Inspiration

ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை

நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை. யோசுவா 1:5

ஆண்டவரும் உலக இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும்புத்தாண்டு வாழ்த்துக்கள். தேவனுடைய பெரிதான கிருபையினால் மீண்டும் ஒரு புதிய வருஷத்தில் உங்களைச் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். கடந்து வந்த மாதங்களிலும், சென்று போன வருஷங்களிலும், நம் கூட இருந்து நம்மை நடத்தினவர், இந்த புதியவருஷத்தில் நம்மை அற்புதமாய் நடத்துவார். ஆண்டவராகிய தேவன் யோசுவாவைப் பார்த்துச் சொன்னார், நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை என்றார். ஏன் இதை யோசுவாவுக்கு தேவன் சொல்ல வேண்டும்.யோசுவாவாலிபப்பையனாக இருந்த போது மோசேயோடு இருந்தார். அது மட்டுமல்ல நாற்பது நாள் மலையின் மேல் மோசே ஏறும் போது கூட இருந்தார். யாத் 33:11-ல் நூனின் குமாரனாகிய யோசுவா என்னும் அவனுடைய பணிவிடைக்காரனாகிய வாலிபன் ஆசரிப்புக் கூடாரத்தை விட்டு பிரியாதிருந்தான் என்று வாசிக்கிறோம்.மோசேயோடு பல இன்னல்களில், பல மேன்மைகளில் கூட இருந்தவர். அதுமட்டுமல்ல ஜனங்கள் அவருக்கு விரோதமாய் எழும்பின போது அதை எல்லாம் கூட இருந்து பார்த்த மனிதன்.

இப்பொழுது மோசேயின் காலத்திற்குப் பின்பு இந்த ஜனங்களை கானானுக்குள் கொண்டு போய் சேர்க்க வேண்டும். தேசத்தை பங்கிட்டுக் கொடுக்க வேண்டும். பல யுத்தங்களைப் பண்ண வேண்டும். இப்படிப்பட்ட போராட்டமான நேரத்தில் தான் ஆண்டவராகிய தேவன் அவரைப் பார்த்து சொன்னார் நீ பயப்படாதே, நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும், ஒரு காரியத்திலும் உன்னை எதிர்த்து நிற்பதில்லை. நான் மோசேயோடு இருந்தது போல உன்னோடும் இருப்பேன் என்றார். ஆம் ஒருவனும் உன்னை எதிர்த்து நிற்பதில்லை, காரணம் யோசுவாவுக்கு ஆண்டவராகிய தேவன் சொன்னார் யோசு 1:8-ல் இந்த நியாயப்பிரமாணப் புஸ்தகம் உன் வாயை விட்டுப் பிரியாதிருப்பதாக, அதை இரவும், பகலும் தியானிப்பாயாக என்றார்.. அந்த வார்த்தையின்படி யோசுவா தேவனுடைய வார்த்தையை தியானித்து, அவருக்குள் தேவனுடைய வார்த்தைகளும், வாக்குத்தத்தங்களும் அவர் இருதயத்தை எப்பவும் நிரப்பிக் கொண்டே இருந்தது.அதனால் அந்த வார்த்தையை, தேவனுடைய வாக்குத்தத்தங்களை எதிர்க்க முடியாது என்பதை அவர் அறிந்திருந்தார். வேதம் சொல்லுகிறது சங் 105:28-ல் அவருடைய வார்த்தைகளை எதிர்ப்பாரில்லை என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த தேவனுடைய வார்த்தை, ஜீவனுள்ள வார்த்தை யோசுவாவுக்கு இருந்தபடியினால், ஆண்டவராகிய தேவன் அவரைப் பார்த்துச் சொன்னார் ஒருவனும் உன்னை எதிர்ப்பதுமில்லை மேற்கொள்ளுவதுமில்லை என்றார்.

இன்றைக்கு நாம் சந்திக்கின்ற பிரச்சனைகளில், போராட்டங்களில் நமக்குள் தேவைதேவனுடைய வார்த்தை. நம்முடைய இருதயத்திற்குள் தேவனுடைய வார்த்தை இருந்தால் எந்த கவலையோ, எந்த பயமோ நம்மை மேற்க்கொள்ள முடியாது. ஆம் கர்த்தருடைய வார்த்தை யோசுவாவோடு இருந்தது. ஆகவே தேவன் அவரைப் பலப்படுத்தினார். ஒருவனும் உன்னை எதிர்த்து நிற்பதில்லை என்றார்.உபா 32:30 அவர்களுடைய கன்மலை அவர்களை விற்காமலும், கர்த்தர் அவர்களை ஒப்புக் கொடாமலும் இருந்தாரானால் ஒருவன் ஆயிரம் பேரைத் துரத்தி, இரண்டு பேர் பதினாயிரம் பேரை ஓட்டுவதெப்படி என்றார். தேவனாகிய கர்த்தர் யோசுவாவோடு இருந்தபடியால் ஆயிரம் வந்தாலும், பதினாயிரம் வந்தாலும் எதுவும் உன்னை அணுகாது, மேற்க்கொள்ளாது என்றார். யோசுவாவுக்கு தேவ வாக்குத்ததóதம் கர்த்தரிடத்திலிருந்து பரிபூரணமாய் வந்தது, ஒருவனும் உன்னை எதிர்த்து நிற்பதில்லை என்றார். இன்றைக்கு இந்த செய்தியை வாசித்துக் கொண்டிருக்கிற என் அன்பு சகோதர, சகோதரிகளே, வருகின்ற நாட்களில் நாம் சந்திக்கப் போகின்ற ஒவ்வொரு காரியங்களிலும், போராட்டங்களிலும், எதிர்ப்புகளிலும் எதிர்மறையான காரியங்களிலும் நாம் பயப்படவோ, கலங்கவோ தேவையில்லை. தேவன் யோசுவாவுக்கு கொடுத்த அதே வாக்குறுதியை நமக்கும் கொடுக்கிறார். ஒருவனும் ஒரு காரியத்திலும் உன்னை எதிர்த்து நிற்பதில்லை என்று சொல்லுகிறார். ஒருவன் மட்டுமல்ல ஆயிரம், பதினாயிரம் பேர் வந்தாலும் உன்னை மேற்க்கொள்ள முடியாது. காரணம் ஒருவராய்ப் பெரிய காரியங்களைச் செய்கிற தேவன் உன்னோடு இருந்து, உன்னை ஆசீர்வதித்து அற்புதமாய் இந்த புதிய வருஷத்தில் நடத்துவார்.

ஆகவே இந்த வார்த்தைகளை நம்பி கர்த்தர் எனக்கு சகாயர் மனுஷன் எனக்கு என்ன செய்வான் என்று எபி 13:6-ல் சொல்லப்பட்டுள்ள வார்த்தையின்படி அதினாலே நாம் தைரியம் கொண்டு கர்த்தர் எனக்குச் சகாயர், நான் பயப்படேன், மனுஷன் எனக்கு என்ன செய்வான்.நாம் தைரியம் கொண்டு தேவனைப் பின்பற்றுவோம்.தேவன் இந்த புதிய வருஷத்தில் யோசுவாவுக்குச் சொன்னது போல ஒருவனும் உன்னை எதிர்த்து நிற்பதில்லை என்ற வார்த்தையின்படி உங்களை அற்புதமாய், அதிசயமாய் நடத்துவார். இந்த 2024-ல் ஒருவனும் உங்களை எதிர்க்கவோ, மேற்க்கொள்ளவோ முடியாதபடி உங்களை ஆசீர்வதித்து நடத்துவார்.

 

ஏன் ஒருவனும் என்றார்

பின்னும் பார்வோன், யோசேப்பை நோக்கி நான் பார்வோன், ஆனாலும் எகிப்து தேசத்திலுள்ளவர்களில் ஒருவனும் உன் உத்தரவில்லாமல் தன் கையையாவது, காலையாவது அசைக்கக்கூடாது என்றான் ஆதி 41:44. இந்த புதிய வருஷத்தில் ஒருவனும் என்ற இந்த பட்டியலில்தேவன் உன்னையும் இணைக்க வேண்டும், சேர்க்க வேண்டும். ஏன் அந்த ஒருவனும் என்கிறார் யோசுவாவுக்கு அப்படித் தான் சொன்னார்.சில பேரை சில காரியத்திலும், அவர்களைத் தவிர வேறு எவரும் செய்ய முடியாதபடிக்கு வைத்திருக்கிறார். அதை அவர்கள் தான் செய்ய முடியும். அப்படி உள்ளவர்களில் ஒருவர் தான் யோசேப்பு, கர்த்தர் அவனோடே கூட இருந்தார். ஒரு மனிதனோடு தேவன் இந்த பூமியில் இருந்தால், வாழ்ந்தால் அவன் விலையேறப் பெற்றவன்.மதிப்புக்குரியவன். அப்படி ஒருவரில் யோசேப்பு ஒருவர். தேவன் யோசேப்புக்கு அளவிட முடியாத ஞானத்தையும், பரிசுத்த ஆவியையும் கொடுத்திருந்தார். அந்த ஞானத்தின் ஆவியை வைத்து அநேக பிரச்சனைகளுக்கு தீர்வையும், ஆலோசனையும் சொன்னார். குறிப்பாக பார்வோன் சொப்பனம் கண்டு, கனவு கண்டு அதின் அர்த்தம் தெரியாமல், விளங்காமல் தவித்த போது அந்த கனவுக்கு, சொப்பனத்திற்கு அர்த்தம் சொல்ல, தேவன் தேசத்தில் செய்யப் போகின்ற காரியத்தை, தேவ திட்டத்தை அவர்களுக்கு விளக்கிக் காண்பித்தார். இதைக் கண்ட பார்வோன், இவனைப் போல தேவ ஆவியைப் பெற்ற மனிதன் ஒருவன் எனக்கு கிடைக்க கூடுமோ என்று சொல்லி உன்னைப் போல ஞானமுள்ளவன், விவேகமுள்ளவன் ஒருவனுமில்லை என்று சொல்லி எகிப்து தேசத்திற்கு அதிபதியாக உயர்த்தினான்.

ஏனென்றால் அவனுக்கு நிகரானவர் இந்த பூமியில், அந்த வேலைக்கு ஒருவருமில்லை என்று அவனை கனம் பண்ணினான்.ஒருவனும் யோசேப்பின் உத்தரவில்லாமல் கையையோ, காலையோ அசைக்ககூடாது என்று சொல்லி அவனை உயர்த்தினான். இந்த 2024-ஆம் ஆண்டில் தேவன் உங்களை அப்படிப்பட்ட ஒருவராகத்தான் ஆசீர்வதித்து உயர்த்தப் போகிறார், ஞானத்தைத் தரப் போகிறார். இயேசு சொன்னார்லூக்கா 21:15-ல் உங்களை விரோதிக்கிறவர்கள் ஒருவரும் எதிர்பேசவும், எதிர்நிற்கவும் கூடாத வாக்கையும், ஞானத்தையும் நான் உங்களுக்குக் கொடுப்பேன் என்றார். நம்முடைய குடும்பத்தில், வேலையில், தொழிலில் ஊழியப்பாதையில் ஜெபஜீவியத்தில் கர்த்தர் எந்த வருஷத்திலும்ó இல்லாத ஞானத்தையும், விவேகத்தையும், தேவ ஆவியையும் நமக்கு தேவன் தரப்போகிறார். இதிலே உங்களுக்கு நிகரானவர் ஒருவரும் இல்லை என்கிற அளவுக்கு தேவன் ஒரு ஆசீர்வாதத்தைக் கட்டளையிடப் போகிறார். உங்களைத் தவிர வேறு யாரும், செய்ய முடியாத காரியங்களை தேவன் உங்களைக் கொண்டு, உங்கள் வேலையில் செய்யப் போகிறார்.. இதைத் தான் சாலொமோனுக்கு தேவன் செய்தார். அவரைக் கொண்டு மிகப் பெரிய ஒரு தேவாலயத்தை பூமியில் கட்டினார். அதற்குத் தேவன் செய்த காரியம், அவரை ஏவி, தன் ஆவியினால் நிரப்பியிருந்தார்.1 இராஜா 3:12,13 உன் வார்த்தைகளின்படி செய்தேன், ஞானமும், உணர்வுமுள்ள இருதயத்தை உனக்குத் தந்தேன். இதிலே, ஞானத்திலே உனக்குச் சரியானவன்உனக்கு முன் இருந்ததுமில்லை, உனக்குச் சரியானவன் உனக்குப்பின் எழும்புவதுமில்லை, இதுவுமன்றி நீ கேளாத ஜசுவரியத்தையும், மகிமையையும் உனக்கு தந்தேன். உன் நாட்களில் இருக்கிற ராஜாக்களில் ஒருவனும் உனக்குச் சரியானவன் இருப்பதுமிóல்லை என்றார்.

அந்த ஞானத்தை வைத்து சாலொமோன் தேவனுக்காக பெரிய பெரிய காரியங்களைச் செய்தார். அதிலே அவருக்கு நிகரானவர் ஒருவரும் இல்லை என்ற அளவுக்கு ஒருவராக தேவன் யோசேப்பையும், சாலொமோனையும் இந்த பூமியிலே வைத்திருந்தார்.அவருக்கு மகிமையாகப் பயன்படுத்தினார்.ஆகவே தான் யோசுவாவைப் பார்த்து ஆண்டவராகிய தேவன் சொன்னார் ஒருவனும் உன்னை எதிர்த்து நிற்க முடியாது, மேற்க்கொள்ள முடியாது. ஆம் தேவன் கொடுக்கிற ஞானம் பரத்திலிருந்து வருகிறது, அது சுத்தமானது, மேன்மையானது. அந்த ஞானம் தான் பிசாசின் நயவஞ்சகங்களையும், பிசாசின் கிரியைகளையும் அழித்துப் போடுகிறதாய் இருக்கிறது. யாக் 3:17-ல் பரத்திலிருந்து வருகிற ஞானமோ முதலாவது சுத்தமுள்ளதாயும், பின்பு சமாதானமும், சாந்தமும், இணக்கமுள்ளதாகவும், இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்ததாயும் பட்சபாதமில்லாததாயும் மாயமற்றதாயுமிருக்கிறது என்று சொல்லப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட ஞானத்தின் ஆவியைத்தான் தேவன் யோசுவாவுக்கு கொடுத்திருந்தார்.

உபா 34:9-ல் மோசே நூனின் குமாரனாகிய யோசுவாவின் மேல் தன் கைகளைவைத்தபடியினால், அவன் ஞானத்தின் ஆவியினால் நிறையப்பட்டான். அந்த ஞானமும், வல்லமையும், கிருபையும் யோசுவாவின் மேல் இறங்கினபடியால் யோசுவா செய்த காரியங்களை வேறு ஒருவனும் செய்ய முடியாதபடிக்கு தேவன் அவனை விசேஷித்தவனாக மாற்றினார், பயன்படுத்தினார். ஆகவே தான் தேவன் அவரைப் பார்த்து, ஒருவனும் உன்னை எதிர்த்து நிற்பதில்லை என்றார். இன்றைக்கு இந்த செய்தியை வாசித்துக் கொண்டிருக்கும் என் அன்பு சகோதர, சகோதரிகளே இந்த புதிய வருடத்தில் தேவன் உங்களுக்குள் ஒரு ஞானத்தின் ஆவியை அனுப்புவார், உங்கள் எதிரிகள் யாரும் உங்களை மேற்க்கொள்ள முடியாதபடி பேச்சு வல்லமையை, ஞானத்தை அருளுவார். உங்கள் குடும்பத்தை நடத்த, உங்கள் வேலையில் பிரச்சனையில்லாமல் செல்ல, உங்கள் தொழிலை, வியாபாரத்தைச் செய்ய ஞானத்தின் ஆவியைத் தருவார். எந்த ஒரு போராட்டம் வந்தாலும், பிரச்சனை வந்தாலும் மிக எளிதாய் சமாளிக்க கிருபை தருவார். ஆகவே தான் யோசுவாவைப் பார்த்து ஒருவனும் உன்னை எதிர்த்து நிற்பதில்லை என்óறார்.

ஒருவனும் உன் மேல் கைபோடுவதில்லை

நான் உன்னுடனே கூட இருக்கிறேன், உனக்குத் தீங்கு செய்யும்படி ஒருவனும் உன் மேல் கைபோடுவதில்லை. அப் 18:10. ஒருவனும் உன்னை எதிர்ப்பதில்லை என்றவர், ஒருவனும் உன் மேல் கைபோடுவதிலóலை என்கிறார். இன்றைக்கு நாம் தேவ சித்தம் செய்யும் போது, தேவ பாதையில் போகும் போதுசாத்தான் சும்மா இருக்க மாட்டான், நம்மை எந்த வகையிலாகிலும் முடக்கவும், அழிக்கவும் நினைப்பான். இப்படித்தான் அவன் யோபுவை எதிர்த்தான், போராடினான். காரணம் யோபுவைக் குறித்து தேவன் நற்சான்று கொடுத்து, அவனைப் போல் பொல்லாப்புக்குப் பயப்படுகிறவன் ஒருவனும் இல்லை என்றார். யோபு 1:8-ல் கர்த்தர் சாத்தானை நோக்கி, என் தாசனாகிய யோபுவின் மேல் கவனம் வைத்தாயோ உத்தமனும், சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாகிய அவனைப் போல ஒருவன் பூமியில் இல்லை என்றார்.ஆம் தேவனுக்கு பயந்து பொல்லாப்புக்கு விலகுகிறவன் என்றார். இப்படி சொன்னதும் யோபுவின் மேல் சாத்தான் கவனம் வைத்தான். அவன் மேல் கைபோடவும், அழிக்கவும், கொல்லவும் பல காரியங்களைச் செய்தான். ஆனால்தேவன் யோபுவை கைவிடவில்லை, அவனுக்கு துணை நின்று, அவனை மீண்டும் நிலைநிறுத்தி, இழந்த எல்லாவற்றையும் திரும்ப கொடுத்தார். ஆம் பிசாசானவன் ஒரு தேவ பிள்ளைக்கு விரோதி, அவன் எதிர்க்கிறவன், தடைபண்ணுகிறவன்.

தானியேல் ஜெபிதóத போது, தேசத்திற்காக நற்காரியங்களைச் செய்த போது எதிர்த்து தடுத்தவன். தானி 10:13-ல்பெர்சியா ராஜ்யத்தின் அதிபதி இருபத்தொரு நாள் மட்டும் என்னோடு எதிர்த்து நின்றான். ஆனாலும் பிரதான அதிபதிகளில் ஒருவனாகிய மிகாவேல் எனக்கு உதவியாக வந்தான் என்றார். அதன் பிறகு வானம் திறக்கப்பட்டது. ஜெபத்திற்கு பதில் வந்தது, தடைகள் நீங்கியது. சாத்தான் எப்பொழுதும் தந்திரமாக செயல்படுவான். தாவீதைக் கொல்ல சவுல் திட்டமிட்ட போது 1சாமு 18:25-ல் தாவீதை பெலிஸ்தருடைய கையிலே விழப்பண்ணுவதே சவுலுடைய எண்ணமாயிருந்தது. ஆம் சாத்தான் நம்மை நேரடியாகவும், மறைமுகமாகவும் எதிர்ப்பான். ஏதாவது ஒரு கண்ணியில் அகப்படுத்தி விடவே நினைப்பான். ஆகவே தான் வேதத்தில் பேதுரு சொல்லுகிறார் 1 பேதுரு 5:8,9-ல் விசுவாசத்தில் உறுதியாயிருந்து அவனுக்கு எதிர்த்து நில்லுங்கள் என்றார்.நாம் சாத்தானையும், அவனுடைய கிரியைகளையும் எதிர்த்து நிற்க வேண்டும். அவன் நம்மை முடக்குவதையோ, அழிப்பதையோ பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. பவுல் சொல்லுகிறார் எபே 6:11-ல் நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத்திராணியுள்ளவர்களாகும்படி தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக் கொள்ளுங்கள் என்றார்.

பிசாசினுடைய ஒவ்óவொரு கிரியைகளையும் அழிக்கத்தான் தேவன் இந்த பூமிக்கு இறங்கி வந்தார். 1 யோவா 3:8-ல் பிசாசின் கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார் என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த பொல்லாத ஆவி தான் சில மனிதர்களைத் தூண்டி விரோதமாக செயல்படவும், எதிர்க்கவும் ஆரம்பிக்கிறது. இப்படி எதிர்க்கின்ற, போராடுகின்ற எந்த ஒரு காரியத்திலும் யாரும் உங்களைத் தொடவோ, கைபோடவோ தேவன் விடமாட்டார். ஆகவே தான் பவுலுக்குச் சொன்னார். ஒருவனும் உன் மேல் கைபோடுவதில்லை என்றார். ஒருமுறை தேவனால் அழைக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டு, பிறகு தேவனுடைய வழியை விட்டு விலகினால் கூட தேவன் மற்றவர்கள் கைபோடவோ, துன்புறுத்தவோ விடமாட்டார். இதைத்தான் தாவீது சொல்லுகிறார் 1 சாமு 26:9-ல் கர்த்தர் அபிஷேகம் பண்ணுவித்தவர் மேல் தன் கையைப் போட்டு குற்றமில்லாமல் போகிறவன் யார்? என்றார். ஆம் சவுலைக் கூட யாரும் கைபோட விடவில்லை. இன்றைக்கு தேவனால் அழைக்கப்பட்டு, அபிஷேகம் பண்ணப்பட்டவர்களுக்கு தேவனுடைய பாதுகாப்பு இருக்கிறது.

உங்கள் கால் கல்லின் மேல் மோதாதபடிக்கு தூதர்களுக்கு கட்டளையிடுவார் என்று சங்கீதம் 91-ல் சொல்லப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல எபி 1:14-ல் இரட்சிப்பை சுதந்தரிக்கப் போகிறவர்களின் நிமித்தமாக ஊழியம் செய்யும்படி அவர்கள் எல்லாரும் அனுப்பப்படும் பணிவிடை ஆவிகளாயிருக்கிறார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. யோசுவா தேவனால் அழைக்கப்பட்டு, ஞானத்தின் ஆவியால் அபிஷேகம்பண்ணப்பட்டு தேவ ஊழியத்தை செய்தபடியால் கர்த்தருடைய கரம் அவரோடிருந்தது. இன்றைக்கு ஒரு பிரதம மந்திரியோ, ஜனாதிபதியோ, முதலமைச்சரோ ரோட்டில் நடந்து சென்றால் அவர்களுக்கு எந்த இடையூறும் இல்லாமல், தடையும் இல்லாமல் ஆங்காங்கே காவல் துறையினர் ரோட்டில் நின்று சரி செய்கின்றனர் அல்லவா அது போலத்தான் யோசுவா ஜனங்களை நடத்தும் போது கர்த்தர் இரவிலே அக்கினி ஸ்தம்பம் மூலமாகவும், பகலிலே மேகஸ்தம்பம் மூலமாகவும் பலத்த பாதுகாப்போடு யோசுவாவையும், இஸ்ரவேல் ஜனங்களையும் நடத்திக் கொண்டு சென்றார். அதினால் ஒருவனும் குறுக்கே வரவோ, வீணாக தலையிடவோ, எதிர்க்கவோ விடவில்லை. அதனால் தான் சொன்னார் நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை என்றார். இன்றைக்கு இந்த செய்தியை வாசிக்கின்ற அன்பு சகோதர, சகோதரிகளே இந்த புதிய வருடத்திலே தேவனுடைய பலத்த கையினால் நீங்கள் ஆதரிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு நீங்கள் அற்புதமாய், ஆச்சரியமாய் நடத்தப்படுவீர்கள். உங்கள் வேலையில், உங்கள் வியாபாரத்தில், உங்கள் தொழிலில், உங்கள் பிள்ளைகளின் படிப்பில்,பணத்தேவைகளில், நெருக்கடியைக் கொடுக்கிற, எதிர்ப்பைக் கொடுக்கிறஎல்லாக் காரியங்களையும் மாற்றி தேவன் அற்புதமாய் நடத்துவார்.

கவலைப்படாதிருங்கள், அதனால் தான் தேவன் சொன்னார் ஒருவனும் உங்களை எதிர்த்து நிற்பதில்லை என்று யோசுவாவுக்கு வாக்கு கொடுத்தார். அந்த வார்த்தையை தேவன் இந்த 2024-ல் உங்களுக்கு கொடுத்து,உங்களை அற்புதமாய் நடத்துவார். மட்டுமல்ல சங் 105:37-ல் அப்பொழுது அவர்களை வெள்ளியோடும் பொன்னோடும் புறப்படப் பண்ணினார். அவர்கள் கோத்திரங்களில் பலவீனப்பட்டவன் ஒருவனும் இருந்ததில்லை என்றார். ஒருவனுமில்லை என்றவர் இந்த வருஷத்திலே யாருக்கும் எதிலும் எந்த ஒரு பாதிப்பும் வராமல் ஆவியிலே, ஆத்துமாவிலே, சரீரத்திலே நல்ல பெலத்தை, சுகத்தை, ஆரோக்கியத்தைக் கட்டளையிடுவார். தேவையில்லாத மருத்துவ செலவையும், போராட்டங்களையும் மாற்றி நல்ல பெலத்தையும், சுகத்தையும் தந்து ஆசீர்வதித்து நடத்துவார். அவர்கள் கோத்திரங்களில் பெலவீனப்பட்டவன் ஒருவனும் இல்லை என்ற வார்த்தையின்படி எந்த ஒரு பெலவீனமும் யாருக்கும் வராதபடிக்கு ஒருவனும் பலவீனன் அல்ல என்று சொல்லுகிற அளவுக்கு சுகத்தையும், ஆரோக்கியத்தையும் தந்து இந்த புதிய வருடத்திலே உங்களை அற்புதமாய், ஆச்சரியமாய் நடத்துவார்.ஒருவனும் எந்த காரியத்திலும் உங்களை எதிர்த்து நிற்பதில்லை என்ற வார்த்தையின்படி தேவ கிருபையால் ஆசீர்வதித்து நடத்துவார்.