Inspiration
வீணான மனுஷனே
வீணான மனுஷனே கிரியைகளில்லாத விசுவாசம் செத்ததென்று நீ அறிய வேண்டுமோ?. யாக்கோபு 2:20
ஆண்டவரும் உலக இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துக்கள். தேவனுடைய வார்த்தையின் மூலம் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.
வீணான மனுஷனே என்று யாக்கோபு 2:20-ல் வேதம் நம்மை அழைக்கின்றது. நல்ல மனுஷனே, ஜீவனுள்ள மனுஷனே என்று அழைக்கப் பார்த்திருக்கிறோம், ஆனால் இங்கு வேதம் வீணான மனுஷனே என்று மனுஷனுக்கு ஒரு பெயர் வைக்கிறது. மனுஷனே நன்மை இன்னதென்று அவர் உனக்கு சொல்லியிருக்கிறார் என்றும், நீ என் பார்வையில் விலையேறப் பெற்றவன் என்றும், கனத்துக்குரியவன் என்றும்,அற்ப மனிதனே என்றும், எலியா நம்மைப் போல பாடுள்ள மனிதன் என்றும், அற்ப ஆயுசுள்ள மனிதன், பூவுக்கும் புல்லுக்கும் ஒப்பான மனிதன் என்று வேதத்தில் மனிதனுக்குப் பல பெயர்கள் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் யாக்கோபு தன்னுடைய நிருபத்திலேமனிதனுக்கு ஒரு துணைப் பெயர் வைக்கிறார். துணைப் பெயர் என்றால் பட்ட பெயர், புனைப்பெயர். சீமோன் என்றால் நாணல் என்று பெயர். ஆண்டவர் பெயர் வைத்தால் நச்சென்று பெயர் வைப்பார். சீமோன் நாணலைப் போல இந்த பக்கமும் அந்த பக்கமும் சாய்கின்றவராக இருந்தார். அதனால் தான் ஆண்டவர் யோனாவின் குமாரனாகிய சீமோனே என்று அவனை அழைத்தார். இன்றைக்கு ஆண்டவர் உங்கள் பெயரை எழுதி வைத்திருக்கிறார். உன்னை என் உள்ளங்கையில் வரைந்து வைத்திருக்கிறேன் என்று சொல்லுகிறார். உங்கள் கைகளில் உள்ள ரேகை கூட அவருக்கு தெரியும். ஆண்டவர் மீது உங்களுக்கு அன்பு இருந்தால் தான் நீங்கள் அதிகாலையில் எழுந்திருப்பீர்கள். ஆண்டவருக்கு நீங்கள் செவி கொடுத்தால், அவருடைய வார்த்தையினால் உங்களை நிரப்பி நடத்துவார். தேவனுடைய வார்த்தையை உங்களுக்கு ரேமாவாக அனுப்பி விடுகிறார். அவர் சொல்லுகிறார் வீணான மனுஷனே கிரியை இல்லாத விசுவாசம் செத்தது என்று நீ அறிய வேண்டுமோ? இந்த செய்தியை வாசிக்கின்ற நீங்கள் வீணான மனிதர்களா சிந்தித்துப் பாருங்கள். இந்த உலகத்தில் அநேகர் வேலையில்லை என்று சொல்லுகிறார்கள்.
இன்றைக்கு அநேகம் பேர் செல்போனுக்கு அடிமையாக இருக்கிறார்கள். இந்த செல்போன் வந்ததிலிருந்து அநேக வாலிபர்கள் வேலைக்கு செல்வதில்லை, அதற்கு அடிமையாகி தங்கள் வாழ்க்கையை, நேரத்தை, நாட்களை செல்போனில் வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள். செல்போன் உங்களை ஜெபிக்க விடுவதில்லை, வேதம் வாசிக்க விடுவதில்லை. தேவன் மேல் உங்கள் கவனத்தை வைக்க விடுவதில்லை. ஆனால் சாத்தானுடைய ஒரே வேலை உங்கள் மீது கவனம்வைப்பது தான். உங்களைத் திசை திருப்பி உங்கள் வாழ்க்கையை பாழாக்கி, கெடுத்து விட வேண்டும் என்பது தான். அதனால் தான் யாக்கோபு இப்படிப்பட்டவர்களைப் பார்த்து சொல்லுகிறார் வீணான மனுஷனே என்று. ஐந்து நிமிடத்திற்கு மேல் நாம் செல்போன் பேசுவோம் என்றால் நம் சரீரத்தில் இருக்கிற நரம்புகளுக்கு பாதிப்பை அது உண்டாக்கி விடும்.
1. வீணான வார்த்தை
நீதி 10:19-ல் சொற்களின் மிகுதியில் பாவமில்லாமற்போகாது, தன் உதடுகளை அடக்குகிறவனோ புத்திமான். இந்த வசனம் கத்தோலிக்க மொழிபெயர்ப்பில் இப்படியாக சொல்லப்பட்டுள்ளது நீண்ட பேச்சினால் நம் வாழ்ககையில் பாவம் வரும் என்று. சிலர் பரிகாசமான பேச்சுகளை பேசுவார்கள், இன்னும் சிலர் மற்றவர்களைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பார்கள். சிலர் புரணி பேசிக் கொண்டே இருப்பார்கள். தேவனைப் பற்றி பேச மாட்டார்கள். உங்களுடைய பேச்சு சுருக்கமாக இருக்க வேண்டும். நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அதே அளவினால் உங்களுக்குத் திரும்ப அளக்கப்படும் என்று வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது. சிலர் சுருக்கமாகத்தான் பேசுவார்கள், சிலரை பார்த்திருக்கிறோம் தேவையில்லாமல் அவர்கள் பேச மாட்டார்கள். மற்றவர்கள் பேசினால் கூட சிரித்து விட்டு அமைதியாக இருப்பார்கள். அதுதான் தன் ஆவியை அடக்குகிற மனுஷன். இந்த வசனத்தை நாம் வாசித்துப் பார்த்தால் வீணான பேச்சு, வீணான வார்த்தை நீண்ட மொழி என்று சொல்லப்பட்டுள்ளது. லூக்கா 18 ஆம் அதிகாரத்தில் இரண்டு பேர் ஜெபிக்க ஆலயத்திற்கு போயிருந்தார்கள். ஒருவர் பரிசேயன், மற்றொருவர் ஆயக்காரன். பரிசேயனó தேவ சமூகத்தில் நீண்ட பேச்சு பேசி ஜெபித்தார். வாரத்தில் இரண்டு தரம் நான் உபவாசிக்கிறேன், பத்தில் ஒரு பங்கு தசமபாகம் செலுத்துகிறேன், இந்த ஆயக்காரனைப் போல் நான் இராததினால் உண்மை ஸ்தோத்தரிக்கிறேன் என்று சொல்லி ஜெபித்தார். ஆனால் ஆயக்காரர் இரண்டே வார்த்தையில் சுருக்கமாய் பாவியாகிய என் மேல் கிருபையாயிரும் என்று சொல்லி ஜெபித்தார். இன்றைக்கு நம்முடைய ஜெபங்களும் தேவ சமுகத்தில் அளப்புகிறதாக இராமல் சுருக்கமானதாய் இருக்க வேண்டும். தேவையில்லாததெல்லாம், மிஞ்சினதெல்லாம் தீயவன் இடத்திலிருந்து வரும் என்று சொல்லப்பட்டுள்ளது.
இன்றைக்கு இந்த உலகத்தில் நாம் வாழும் போது நம்முடைய நேரம் ரொம்ப முக்கியம். நாம் செய்கின்ற வேலைகள் ரொம்ப முக்கியம். ஒருமுறை தான் இந்த உலகத்தில் நாம் வாழ்கிறோம், பின்பு கடந்து போகிறோம். சிலர் சொல்லுவார்கள் ஏழு ஜென்மம் என்று, அடுத்த ஜென்மத்தில் நான் இப்படி இருக்க வேண்டும் என்று தங்களை குறித்து சொல்லுவார்கள். அடுத்த ஜென்மமே கிடையாது வேதத்தில் ஒருவன் ஆண்டவரிடத்தில் வந்து கேட்கிறான் என் சகோதரன் திருமணமாகி சந்தானமில்லாமல், குழந்தை இல்லாமல் மரித்து போய் விட்டான், அவளை என்னுடைய மற்றொரு சகோதரன் திருமணம் செய்தான், அவனும் சந்தானமில்லாமல் மரித்து போய் விட்டான். இப்படி எங்களில் ஏழு பேரும் அவளை திருமணம் செய்து, பின்பு சகோதரர் அனைவருமே சந்தானமில்லாமல் மரித்து போய் விட்டார்கள். இது நீண்ட பேச்சு, இப்பொழுது அவன் ஆண்டவரிடம் கேட்கிறான். பரலோகதóதில் எங்களில் யாருக்கு அவள் மனைவியாக இருப்பாள். பரலோகத்தில் அழுகை இல்லை, துக்கம் இல்லை, புலம்பல் இல்லை என்று வேதம் சொல்லுகிறது. சரீரம் பரலோகம் போகாது மண்ணோடு மண்ணாகி போய் விடும். நம்முடைய ஆத்துமா மட்டும் தான் பரலோகத்திற்கு செல்லும். ஆத்துமா அழிவில்லாதது, அது தன்னைத் தந்த தேவனிடத்திற்கு செல்கிறது. சரீரமும் மாம்சமும் தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரிப்பதில்லை என்று வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது.
பரலோக ராஜ்யத்தில் பெண் கொள்வதும் இல்லை, பெண் கொடுப்பதும் இல்லை. அங்கே நாம் எல்லாரும் மகிமையாய் தேவ தூதர்களுக்கு ஒப்பாக இருப்போம். பரலோகத்தில் இவள் எங்களில் யாருக்கு மனைவியாக இருப்பாள் என்று கேட்டது தவறு. எங்கள் சித்தப்பா அங்கே இருப்பார், இவங்க இருபóபாங்க, அவங்க இருப்பாங்க என்று எதிர்பார்ப்பதும் தவறு. இந்த பொல்லாத உலகத்தில் நாம் ஒன்றை தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும் நீங்கள் நித்தியவாசிகள் என்று. நம்முடைய மாம்சமும் இரத்தமும் இந்த பூமியோடு முடிந்து போய் விடும். நித்தியமாக ஆண்டவருடன் வாழத்தான் இந்த பூமியில் நம்முடைய ஆத்துமாவை அவர் இரட்சித்திருக்கிறார். அதனாலó தான் நாம் இந்த வீணான வாழ்க்கையை விட்டு விட வேண்டும். வேதத்தில் மார்த்தாளைப் பற்றி நாம் வாசிக்கின்றோம், ஆண்டவரே இப்படியாக சொல்லுகிறார் மார்த்தாளே மார்த்தாளே நீ அநேக காரியங்களைக் குறித்து கவலைப்பட்டு கலங்குகிறாய் தேவையானது ஒன்றே. இன்றைக்கு உங்களில் கூட அநேகர் மார்த்தாள்களாகத்தான் இருக்கிறீர்கள். அநேக காரியங்களைக் குறித்து கவலைப்பட்டு கலங்கிக் கொண்டிருக்கிறீர்கள். அப்படிப்பட்ட தேவையில்லாத காரியங்களில் இருந்து தேவன் உங்களை விடுதலையாக்கப் போகிறார். ஒரு வாலிபத் தம்பி என்னிடத்தில் வந்து அங்கிள் நான் வரும்போது ஒரு மீசைக்காரர் என்னை முறைத்து பார்த்துக் கொண்டே வண்டி ஓட்டிச் சென்றார் என்று சொன்னான். அப்பொழுது நான் அவனிடம் சொன்னேன் உன்னை பார்த்து வண்டி ஓட்டினால் அவர் எப்படி வண்டி ஓட்ட முடியும், நீ அவரைப் பார்த்த விதம் தவறானது என்று சொன்னேன்.
பரலோக ராஜ்யத்தில் பெண் கொள்வதும் இல்லை, பெண் கொடுப்பதும் இல்லை. அங்கே நாம் எல்லாரும் மகிமையாய் தேவ தூதர்களுக்கு ஒப்பாக இருப்போம். பரலோகத்தில் இவள் எங்களில் யாருக்கு மனைவியாக இருப்பாள் என்று கேட்டது தவறு. எங்கள் சித்தப்பா அங்கே இருப்பார், இவங்க இருபóபாங்க, அவங்க இருப்பாங்க என்று எதிர்பார்ப்பதும் தவறு. இந்த பொல்லாத உலகத்தில் நாம் ஒன்றை தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும் நீங்கள் நித்தியவாசிகள் என்று. நம்முடைய மாம்சமும் இரத்தமும் இந்த பூமியோடு முடிந்து போய் விடும். நித்தியமாக ஆண்டவருடன் வாழத்தான் இந்த பூமியில் நம்முடைய ஆத்துமாவை அவர் இரட்சித்திருக்கிறார். அதனாலó தான் நாம் இந்த வீணான வாழ்க்கையை விட்டு விட வேண்டும். வேதத்தில் மார்த்தாளைப் பற்றி நாம் வாசிக்கின்றோம், ஆண்டவரே இப்படியாக சொல்லுகிறார் மார்த்தாளே மார்த்தாளே நீ அநேக காரியங்களைக் குறித்து கவலைப்பட்டு கலங்குகிறாய் தேவையானது ஒன்றே. இன்றைக்கு உங்களில் கூட அநேகர் மார்த்தாள்களாகத்தான் இருக்கிறீர்கள். அநேக காரியங்களைக் குறித்து கவலைப்பட்டு கலங்கிக் கொண்டிருக்கிறீர்கள். அப்படிப்பட்ட தேவையில்லாத காரியங்களில் இருந்து தேவன் உங்களை விடுதலையாக்கப் போகிறார். ஒரு வாலிபத் தம்பி என்னிடத்தில் வந்து அங்கிள் நான் வரும்போது ஒரு மீசைக்காரர் என்னை முறைத்து பார்த்துக் கொண்டே வண்டி ஓட்டிச் சென்றார் என்று சொன்னான். அப்பொழுது நான் அவனிடம் சொன்னேன் உன்னை பார்த்து வண்டி ஓட்டினால் அவர் எப்படி வண்டி ஓட்ட முடியும், நீ அவரைப் பார்த்த விதம் தவறானது என்று சொன்னேன்.
2. வீணான வாழ்க்கை
கிராமத்தில் பெரியவர்கள் சொல்லுவார்கள் இவன் வீணாகப் போய் விட்டான். இவன் வாழ்க்கை வீணாகிப் போய் விட்டது. படிக்காமல் போய் விட்டான். சினிமா பார்த்து கெட்டுப் போய் விட்டான் என்று சொல்வார்கள். இன்ஜினியரிங் படித்து முடித்து விட்ட ஒர மகள் இன்ஜினியர் படிப்பிற்கான வேலையை தேடுவதை விட்டுவிட்டு செல்போனை எடுத்துக் கொண்டு காலையில் செல்லும் மகள், மாலை வரை தன் நேரத்தைஅதிலேயே செலவிடுகிறாள். வாழ்க்கையில் முன்னேறுவதற்கான வழியைப் பார்க்காமல் தன்னுடைய வாழ்நாட்களை எல்லாம் வீணடித்துக் கொண்டிருக்கிறாள். ஒரு மனிதன் 75 லட்சம் ரூபாய் செலவு செய்து கர்ப்பிணியாகிய தன் மனைவியை அழைததுக் கொண்டு அமெரிக்கா சென்றார். அங்கு தன் மனைவிக்கு குழந்தை பிறந்தால் தங்களுக்கு அந்த நாட்டின் குடியுரிமை கிடைத்து விடும் என்று நினைத்தார். ஆனால் மூன்றே மாதத்தில் அவரை அந்த நாட்டில் இருக்க கூடாது என்று சொந்த நாட்டிற்கு அனுப்பி விட்டார்கள். 75 லட்சம் பணமும், வாழ்க்கையும் வீணாகி போய் விட்டது. இப்படிப்பட்ட வீணான வாழ்க்கை வாழக் கூடாது..சாமுவேல் இஸ்ரவேல் ஜனங்களை எச்சரிக்கிறார். எப்பவும் வாக்குவாதம் செய்வது, சண்டை போடுவது, குறை சொல்வது இருக்கக் கூடாது. இஸ்ரவேல் ஜனங்கள் சாமுவேலிடம் வாக்குவாதம் பண்ணி மறையிட்டார்கள், தங்களுக்கு ஒரு ராஜா வேண்டும் என்று கேட்டார்கள். இஸ்ரவேல் மக்கள் சாமுவேலிடம் வாக்குவாதம் பண்ணினபடியால் கர்த்தர் வானத்திலிருந்து இடிமுழக்கம் உண்டான செய்தார், ஜனங்களுக்குள் பயம் உண்டாயிற்று.1 சாமு 12:21-ல் விலகிப்போகாதிருங்கள்; மற்றப்படி பிரயோஜனமற்றதும் ரட்சிக்கமாட்டாததுமாயிருக்கிற வீணானவைகளைப் பின்பற்றுவீர்கள்; அவைகள் வீணானவைகளே.
தேவனை விட்டு விலகிப் போகக் கூடாது. வீணானவைகளைப் பின்பற்றக் கூடாது. நீங்கள் ஒரு இடத்திற்கு போவதின் மூலம், ஒரு காரியத்தை செய்வதின் மூலம், பணத்தை செலவழிப்பதின் மூலம் கர்த்தருடைய நாமத்திற்கு மகிமை வருமா என்று ஆராய்ந்து பார்க்க வேண்டும். நீங்கள் எந்த இடத்திற்குப் போனாலும் அங்கு தேவனுடைய வார்த்தையை செல்லுகிறீர்களா? ஒன்றுக்கும் பிரயோஜனப்படாதவர்கள் கிருபையைப் போக்கடிக்கிறார்கள். அதைத்தான் இங்கு சாமுவேல் இரட்சிக்கமாட்டாததுமாயிருக்கிற வீணானவைகளைப் பின்பற்றுவீர்கள்; அவைகள் வீணானவைகளே என்று சொல்லுகிறார். நீங்கள் எந்த இடத்திற்குச் சென்றாலும், என்ன வேலை செய்தாலும், எந்த பொருள் வாங்கினாலும் அதில் தேவநாமம் மகிமைப்பட வேண்டும். உங்களுடைய நேரத்தைக் குறித்து, பேச்சைக் குறித்து, உங்களை இந்த பட்டணத்தில் வைத்ததைக் குறித்து தேவனிடத்தில் கணக்கு கொடுக்க வேண்டும். எங்கேயே, எப்படியே வாழ்ந்த உங்களை அவர் இரட்சித்தாரே அவருக்காக நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள். இரட்சிக்கமாட்டாததுமாயிருக்கிற வீணானவைகளுக்காக பணத்தை, நேரத்தை செலவழிக்கக் கூடாது. கர்த்தருடைய பார்வையில் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்று பாருங்கள். ஆண்டவர் உங்களைப் பார்த்து நல்லது உண்மையும் உத்தமமுமான மனுஷனே என்று சொல்லுவாரா? அல்லது வீணான மனுஷனே என்று சொல்லுவாரா? சிந்தித்துப் பாருங்கள். நம் ஆண்டவர் எல்லாவற்றிற்கும் கணக்கு கேட்கிறவர். அவரை பாடுவதற்காக ஆண்டவர் எல்லாருக்கும் நாவை கொடுத்திருக்கிறார்.
4. வீணான மனிதர்கள்
நியாயா 11:3-ல் அப்பொழுது யெப்தா: தன் சகோதரரை விட்டு ஓடிப்போய், தோப்தேசத்திலே குடியிருந்தான், வீணரான மனுஷர் யெப்தாவோடே கூடிக்கொண்டு, அவனோடேகூட யுத்தத்திற்குப் போவார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. வீணரான மனுஷர் அவனோடு கூடினார்கள். நாமே கடனில் இருக்கும் போது நம்மோடு 10 கடன்காரர்கள் சேர்ந்தால் எப்படி இருக்கும் அது போலத்தான் யெப்தாவோடு சேர்ந்தார்கள். 1 நாளா 22:2-ல் ஒடுக்கப்பட்டவர்கள், கடன்பட்டவர்கள், முறுமுறுக்கிறவர்கள் யாவரும் அவனோடே கூடிக்கொண்டார்கள்; அவன் அவர்களுக்குத் தலைவனானான்; இந்தப் பிரகாரமாக ஏறக்குறைய நானூறுபேர் அவனோடிருந்தார்கள். தாவீதுக்கே தேசத்தில் இடம் இல்லை, அவர் படுத்து உறங்க இடம் இல்லை ஓடிக் கொண்டிருக்கிறார். ஆனால் 400 பேருக்கு தலைவரானார். வீணான மனிதர்கள் அவரோடு கூடிக் கொண்டாôர்கள், அந்த வீணான மனிதர்களைத் தான் தாவீது 1 நாளா 23:4,5-ல் அவர்களில் இருபத்து நாலாயிரம்பேர் கர்த்தருடைய ஆலயத்தின் வேலையை விசாரிக்கிறவர்களும், ஆறாயிரம்பேர் தலைவரும் மணியக்காரருமாயிருக்க வேண்டும் என்றும் நாலாயிரம்பேர் வாசல் காக்கிறவர்களாயிருக்க வேண்டும் என்றும், துதிசெய்கிறதற்குத் தான் பண்ணுவித்த கீதவாத்தியங்களால் நாலாயிரம்பேர் கர்த்தரைத் துதிக்கிறவர்களாயிருக்க வேண்டும் என்றும் தாவீது சொல்லி, அவர்களை லேவியின் குமாரராகிய கெர்சோன், கோகாத், மெராரி என்பவர்களுடைய வகுப்புகளின்படி வகுத்தான். அவர்கள் தேவனைத் துதித்துப் பாடினார்கள். வீணான மனிதர்களைக் கூட நல்ல மனிதர்களாக மாற்றி விட்டான். இன்றைக்கு உங்கள் வாழ்க்கையில் கூட வீணாகப் போன பணத்தை, வீணாப் போன நேரத்தை, வீணாப் போன வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றுவார். வீணாப் போன, கெட்டுப் போன, ஒன்றுக்கும் பிரயோசனமில்லாமல் போன உங்கள் வாழ்க்கையை விலையேறப் பெற்றதாக மாற்றுவார்.
உலக மனிதர்கள் சொல்லுவார்கள் வடக்கு பக்கம் தலை வைத்து படுக்கக் கூடாது என்று, நான் வானத்திற்கு ஏறினாலும், நீர் அங்கே இருக்கிறீர்; நான் பாதாளத்தில் படுக்கை போட்டாலும், நீர் அங்கேயும் இருக்கிறீர். நான் விடியற்காலத்துச் செட்டைகளை எடுத்து, சமுத்திரத்தின் கடையாந்தரங்களிலே போய்த் தங்கினாலும், அங்கேயும் உமது கை என்னை நடத்தும், உமது வலதுகரம் என்னைப் பிடிக்கும்என்று வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது. உலக மனிதர்கள் சொல்லுகிறபடி நாம் நடப்போமானால் அது வீணான நடத்தையாகும். இத்தனை மணிக்கு தான் திருமணம் நடக்க வேண்டும், இந்த கிழமையில் நடக்க வேண்டும், இப்படித்தான் செய்ய வேண்டும், இதுதான் முறை என்று உலகத்தினர் சொல்லுவார்கள், ஆனால்வேதம் நமக்கு என்ன சொல்லுகிறது என்று நாம் பார்த்து அதன்படி நடக்க வேண்டும். தண்ணீரின் மேல் உன் ஆகாரத்தைப் போடு அநேக நாட்களுக்குப் பின் அதன் பலனை காண்பாய் என்று வேதத்தில் வாசிக்கிறோம். ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு கட்டுப்பாடு உண்டு, எங்கள் குலபழக்கம், எங்கள்குலபெயாó என்று சொல்லிக்கொண்டு மனிதர்கள் நடக்கிறார்கள். இந்த பழக்க வழக்கங்கள் ஒரு மனிதனையும் இரட்சிப்புக்குள் நடத்தாது, இவைதான் வீணான நடத்தை. இந்த உலகத்தில் நாம் எதைச் சொன்னாலும், செய்தாலும் அதன் மூலம் பிதாவாகிய தேவனுடைய நாமம் மகிமைப்பட வேண்டும். இதுவரைக்கும் உங்கள் வாழ்க்கை சீரோவாக இருந்தாலும் இனிமேல் உங்கள் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக மாற வேண்டும் என்பதற்காகத்தான் இயேசு கிறிஸ்து இந்த பூமிக்கு இறங்கிவந்தார்.
நீங்கள் பேசுகின்ற பேச்சு காற்றோடு போய் விடக்கூடாது, நீங்கள் செய்கிற ஜெபம் உங்கள் மடிக்கு திரும்பி விடக்கூடாது. எலியா நம்மைப் போல பாடுள்ள மனிதனாக இருந்தும் மூன்று வருஷமும் ஆறு மாதமும் மழை பெய்யாதபடிக்கு கருத்தாய் ஜெபம் பண்ணினான். இன்றைக்கு ஜெபத்திற்கான திறவுகோல் உங்களுடைய கையில் இருக்கிறது. நீங்களோவென்றால் அவர் அப்படி சொன்னார், இவர்கள் இப்படி சொன்னார்கள் என்று சொல்லி வீணான காரியங்களைச் சிந்தித்து யோசித்துக் கொண்டிருக்கிறீர்கள். நாம் இயேசுவைப் பற்றி சொல்ல வேண்டும், சுவிசேஷத்தை அறிவிக்க வேண்டும். சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாக திருவசனத்தைப் பிரசங்கம் பண்ண வேண்டும் என்று வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது. இயேசுவின் பாதத்தில் ஒரு பெண் தைலத்தை ஊற்றினாள், அதற்கு யூதாஸ் இந்த தைலத்தை உடைத்து ஏன் வீணாக்குகிறீர்கள் என்னிடத்தில் கொடுத்தால் நான் அதை 300 பணத்துக்கு விற்றிருப்பேன்,இந்த வீண் செலவு எதற்கு என்று கேட்டான். அவனுக்குள் ஒரு எரிச்சல், பற்கடிப்பு இருந்தது, இந்த தைலம் வீணாகப் போகிறதே என்று. இப்படி சில பாரம்பரியங்கள் நமக்குள்ளும் இருக்கிறது. வாங்குகிறதைப் பார்க்கிலும் கொடுக்கிறதே நல்லது. நாம் இந்த உலகத்தில் எதை செய்தாலும் அதில் கர்த்தருடைய நாமம் மகிமை அடைய வேண்டும்.
5. வீணான நடத்தை
பேதுரு சொல்லுகிறார் 1 பேதுரு 1:18-ல் உங்கள் முன்னோர்களால் பாரம்பரியமாய் நீங்கள் அநுசரித்து வந்த வீணான நடத்தையினின்று அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியினாலும் பொன்னினாலும் மீட்கப்படாமல், குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே என்று. உங்கள் முன்னோர்களால் நீங்கள் பரம்பரை பரம்பரையாக அனுசரித்து வந்த வீணான நடத்தை என்று சொல்லுகிறார். இந்த வீணான நடத்தையினின்று நீங்கள் மீட்கப்படும்படியாக உங்களுக்காக கொடுக்கப்பட்ட விலை இயேசுகிறிஸ்துவின் இரத்தம். அந்த இரத்தம் இந்த பூமியில் நீங்கள் வாழும்படியாக உங்களó வாழ்க்கையை பெண்ணாக மாற்றி இருக்கிறது. மண்ணாக இருந்த உங்களை பெண்ணாக மாற்றி இருக்கிறது. யோபு 23:10-ல் ஆனாலும் நான் போகும் வழியை அவர் அறிவார்; அவர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன் என்று யோபு சொல்லி இருக்கிறார். இனி உங்கள் வாழ்க்கை ஒரு அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும், நீங்கள் உட்கார்ந்தாலும், எழுந்திருந்தாலும், எதைப் பேசினாலும் எல்லாம் ஒரு அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும். நீங்கள் பேசினால் அந்த பேச்சின் மூலம் அநேகர் இரட்சிக்கப்பட வேண்டும். பவுல் அப்போஸ்தலன் சொல்லுகிறார் கர்த்தருக்குள் உங்கள் பிரயாசங்கள் விருதாவாக போகாதுஎன்று. ஆகவேநாம் தேவனுடைய கிருபையில் பெருகு வேண்டும். இன்றைக்கு வீணான நடத்தையிலிருந்து தேவன் உங்களை வெளியே கொண்டு வருகிறார். வீணான மனுஷனே என்ற பெயர் எடுக்கப்பட்டு இனி நீங்கள் கர்த்தருடையவன்(ள்), கர்த்தருடைய மனுஷனó என்று உங்களுக்குப் பெயர் வைக்கப்படும். இனி இந்த உலகத்தில் நீங்கள் எதை செய்தாலும் அதன் மூலம் கர்த்தருடைய நாமம் மகிமை அடைய வேண்டும்.
ஏசா 43:21-ல் இந்த ஜனத்தை எனக்கென்று ஏற்படுத்தினேன்; இவர்கள் என் துதியைச் சொல்லிவருவார்கள். என்று வாசிக்கின்றோம். நாம் தேவனுடைய மகிமையை பரப்பும்படியாக உண்டாக்கப்பட்டவார்கள்.நம் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் வெளியேறப் பெற்றது. இந்த நாளும் நேரமும் இனி திரும்ப வராது. இது கிருபையின் நாள், இரட்சிப்பின் நாள். யோனா சொல்லுகிறார் மீனின் வயிற்றிலிருந்து ஆண்டவரே நீர் எனக்கு கொடுத்த காலத்தையும் நேரத்தையும் நான் வீணாக்கி விட்டேன், கடல்பாசி என்னை மூடிக்கொண்டு இருக்கிறது என்று சொல்லுகிறார். யோனா 2:8-ல் பொய்யான மாயையைப் பற்றிக்கொள்ளுகிறவர்கள் தங்களுக்கு வரும் கிருபையைப் போக்கடிக்கிறார்கள் என்று தன் நிலையைக் குறித்து சொல்லுகிறார்.அப் 17:5 சொல்லுகிறது விசுவாசியாத யூதர்கள் வைராக்கியங்கொண்டு வீணராகிய சில பொல்லாதவர்களைச் சேர்த்துக்கொண்டு கூட்டங்கூடி, பட்டணத்தில் அமளியுண்டாக்கி, யாசோனுடைய வீட்டை வளைந்துகொண்டு, அவர்களைப் பட்டணத்தாருக்கு முன்பாக இழுத்துக்கொண்டுவர வகைதேடினார்கள்.வீணராகிய மனுஷர் என்று சொல்லப்பட்டுள்ளது. எரே 2:6-ல் என்னைவிட்டுத் தூரப்பட்டு, மாயையைப் பின்பற்றி, வீணராய்ப் போகிறதற்கு என்னிடத்தில் என்ன அநியாயத்தைக் கண்டார்கள்?யோபு 21:34-ல் நீங்கள் வீணான ஆறுதலை எனக்குச் சொல்லுகிறது என்ன? உங்கள் மறுமொழிகளில் உண்மைக்கேடு இருக்கிறது என்றான். அழுகிறவர்களுடன் நாம் அழவேண்டும், சிரிக்கிறவர்களோடு சிரிக்க வேண்டும், நாம் மற்றவர்களை ஆறுதல் படுத்துகிறவர்களாக தான்இருக்க வேண்டும். யோபு சொல்லுகிறார் நானே நெந்து நூலாய் இருக்கிறேன்என்று. அவரது நண்பர்கள் அவரை ஆறுதல் படுத்துகின்ற வார்த்தைகளைச் சொல்லாமல் மேலும் அவரைக் காயப்படுகின்ற வார்த்தைகளை சொல்லுகிறார்கள். அப்படி நாம் இருக்கக் கூடாது.
இன்றைக்கு இந்த உலகத்தில் நாம் பண்ணுகிற ஜெபம், நாம் செய்கிற ஊழியங்கள், நம் கையில் தேவன் கொடுத்த வார்த்தைகள், நாம் படுகின்ற பிரயாசங்கள் எல்லாம் அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும். என்றென்றைக்கும், அடுத்த தலைமுறையில் அதைக் குறித்து பேசப்படுகிறதாக இருக்க வேண்டும். இல்லையென்றால் நாம் மார்த்தளைப் போல அநேக காரியங்களை நினைத்து கவலைப்படுகிறவர்களாய் மாறி விடுவோம். ஆனால் இன்றைக்கு மார்த்தாள்களாக இருக்கிற உங்களை மரியாள்களாக மாற்றத்தான் தேவன் விரும்புகிறார். உங்கள் வாழ்க்கையில் தேவையானது ஒன்றே, தன்னை விட்டு எடுபடாத நல்ல பங்கை, கிருபையைப் பெற்றுக் கொள்ள வேண்டும், அதுதான் உங்களுக்கு தேவை. இதுவரை நீங்கள் எப்படி வாழ்ந்திருந்தாலும் சரி, உங்கள் வாழ்க்கை வீணாக போயிருந்தாலும் சரி, இன்றைக்கு இந்த செய்தியை வாசிக்கின்ற உங்கள் வாழ்க்கையை தேவன் அர்த்தமுள்ளதாக, விலையேறப் பெற்றதாக மாற்றுகிறார். எந்த இடத்தில் நீங்கள் தொலைந்து போனீர்களோ, எந்த இடத்தில் கிருபையை போக்கடித்தீர்களோ, எந்த இடத்தில் தலை குணிந்தீர்களோ அதே இடத்தில் தேவன் உங்களை ஆசீர்வதித்து உயர்த்த போகிறார். எவரையும் மேன்மைப்படுத்தவும், பலப்படுத்தவும் அவராலே ஆகும். நம்முடைய நினைவுகள் அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும். ஆண்டவர் நினைப்பதை நாம் நினைக்க வேண்டும், நாமாகவே ஒன்றை யோசித்து, நினைத்துக் கொண்டிருக்கக் கூடாது. என் பிள்ளைக்கு திருமணமாகவில்லையே, குழந்தை பாக்கியமில்லையே நான் என்ன செய்யப் போகிறேன்,என் குடும்பத்தை எப்படி நடத்தப் போகிறேன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள், அவை எல்லாவற்றையும் தேவன் இடத்தில் சொல்லி விடுங்கள், அவர் பார்த்துக் கொள்வார். பரத்திலிருந்து தேவன் பதிலை உங்களுக்குத்தரப் போகிறார். என் ஆண்டவராகிய தேவன் தாமே வீணான நடத்தைகளிலிருந்து உங்கள் வாழ்க்கையை மாற்றி, அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ விலையேறப் பெற்ற வாழ்க்கை வாழ கிருபை தருவாராக ஆமென்.