Inspiration

Children's Special

அம்மா.. அம்மா..ன்னு கூப்பிட்டுகிட்டே ஆட்டோவிலிருந்து இறங்கி ஓடிவந்தான் ஜேபஸ். அம்மா, இன்னைக்கு எங்க ஸ்கூல்ல நடந்த Chess போட்டியில ராஜீ Silver Medal வாங்கினாம்மா, நாளைக்கு நான் தான் Gold medal வாங்குவேன்னு சொன்னாம்மா. நான் அதற்கு நீ இன்னைக்கு Silver Medal வாங்கிட்ட பரவாயில்லை ஆனா நாளைக்கு நான் தான் Gold medal வாங்குவேன்னு சொன்னேம்மா அதற்கு அவன் நண்ப்ஸ்ங்ழ் ஙங்க்ஹப் வாங்கிறதற்கே உனக்கு அறிவு இல்லை, நாளைக்கு நீ எப்படி Gold medal வாங்குவ பார்க்கலாம்னு சொன்னான். நான் அதற்கு, நீ இன்னைக்கு உன் அறிவால Silver Medal வாங்கியிக்க நாளைக்கு நான், எங்க இயேசப்பாவால இதோ, இந்தக் கையில Gold medal வாங்குவேன்னு சொன்னேம்மா என்று பள்ளியில் நடந்தவற்றை மூச்சுவிடாமல் சொன்னான் ஜேபஸ். அதைக்கேட்ட அம்மாவுக்கு ரொம்ப சந்தோஷம். Very Good ஆமா தம்பி நாளைக்கு நீ தான் Gold medal வாங்கப்போற, நம்ம இயேசப்பா உனக்கு தரப்போறாங்க. சரி அந்த Gold medal நீ வாங்கிட்டு வந்ததும் Show Case -ல எந்த இடத்துல வைக்கலாம் என்று அவனை உற்சாகப்படுத்தினார்கள் அவன் அம்மா. இதையெல்லாம் அவங்க வீட்டுக்கு வந்திருந்த அம்மாவுடைய தோழிகளும் ரொம்ப ஆச்சரியமாய் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவன் Gold medal வாங்கனும்னு எல்லோரும் Prayer -ம் பண்ணினார்கள். மறுநாள் பள்ளியில் chess competition final -ல நம்ம ஜேபஸ் தான் Gold medal. நேற்று மாதிரியே ஆட்டோவிலிருந்து இறங்கி வேகமாக ஓடிவந்தான் தங்க மெடலோடு. அம்மா, அம்மா கடைசியில யானையை ஞானமாய் நகர்த்தி வைக்கிறதின் மூலம் அவனை நான் ஜெயிச்சிட்டேன். இயேசப்பா தான் எனக்கு ஞானம் தந்தாங்க. இயேசப்பாவாலே நான் இந்தக் கையில இந்தக் Gold medal வாங்கிட்டேன்ம்மா என்று சந்தோஷமாய் கூறினான். அம்மாவும் Thankyou Jesus என்று சொல்லிக்கொண்டு மகனோடு சென்று அந்த மெடலை Show Case-ல் வைத்தார்கள். அவன் அம்மா அவர்களின் Friends -களுக்கும் Phone பண்ணி ஜேபஸ் Gold Medal வாங்கினதைச் சொன்னார்கள். 7ஆம் வகுப்பு படிக்கும் இந்த சின்னப் பையனுக்கு ஆண்டவர் மீது எவ்வளவு நம்பிக்கை என்று ஆச்சரியப்பட்டு அவனைப் பாராட்டினார்கள். என்ன குட்டீஸ், நீங்களும்கூட உங்கள் Studies -ல, Sports -ல கூட இயேசப்பா மேல நம்பிக்கை வைச்சு விசுவாசமா 1st Rank , 1st Prize எனக்குக்தான்னு சொல்லுங்க. அது அப்படியே நடக்கும்படி இயேசப்பா உதவிசெய்வாங்க.

ஜெபிப்போமா?

அன்புள்ள இயேசப்பா, உங்கமேல நம்பிக்கை வைச்சு விசுவாசமா பேச, அறிக்கை செய்ய உதவிசெய்யுங்க. எங்க அக்கா, அண்ணன், தம்பி, தங்கை, Friends எல்லாம் எல்லாவற்றிலும் First -ஆ, Best -ஆ வர உதவிசெய்யுங்க. இயேசுவின் நாமத்தில் பிதாவே, ஆமென்

மனப்பாட வசனம்

“நம்மடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்” – 1யோவான் 5:4