Inspiration

Children's Special

ஹலோ குட்டீஸ், நல்லாயிருக்கீங்களா!,
L.K.G படிக்கும் ஒரு பாப்பாவும், அவங்க அம்மாவும் கடைக்குப் போவதற்காக புறப்பட்டனர். அம்மா கதவைப்பூட்டிக் கொண்டிருக்கும்போது அந்தப் பாப்பா வீட்டு வாசலில் நின்று, எதையோ ரொம்ப கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்ததை அந்தப் பாப்பாவின் அம்மா கவனித்து விட்டார்கள். கதவைப்பூட்டிய பின் ரோட்டில் நடந்து கொண்டே அம்மா பாப்பாவிடம் கேட்டார்கள், என்ன பாப்பா, எதையோ கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தாயோ என்று கேட்டார்கள். அதற்கு பாப்பா, ஓ! அதுவா… நான் அந்த Dogy நாயைத் தான் பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த டாகிக்கு ஸ்கூலுக்குப் போகனும்னு கவலையில்லை, காலையில எந்திரிச்சு பல்லு விளக்கி, குளிச்சு, வீட்டுல வேலை செய்யணும்னு கவலையில்ல. நான் அந்த டாகி மாதிரி இருக்க முடியலையே ஸ்கூலுக்குப் போகவே புடிக்கலைம்மா என்றாள். மறுபடியும் அந்த பாப்பா அவள் அம்மாவிடம் அம்மா, நான் இன்னும் எத்தனை வருஷம் படிக்கனும் என்று கேட்டதற்கு ம்ம்…..ம் 18 வருஷம் படிக்கனும் என்று அவள் அம்மா பதிலளித்தார்கள். என்ன மா சொல்றீங்க? 18 வருஷமா! எப்படி என்னால் படிக்க முடியும் என்று மயங்கி விழாத குறையாக அந்த பாப்பா அழத்தொடங்கி விட்டாள். பாப்பா எதுக்கு இப்ப அழுகிற நீ அழுகாதே. படிப்ப நீ கசப்பா, பிடிக்காதது மாதிரி பார்கிறதாலத்தான் உனக்கு பிடிக்காம்மா, கஷ்டமா இருக்குது. உனக்கு லாலிபாப், சிக்கன்65 பிடிக்கும்ல அதுமாதிரி நெனச்சுப் பாரு நீ நல்லா படிச்சுருலாம் எல்லாமே உனக்கு easy-யாயிரும். என்ன சரியா என்று அம்மா ஒரு லாலி பாப்பை வாங்கிக் கொடுத்து மகளுடைய அழுகையை நிறுத்தினார்கள். என்ன குட்டீஸ் அந்த பாப்பா மாதிரி தானே நீங்களும் படிக்கனும், ஸ்கூலுக்குப் போகனும் ஏதாவது வேலை செய்யனும்னா வேண்டா வெறுப்பா, பிடிக்கலைனு சொல்றீங்க படிச்சாலும், வேலை செஞ்சாலும் நீங்க நல்லா படிக்கனும். நல்லா வேலையைச் செய்யனும்னு நினைச்சு விருப்பத்தோடு செஞ்சீங்கனா உங்களுக்கு எல்லாமே பிடிச்சுப்போயிரும். இயேசாப்பாகூட, நீ சாப்பிட்டாலும், குடிச்சாலும் இயேசப்பாவோடே மகிமைக்காக செய்யனும்னு சொல்லியிருக்காரு. இனிமே நீங்களும் எதையும் சந்தோஷமா, விருப்பமா செய்யுங்க. எதையும் கஷ்டமா நினைக்காதீங்க. என்ன சரியா?. ok. bye..
ஜெபம்.
அன்புள்ள இயேசப்பா, நான் படிச்சாலும், வேலை செஞ்சாலும் விரும்பி சந்தோஷமா செய்ய, படிக்க ஆர்வத்தையும், ஞானத்தையும், உடல் சுகத்தையும், சுறுசுறுப்பையும் தாங்க இயேசப்பா. இயேசுவின் நாமத்தில் பிதாவே. ஆமென்.
மனப்பாட வசனம்.
எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள்.
1 கொரிந்தியர் 10:31