Inspiration

நீ பயப்படாதே நான் உன்னோடு இருக்கிறேன்

நீ பயப்படாதே நான் உன்னோடு இருக்கிறேன். ஏசாயா 41:10
நான் உன்னோடு இருக்கிறேன் ஏசாயா 41:10
ஆண்டவரும் உலக இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள். தேவனுடைய பெரிதான கிருபையினால் இந்த மாத இதழ் மூலமாக உங்களைச் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். நாம் கடந்து வந்த எல்லா வழிகளிலும், நாம் கடந்து வந்த எல்லா ஜனங்களுக்குள்ளும் நம்மைக் காப்பாற்றினவர் நம்முடைய தேவனாகிய கர்த்தர் தாமே. யோசுவா 24:17–ல் சொல்லப்பட்டுள்ள வார்த்தையின்படி கர்த்தர் இந்த 2022-ஆம் ஆண்டு முழுவதும் நம்மை கிருபையாய் நடத்தி வந்தார். எத்தனை போராட்டங்கள், இழப்புகள், வேதனைகள், கொடிய கொள்ளை நோயின் தாக்கம் இருந்தாலும் கர்த்தர் நம்மை கண்மணி போல காத்தார் அவருக்கே மகிமை உண்டாவதாக. கடந்த அக்டோபர் மாதத்தில் நடைபெற்ற சுவிசேஷ பயிற்சிப் பள்ளியில் ஏறக்குறைய 53 பேர் கலந்து கொண்டு ஆசீர்வதிக்கப்பட்டார்கள். சகோதரர். வின்சென்ட் செல்வகுமார், சகோதரர். வெஸ்லி மேக்ஸ்வெல், பாஸ்டர். ஜான்.கே, பாஸ்டர். ராஜாசேகர், சகோதரர். ஜான்நல்லமுத்து மற்றும் டாக்டர். செல்வின் இன்னும் பலர் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர். சுவிசேஷ பயிற்சிப் பள்ளியில் கலந்து கொண்டு பயிற்óசி பெற்று செனóற ஒரு சகோதரி அடுத்த வாரத்தில் சுவிசேஷ ஊழியம் செய்ய சென்ற போது தன்னுடைய சிறுவயதிலேயே தகப்பனும், தாயும் பிரிந்து விட்டதால் தகப்பன் முகம் பார்க்காத அந்த சகோதரி, ஒரு வீட்டிற்குச் சென்று சுவிசேஷம் அறிவித்த போது அந்த தகப்பனார் பெயர், மற்றும் சொந்த ஊர் எல்லாவற்றையும் விசாரித்த போது அவர் தன் அப்பா என்று அறிந்து, தான் அவருடைய மகள் என்பதை அவருக்கு விளக்கிச் சொல்லி தகப்பனாரும், மகளும் ஒப்புரவாகி, குடும்பம் ஒன்று சேர்ந்ததை சாட்சியாக அறிவித்தார்கள். சுவிசேஷம் பிரிந்த மனிதனையும், குடும்பத்தையும் எப்படி இணைக்கிறது பாருங்கள். இப்படி நாமும் சுவிசேஷ ஊழியம் செய்யும் போது தான் பிரிந்த குடும்பங்கள் இணைக்கப்படும். தொடர்ந்து வானத்தின் வாசலில் நடைபெற்ற உபவாச ஜெபம், மதுரையில் நடந்த எழுப்புதல் உபவாச ஜெபங்கள் எல்லாம் மிகுந்த ஆசீர்வாதத்தைக் கொண்டு வந்தது. மேலும் கர்த்தாவே என்னை கைதூக்கி விடும், இயேசுவை தினம் பார்ப்போம், சுவிஷே ஒளி என்ற நமது வர்ன் பன்க்ஷங் நிகழ்ச்சிகளை தேவன் ஆசீர்வதித்து நடத்தவும், திரளான மக்கள் நிகழ்ச்சியைப் பார்த்து இரட்சிக்கப்படவும், இன்னும் தேவ பெலத்தோடு ஊழியம் செய்ய எங்களுக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள். இந்த மாதம் முழுவதும் கர்த்தருடைய பாதத்தில் காத்திருக்க தேவன் கிருபை செய்திருக்கிறார். தொடர்ந்து உங்கள் ஜெபத்தாலும், காணிக்கையினாலும் இந்த ஊழியத்தை தாங்க மறவாதிருங்கள். கர்த்தர் உங்களுக்குப் போதுமானவராக இருந்து ஆசீர்வதித்து உங்களை நடத்துவாராக. தலைப்பு – நீ பயப்படாதே நான் உன்னோடு இருக்கிறேன். ஆண்டவரும் உலக இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள். தேவனுடைய பெரிதான கிருபையினால் இந்த செய்தியின் மூலமாக உங்களைச் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். வருடத்தின் கடைசி மாதத்தில் வந்திருக்கிறோம். பயங்கரமான பாதைகள், நாசமோசங்கள் நமக்கு வந்தபோதும் நம் கூட இருந்தவர் ஆண்டவராகிய இயேசு ஒருவரே. அவருடைய பெயரே, நாமமே இருக்கிறவராகவே இருக்கிறேன் என்றார். தலைமுறை தலைமுறையாக என்னுடைய நாமம் இதுவே என்றார். இன்றைக்கு இந்த உலகத்தில் எத்தனையோ மனிதர்கள் தோன்றினார்கள். நாங்கள் இந்த உலகத்தில் பெலவான்கள், நிரந்தரமானவர்கள், எங்களை யாரும் அசைக்க முடியாது என்றார்கள். தங்களை தேவன் போல் உயர்த்திக் கொண்டு, கடவுளைப் போல் நடித்துக் கொண்டு ஜனங்களை ஏமாற்றி வஞ்சித்தார்கள். ஆனால் இருக்கின்ற இடம் தெரியாமல் போனார்கள். இன்றைக்கு நாம் பின்பற்றுகிற தேவன் உயிரோடு இருக்கிறார். வேதம் சொல்லுகிறது வெளி 1:18-ல் மரித்தேன், ஆனாலும் இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன் என்றார். மத் 28:20-ல் இதோ, உலகத்தின் முடிவு பரியந்தமும் சகல நாட்களிலும் நான் உன்னுடனே கூட இருக்கிறேன் என்றார். ஆம் பிரியமானவர்களே, அவர் இருக்கிறவர், இருந்தவர், இனிமேல் வரப்போகிறவர் என்றார். அவர் இந்த பூமியில் வாழும் மனிதர்களோடு வாழ்வதற்காகத்தான், அவர்கள் கூட இருப்பதற்காகத்தான், நம் மேல் வைத்த அன்பினால் நமக்குள்ளே வாசம்பண்ண, நம் கூட இருக்க இம்மானுவேல் என்ற பெயரோடு இந்த பூமிக்கு இறங்கி வந்தார். இம்மானுவேல் என்றால் கடவுள் நம்மோடு இருக்கிறார், தேவன் நம்மோடு இருக்கிறார் என்று அர்த்தமாம் மத் 1:23. உலக மனிதர்கள் சொல்லுவார்கள் கடவுள் தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என்று. அவர் ஜீவனுள்ள தேவன், எந்த மனிதனுக்குள் ஜீவன் இருக்கிறதோ, எந்த மனிதனுடைய ஆத்துமாவில் ஜீவன் இருக்கிறதோ அவர்களோடு தான் இருப்பார். அதனால் தான் அவர் இம்மானுவேல் என்று வேதம் நமக்குச் சொல்லுகிறது. இதைத்தான் உலகம் முழுவதும் டிசம்பர் மாதம் 25-ஆம் தேதியில் கிறிஸ்துமஸ் தினம் என்று கொண்டாடுகிறார்கள். எனக்கு அருமையானவர்களே பல வேளைகளில் நாம் கலங்கி பயந்து தேவன் மேல் நம்பிக்கை வைக்க முடியாமல் எனக்கு அது இல்லையே, இது இல்லையே, வருமானம் இல்லையே, தொழில் இல்லையே, எனக்கென்று யார் இருக்கிறார்கள்?, கூடப்பிறந்தவர்கள் இல்லையே என்று புலம்பலாம், குறைவுபட்டுக் கொள்ளலாம். நீங்கள் பயப்படாதிருங்கள் நான் இருக்கிறேன். பயப்படாதிருங்கள் நான் உங்களைபó பார்த்துக்கொள்வேன் என்றார். நமக்குப் பூமியிலே ஆயிரம் பேர் இருப்பதைக் காட்டிலும் இயேசு நம்மோடு இருப்பதுதான் நமக்கு மேன்மை. நீங்கள் தனிமையில் இருக்கின்றீர்களா?, என் சூழ்நிலைகள் யாருக்கும் தெரியாது என்று மனதிலே குமுறிக் கொண்டிருக்கிறீர்களா? நான் தனிமனிதன் வீட்டில் உள்ள பொறுப்பு எல்லாம் என் தலைமேல் தான் விழுந்திருக்கிறது, நான் மிகவும் நெருக்கப்படுகிறேன் என்று சொல்லுகிறீர்களா? பயப்படாதிருங்கள் நான் இருக்கிறேன் என்று ஏசாயா 41:10-ல் சொன்னவர் இன்றைக்கும் உங்களோடு இருக்கிறார். பழைய ஏற்பாட்டிலே யோசேப்பு என்ற தேவ மனிதன் இருந்தார். அவன் கூட பிறந்த சகோதரர்கள் அவன் தகப்பன், அவர் மேல் அன்பாயிருக்கிறார் என்று பொறாமைக் கொண்டு, எரிச்சல் அடைந்து அவனை உயிரோடே ஒரு பாழ்கிணற்றில் தள்ளிவிட்டார்கள். அதில் ஒருவன் இரக்கப்பட்டு அவனை தூக்கி எடுத்து, பின்பு எகிப்தியருக்கு அடிமையாக விற்றுவிட்டார்கள். அங்கும் அவனுக்கு வேதனைகள் தான். பொய்குற்றம் சுமத்தப்பட்டு சிறைச்சாலையில் தள்ளி விட்டார்கள். கேப்பாரற்று அந்நிய தேசத்தில் அனாதையாக இருந்த போது தான் கர்த்தர் அந்த சிறைச்சாலையில் அவன் கூட இருந்து அவனைத் தேற்றி, ஆறுதல்படுத்தி எல்லா உபத்திரவங்களிலிருந்து அவனைத் தப்புவித்தார். வேதம் சொல்லுகிறது அப் 7:10-ல் தேவனோ, அவனுடனே கூட இருந்து எல்லா உபத்திரவங்களினின்றும் அவனை விடுவித்து, எகிப்தின் ராஜாவாகிய பார்வோன் சமூகத்திலே அவனுக்கு கிருபையும், ஞானத்தையும் அருளினார். அந்த ராஜா அவனை எகிப்து தேசத்திற்கும், தன் வீடனைதóதிற்கும் அதிகாரியாக ஏற்படுத்தினார். எந்த இடத்தில் அவமானப்பட்டு தலைகுணிந்து ஒடுக்கப்பட்டாரோ அதே இடத்தில் ஆண்டவராகிய தேவன் அவனோடே கூட இருந்து அவன் தலையை உயர்த்தினார். அவனை நிந்தித்து அவமானப்படுத்தியவர்களுக்கு முன்பாக பெயரும், புகழும் வரும்படி, மேன்மை வரும்படிச் செய்தார். அந்த தேவன் இன்றைக்கும் உயிரோடு இருக்கிறார், உனக்காகவே இருக்கிறார். அன்றைக்கு யோசேப்புக்கு நன்மை செய்து நிந்தையையும், அவமானத்தையும் மாற்றினவர், இன்றைக்கு உன் கூட இருந்து உனக்கும் அப்படிச் செய்வார். வேதம் சொல்லுகிறது எபிரே 13:8-ல் அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். அவர் உன் கூட இருந்து உன்னைத் தப்புவித்து, இரட்சித்து ஜெயம் தந்து, எவர்கள் உனக்கு விரோதமாய் இருக்கிறார்களே, அவர்கள் உன் பட்சமாய் வர உதவி செய்வார். உன் துக்கநாட்கள், உன் துயரத்தின் நாட்கள் இந்த டிசம்பர் மாததóதோடு முடிவடையும்படிச் செய்வார். பயப்படாதே, நான் இருக்கிறேன் என்றவர், அவர் உன் கூட இருந்து உன்னை கரை சேர்ப்பார். உனக்கு குறித்திருக்கிறதை எல்லாம் நிறைவேற்றுவார். போகட்டும் எப்படியெல்லாம் தேவன் நம்மோடு இருக்கிறார், எங்கு எல்லாம் இருக்கிறார் என்பதைப் பார்ப்போம். மரண இருளின் பள்ளத்தாக்கிலே நம்மோடு இருக்கிறார். நான் மரணஇருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன், தேவரீர் என்னோடே கூட இருக்கிறீர் சங் 23:4. பயப்படாதே இருக்கிறேன் என்றவர் எங்கே? எப்படி? எல்லாம் நம்மோடு இருக்கிறாராம், மரணஇருளின் பள்ளத்தாக்கிலே நாம் நடக்கும் போது தேவரீர் என் கூட இருக்கின்றீர். மரணஇருளில் இருந்த சவுல் ராஜாவும், இஸ்ரவேல் ஜனங்களும் நாற்பது நாள் கோலியாத்தால் மிரட்டப்பட்டார்கள், பரியாசம் பண்ணப்பட்டார்கள், தங்கள் எதிரிகளால் நிந்திக்கப்பட்டார்கள். இப்படி மரணபயத்தில் இருந்த இஸ்ரவேல் ஜனங்களையும், சவுல் ராஜாவையும் பார்த்து தாவீது இவன் பொருட்டு யாரும் கலங்க வேண்டியதில்லை நான் அவனை கொன்று போடுவேன் என்று சொல்லி, தன் உயிரையும் பொருட்படுத்தாமல் கோலியாத்தை வீழ்த்தினான். இந்த ஒரே காரியத்திற்காக தாவீது சவுலால் பகைக்கப்பட்டார், வெறுக்கப்பட்டார். காரணம் ஜனங்கள் சவுல் ராஜாவைவிட தாவீதை மிகவும் நேசித்தார்கள். இதின் நிமித்தம் சவுல் பலமுறை தாவீதை ஈட்டியால் குத்தவும், சவுலால் வீட்டை விட்டு, தேசத்தை விட்டு துரத்தப்பட்டார். ஓர் இடத்தில் அவர் சொல்லுகிறார் மரணதóதிற்கும் எனக்கும் ஒரு அடி தூரம் தான் இருந்தது என்று. தப்புவேனா, பிழைப்பேனா என்ற துயரத்தின் பாதையில் போகும் போது தான், அவர் தேவனை நோக்கி முறையிடுகிறார். தேவனே எனக்கு இரங்கும் நான் ஆடு மேய்த்த போதுதான் கொடிய மிருகங்களின் கையில் சிக்கினேன். ஒருவிசை கரடியும், ஒரு விசை சிங்கமும் என்னைக்கொன்று போட வந்தது அவைகளிலிருந்து எல்லாம் நீர் என்னைத் தப்புவித்து காப்பாற்றினீர். இனி பிரச்சனை இல்லை நான் வீட்டிற்கு வந்து விட்டேன் என்று நினைத்தால் அந்த காட்டில் உள்ள மிருகங்களிலும் கொடிய மனிதன் இங்கே இருக்கிறான். சவுல் மாத்திரமல்ல அவன் சேவகரும், அடியாட்களும் என்னைத் துரத்துகிறார்கள். ஒரு மிருகத்தை வேட்டையாடுவதைப் போல் என்னை வேட்டையாடுகிறார்கள் என்று மரணஇருளின் பள்ளத்தாக்கிலிருந்து தேவனை நோக்கி கூப்பிட்டார். அப்பொழுது தேவன் தாவீதை நோக்கி நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன், ஒரு வழியாய் உனக்கு விரோதமாய் வருகிறவர்கள் ஏழு வழியாய் சிதறிப்போவார்கள். உன்னை தப்புவிக்கவும், இரட்சிக்கவும் நான் உன்னோடே இருக்கிறேன் என்றார். இன்றைக்கு உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் கொள்ளை நோய்களைக் குறித்த பயத்தோடும், திகிலோடும், மரண பயத்தோடும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட மரணஇருளின் பள்ளத்தாக்கில் நடந்து வேதனைப்படுகின்ற ஒவ்வொருவருக்கும் பாதுகாப்பையும், விடுதலையையும் தரத்தான் இயேசு இந்த பூமிக்கு இறங்கி வந்தார். நான் இம்மானுவேலராய் உங்களோடு இருப்பேன் என்றார். அவர் முதலாவது தேவாலயத்தில் பிரசங்கம் செய்கிற போது ஆலயத்தில் சொன்னார் மத் 4:15-ல் இருளில் இருக்கும் ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள், மரண இருளின் திசையிலிருக்கிறவர்களுக்கு வெளிச்சம் உதித்தது என்றார். இன்றைக்கு அந்த இயேசு நம்மோடு இருந்தால் நம் தனிமையில், மனிதர்களால் அல்லது மருத்துவர்களால் கைவிடப்பட்ட நிலையில் நம்மை எந்த இருளும் நெருங்காமல், சூழ்ந்து கொள்ளாமல் நம்மை பாதுகாப்பார். அதற்குத்தான் அவர் இருக்கிறவராகவே இருக்கிறேன் என்றார். அந்த தேவன் உங்களோடிருந்து எல்லா மரண கண்ணிக்கும், மரண பயத்திற்கும் விலக்கி நம்மை பாதுகாப்பார். அதனால் தான் தாவீது தேவரீர் என்னோடே கூட இருக்கிறீர், நான் பொல்லாப்புக்கு பயப்படமாட்டேன் என்றார். என் ஆண்டவராகிய தேவன் தாமே உங்களோடிருப்பாராக. ஜீவனாய் இருக்கிறேன் என்றார். நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன் யோவான் 14:6. இருக்கிறவராகவே இருக்கிறேன் என்றவர் அடுத்து அவர் நமக்கு ஜீவனாக இருக்கிறார். யோவான் 1:4 சொல்லுகிறது அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது என்று சொல்லப்பட்டுள்ளது. அது மாத்திரமல்ல 1 யோவான் 5:12-ல் குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன் என்று சொல்லப்பட்டுள்ளது. வேதம் சொல்லுகிறது பாவம் செய்கிற ஆத்துமா சாகும். பாவங்களினாலும், அக்கிரமங்களினாலும் மரித்தவர்களாய் இருந்த நம்மை உயிர்ப்பித்தார் என்று எபே 2:1 சொல்லுகிறது. இன்றைக்கு அநேகர் ஜீவன் இல்லாமல், தேவனோடு தொடர்பு இல்லாமல், அவருடைய பிரசன்னத்தை அனுபவிக்க முடியாமல், அவருக்கு முன்பாக நிற்க முடியாமல், செயல் இழந்தவர்களாக எந்த ஒரு நற்கிரியைகளையும் செய்ய முடியாதவர்களாக, தேவன் நம்மை உண்டுபண்ணின நோக்கத்தை மறந்து, சித்தத்தை மறந்து பலவீனரும், உயிரற்றவர்களுமாய் இருக்கிறோம். இப்படிப்பட்ட ஜீவனற்ற நிலையில் வாழுகின்ற நமக்கு ஜீவனாய் இருக்கத்தான் இயேசு சொன்னார் யோவான் 11:25-ல் நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன் என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான் என்றார். செயல் இழந்த ஒரு உறுப்பு முதலில் என்னவாகும்? அது கோமாவில் இருக்கும், நாளடைவில் அது பழுதடைந்து மரித்துவிடும். இப்படியாகத்தான் நம்முடைய ஆத்துமாவும் இருக்கிறது. ஆனால் அப்போஸ்தலனாகிய பவுல் சொல்லுகிறார் பõலிப்பியர் 1:21-ல் கிறிஸ்து எனக்கு ஜீவன் என்று. அவர் நமக்குள் இருந்தால் நாம் பரலோக ராஜ்ஜியத்தில் ஜீவனுடையவர்கள். சங் 27:1-ல் தாவீது சொல்லுகிறார் கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர் என்று. அவர் உங்களுக்குள் இருந்து உங்களை வழிநடத்தினால் உங்களால் சொல்ல முடியும் தேவன் எனக்கு ஜீவனாயிருக்கிறார் என்று. இருக்கிறவராகவே இருக்கிறேன் என்றவர் நமக்கு ஜீவனாய் இருக்கிறார். மட்டுமல்ல நம்முடைய சரீரத்திற்கும் ஜீவனாய் இருக்கிறார். வேதம் சொல்லுகிறது மத் 26:41-ல் மாமóசமோ பலவீனமுள்ளது என்றும், ரோமர் 6:10,11 சொல்லுகிறது கிறிஸ்து உங்களிலிருந்தால் சரீரமானது பாவத்தின் நிமித்தம் மரித்ததாயும் ஆவியானது நீதியினிமõத்தம் ஜீவனுள்ளதாயும் இருக்கும். அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால் கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார் என்று சொல்லப்பட்டுள்ளது. சாவுக்கேதுவான சரீரங்கள், கொடிய கொள்ளை நோய்கள், விஷ கிருமிகளால் ஜனங்கள் பாதிக்கப்படுகிறார்கள். வேதாகமத்தில் யோபு என்ற பக்தன் இப்படியாகத்தான் கொடிய வியாதியினால் பாதிக்கப்பட்டான். சரீரமெல்லாம் கொடிய புண்கள் மட்டுமல்ல சில பகுதிகள் அழுகி கெட்டுப் போய்விட்டது. அந்த நாட்களில் மருத்துவரோ, மருத்துவமனையோ இல்லை, எவ்வளவு வலியில் துடித்திருப்பார். தூக்கமில்லை, கூட இருந்தவர்களால் பரியாசம் பண்ணப்பட்டார். இப்படிப்பட்ட நிலையில் தான் தேவன் மேல் நம்பிக்கை வைத்து விசுவாசத்தோடு சொன்னார் என் மீட்பர் உயிரோடு இருக்கிறார் என்று. யோபு 19:25. இதனுடைய அர்த்தம் என்ன?, நான் பின்பற்றுகிற தேவன் ஜீவனோடிருக்கிறார். உயிரோடிருக்கிறார். ஆகவே அவர் என்னையும் உயிரோடு காப்பாற்றுவார், அவர் உயிரோடு இருக்கிறார் என்றார். தேவன் அவரை காப்பாற்றினாரா? ஆம் அவர் விசுவாசத்தின்படி, நம்பிகóகையின்படி நல்ல பெலத்தையும், சுகத்தையும் தந்து சாவுக்கேதுவான சரீரங்களை உயிர்ப்பித்து அவருக்கு ஜீவனாய் இருந்தார். ஆகவே தான் அவரால் சொல்ல முடிந்தது என் மீட்பர் உயிரோடு இருக்கிறார் என்று. கேன்சர் வியாதிக்கு சிகிச்சை அளிக்கும் ஒரு மருத்துவரின் சாட்சியை கேட்டேன். அவர் அந்த கொடிய கிருமிகள் தாக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சை அளித்த போது இவர்கள் பிழைக்க மாட்டார்கள் இன்னும் 1 வருடம் தான் உயிரோடிருப்பார்கள் என்று தன்னுடைய மருத்துவ படிப்பின்படி கணித்துவிடுவார். அப்படிப்பட்ட சிலரை அவர் பல வருஷங்களுக்கு பிறகு உயிரோடு பார்த்து பிரமித்துப் போனார். நீங்கள் எப்படி உயிரோடு இருக்கிறீர்கள் என்றார். எல்லாம் கடவுளின் கிருபை. ஜெபத்தோடு சில பச்சிலைகளைச் சாப்பிட்டேன் தேவன் என்னை சுகமாக்கினார் என்றார்கள். மனிதர்கள், மருத்துவர்கள் நம்மைக் கைவிட்டாலும் தேவன் நம்மை கைவிடாதவராய் இருக்கிறார். மட்டுமல்ல தானியேல் 3:17-ல் ராஜாவின் கோபத்தினால் நெருப்புச் சூளையில் தள்ளப்பட்டார்கள் மூன்று வாலிபர்கள், தேவன் அவர்களோடு இருந்தபடியால் ஒரு சேதமும் இல்லாமல் ராஜாவைப் பார்த்து சொன்னார்கள் நாங்கள் ஆராதிக்கின்ற தேவன் எங்களை தப்புவிக்க வல்லவராய் இருக்கிறார் என்று. ஒரு சேதமும் இல்லாமல் உயிரோடு பாதுகாக்கப்பட்டார்கள். இந்த செய்தியை வாசித்துக் கொண்டிருக்கும் என் அன்பு சகோதரனே, சகோதரியே ஏதோ ஒரு வியாதி, ஏதோ ஒரு பலவீனம், ஏதோ ஒரு சாத்தானின் போராட்டத்தில் நீங்கள் செத்து மடிபவர்களைப் போல காணபóபடலாம். இதினிமித்தம் நீங்கள் கலஙóகிப் பயந்து ஒவ்வொரு மருத்துவராகப் பார்த்து, அலைந்து பணத்தை செலவழித்தும் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாமல் இருக்கலாம் பயப்படாதிருங்கள் நான் இருக்கிறேன். தலைமுறை தலைமுறையாக என்னுடைய நாமம் இருக்கிறவராகவே இருக்கிறேன் என்றவர் உங்கள் கூட இருந்து பலத்த அற்புதங்களைச் செய்யப் போகிறார். சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களை உயிர்ப்பிப்பார். உங்கள் எந்த வியாதியாக இருந்தாலும் அவரால் குணமாக்க, சுகமாக்க, ஜீவனைக் கொடுக்க முடியும், உயிர்ப்பிக்க முடியும். இயேசு சொன்னார் யோவான் 11:4-ல் இந்த வியாதி மரணத்திற்கு ஏதுவாயிராமல் தேவனுடைய மகிமை விளங்குவதற்கு ஏதுவாயிருக்கிறது என்றார். எப்படி லாசருவுக்கு ஜீவனாயிருந்து உயிரோடு எழுப்பினாரோ அந்த தேவன் உங்களுக்கும் இரங்கி ஜீவனாய் இருப்பார். அவர் உங்களை உயிரோடு காப்பார். சாந்தமாக, மனத்தாழ்மையாக, பணிவிடைக்காரனாக மற்றும் அன்பாகவே இருக்கிறார். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன் மத் 11:29. இருக்கிறவராகவே இருக்கிறேன் என்றவர், மரணஇருளின் பள்ளத்தாக்கில் நடந்தபோது நம்மோடு இருந்தார், அடுத்து நமக்கு ஜீவனாய் இருந்தார், அடுத்ததாக நான் மனத்தாழ்மையாக இருக்கிறேன் என்றார். வெளிவேடத்தில் ஒருவேளை மனிதன் ஆடம்பரம் இல்லாமல் தாழ்மையாக இருப்பதைப் போல் காணப்படலாம், ஆனால் மனதிலே, இருதயத்திலே தாழ்மை இருக்குமா? என்பது தெரியாது. இயேசுவின் வாழ்க்கையைப் பாருங்கள் வானத்தையும், பூமியையும் படைத்த தேவன் கோடான கோடி தூதர்களின் மத்தியில் வாழ்ந்தவர், அவர் சொன்னால் ஆகும், கட்டளையிட்டால் நிற்கும் அப்படிப்பட்ட தேவன் தம்முடைய பன்னிரண்டு சீஷர்களையும் வரிசையாக உட்கார வைத்து அவர்கள் கால்களை கழுவவும், துடைக்கவும் தொடங்கினார். யோவான் 13:14-ல் ஆண்டவரும், போதகருமாகிய நானே உங்கள் கால்களைக் கழுவினதுண்டானால் நீங்களும், ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள் என்றார். அது தான் மனத்தாழ்மை, இன்றைக்கு இந்த மனத்தாழ்மை இருந்தால் தான் நம்மேல் கிருபை நிலைத்திருக்கும். அப்போஸ்தலனாகிய பவுலின் வாழ்க்கையைப் பாருங்கள் மரித்தவர்களை உயிரோடு எழுப்பினவர், இயற்க்கைக்கு மேற்பட்ட அற்புதங்களைச் செய்தவர் எப்படி இயேவை பின்பற்றினேன் என்று சொல்லுகிறார் அப் 20:19-ல் வெகு மனத்தாழ்மையோடும், மிகுந்த கண்ணீரோடும், யூதருடைய தீமையான யோசனைகளால் எனக்கு நேரிட்ட சோதனைகளோடும் நான் கர்த்தரை சேவித்தேன் என்றார். அதுமாத்திரமல்ல 2 கொரி 11:25-27-ல் மூன்று தரம் மிலாறுகளால் அடிபட்டேன், ஒரு தரம் கல்லேறியுண்டேன், அநேக பிரயாணம் பண்ணினேன், ஆறுகளால் வந்த மோசங்கள், கள்ளரால் வந்த மோசங்கள், என் சுயஜனங்களால் வந்த மோசங்கள் என்று தன்னுடைய பாடுகளைத்தான் மேன்மைப்படுத்துகிறாரே தவிர, தான் தன்னுடைய ஊழியத்தில் நடந்த அற்புதங்களைச் சொல்லி தன்னை மேன்மைப்படுத்தவில்லை. அதனால் தான் அவரை கர்த்தர் வல்லமையாய் பயன்படுத்தினார். தேவனைப் பின்பற்றுகிற நம்மிடத்தில் இதைத்தான் எதிர்பார்க்கிறார். வேதத்தை வசித்துப் பாருங்கள் மீகா 6:8-ல் மனுஷனே, நன்மை இன்னதென்று அவர் உனக்கு அறிவித்திருக்கிறார். நியாயஞ்செய்து, இரக்கத்தை சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாக நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தை கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார் என்று தன் எதிர்பார்ப்பை நமக்கு சொல்லியிருக்கிறார். இந்த மனத்தாழ்மை ஆபிரகாமுக்கு இருந்தது. தன்னோடு கானானுக்கு வந்த தன் அண்ணன் மகன் லோத்து, ஆபிரகாமின் நிமித்தம் அவன் தொழில், ஆடு, மாடு மந்தை பெருகின போது வேலைக்காரர்களை விட்டு லோத்து வாக்குவாதம் பண்ணினான். இதை தெரிந்து கொண்ட ஆபிரகாம் நாம் சகோதரர் நமக்குள் வாக்குவாதம் வேண்டாம், நீ இடதுபக்கம் போனால், நான் வலது பக்கம் போகிறேன், நீ வலதுபக்கம் போனால், நான் இடது பக்கம் போகிறேன் என்று அவன் கேட்காமலே பொனóவிளையும், இடத்தையும் விட்டுக்கொடுத்தான். ஆதியாகமம் 13-ஆம் அதிகாரம் முழுவதும் அப்படிச் சொல்லுகிறது. அவ்வளவு வசதி இருந்தும் பொன் விளையும் பூமி இருந்தும், அதன் பிறகு லோத்தின் வாழ்க்கை சின்னா பின்னமாகி ஒன்றுமில்லாத பரதேசியைப்போல ஆகிவிட்டான். காரணம் பெருமை, அகந்தை, மனத்தாழ்மை இல்லை. ஆனால் ஆபிரகாமோ மனத்தாழ்மையாக தேவனுக்கு முன்பாக நடந்து, பூமி முழுவதையும் சுதந்தரித்து கொண்டு தேவனால் உயர்த்தப்பட்டார். காரணம் அவருக்குள் இருந்த தேவன் மனத்தாழ்மையுள்ளவராக இருந்தபடியால் இவரையும் மனத்தாழ்மையுள்ளவராக மாற்றினார். அது மாத்திரமல்ல ஆண்டவராகிய இயேசு சாந்தமாய் இருக்கிறேன் என்றார். இருக்கிறவராகவே இருக்கிறேன் என்றவர் சாந்தமுள்ளவராக இருக்கிறார். வேதத்தை வசித்துப் பாருங்கள் ஏசாயா 53:7-ல் அவர் நெருக்கப்பட்டும், ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும், அவர் தம்முடைய வாயை திறக்கவில்லை, அடிக்கப்படும்படி கொண்டு போகப்படுகிற ஒரு ஆட்டுக் குட்டியைப் போலவும், தன்னை மயிர்கத்தரிக்கிறவனுக்கு முன்பாக சத்தமிடாதிருக்கிற ஆட்டைப் போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார். அது தான் சாந்தம், இந்த அதிகாரத்தை வாசித்த போது தான் அப்போஸ்தலர் 8-ஆம் அதிகாரத்தில் எத்தியோப்பியா மந்திரி பொருளாதார அமைச்சர் வாசித்து தொடப்பட்டு பிலிப்புவினாலó தேவனன்டைக்கு வழி நடத்தப்பட்டார், இரட்சிக்கப்பட்டார். மோசேயின் வாழ்க்கையைப் பாருங்கள் அவன் தேவனை அறியாததற்கு முன்பு ஒரு கோபக்காரன், தன் இனத்தார் யாராவது மற்றவர்களால் துன்பப்படுத்தப்பட்டால், வேதனைப்படுத்தப்பட்டால் அவர்களை எதிர்த்துப் போராடி கொலை செய்து விடுவார். உதவி செய்பவன் என்ற பெயரிலே கோபவெறியோடு அலைந்தான். ஆனால் கர்த்தர் அவனை சந்தித்து உன் கையில் இருக்கிற அந்தக் கோலை கீழே போடு, உன் கோபத்தை, பழிவாங்குகிற பழக்கத்தை, குணத்தை, உன் சுபாவத்தை கீழே போடு என்றார் போட்டவுடனே அது பாம்பாக மாறிவிட்டது, அப்போது தான் மோசேக்கு தெரிந்தது இவ்வளவு நாள் பாம்பை சுமந்து வைத்திருக்கிறேன் என்று அதைக் கண்டு விலகி ஓடினான். அதன் பிறகு கர்த்தர் அவனைச் சந்தித்து உடைத்து உருவாக்கி அவனிலும் பலத்த கோபக்காரனாய் இருந்த பார்வோனிடத்தில் அனுப்பி மோசேயை உருவாக்கி எடுத்தார். அதன் பிறகு கர்த்தர் அவரைக் குறித்து சாட்சிக் கொடுக்கிறார். எண் 12:3-ல் மோசேயானவன் பூமியிலுள்ள சகல மனிதரிலும் மிகுந்த சாந்த குணமுள்ளவனாயிருந்தான். காரணம் தேவன் சாந்தமும், மனத்தாழ்மையுமாக இருந்ததால் மோசேயை சாந்தகுணமுள்ளவராக மாற்றியிருந்தார். இதற்காகத் தான் தேவன் நம்மோடிருக்கிறார். நம்மை உருவாக்கவும், பயன்படுóதவும் அவருடைய சாயலாக மாற்றவும் அவர் இருக்கிறார். அதற்கு தான் நான் இருக்கிறவராகவே இருக்கிறேன என்றார். இது தான் அவருடைய நாமம். என் ஆண்டவராகிய தேவன் தாமே உங்களோடிருந்து உருவாக்கி பயன்படுத்தி அவருக்கு மகிமையாக இந்த பூமியிலே வாழச் செய்வாராக.