்.430 ஆண்டுகள் எகிப்திலே பார்வோனால் நசுக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு அடிமைப்படுத்தப்பட்டு, வேதனைப்பட்ட அந்த ஜனங்களை ஆண்டவராகிய தேவன் கிருபையாய் இரங்கி மீட்டார், விடுதலையாக்கினார். அப்படி விடுதலையாக்கின போது அந்த அடிமைத்தன தேசத்திலிருந்து புறப்படப்பண்ணி பாலும் தேனும் பொழியும் தேசத்திற்கு அவர்களை கொண்டு போனார். அப்படிக் கொண்டு போகையில் தேவனó அவர்களை அற்புதமாய், ஆச்சரியமாய் நடத்தினார்.

இது ஒருநாள், இரண்டுநாள் பிரயாணம் அல்ல நாற்பது வருஷம். அப்படி நாற்பது வருஷம் அவர்களை வழிநடத்தின போது தான், தேவன் செய்த அற்புதங்களை நாம் வேதத்தில் வாசிக்கிறோம். அவர்கள் போட்டிருந்த, அணிந்திருந்தஅந்த வஸ்திரம், ஆடை பழையதாய்ப் போகவுமில்லை, கிழிந்து போகவுமில்லை, செருப்புகள் தேய்ந்து போகவுமில்லை, அறுந்து போகவுமில்லை என்று தேவனுடைய அற்புதத்தைப் பற்றி வேதம் சொல்லுகிறது. காரணம் என்ன? ஆண்டவராகிய தேவன் மோசே என்ற தேவ மனிதனை ஊழியத்திற்கு அழைத்த போது ஒவ்வொரு நாளும் அதிகாலையில் நீ, ஆயத்தமாகி சீனாய் மலையில் காலமே என் சமுகத்தில் நில் என்றார். அப்படி மோசே நிற்கும் போது, ஜெபிக்கும் போது அவர் தேவனுடைய சாயலைப் பார்த்தார். அவருடைய முகம் பõரகாசித்துக் கொண்டிருந்தது என்று வேதம் சொல்லுகிறது. புல 3:23-ல் அவைகள் காலைதோறும் புதியவைகள். ஆம் தேவனுடைய கிருபை காலைதோறும் புதியவைகளாய் இருந்தபடியால், அவர்கள் அனுதினமும் தேவசமுகத்தில் ஜெபித்தபோது,பாளையம் இறங்கின போது தெய்வீக பிரசன்னமும், வல்லமையும் இறங்கினது. அவர்கள் ஜெபிக்க ஜெபிக்க தேவனுடைய வல்லமை அந்த பாளையத்தில் உள்ளவர்கள் மேலும் இறங்கினது. அப்படி இறங்கின போது, அவர்கள் உடைகள் மேல் இறங்கியது, அது பழையதாய்ப் போகவுமில்லை, இத்துப் போகவுமில்லை, அழுக்கு அடையவுமில்லை. தேவ வல்லமை அவர்களை மூடியிருந்தது.

வேதம் சொல்லுகிறதுபிர 9:8-ல் உன் வஸ்திரங்கள் எப்பொழுதும் வெள்ளையாயும், உன் தலைக்கு எண்ணெய் குறையாததாயும் இருப்பதாகஎன்று சொல்லப்பட்டுள்ளது. ஆம் நம்முடைய வஸ்திரம் எப்பொழுதும் வெண்மையாகவும், அழுக்குப்படாததாயும் இருக்க வேண்டும். இயேசு அப்படித்தான் நமக்கு முன்மாதிரியை வைத்துப் போனார்.மத் 17:2-ல் அவர்களுக்கு முன்பாக மறுரூபமானார். அவர் முகம் சூரியனைப் போல பிரகாசித்தது, அவர் வஸ்திரம் வெளிச்சத்தைப் போல் வெண்மையாயிற்றுஎன்று சொல்லப்பட்டுள்ளது. ஆம் அவருடைய முகமும், அவருடைய வஸ்திரமும் பிரகாசித்தது அதுதான் தேவனுடைய மகிமை. உண்மையிலே மனிதன் பாவம் செய்வதற்கு முன்பு அவனுக்கு வஸ்திரம், உடை தேவைப்படவில்லை. கர்த்தருடைய மகிமையே அவர்களை மூடியிருந்தது. அதனால் தான் அவர்கள் போட்டிருந்த ஆடை, வஸ்திரம் பழையதாய்ப் போகவுமில்லை, அழுக்கு அடையவுமில்லை புதிய வஸ்திரமாக இருந்தது. ஆகவே தான் ஆண்டவராகிய தேவன் வேதத்தில் நமக்கு ஆலோசனையாகச் சொல்லுகிறார். வெளி 3:18-ல் நான், நீ ஜசுவரியவானாகும்படிக்கு நெருப்பிலே புடமிடப்பட்ட பொன்னையும், உன் நிர்வாணமாகிய அவலட்சணம் தோன்றாதபடிக்கு நீ உடுத்திக் கொள்வதற்கு வெண்வஸ்திரங்களையும் என்னிடத்திலே வாங்கிக் கொள்ளவும், நீ பார்வையடையும்படிக்கு உன் கண்களுக்குக் கலிக்கம் போடவும் வேண்டுமென்று உனக்கு ஆலோசனைச் சொல்லுகிறேன் என்றார்.

ஆம் நாம் அழுக்குப்படிந்த ஆடைகளாகவோ, பழையதாய்ப் போன ஆடையாகவோ, வஸ்திரமில்லாத, கிழிந்தவர்களாகவோ காணப்படக்கூடாது. அவருக்கு முன்பாக கறையற்றவர்களாக, மாசற்றவர்களாக காணப்பட வேண்டும். இதைத்தான் ஆண்டவராகிய தேவன் ஆசாரியனாகிய யோசுவாவுக்கு செய்தார்.சகரியா 3:3,4-ல் யோசுவாவோவெனில் அழுக்கு வஸ்திரம் தரித்தவனாய், தூதனுக்கு முன்பாக நின்றிருந்தான். அவர் தமக்கு முன்பாக நிற்கிறவர்களை நோக்கி, இவன் மேல் இருக்கிற அழுக்கு வஸ்திரங்களைக் களைந்து போடுங்கள் என்றார். பின்பு அவனை நோக்கி பார், நான் உன் அக்கிரமத்தை உன்னிலிருந்து நீங்கச் செய்து, உனக்கு சிறந்த வஸ்திரங்களைத் தரிப்பித்தேன் என்றார்.பழையவைகளை அப்புறப்படுத்தி, புதியவைகளை தரிப்பித்தார். அதனால் அழுக்கு அடையவுமில்லை பழையதாய்ப் போகவுமில்லை, கிழிந்து போகவுமில்லை, எல்லாம் புதிதாயின.

இதைத்தான் ஆண்டவராகிய தேவன் கெட்ட குமாரனுக்கும் செய்தார். அவன் பாவ வாழ்க்கையில் விழுந்து எல்லாவற்றையும் இழந்த போது, திரும்பி வந்தபோது ஆண்டவராகிய தேவன் புதிய வஸ்திரம் கொடுத்தார்.லூக் 15:22-ல் அப்பொழுது தகப்பன் தன் ஊழியக்காரரை நோக்கி, நீங்கள் உயர்ந்தவஸ்திரத்தைக் கொண்டுவந்து, இவனுக்கு உடுத்தி, இவன் கைக்கு மோதிரத்தையும், கால்களுக்குப் பாதரட்சைகளையும் போடுங்கள் என்றார்.ழுக்குப்படிந்த, கறைபட்ட பழையதாய்ப் போன வஸ்திரத்தை தேவன், புதிய வஸ்திரமாக மாற்றி அவனுக்கு புதிய வாழ்வு கொடுத்தார். அந்த தேவன் தான் இஸ்ரவேல் ஜனங்களை நாற்பது வருஷம் வனாந்தரத்தில் நடத்தி அற்புதமாய், ஆச்சரியமாய் பாதுகாத்து நடத்தினார். அவர்கள் போட்டிருந்த ஆடைகள், வஸ்திரங்கள் பழையதாய்ப் போகாதபடிக்கு ஆச்சரியமாய் நடத்தினார். அந்த தேவன் இன்றைக்கு பழையதாய்ப் போகாத வஸ்திரங்களாலும், கிழிந்து போகாத துருத்திகளாலும், பரலோகப் பொக்கிஷங்களாலுல் உங்களை நிரப்பி ஆசீர்வதித்து, அற்புதமாய் நடத்துவார், குறைகளை நிறைவாக்குவார். அடுத்ததாக குறையாத அப்பங்களாலும், குறையாதப் பணப்பையும் இல்லாமல் நடத்தியதைப் பார்க்கப் போகிறோம்.

2. புது எண்ணெயால் அபிஷேகம் பண்ணுகிறார்.

என் கொம்பைக் காண்டாமிருகத்தின் கொம்பைப் போல் உயர்த்துவீர், புது எண்ணெயால் அபிஷேகம் பண்ணப்படுகிறேன் என்று சங் 92:10-ல்சொல்லப்பட்டுள்ளது. தாவீதுக்கு நாளுக்கு நாள் புதிய அபிஷேகம், புதிய ஆவியானவர், தேவனுடைய புதிய திட்டம், தேவனுடைய புதிய வெளிப்பாடு, புதிய ஆவி அவர் மேல் இறங்கியது. எதற்காக புது எண்ணெயால் அபிஷேகம் பண்ணப்பட வேண்டும். நாம் பழைய ஜெபத்தை அதாவது, மாம்சத்தில் ஏறெடுக்கிற ஜெபத்தை ஏறெடுக்கக் கூடாது. மாம்ச வாழ்க்கை, மாம்சத்தில் முடிவுபண்ணி, ஊழியம் செய்வது அல்ல, நாம் புதிய ஆவியை அனுதினமும் பெற்று, பரிசுத்த ஆவியினால் புதிய பாஷைகளையும், புதிய பெலத்தையும் பெற்றுக்கொள்ள வேண்டும். இன்றைக்கு நாம் சிறுபிள்ளைகளாக இருந்தபோது என்ன பேசினமோ அதேபோல இப்போது பேசுவதில்லை. வயது வளர்ச்சி அடைய அடைய நாம் தெளிவாக, விசுவாசமாக பேசுகிறோம். நாம் பழைய ஜெபத்தை செய்யக்கூடாது, ஜெபம் பழையதாய்ப் போகக்கூடாது, விசுவாசம் பழையதாய்ப் போகக்கூடாது. ஒவ்வொரு நாளும் ஜெபிக்கும் போதும், தியானிக்கும் போதும் நாம் புதுப் புதுவெளிப்பாடுகளைப் பெற வேண்டும், வேதத்தை தியானிக்க வேண்டும். அதற்குத்தான் ஆண்டவராகிய தேவன் தாவீதைப் புதிய எண்ணெயால் அபிஷேகம் பண்ணினார். அப்படி புதிய எண்ணெயால் அபிஷேகம் பண்ணும்போது தான் புதிய ஆவி, புதிய இருதயம் மனிதனுக்குள் உண்டாகி புதியவர்களாக, தேவனுடையவர்களாக மாறுகிறார்கள். அப்படிப்பட்ட மனிதர்கள் தான் புது மனம் உள்ளவர்களாக மாறுகிறார்கள்.

இதைத்தான் அப்போஸ்தலனாகிய பவுல் சொல்லுகிறார் ரோமர் 12:2-ல் நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும், பிரியமும், பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக உங்கள் மனம் புதிதாகுகிறதினால் மறுரூபமாகுங்கள் என்றார்.இப்படி மனம் புதிதாகும் போது தான் புது திராட்சரசத்தை, புது துருத்திகளில் வார்த்து வைக்க முடியும். இதிலே பழையதற்கு, மாம்சத்திற்கு வேலை கிடையாது. இப்படி யார் எல்லாம் புதிய அபிஷேகத்தைப் பெற்றார்களோ, அவர்கள் எல்லாம்கொலோ 3:10-ல் தன்னைச் சிருஷ்டித்தவருடைய சாயலுக்கொப்பாய்ப் பூரண அறிவடையும்படி புதிதாக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக் கொண்டிருக்கிறீர்களே என்றார்.அப்படி புதிய மனிதனை, புதிய ஆவியைத் தரித்துக் கொண்ட ஒவ்வொருவரும் தான் வாக்களிக்கப்பட்ட கானானுக்குள் புது உடன்படிக்கையின் இரத்தத்தால் கழுவப்பட்டு, புதிய வானம், புதிய பூமியை நோக்கி, எகிப்தை விட்டு, பாவ அடிமைத்தனத்தை விட்டு, வாக்களிக்கப்பட்ட தேசத்திற்குள் போனார்கள். நாம் பழையவர்களாய், முறுமுறுக்கிறவர்களாய் தேவனைப் பகைக்கிறவர்களாய் இருந்தால் இந்த புதிய தேசத்திற்குள் போக முடியாது. அதனால் தான் தேவன் நமக்கு புதிய கிருபை, புதிய ஆவி, புதிய அபிஷேகம் இவைகளால் நம்மை நிரப்பி பழையவர்களாய்ப் போகாதபடி, பழைய மன்னாவை, எகிப்தõலே சாப்பிட்ட கொம்மட்டிக் காய்களை சாப்பிடாதபடிக்கு புதிய மன்னாவை அனுதினமும் அவர்களுக்குப் பொழிந்தருளினார். அந்த மன்னாவைப் புசித்தவர்களுக்கு பெலவீனம் இல்லை, வியாதி இல்லை, பிரயாணத்தில் களைப்பு இல்லை, புது பெலனோடு புறப்பட்டுப் போனார்களó.

இன்றைக்கு அந்த மன்னாவை, நாம் வேதத்தைதó திறந்து வாசõக்கும் போது நமக்குக் கொடுக்கப்படுகிறது. நாம் அதை தியானிக்கும் போது, உட்கொள்ளும் போது தேவன் நம்மை புதிய ஜீவனுள்ளவர்களாக மாற்றுகிறார். ஆம் நாம் ஒரு நாளும் மனிதனுடைய சட்டதிட்டங்களாகிய கட்டளைகளுக்கு அடிமையாகாமல் புதியவர்களாக, தேவன் நம்மை பரம கானானுக்குள் கொண்டு போகிறார். இதைச் செய்யத்தான், இதை சிலுவையில் நிறைவேற்றத் தான் இயேசு இந்த பூமிக்கு இறங்கி வந்து, புதிய வழியை ஜெபத்திலே, ஊழியத்திலே ஏற்படுத்தினார். எபி 10:19,20-ல் ஆகையால் சகோதரரே, நாம் பரிசுத்த ஸóதலத்தில் பிரவேசிப்பதற்கு இயேசுவானவர் தமது மாம்சமாகிய திரையின் வழியாய்ப் புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை நமக்கு உண்டு பண்ணினபடியால், அந்த மார்க்கத்தின் வழியாய்ப் பிரவேசிப்பதற்கு, அவருடைய இரத்தத்தினாலே நமக்குத் தைரியம் உண்டாயிருக்கிறது என்றார்.ஆகவே நாம் புதிய ஆவியுள்ளவர்களாகி புதிய எண்ணெயால் அபிஷேகம் பண்ணப்பட்டு பழையவர்களாக, பழைய ஏற்பாட்டின் காரியத்தைச் செய்யாதபடிக்கு, புதியவர்களாக, கிறிஸ்துவைத் தரித்துக் கொண்டவர்களாக வாழ நம்மை அர்ப்பணிப்போம். இதைத்தான் ஆண்டவராகிய இயேசு லூக் 12:33,34-ல் சொன்னார் பழையதாய்ப் போகாத இருதயங்களும், பழையதாய்ப் போகாத ஜெபங்களும், பழையதாய்ப் போகாதப் பணப்பைகளும், பழையதாய்ப் போகாத விசுவாசமும், பழையதாய்பó போகாத பரிசுத்தமும் நமக்கு உண்டாக வேண்டும் என்றார். தொடர்ந்து நாம் வேதத்தை வாசித்துப் பார்த்தால் பழைய ஏற்பாட்டின் ஊழியம் அல்ல, புதிய ஊழியம் செய்ய தேவன் நம்மை அழைத்திருக்கிறார்.

3. பழைய ஏற்பாட்டின் ஊழியம் அல்ல புதிய ஏற்பாட்டின் ஊழியம்

ஒழிந்து போகிற மகிமையுடைய அந்த ஊழியம் அப்படிப்பட்ட மகிமையுள்ளதாய் இருந்தால், ஆவிக்குரிய ஊழியம் எவ்வளவு மகிமையுள்ளதாய் இருக்குமó என்றார். பழைய ஏற்பாட்டின் ஊழியம் ஆசாரிய ஊழியம், மனிதன் செய்யும் தவறுகள், பாவங்கள், தண்டனைகள் இவைகளுக்காக தேவசமுகத்தில் பரிந்து பேசுகிறது. அப்படிப் பரிந்து பேசி தண்டனைக்குத் தப்பலாம் அல்லது பலி செலுத்தி இரக்கத்தைப் பெறலாம் என்று அதை மட்டும் தான் செய்தார்கள். இதனால் பாவம் குறையவோ, தீமை செய்யாதவர்களோ இல்லை, ஜனங்களுக்கு, யாவருக்கும் மனம் மாற்றம் ஏற்படவும் இல்லை. அது ஒழிந்து போகிற ஊழியம் என்று அப்போஸ்தலனாகிய பவுல் சொல்லுகிறார். ஒழிந்து போகிற, அழிந்து போகின்ற. காணாமற்ப்போகிற ஊழியத்தை நாம் செய்யக் கூடாது. கொஞ்ச நாள் பிரகாசித்து விட்டு பிறகு காணாமற் போவது அல்ல நித்தியமான ஊழியம், நிலையான ஊழியம், மகிமையுள்ள ஊழியம், இந்த புதிய ஊழியத்தைச் செய்ய தான் ஆண்டவராகிய இயேசு இந்தப் பூமிக்கு இறங்கி வந்தார். பழையன ஒழியட்டும், புதியன உண்டாகட்டும் மனம் திரும்புங்கள் என்றார். பொல்லாத வழிகளை விடுங்கள் என்றார். சுயபெலத்திலே, சுய பக்தியிலே, சடங்காச்சாரத்தினாலே நாம் மீட்கப்பட, இரட்சிக்கப்பட முடியாது. நம்முடைய கிரியைகளை மாற்றுகிறவர் ஆவியானவர் என்று அந்த ஆவியானவரைப் பெறவும், அவரால் இயக்கப்படவும், நடத்தப்படவும் தேவன் இயேசு விரும்பினார். லூக் 12:49 பூமியிலே அக்கினியைப் போட வந்தேன் அது இப்பொழுதே பற்றி எரிய வேண்டும் என்றார். ஒவ்வொருவரும் எரிந்து பிரகாசிக்க வேண்டும் என்றார். அந்த ஆவியானவர் வந்தால் தான் சகல சத்தியத்திற்குள்ளும், நிறைவை நோக்கி நடத்துவார் என்றார். அந்த ஆவியானவருடைய கிரியைகள் அன்பு, அமைதி, சந்தோஷம், இச்சையடக்கம் இவைகளில் நிறையும் போது தேவனுடைய வல்லமை, கிரியைகள் நமக்குள் பெருகும். அப்பொழுது நாம் தேவனுடைய காரியங்களை, கிரியைகளை நடத்தலாம் என்றார். ஆகவே இயேசு சொன்னார்மாற்கு 16:17-ல் என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள், நவமான பாஷைகளைப் பேசுவார்கள், சர்ப்பங்களை எடுப்பார்கள் சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுóத்தாது. வியாதியஸ்தர்கள் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள். இது தான் மகிமையுள்ள ஆவியானவருடைய ஊழியம். புதிய ஊழியம், புதிய ஏற்பாட்டின் ஊழியம், இந்த ஊழியத்தை, மகிமையுள்ள ஊழியத்தைச் செய்ய தேவன் நம்மை அழைத்திருக்கிறார். இது தான் புதிய ஏற்பாட்டின் ஊழியம் மகிமையுள்ள ஊழியம், இதைச் செய்வதை விட்டு விட்டு மாம்சத்திலும், மனதிலும் முடிவு செய்து ஒழிந்து போகின்ற ஊழியத்தை நாம் செய்யக்கூடாது. இயேசுவின் ஊழியத்தை நாம் செய்ய வேண்டும், அதற்குத்தான் தேவன் நம்மை அழைத்திருக்கிறார். இது தான் புதியது, புதிய வானம், புதிய பூமிக்கு நாம் போக வேண்டும். ஆகவே புதிய ஆவியுள்ளவர்களாய் எபே 4:23,24-ல் பவுல் சொல்லுகிறார் உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி, மெய்யான நீதியிலும், பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக் கொள்ளுங்கள் என்றார். ஆம் புதிய ஆவியுள்ளவர்களாகி, புதிய தரிசனத்தோடு, புதிய பெலத்தோடு, புதிய ஊழியத்தை, தேவனுடைய திட்டத்தோடு, தரிசனத்தோடு, சித்தத்தோடு, அவருடைய மகிமையான ஊழியத்தை நாம் செய்ய வேண்டும். இது தான் மகிமையுள்ள புதிய ஏற்பாட்டின் ஊழியம். ஆவியானவருடைய ஊழியம் இது தான் நம்மை பழையதாய்ப் போகாத வாழ்க்கையை, ஜெப ஜீவியத்தை நமக்குத் தந்து நம்மை ஆசீர்வதித்து நடத்தும். இந்த மகிமையான, மேன்மையான ஊழியத்திற்குத் தான் தேவன் நம்மை அழைத்திருக்கிறார். இது தான் புதிய ஊழியம், பழையவைகள் ஒழிந்து புதியவைகள் தோன்றட்டும். என் ஆண்டவராகிய தேவன் தாமே உங்களைப் புதிய ஆவியுள்ளவர்களாக்கி, புதியஊழியத்தைச் செய்ய உங்களுக்கு கிருபை செய்வாராக.