Inspiration

Children's Special

ஹலோ குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா?.
19 வயது அந்த அண்ணனுக்கு இளைப்புநோய் வந்து ரொம்ப முடியாமற் போயிருச்சு. எவ்வளவு வைத்தியம் பார்த்தாலும் இது சரியாகாத வியாதி, நீ மூன்று மாசம் தான் உயிரோடே இருப்பனு டாக்டரும் சொல்லிட்டாங்க. இனி நம்ம பிழைக்க மாட்டோம்னு தெரிஞ்சாலும், அவர் கும்பிடுகிற புத்தரை இன்னும் ரொம்ப நம்பிக்கையோடு கூப்பிட்டாரு. அந்த அண்ணனுக்கோ உடம்புல மற்றம் ஒன்னும் நடக்கல்ல, கூடக்கொஞ்சந்தான் முடியாமற் போயிருச்சு, படுத்த படுக்கையாயிட்டார். அப்பத்தான் உங்கள மாதிரி ஸ்கூல்ல படிக்கிற ஒரு சிறுமி, அந்த அண்ணன் வீட்டுக்குப் போனாள். இயேசப்பா பத்தி சொல்லி, நம்ம எல்லாருடைய நோயையும் தன் மேல் ஏற்றுக்கொண்டு சிலுவையில் நமக்காக இயேசப்பா மரிச்சாரு, அவரை நம்புங்க அண்ணே என்று சொன்னாள். அந்த அண்ணன் அவள் சொன்னதைக் கேட்கவே இல்லை. ஏன்னா அந்தளவுக்கு அவருக்கு ரொம்ப முடியலை. மறுநாளும் வந்தாள், சொன்னாள். அந்த அண்ணனுக்கு ரொம்ப கோபம் வந்துருச்சு. கிறிஸ்தவ நாயே வீட்டை விட்டு வெளியே போனுன்னு சொல்லிட்டாங்க. ஆனாலும் அந்த சிறுமி விடாமல் தினமும் சென்று (திட்டினாலும்) முழங்கால்படியிட்டு, அந்த அண்ணனுக்காக கண்ணீரோடு ஜெபித்தாள். அவளுடைய கண்ணீர் அந்த அண்ணனின் இருதயத்தைத் தொட்டது. ஆண்டவருடைய சமூகத்தை அந்த அண்ணன் உணர்ந்தாங்க. புத்த மதத்தில் யாரும், யாருக்காகவும் இப்படி கண்ணீரோடு ஜெபிப்பது கிடையாதே. ஏன் இவள் எனக்காக கண்ணீர் வடித்து ஜெபம் பண்ணனும் என்ற உணர்வுடன் இருந்த அந்த அண்ணனிடம் ஒரு பைபிளையும் கொடுத்து, மத்தேயு புத்தகத்திலிருந்து படிக்க ஆரம்பியுங்கள் என்று சொன்னாள். அந்த அண்ணனும் பைபிளைப் படித்தாங்க. இயேசுகிறிஸ்து உண்மையான தெய்வம், அவர் தான் நம்ம பாவங்களை மன்னிக்கவும், நம்முடைய நோய்களைக் குணமாக்கவும் வந்த உலக இரட்சகர் என்பதைப் புரிந்து கொண்டாங்க. மருத்துவர்களும், மற்றவர்களும் புரிந்து கொள்ளும்படியாக ஆண்டவர் அந்த அண்ணனை சுகப்படுத்தினாங்க. அதற்கப்புறம் அவங்க பெரிய பாஸ்டராகிட்டாங்க. அவங்க சர்ச்சுக்கு 10 லட்சம் பேரு வர்றாங்க. 19 வயசில மரிக்க இருந்த அவங்க ஆண்டவர் கொடுத்த ஜீவனாலே கடந்த ஆண்டு வரை வாழ்ந்தாங்க, இயேசப்பாவுக்கு ஊழுõயம் செய்தாங்க. கடந்த ஆண்டு தனது 86-வது வயதில் தான் இறந்தாங்க. நம்ம இந்தியாவுக்குக் கூட இரண்டு தடவை ஊழியம் செய்ய வந்திருக்காங்க. ஆண்டவரை அறியாத அந்த அண்ணன் தான் பின்நாட்களில் பாஸ்டர்.பால்யாங்கிசோ என்ற தலைசிறந்த தேவ ஊழியராக மாறினார். ஒரு சிறுமியின் கண்ணீரின் ஜெபம் தான் அதற்குக் காரணம். அன்பான குட்டீஸ் அந்த சிறுமியைப் போல நீங்களும் அம்மா, அப்பாவுக்கும், மற்றவங்களுக்கு இயேசப்பா பற்றி சொல்லி கண்ணீரோடு ஜெபிப்பீங்களா?.
ஜெபம்.
அன்புள்ள இயேசப்பா எங்க தேசத்தில் உங்களை அறியாமலும், வியாதியிலும் இருக்கிற எல்லா அண்ணன், அக்காவுக்காக கண்ணீரோடே ஜெபிக்கிறேன். உங்களை அவங்க அறிந்து கொள்ளவும், சுகமாயிருக்கவும் உதவி செய்யுங்க. ஆமென்.
மனப்பாடவசனம்.
கண்ணீரோடே விதைக்கிறவர்கள், கெம்பீரத்தோடே அறுப்பார்கள். சங்கீதம் 126:5.