Inspiration
காற்றை தமது பண்டகசாலையிலிருந்து புறப்படப் பண்ணினார். சங்கீதம் 135:7
ஆண்டவரும் உலக இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள். தேவனுடைய பெரிதான கிருபையினால் இந்த செய்தியின் மூலமாக உங்களைச் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். இன்றைக்குப் பூமியிலே வாழும் மனிதர்களில் காற்றை விரும்பாதவர்கள் யாரும் இல்லை, காற்று இல்லாமல் யாரும் வாழ முடியாது. இன்றைக்கு மனிதர்கள் ஜீவிப்பது, வாழ்வது ஆண்டவருடைய ஜீவ காற்றினால் தான். யாத் 15:8 உமது நாசியின் சுவாசத்தினால் ஜலம் குவிந்து நின்றது, வெள்ளம் குவியலாக நிமிர்ந்து நின்றது. ஆழமான ஜலம் நடுக்கடலிலே உறைந்து போயிற்று என்று சொல்லப்பட்டுள்ளது. நாசியின் சுவாசக் காற்று ஆண்டவராகிய தேவன் மனிதனை களிமண்ணினால் உண்டாக்கினார். அப்படி களிமண்ணினால் உண்டாக்கிய மனிதன் மண்ணாக கிடந்தபடியால், அவன் மேல் தன்னுடைய நாசியின் சுவாசக் காற்றை ஊதினார். அப்பொழுது மனிதன் உயிருள்ளவனாக மாறினான். இன்றைக்கு மனிதனுடைய உயிர் தேவனுடைய சுவாசக் காற்று, அதனால் தான் வேதாகமத்தில் சங் 104:4-ல் தம்முடைய தூதர்களைக் காற்றுகளாகவும், தம்முடைய ஊழியக்காரரை அக்கினி ஜீவாலைகளாகவும் செய்கிறார் என்று சொல்லப்பட்டுள்ளது. அவர் சூரியனுக்கு ஒரு கூடாரத்தை வைத்திருக்கிறார், சந்திரனுக்கு ஒரு உறைவிடத்தை வைத்திருக்கிறார், காற்றுக்கு ஒரு பண்டக சாலையை வைத்திருக்கிறார். அந்த பண்டக சாலையிலிருந்து அவர் காற்றைப் புறப்படப்பண்ணி, அவருடைய விருப்பங்களையும், அவர் சித்தத்தையும் செய்கிறார். பல வருடங்களுக்கு முன்பாக தமிழ்நாட்டில் ஒரு குறிப்பிட்ட பட்டணத்தில் விமானநிலையம் வõரிவாக்கம் செய்தார்கள். அப்படி விரிவாக்கம் செய்த போது அந்த இடத்தில் மிகப்பெரிய ஆலமரம் இருந்தது. அதை அகற்றுவதற்கும், வெட்டுவதற்கும் எல்லாருக்கும் பயம், காரணம் முனி ஓடுகிறது, அந்த வழியாய் போன அநேகர் மரித்துப் போய்விட்டார்கள் என்ற பீதியைப், பயத்தை கிளப்பி விட்டார்கள். இதனால் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் பயந்து, யாரும் அதை அகற்ற முன்வரவில்லை. அப்படிப்பட்ட வேளையில் திடீரென சூறாவளிக் காற்றுடன் மழை பெய்தது. பயங்கரமான சூறாவளிக் காற்றுடன் மழை பெய்தபடியினால் அந்த மரம் வேரோடு விழுந்து விட்டது. அதன் பிறகு தைரியமாய் அந்த இடத்தை விரிவாக்கம் செய்து அரசாங்கத் திட்டங்களை நிறைவேற்றினார்கள். அவர் காற்றை தமது பண்டக சாலையிலிருந்து அனுப்புகிறார் அவர் விருப்பங்களையும, சித்தங்களையும் செய்கிறது. இயேசு சொன்னார் யோவான் 3:8-ல் காற்றானது தனக்கு இஷ்டமான இடத்திலே வீசுகிறது, அதின் சத்தத்தைக் கேட்கிறாய், ஆகிலும் அது இன்ன இடத்திலிருந்து வருகிறதென்றும், இன்ன இடத்துக்குப் போகிறதென்றும் உனக்குத் தெரியாது. ஆவியனால் பிறந்தவனெவனோ அவனும் அப்படியே இருக்கிறான் என்றார். ஆம் ஒரு தேவபிள்ளையை, இரட்சிக்கப்பட்ட, அவரை ஏற்றுக்கொண்ட, பரிசுத்த ஆவியானவின் அபிஷேகத்தோடு ஊழியம் செய்கிற ஒவ்வொருவரையும் ஆண்டவராகிய தேவன் காற்றுகளாகவும், இரதங்களாகவும் பயன்படுத்துகிறார். அவருக்குச் சித்தமானவைகளை எல்லாம் செய்கிறார். அப் 8-ஆம் அதிகாரத்தில் எத்தியோப்பியா மந்திரியான ஒரு மனிதன் எருசலேமுக்குத் தேவனைப் பணிந்து கொள்ள வந்தான். அவன் தேவனைப் பணிந்து கொண்டு திரும்ப தன் தேசத்திற்குப் போகும் போது இரதத்தில் உட்கார்ந்து வேதாகமத்தை வாசித்தான், அவன் வாசித்த வேதபகுதி அவனுக்கு விளங்கவில்லை, அந்த நேரத்தில் ஆவியானவர் காற்றாய் பிலிப்பு என்ற சுவிசேஷகனை தூக்கிக் கொண்டு போய் அந்த இரதத்துடனே சேர்த்து, ஏசாயாவின் வேத வார்த்தைகளை விளக்கிக் காட்டி, அந்த மந்திரியை இரட்சிப்புக்குள் நடத்தினார். எங்கேயோ போய் கொண்டிருந்த பிலிப்புவை அந்த இரதத்துடன் சேர்ந்துகொள் என்று காற்றினால் தூக்கிக் கொண்டு போனது ஆவியானவர். அப் 8:26,39 அப்படிச் சொல்லுகிறது. ஆவியானவர் காற்றானவர், இன்றைக்கு அவர் உலக மனிதர்களுடைய ஓட்டத்தைக் காட்டிலும், உழைப்பைக் காட்டிலும், நம்முடைய உழைப்பு, கிரியைகள் பெரிதாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.. மனிதர்கள் பணம் சம்பாதிக்க வேண்டும், பெயர், புகழ் வாங்க வேண்டும், ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று இரவும், பகலும் ஏதாவது செய்து ஓடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஓட்டத்தைக் காட்டிலும், அவர்கள் வேகத்தைக் காட்டிலும் நாம் தேவனுடைய ராஜ்ஜியத்திற்கு உழைக்கிற, செயல்படுகிற நம்முடைய ஓட்டம் அதிகமாயிருக்க வேண்டும். இதைத்தான் கர்த்தர் எலியாவைக் கொண்டு செய்தார். 1 இராஜா 18:46 கர்த்தருடைய கை எலியாவின் மேல் இருந்ததினால், அவன் தன் அரையைக் கட்டிக் கொண்டு, யெஸ்ரயேலுக்கு வருமட்டாக ஆகாபுக்குமுன் ஓடினான். இன்றைக்கு எல்லா காற்றை விட தேவனுடையள காற்று வேகமானது. நாம் அந்த காற்று வீசுகிற திசையில், காற்று வீசுகிற பக்கம் சென்றால் கர்த்தர் நம்மைக் கொண்டு மகிமையான காரியங்களைச் செய்வார்., அற்புதமான காரியங்களைச் செய்வார். அதற்குத் தான் அவர் காற்றைத் தமது பண்டக சாலையிலிருந்து புறப்பட பண்ணுகிறார். இன்றைக்கு இந்த செய்தியை வாசிக்கிற என் அன்னு சகோதர, சகோதரிகளே உங்களையும் என்னையும் தேவன் காற்றாகவும், அவருடைய தூதர்களாகவும், இரதங்களாகவும் அவருடைய பண்டக சாலையில் இருக்கிறவர்களாகவும், அவர் விருப்பத்தை எல்லாம் நாம் செய்து முடிக்கிறவர்களாகவும் நம்மை மாற்றிப் பயன்படுத்துவாராக. இதற்குத்தான் அவர்களை தமது பண்டக சாலையிலிருந்து அனுப்புகிறார். போகட்டும் எப்படிப்பட்ட காற்றுகளை எல்லாம் நாம் கடக்க, சந்திக்க வேண்டியதாயிருக்கிறது?, காறóறினால் உண்டாகுகிற ஆசீர்வாதங்கள், எழுப்புதல் என்ன? அதைப்பற்றி நாம் பார்ப்போம், அந்த கற்று நம்மேல் வீசும்படி நம்மை அர்ப்பணிப்போம்.
எதிர்காற்று—பெரும்காற்று
கர்த்தர் சமுத்திரத்தின் மேல் பெரும் காற்றை வரவிட்டார். கடலிலே கப்பல் உடையுமென்று நினைக்கத்தக்கதாக பெரிய கொந்தளிப்பு உண்டாயிற்று யோனா 1:4. கர்த்தர் யோனாவின் மேலும், அவன் பிரயாணம் பண்ணின கப்பல் மீதும், அவன் கூட போன மனிதர்கள் மேலும் பெரும் காற்றை அனுப்பினார். அதனால் அந்த கப்பல் உடையவும், அவர்கள் பிரயாணம் தடைபடவும், அவர்கள் நோக்கம் நிறைவேறாமல் போகவும், கர்த்தர் அதை அனுமதித்தார். காரணம் தேவனுக்கு விரோதமாய் ஒரு மனிதன் போகும் போது, அவருடைய சித்தத்தை நிறைவேற்றாமல் இருக்கும் போது, தேவனை அறிந்திருந்தும் அவருக்காக ஒன்றும் செய்யாமல் எனக்கென்ன என்று இருக்கும் போது, அவருக்குக் கீழ்ப்படியாமல், நம் சுய நலத்திற்காக வாழும் போது, தேவன் எப்படியோ போகட்டும் என்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருக்óக மாட்டார். யோனா அதைத்தான் செய்தார். அவர் தேவ சமூகத்தை விட்டு ஓடிப்போகும் போது, கர்த்தர் அதைத் தடுத்து பெருங்காற்றை வரவிட்டார். அவரை பாடுகளுக்கு உட்படுத்தினார். சாத்தான் கோதுமையை சுளகில் புடைக்கிறது போல புடைக்க உத்தரவு, அனுமதி கொடுத்தார். அன்றே அந்தக் காற்றிலே யோனா அகப்பட்டு மாட்டிக் கொண்டு பலபாடுகளுக்கு, சித்தரவாதைகளுக்கு உள்ளானார். கடைசியாக மரண போராட்டம், பாதாளங்களுக்குச் சென்று வந்துவிட்டான், பிழைத்து வந்தது மறுபிறவி போல் ஆகிவிட்டது. காரணம் கர்த்தருக்கு விரோதமான ஊழியம், கர்த்தருடைய சித்தத்தை நிறைவேற்றாமல், தன் சொந்த சித்தத்தை நிறைவேற்றுதல், இப்படிப்பட்ட எந்த மனுஷனானாலும், எந்த விசுவாசியானாலும், எந்த ஊழியங்கள், ஊழியக்காரர்கள் ஆனாலும் தேவன் விடமாட்டார். கண்டும்ó காணாதவர் போல் இருக்க மாட்டார். அவர்களை சரிபண்ணி, தமது மந்தைக்குள் வரவும், பண்டக சாலையில் அனுப்பவும், உருவாக்கவும் செய்து விடுவர்ர். எந்த மனிதனும் தேவனுடைய வழிக்கு விரோதமான வழியில் போய் விட முடியாது. அதற்குத்தான் தேவன் யோனாவின் மேல் பேரும்காற்றை அனுப்பினார். அதற்குத்தான் அவர் பண்டக சாலை வைத்திருக்கிறார். அழிக்கிற காற்று, உருவாக்குகிற காற்று, அற்புதம் செய்கிற காற்றை வைத்திருக்கிறார். தேவைப்படும் போது எந்தக் காற்றை யாருக்கு அனுப்ப வேண்டுமே அவற்றை அனுப்பி சரி செய்து அவருடைய பாதையில் நடத்துகிறார். இதுதான் யோனாவின் வாழக்ககையில் நடந்தது. அவர் மாறும் வரை, தேவ கட்டளைக்குக் கீழ்ப்படியும் வரை, தேவ சித்தத்திற்கு தன்னை அர்ப்பணிக்கும் வரை பெரும் காற்றை தேவன் நிறுத்தவில்லை. அதன் பிறகு தான் தேவன் கொந்தளிப்பை அமர்த்தினார். நாம் அவருக்கு விரோதமாய் போகும் போது சில பாதிப்புகளை, சில பிரச்சனைகளை சந்தித்து தான் ஆக வேண்டும். இதைத்தான் நாம் வேதாகமம் முழுவதிலும் காண முடிகிறது. சீஷர்களுடைய வாழ்க்கையைப் பாருங்கள் எப்போது எல்லாம் அவர்கள் இயேசுவை விட்டு விலகினார்களோ, எப்போது எல்லாம் அவர்கள் அவரை விட்டு பின்வாங்கினார்களோ அப்பொழுது எல்லாம் அவர்களும், அவர்களுடைய படகும், மீன்பிடிக்கிற தொழிலும் அலைகழிக்கப்பட்டது. நொறுக்கப்பட்டது, மூடப்பட்டது என்று மத்தேயு 8:24, லூக்கா 8:24-லும் சொல்லுகிறது. அப்பொழுது படகு அலைகளினால் மூடப்படத்தக்கதாய் கடலிலே பெரும்காற்று உண்டாயிற்று. அவரோ நித்திரையாயிருந்தார். ஏனென்றால் அந்த படகில் இயேசு இல்லை. அப்படியிருந்தாலும் அவர்கள் அவரை உறங்க, தூஙóக வைத்துவிட்டு தங்கள் சொந்த காரியங்களைக் காணவும், பேசவும் ஆரம்பித்து விட்டார்கள். ஊழிய அழைப்பையே மறந்து விட்டார்கள். ஊழிய தரிசனத்தையே இழந்து விட்டார்கள். அவ்வப்போது அவருக்கு எதிர்மறையாய், விரோதமாய் செயலó ஆற்றினார்கள். ஆகவே காற்று அவர்களுக்கு, அவர்களுடைய வேலைக்கு, கிரியைகளுக்கு எதிராக இருந்தது. வேதம் சொல்லுகிறது மத்தேயு 8:24-ல் அதற்குள்ளாக படகு நடுக்கடலில் சேர்ந்து எதிர்காற்றாயிருந்தபடியால் அலைகளினால் அலையப்பட்டது, நெறுக்கப்பட்டு. அவர்கள் தத்தளித்தார்கள். தடுமாறினார்கள், கதறினார்கள், காப்பாற்றனும் என்று அப்பொழுது தான் இயேசுவை நோக்கி கூப்பிட்டார்கள், உதவிக்கு அழைத்தார்கள். ஏன எதிர்காற்றில் சிக்கிக் கொண்டார்கள். இன்றைக்கு நாம் தேவனுக்கு விரோதமாய் போகும் போது, வாழும் போது எதிர் காற்றில் சிக்கிக் கொள்வோம். வேண்டாம் இந்த போராட்டம், வேண்டாம் இந்த பாடுகள், பல வருஷங்களுக்கு முன்பு தேவனுடைய ஊழியத்தை செய்த ஒரு தம்பி இருந்தான், அவன் எனக்குத் தெரிந்தவன், வேண்டியவனும் கூட, திடீரென தேவனுடைய ஊழியத்தை விட்டுவிட்டு ஆசிரியருக்குப் படிக்கப் போகிறேன் என்று படிக்கப் போனான். அவன் போன சில நாட்களிலே கோர்ட் ஒரு கேஸ்ஸில், வழக்கில் தீர்ப்புச் சொல்லி தேவையில்லாத, தகுதியில்லாத சில ஆசிரியர் பயிற்சிப் பள்ளியை மூட உத்தரவு பிறப்பித்தது. அதிலே இந்த தம்பியின் பயிற்சிப் பள்ளியும் இருந்தது. இவன் தேவனை மறந்து, ஊழியத்தை விட்டு போனதின் நிமித்தம் எல்லாம் மூடப்பட்டது. பலரும் பாதிக்கப்பட்டார்கள். காரணம் தேவனுடைய வழியை விட்டு விலகினதின் நிமித்தம் எதõர்காற்றிலே சிக்கிக் கொண்டார்கள். அதிலிருந்து காப்பாற்றப்பட. தப்புவிக்க பெரும்பாடுபட வேண்டியதாயிற்று. அதே நேரம் தேவனுடைய வழியில் நடந்து அவருடைய கட்டுப்பாட்டிற்குள் வந்தவர்கள் பாதுகாக்கப்பட்டார்கள். தப்புவிக்கப்பட்டார்கள். ஆதி 8:1-ல் தேவன் நோவாவையும், அவனுடனே பேழையிலிருந்த சகல காட்டுமிருகங்களையும், நாட்டுமிருகங்களையும் நினைத்தருளினார். தேவன் பூமியின் மேல் காற்றை வீசப்பண்ணினார் ஏறக்குறைய நூற்றைம்பது நாள் மிகவும் பிரவாகித்துக் கொண்டிருந்த தண்ணீர், வெளியே வர முடியாமல் பூமியின் மனுக்குலம் எல்லாம் அழிந்த நிலையில், நோவாவும், அவன் குடும்பமும் அழிவுக்கு விலக்கி, பாதுகாக்கப்பட்டு அற்புதமாய் வெளியே வந்தார்கள். காரணம் அந்த தண்ணீர் வற்றும்படி, வெள்ளம் வடியும்படி கர்த்தர் ஒரு காற்றை நோவாவுக்காக அனுப்பி இருந்தார். அந்த காற்று பெருவெள்ளத்திலிருந்து அவர்களைக் காப்பாற்றி, தப்புவித்தது. தேவன் அவருடைய வழியில் நடக்கிறவர்களை, அவருடைய சித்தங்களைச் செய்கிறவர்களை தப்புவிக்கிறார், மீட்டுககொள்கிறார். இதற்கு தேவன் தமது பண்டக சாலையிலிருந்து ஆதரவான, தப்புவிக்கிறதான காற்றை அனுப்பினார். புதிய வானம், புதிய பூமிக்குள் நடத்துகிறார். இதைத்தான் செங்கடலிலும், இஸ்ரவேல் ஜனங்கள் செல்லும் போது உலர்ந்த தரையாக மாற்றி, ஜனங்களை அக்கரைக்கு கொண்டு போய்ச் சேர்த்தார். யாத் 14:21-ல் மோசே தம்முடைய கையைச் சமுத்திரத்தின் மேல் நீட்டினான், அப்பொழுது கர்த்தர் இராமுழுதும் பலத்த கீழ்காற்றினால் சமுத்திரம் ஒதுங்கும்படி செய்து, அதை வறண்டு போகப் பண்ணினார். ஐலம் பிளந்து பிரிந்து போயிற்று. இதற்காகத் தான் அவர் காற்றை பண்டக சாலையில் வைத்து வைத்திருக்கிறார். விதவிதமாய், விதவிதமாய் அவற்றை ஜனங்களுடைய காரியங்களுக்கு ஏற்றார் போல், காற்றை அனுப்பி சிலரை தப்புவிக்கவும்,, சிலரை அழிக்கவும் செய்கிறார். இஸ்ரவேல் ஜனங்களை செங்கடலிலே அóற்புதமாய், தண்ணீரை குவியலாக நிற்க வைத்து அவர்களை தப்புவித்தார். அந்த தேவன் இன்றைக்கு உயிரோடு இருக்கிறார். யார், யார் கொடிய வெள்ளத்தில் அகப்பட்டு, செங்கடல் போன்ற சூழ்நிலையில், சத்துரு வெள்ளம் போல வருகிறானோ அவர்களை தப்புவிக்க, மீட்க தேவன் தமது பண்டக சாலையிலிருந்து காற்றை அனுப்புகிறார், அவர்களை கரை சேர்க்கிறார். சிலருக்கு அது ஜீவ காற்றாகவும், பலருக்கு அது மரண காற்றாகவும் இருக்கிறது. இன்றைக்கு இந்த செய்தியை வாசõக்கின்ற என் அன்பு சகோதர, சகோதரிகளே நீங்கள் பெரும் காற்றினால் அலைகழிக்கப்படாதபடி தேவனுக்கு விரோதமான காரியங்களில் சிக்கõக் கொள்ளாதபடிக்கு அவர் விருப்பத்தை அறிந்து, சித்தத்தை செய்து, அவர் வீசுகிற, அவர் நகர்த்துகிற பக்கத்தில் சென்று விடுங்கள். அப்பொழுது எதிர்காற்றுக்கும், பெரும் காற்றக்கும் தப்புவிக்கப்படுவீர்கள். அதற்குத்தான் அவர் காற்றை தமது பண்டக சாலையிலிருந்து அனுப்புகிறார்.
உலர்ந்த எலும்புகளில் காற்று
அப்பொழுது அவர் என்னைப் பார்த்து நீ, ஆவியை நோக்கித் தீர்க்கதரிசனம் உரை, மனுபுத்திரனே, நீ தீர்க்கதரிசனம் உரைத்து, ஆவியை நோக்கி, கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால் ஆவியே, நீ காற்றுத்திசை நான்கிலுமிருந்து வந்து கொலையுண்ட இவர்கள் உயிரடையும்படிக்கு இவர்கள் மேல் ஊது என்கிறார். எசே 37:9. அடுத்ததாக காற்றை எதற்காக பண்டக சாலையிலிருந்து அனுப்புகிறார் எலும்புகள் உயிரடைய வேண்டும் என்று. எந்த ஒரு மனிதன் தேவனை விட்டு விலகுகிறானோ அல்லது தேவனை மறக்கிறானோ அவன் உலர்ந்து போவான், பட்டுப்போவான், பச்சை மரம் பட்ட மரமாகிவிடும். இயேசு சொன்னார் யோவான் 15:6-ல் ஒருவன் என்னில் நிலைத்திராவிட்டால், வெளியே எறியுண்ட கொடியைப் போல, அவன் எறியுண்டு உலர்ந்து போவான் என்றார். இன்றைக்கு தேவனை மறக்கிறவர்கள், அவரோடு வாழாதவர்கள் யாவரும் உலர்ந்த எலும்புகள், பட்டுப்போனவர்கள், சதையில்லாத எலும்புகள், ஜீவன் இல்லாதவர்கள் அப்படியாக எசேக்கியேல் ஒரு தரிசனத்தைக் கண்டார். அவன் ஊழியமே சுடுகாட்டில், கல்லறையில் தான் ஆரம்பித்தது. எலும்புகள் சேர்ந்து இல்லாமல், இணைந்து இல்லாமல் அக்கு வேர், ஆனி வேராக இருந்தது. செயலற்றுக் கிடந்தது. பிசாசு பிடித்த லேகியோனைப் போல கல்லறைகளில் கிடந்தார்கள். இப்படி நடைபிணமாக இருந்த இந்த எலும்புகள் பெலனடைய, உயிரடைய ஒரு ஆக்சிசன், ஒரு ஜீவ காற்று தேவைப்பட்டது. அதுதான் பரிசுத்த ஆவியானவரின் காற்று, இந்த காற்று மனிதர்கள் மேல் வந்தால் தான், எலும்புகளில் மேல் வந்தால் தான் கல்லறையில் இருப்பவர்கள், மரித்தவர்கள், மவுனத்தில் வாசம் பண்ணுகிறவ்கள் உயிரடைய முடியும். யோவான் 5:25-27-ல் மரிதóதோர் தேவனுடைய சத்தத்தைக் கேட்கும் காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது. அதைக் கேட்கிறவர்கள் பிழைப்பார்கள் என்றார். இதைக் குறித்து நீங்கள் ஆச்சரியப்பட வேண்டாம். ஏனென்றால் பிரேத குழியிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்கும் காலம் வரும் என்றார். இன்றைக்கு மரித்தோர்கள் ஆத்துமாவில் யார் யார் எல்லாம் தேவனோடு தொடர்பில்லாமல் வாழ்கிறார்கள், அவர்கள் அத்தனை பேரும் உயிரடைய வேண்டுமானால் உயிர்த்தெழ வேண்டுமானால், இந்த ஜீவ காற்று எத்திசையிலிருந்தும் புறப்பட்டு வர வேண்டும், அதற்குத் தான் ஆண்டவராகிய தேவன் எசேக்கியேல் தீர்க்கதரிசியைப் பார்த்து, நீ இந்த உலர்ந்த எலும்புகளுக்கு தீóக்கதரிசனம் கூறு,ó இந்த எலும்புகள் பிரிந்து கிடக்கிற, கூட்டை விட்டு வெளியே வந்த, தேவனுடைய பாதுகாப்பை விட்டு வெளியே வந்த அத்தனை பேருக்கும் தீர்க்கதரிசனம் கூறு என்றார். எசேக்கியேலுக்குச் சொல்லப்பட்டபடியே காற்றே நான்கு திசைகளிலுமிருந்து புறப்பட்டு வா என்று சொன்ன போது, அந்த எலும்புகள் உயிரடைந்து ஒன்று சேர்ந்து ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொண்டு ஜீவன் அடைந்து, பெலனடைந்து உயிர் பெற்றது. தேவனுக்காக சேனையாக எழும்பியது. அது தான் தேவனுடைய உயிர் மூச்சு. ஜீவ காற்று இதைத்தான் யாத் 15:8-ல் தேவனுடைய நாசியின் சுவாசக் காற்று என்று சொல்லப்பட்டுள்ளது. ஆகவே தான் இயேசு தன் சீஷர்கள் மேல் ஊதி பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்றார். பின்வாங்கி, பிரிந்து தேவனை விட்டு விலகின சீஷர்களை மறுபடியும் ஒன்றுச் சேர்த்து, மேல் வீட்டு அறையில் காற்றை அவர்கள் மேல் அனுப்பினார். அப் 2:2 அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம் போல் வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று. அவர்கள் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டார்கள், புதுப்பிக்கப்பட்டார்கள். தேவனுக்காக சேனையாய் எழும்ப ஆரம்பித்தார்கள், உயிரடைந்து ஊரெல்லாம் புறப்பட்டுப் போய் ஊழியம் செய்தார்கள். இன்றைக்கு இந்த செய்தியை வாசிக்கின்ற என் அன்பு சகோதர, சகோதரிகளே உங்கள் எலும்புகள், சதையில்லாதபடி உயிரடையும்படி, பெலனடையும்படி ஒருமனம் உண்டாகும்படி சேனையாய் எலும்பும்படி இந்த தேவன் அனுப்புகிற பரிசுத்த ஆவி என்ற காற்று உங்கள் மேல் வீசபட வேண்டும், நீங்கள் உயிரடைய வேண்டும். அதற்குத் தான் அவர் காற்றை தமது பண்டகசாலையிலிருந்து அனுப்புகிறார். புறப்படப்பண்ணுகிறார். இந்த காற்று தான் இஸ்ரவேலó ஜனங்களுடைய உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்தது. எண் 11:31-ல் அப்பொழுது கர்த்தரிடத்திலிருந்து புறப்பட்ட ஒரு காற்று சமுத்திரத்திலிருந்து கடைகளை அடித்துக் கொண்டு வந்தது. இன்றைக்கு உங்கள் தேவைகள் பூர்த்தியாக, உங்களுக்கு அற்புதம் நடக்க இந்த காற்று அவசியம். இந்த காற்று அனுதினமும் உங்கள் மேல் வீச வேண்டும். மட்டுமல்ல 2 ராஜா 2:1, 11-லும் கர்த்தர் எலியாவை சுழல் காற்றிலே பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப் போகிறபோது எலியா, எலிசாவோடு கூட கில்காலிலிருந்து புறப்பட்டுப் போனான். அவர்கள் பேசிக் கொண்டு நடந்து போகையில், இதோ, அக்கினி ரதமும், அக்கினிக் குதிரைகளும் அவர்கள் நடுவாக வந்து இருவரையும் பிரித்தது. எலியா சுழல்காற்றிலே பரலோகத்திற்கு ஏறிப்போனான். இந்த காறóறு நம்மேல் வீசும் போது, அப்பொழுது தான் நாம் மேலே ஏறிப்போக முடியும். நம்மை பரலோகம் கொண்டு சேர்ப்பதற்காகத் தான் தேவன் இந்த காற்றை நமக்கு பண்டகசாலையிலிருந்து அனுப்புகிறார். அதனால் நாம் உயிரடைந்து, பெலனடைந்து ஒரு பெரிய சேனையாய் எழும்பி, நாம் உயர உயர பறக்க, பரலோகம் போக நம்மை பயிற்றுவித்து காற்றை பண்டக சாலையிலிருந்து அனுப்புகிறார். நம்மை சேனையாய் மாற்றுகிறார். வாரும் வாரும் காற்றாய் வாரும், அக்கினியாய் வாரும். அதற்காகத்தான் தேவன் அவருடைய பிள்ளைகள் மேல் காற்றை அனுப்புகிறார். என் ஆண்டவராகிய தேவன் தாமே உங்கள் மேல் தம்முடைய ஆவியை ஊதி உயிருள்ளவர்களாக மாற்றி, பலத்த சேனையாய் எழும்பப்பண்ணுவாராக.