Inspiration

என் மீட்பர் உயிரோடிருக்கிறார்

ஆண்டவரும் உலக இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள். தேவனுடைய பெரிதான கிருபையினால் இந்த செய்தியின் மூலமாக உங்களைச் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். கிறிஸ்தவர்களுடைய பெரிய நம்பிக்கை, விசுவாசம், பொக்கிஷம் ஆண்டவராகிய இயேசு உயிர்த்தெழுந்தது தான். அவர் நித்தியமானவர், தலைமுறை தலைமுறையாக வாழ்கிறவர், ஜீவிக்கிறவர், உயிரோடிருக்கிறவர். அவருக்கு துவக்கமும் இல்லை, முடிவும் இல்லை. உபா 32:40 நான் என் கரத்தை வானத்திற்கு நேராக உயர்த்தி, நான் என்றென்றைக்கும் ஜீவித்திருக்கிறவர் என்கிறேன். அப்படி ஜீவித்திருக்கிறவர், என்றென்றைக்கும் வாழ்கிறவர் ஏன் மரிக்க வேண்டும்? ஏன் சாக வேண்டும்? தான் படைத்த, சிருஷ்டித்த மனிதன் பாவத்தின் சம்பளமாகிய மரணத்தைப் பெற்றபடியால், பிசாசினால் வஞ்சிக்கப்பட்டு, ஏமாற்றப்பட்டபடியால் அதன் தண்டனையான இறப்பை, மரணத்தை அடைந்தான். ஆதி 2:17-ல் ஆனாலும் நன்மைதீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்க வேண்டாம், அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார். தேவன் அவர்களுக்கு கொடுத்த நியமத்தை, கட்டளையை அவர்கள் மீறி நடந்ததினாலே பாவத்தின் சம்பளமாகிய மரணத்தை பெற்றுக் கொண்டார்கள். அதிலிருந்து நித்திய வாழ்வை இழந்து, என்றென்றைக்கும் ஜீவிக்கிற வாழ்வை இழந்து, தன் வாழ்க்கைக்கு தானே முடிவு கட்டிக்கொண்டார்கள். அவர்கள் தேவ கட்டளையை மீறினபடியால், நியமத்தை மீறினபடியால் மரணம் அவர்களை ஆண்டு கொண்டது. அவர்கள் சாத்தானைப் போல் தேவனுக்கு விரோதமாக, எதிராக செயல்பட்டபடியால் தேவனுடைய கோபமும், தேவநிதியும் அவர்கள் மேல் வந்தது. ஆகவே தான் ஆண்டவராகிய தேவன் அவர்களைப் பார்த்து சொன்னார் நீ என்னோடு வாழ, நித்திய நித்தியமாய் ஜீவிக்க, என்னோடிருக்க, என் மகத்துவத்தை அணிந்து அனுபவிக்கவும், என்னோடு உலாவவும் உன்னை ஏற்படுத்தினேன். நீயோ, உனக்கு என்று ஒரு வழியை ஏற்படுத்திக் கொண்டாய் என்றார். ஆகவே தான் ஆதி 3:23-ல் நீ எந்த மண்ணிலிருந்து எடுக்கப்பட்டாயோ அúóத, மண்ணை பண்படுத்த, பயன்படுத்த பூமிக்கே திரும்பிப் போ. இனி இந்த பூமியிலே நீ அதிக நாள் உயிரோடிருப்பதில்லை. அதற்கு ஒரு எல்லையையும், காலத்தையும் வைக்கிறேன். உன் ஆத்துமா என் தொடர்பை இழந்தபடியால் அது மரித்துப் போய்விட்டது. ஒரு மரித்த ஆத்துமா என் சமூகத்தில் பிழைக்கவோ, வாழவோ முடியாது. உங்கள் ஆத்துமாவை நான் ஆரோசிக்கிறேன், அருவருக்கிறேன். என் வீடு ஜெபவீடு, நான் தங்கும் வீடு (இருதயம்) என்று எதிர்பார்த்தேன், நீங்களோ அதை கள்ளர் குகையாக்கிவிட்டீர்கள். இனி இந்த வாழ்வளிக்கும் தோட்டத்தில், என் சமூகத்தில் இருக்க முடியாது, பூமிக்கே திரும்பிப் போ என்று ஆதி 3:24-ல் அவர் மனுஷனைத் துரத்திவிட்டு ஜீவவிருட்சத்துக்குப் போகும் வழியைக் காவல்செய்ய, ஏதேன் தோட்டத்துக்குக் கிழக்கே கேரூபீன்களையும், வீசிக்கொண்டிருக்கிற சுடரொளி பட்டயத்தையும் வைத்தார். அதன் பிறகு மனிதனுக்கு தேவனுடைய நினைவோ, பரலோக வாசனையோ, தேவனுடைய தொடுதலோ வரவில்லை. அவன் உணர்வற்றவனாக, இருளடைந்தவனாக, தேவனை அறிந்திருந்தும், பார்த்திருந்தும் அவரை ஸ்தோத்தரியாமலும், மகிமைப்படுத்தாமலும் இருந்து உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்துவிட்டது. இதுதான் முதலாம் மரணம். சரீரத்தில் உயிரோடி ருந்தார்கள் ஆனால் தங்கள் ஆத்துமாவில் மரித்துப் போய்விட்டார்கள். மரித்தவர்களும், மவுனத்தில் இறங்குகிற அனைவரும் கர்த்தரைத் துதியார்கள். உயிருள்ள நாமோ, அதுமுதல் என்றென்றைக்கும் கர்த்தரை ஸ்தோத்தரிப்போம் அல்லேலூயா சங் 115:17,18 அப்படிச் சொல்லுகிறது. இப்படிப்பட்ட ஒரு மனிதனுக்காக தன் ஜீவனைக் கொடுக்கவும், உயிரைக் கொடுக்கவும், அவனைத் திரும்பவும் வாழ வைக்கவும், தேவ சமூகத்தில் வந்து சேர்க்கவும், பிழைக்கவும் தேவன் ஒரு திட்டத்தை வைத்தார். அதுதான் மனிதன் மறுபடியும் ஜீவன் பெற வேண்டும், தேவனோடு ஒப்புரவாக வேண்டும். மறுபடியும் அவர் சமூகத்தில் பிழைக்க வேண்டும், வாழ வேண்டும் என்று. அடுத்து அவனுக்கு ஒரு வழியைக் காட்டுவதற்கு யோவான் 3:16-ல் தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ, அவன் கெட்டுப் போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு அவரைத் தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார். உலகை ஆக்கினைக்குள்ளாக தீர்க்கும்படி அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படும்படியே வந்தார். அதனால் பிதாவின் மடியில் இருந்த அவரின் ஒரேபேறான மகனாகிய இயேசு நான் இந்த பூமிக்கு இறங்கிப் போகிறேன், காணாமல் போனதைத் தேடவும், இரட்சிக்கவும் இந்த பூமிக்கு போகிறேன் என்றார். யோவான் 10:10-ல் திருடன் திருடவும் கொல்லவும், அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன். நானே வழி, நானே சத்தியம், நானே ஜீவன் என்றார். மரணத்திலிருந்தும், பாதாளத்தின் வல்லடிக்கும் தப்புவிக்கிறவர் நானே என்றார். சங் 89:48-ல் மரணத்தைக் காணாமல் உயிரோடிருப்பவன் யார்? தன் ஆத்துமாவைப் பாதாள வல்லடிக்கு விலக்கி விடுகிறவன் யார்? என்று மரித்த அநேகர் கதறிக் கொண்டிருந்தார்கள். நாங்கள் எப்பொழுது ஜீவவிருட்சத்தைப் பார்ப்போம், எங்களை மறுபடியும் இந்த ஏதேன் தோட்டத்திலே தேவனோடு இணைப்பவர் யார்? என்று கதறிக் கொண்டிருந்தார்கள். சங் 49:7,8,9-ல் ஒருவனாவது, தன் சகோதரன் அழிவைக் காணாமல் இனி என்றைக்கும் உயிரோடிருக்கும்படி, எவ்விதத்தினாலாவது அவனை மீட்டுக்கொள்ளவும், அவனிமித்தம் மீட்கும் பொருளை தேவனுக்குக் கொடுக்கவுங்கூடாதே. அவர்கள் ஆத்துமமீட்பு மிகவும் அருமையாயிருக்கிறது. அந்த ஆத்தும மீட்பைக் கொடுக்க, பாதாள வல்லடிக்கு, நரகத்திற்கு தப்ப, நாம் நித்தியஜீவனை பெற்று மறுபடியும் நித்திய பிதாவோடு இணைய இயேசு இந்த பூமிக்கு இறங்கி வந்து, ஒரு பெரிய ஆத்தும மீட்பை உண்டுபண்ணினார். அது தான் அவரது மனித அவதாரம், மனிதனாக பூமிக்கு இறங்கி வந்தார். பிலிப்பியர் 2:6,7-ல் அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல் தம்மைத்தாமே வெறுமையாக்கி அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். எபிரே 2:14,15-ல் ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும், இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க அவரும், அவர்களைப் போல மாம்சத்தையும், இரத்தத்தையும் உடையவரானார். மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கு ஜீவகாலமெல்லாம் பயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலை பண்ணும்படிக்கும் அப்படியானார். அதனால் தான் பூமிக்கு இறங்கி வந்து நானோ, என் ஆடுகள் ஜீவனைப்பெறவும், அது பரிபூரணப்படவும், தேவனோடு இணைக்கப்படவும் மரணத்தை ருசி பார்த்தார் எபிரே 2:18 அப்படிச் சொல்லுகிறது. மாற் 10:45-ல் அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல் ஊழியஞ்செய்யவும், அநேகரை மீட்கும் பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் என்று சொல்லப்பட்டுள்ளது. அதனால் தான் அவர் பூமிக்கு வரவும், மரிக்கவும் வேண்டியதாயிருந்தது. இதுதான் ஆத்தும மீட்பு, இதுதான் பாதாள வல்லடிக்கு விலக்கி காப்பது. இதைச் செய்யத்தான் அவர் பரலோகத்திலிருந்து பூமிக்கு இறங்கினார். தேவகுமாரனாய் இருந்தவர் மனுஷகுமாரனாக மறினார். நானோ என் ஆடுகளுக்காக ஜீவனைக் கொடுக்கவும், அது பரிபூரணப்படவும் இறங்கி வந்தேன் என்றார். அவர் மனிதனுடைய தண்டனையை ஏற்றுக்கொண்டு மரணத்தை ருசிபார்த்தார். மரணமே உன் கூர் எங்கே? பாதாளமே உன் ஜெயம் எங்கே? என்றார். இந்த மீட்பின் திட்டத்தை நிறைவேற்றத்தான் அவர் பூமிக்கு வந்தார், ஜீவனைக் கொடுத்தார். காணாமற்போனதைத் தேடவும், மீட்கவும் வந்தேன் என்றார். இன்றைக்கு யாரெல்லாம் இதை விளங்கிக் கொண்டு, அறிந்து கொண்டு தேவனுக்குத் தன் வாழ்வை அர்ப்பணிக்கிறார்களே அவர்கள் பரலோக குடும்பமாக மாற முடியும். தேவனோடு இணைக்கப்பட, அவரோடு வாழ, நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ள வழி உண்டாக்கி வைத்திருக்கிறார். இன்றைக்கு இந்த வழியை, தேவனுடைய உன்னத திட்டத்தை கண்டுபிடித்து அவருடைய வழியில் நடக்கிறவன் பாக்கியவான். போகட்டும் இயேசு மரித்த பின் என்ன நடந்தது? எப்படி அவர் உயிரோடு எழுந்தார் என்பதைப் பார்ப்போம்.

மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன்.

பிள்ளைகள் மாம்சத்தையும், இரத்தத்தையும் உடையவர்களானபடியால் இவரும், மாம்சத்தோடும், இரத்தத்தோடும் இறங்கி வந்து மரணத்தை ருசி பார்த்தார். இந்த உலகத்தில் மனிதனுடைய வாழ்க்கைக்கு முடிவு மரணம் தான். மரணம் கொடிதானது நம்மில் யாரும் மரணத்தை அவ்வளவு எளிதாக விரும்பு வதில்லை, அதை கடந்து போகவும், அதை சந்தித்து ஏற்றுக் கொள்ளவும் தான் பயப்படுவோம். ஆனால் இயேசுவே பூமியில் வாழ்ந்த போது மனுஷகுமாரன் பாடுபடவும், மூப்பராலும், பிரதான ஆசாரியராலும், வேதபாரகராலும் பலபாடுகள் பட்டு, கொலையுண்டு, மூன்றாம் நாளில் எழுந்திருக்க வேண்டும் என்பதைத் தம்முடைய சீஷர்களுக்கு அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தார் மத் 16:21 அப்படிச் சொல்லுகிறது. தான் போவது நல்லது என்று அந்த நாளை எதிர்பார்த்து அதை சந்திக்க ஆவலோடு காத்திருந்தார். தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவோ, தான் மற்றவர்களுடைய கையில் இருந்து தப்புவிக்கப்படவோ அவர் விரும்பவில்லை. 1 கொரி 15:55-ல் மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயம் எங்கே? என்றார். மரணத்தை வரவேற்று சவால் விட்டார். 1 பேதுரு 3:18-ல் ஏனெனில், கிறிஸ்துவும்ó நம்மை தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக, நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒரு தரம் பாடுபட்டார். அவர் மாம்சத்திலே கொலையுண்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார். அவர் மாம்சத்தில் கொலை செய்யப்பட்டார். அப்படியே அவர் கல்லறையில் இருந்து விடவில்லை, மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தார். எப்படி? அவர் தேவனுடைய வல்லமையினால், ஆவியினால் உயிர்ப்பிக்கப்பட்டார். மரணம் அவரை ஆண்டு கொள்ளவோ, அவரை கட்டியோ வைத்திருக்க முடியவில்லை. பாதாளத்தின் வாசல்கள், பாதாளத்தின் வல்லமைகள் ஆட்டம் கண்டு அசைய தொடங்கியது. மரித்த அநேகர், தேவனுக்காய் ஜீவித்த அநேகர் அவரோடே கூட எழுந்திருக்க ஆரம்பித்தார்கள். ஒரு குறிப்பிட்ட பட்டணத்தில் ஒரு தேவ ஊழியருடைய மகள் பிரசவ நேரத்தில் மரித்துப் போனாள். எல்லாரும் அந்த மருத்துவமனையில் கூடி அழுது கொண்டிருந்தார்கள். அந்த பிரேதம் சவக்கிடங்கில் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த போதகரோ சோர்ந்து போகாமல் அந்த துக்கத்திலும் தன் நண்பர்களைச் சேர்த்துக் கொண்டு சத்தமாய் பாட்டுபாடி தேவனை நோக்கி ஜெபிக்க ஆரம்பித்தார். ஏறக்குறைய அரைமணி நேரம் கடந்திருக்கும் அந்த மரித்த மகளுடைய சரீரம் அசைய ஆரம்பித்தது. மறுபடியும் செயல்பட ஆரம்பித்தது. இயேசுவே, இயேசுவே என்று அவள் கூச்சலிட்டாள். மரித்த அவள் உயிரோடு எழுந்து இன்றைக்கும் ஜீவிக்கிறாள். ஆண்டவருக்காக வாழ்ந்து கொண்டிருக்கிறாள். இப்படி தன் காலத்துக்கு முன்னே தேவனுடைய சித்தமில்லாமல் மரிக்கிற ஒவ்வொருவரையும் உயிர்ப்பிக்க, உயிரோடு எழுப்பத்தான் இயேசு சொன்னார் மரித்தேன், ஆனாலும், சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன் என்றார். யோவான் 5:21-ல் பிதாவானவர் மரித்தோரை எழுப்பி உயிர்ப்பிக்கிறது போல, குமாரனும் தமக்கு சித்தமானவர்களை உயிர்ப்பிக்கிறார். இன்றைக்கும் அவருக்குச் சித்தமானவர்களை உயிரோடு எழுப்பிக்கொண்டு தான் இருக்கிறார். எகிப்து தேசத்திலே ஒரு இஸ்லாமிய பெண் வேதத்தை வாசித்து இயேசுவை ஏற்றுக்கொண்டதினிமித்தம் கணவன் அவளைக் கொலை செய்து பிள்ளைகளோடு கல்லறையில் புதைத்து விட்டான். ஏறக்குறைய பல நாட்களுக்குப் பிறகு அவளும், அவளுடைய பிள்ளைகளும் உயிரோடு எழும்பி விட்டார்கள். இதெல்லாம் நடப்பதற்கு காரணம் என்ன? ஒரே ஒருவருடைய உயிர்த்தெழுதலினால் உண்டானது தான். ஒரே மனிதனால் மரணம் வந்தது போல, ஒரே ஒருவராலே உயிர்த்தெழுதலும் வந்தது. முந்தின ஆதாமால் மரணம் வந்தது. பிந்தின ஆதாமோ உயிர்ப்பிóக்கிற ஆதாமாக உயிர்த்தெழுந்தவராக செயல்பட்டார். 1 கொரி 15:45 அப்படிச் சொல்லுகிறது. இன்றைக்கு அநேகர் பாவத்திலும், அக்கிரமத்திலும் மரித்துக் கிடக்கிற, செத்த பிரேதங்களாகவும், மற்றொரு பக்கம் போராட்டத்திலும், பிரச்சனையிலும் பல காரியங்களிலும் சிக்கி நடைபிணமாக வாழ்ந்து கொண்டிருக்கிறதைப் பார்க்கிறோம். இப்படிப்பட்ட ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு உயிர்மூச்சைக் கொண்டுவரவும், உயிர்த்தெழுதலைக் கொண்டுவரவும் இயேசு உயிரோடு எழுந்தார். மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன் என்றார். இன்றைக்கு கல்லறை போன்ற வாழ்க்கையிலும், செயல்படாத வாழ்க்கையிலும் இருக்கிறவர்களை உயிரோடு எழுப்புவதற்குத் தான் ஆண்டவராகிய இயேசு உயிரோடு எழுந்தார்.

அவர் உயிரோடிருக்கிறார்

நமக்காக மரித்து அடக்கம் பண்ணப்பட்டு உயிரோடு எழுந்த தேவன் இன்றைக்கு உயிரோடு இருக்கிறார். யார் யார் எல்லாம் இந்த உயிர்த்தெழுதலை நம்பி அவருக்கு முன்பாக தம்மைத் தாழ்த்தி, தேவனே, உம்மை நம்புகிறேன் என் உள்ளத்தில் வாரும், எனக்குள் வாசம்பண்ணும், என்னை வழிநடத்தும் என்றால் அந்த உயிர்த்தெழுந்த தேவன் நமக்குள் வந்து வாசம்பண்ணுவார். லூக்கா 20:38 சொல்லுகிறது அவர் மரித்தோரின் தேவனாயிராமல், ஜீவனுள்ளோரின் தேவனாயிருக்கிறார். எல்லாரும் அவருக்குப் பிழைத்திருக்கிறார்களே என்றார். அவர் மரித்தவருக்கு தேவன் அல்ல ஜீவனுள்ளோருக்கு தேவன் என்று சொல்லப்பட்டுள்ளது. இன்றைக்கும் அவர் உயிரோடிருக்கிறார். இதைத்தான் யோபு பக்தன் சொன்னார் என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றார். இன்றைக்கும் நாம் உயிரோடிருந்து லூக்கா 1:71-ல் சொல்லப்பட்டுள்ளபடி உங்கள் சத்துருக்களின் கைகளினின்று நீங்கள் விடுதலையாக்கப்பட்டு, உயிரோடிருக்கும் நாளொல்லம் பயமில்லாமல் எனக்கு முன்பாகபó பரிசுத்தத்தோடும், நீதியோடும் எனக்கு ஊழியஞ்செய்ய கட்டளையிடுவேன் என்றார். இன்றைக்கு நாம் உயிரோடிருந்து, அந்த உயிரோடிருக்கிற ஆண்டவராகிய தேவனுக்கு ஊழியம் செய்து, அவர் வாழ்கிறார், ஜீவிக்கிறார் என்று செத்துமடிந்து கொண்டிருக்கிற ஜனங்களுக்கு, பலவிதமான போராட்டங்களில் வாழ்கிற ஜனங்களுக்கு இயேசு வாழ்கிறார், உயிரோடிருக்கிறார் என்பதை அறிவித்து, நிரூபித்து, அவருக்கு மகிமையாக, ஒரு சந்ததியை எழுப்ப வேண்டும். யோபு வாழ்க்கையில் ஒரு புது வாழ்வு தொடங்கினது போல தேவனைப் பின்பற்றுகிறவர்களுடைய வாழ்க்கையில் ஒரு புதுவாழ்வு தொடங்கவும், புதிய காரியங்களைப் பெற்றுக் கொள்ளவும் வழி நடத்த வேண்டும். என் ஆண்டவராகிய தேவன் தாமே ஜீவனுள்ள தேவனாய் இருந்து உங்களை மகிமையால் நிரப்பி நடத்துவாராக. ஆமென்.