Inspiration

Children's Special

ஹலோ குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா! ஒரு ஏழை சலவைத் தொழிலாளிக்கு ஒரு வயதான கழுதை இருந்தது. அவருக்கு வேலை பளு அதிகமாயிருந்த போது, அந்த கழுதை அவருக்கு மிகவும் உதவியாக இருந்தது. ஒரு நாள் தண்ணீருக்காக அவர் வெட்டியிருந்த கிணற்றினுள் கழுதை விழுந்து விட்டது. சலவைத் தொழிலாளி அதைப் பல இடங்களில் தேடியும் கிடைக்காமல் பின்பு கிணற்றிற்குள் இருப்பதைப் பார்த்தக் கவலைப்பட்டார். என்ன செய்வதென்றறியாமல் அதை (கழுதையை) மண்ணைப் போட்டு மூடிக் கொன்று விட்டு, தான் வேறே வேலை செய்து பிழைத்துக் கொள்ளலாம் என்று எண்ணினார். ஆனால் கழுதையோ தன் எஜமான் வந்து விட்டார், என்னை எப்படியும் காப்பாற்றி விடுவார் என்ற நம்பிக்கையில் உற்சாகத்தோடு இருந்தது. ஐயோ! பரிதாபம் கழுதையின் அந்த நம்பிக்கையில் மட்டுமல்ல கழுதையின் மேலே மண் விழுந்தது. ஆனால் அது கழுதைக்கு தெரியவுமில்லை, புரியவுமில்லை. சலவைத் தொழிலாளி தள்ளிய மண் தன்மேல் விழுந்ததை உதறி, அதன் மேல் ஏறி மிதித்து, மிதித்து அங்கேயுள்ள கற்களையும் மிதித்து, துள்ளிக் குதித்து தன் எஜமானின் வீட்டிற்குச் சென்றது. அதைப் பார்த்த சலவைத் தொழிலாளிக்கு அப்பத்தான் புரிந்தது இருப்பதில் முயற்சி செய்து, முன்னேற வேண்டியது தான் என்று. கழுதை தனக்கு கற்றுக் கொடுத்த பாடத்தினால் அவரும் கவலை நீங்கி புது உற்சாகத்தோடு வீட்டிற்குச் சென்றார். என்ன குட்டீஸ் கழுதையின் எஜமானனைப் போல, சரியாகப் படிக்க முடியாததால, உடல் சுகவீனம், வீட்டில் பணக்கஷ்டம், இன்னும் அப்பா, அம்மா, டீச்சர் சத்தம் போடும் போது பயந்து போய், சோர்ந்து போய்ட்டீங்களா? சோர்ந்து போகாதீங்க அந்த கழுதை தன் மேல் விழுந்த மண்ணையே மிதித்து, மிதித்து மேலே வந்து தன் எஜமானுக்கே வேலை செய்ய உற்சாகமாக ஓடிருச்சில்ல, அதைப் பார்த்த எஜமானும் உற்சாகமானாரே. நீங்களும் உற்சாகமாக, நம்பிக்கையாக இருங்க, நல்லா படிங்க இயேசப்பா உங்களுக்கு உதவி செய்ய, உங்கப்பக்கத்திலே தான் இருக்கிறார். பைபிளில் கிதியோன்னு ஒரு அண்ணன் இருந்தாங்க. அவங்க ரொம்பவே பயப்படுவாங்க, அவங்க காலத்தில இயேசப்பாவுடைய பிள்ளைகளாகிய இஸ்ரவேல் ஜனங்களுடைய ஆசீர்வாதத்தை, ஆடுமாடுகளை, விளைச்சல்களை எதிரிகள் வந்து அடிச்சிட்டுப் போயிருவாங்க. நல்லா சாப்பிட முடியாம, நிம்மதியாய் தூங்க முடியாம ரொம்பவே கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த போது, இந்த கிதியோன் அண்ணனை மட்டும், பயந்தாலும் ஏதாவது முயற்சி செய்து முன்னேற வேண்டும். மக்களை காப்பாற்ற வேண்டும் என்று, வேலை செய்ய சென்ற போது தான் நான் உன்னோடு இருக்கிறேன், நீ அந்த எதிரிகளிடமிருந்து இஸ்ரவேல் மக்களைக் காப்பாற்றுவாய், உனக்கு இருக்கிற இந்த கொஞ்ச பெலத்தோடே போன்னு ஆண்டவர் சொன்னார். அப்படியே அவர் போய் எதிரிகளை ஜெயித்து, இஸ்ரவேல் மக்களைக் காப்பாற்றினார். கிதியோன் அண்ணனின் முயற்சிக்கு பெலனும் கொடுத்து, வெற்றியும் கொடுத்து தலைவனாக உயர்த்தினார். கழுதையின் முயற்சியால் எஜமானுக்கு உற்சாகமும், மீண்டும் வேலையும் கிடைத்தது. நீங்களும் முயற்சி செய்து முன்னேறுங்கள். இயேசப்பா உங்களுக்கு அதை வாய்க்கப் பண்ணுவார்!. ஜெபம் அன்புள்ள இயேசப்பா இதுவரை என் கவனக்குறைவாக, முயற்சி செய்து படிக்காம, அறிவுரைகளை அசட்டை பண்ணினதை மன்னியுங்க. இயேசப்பா நான் சோம்பலாயில்லாமல், பயப்படாமல், கிதியோன் அண்ணனை மாதிரி முயற்சி செய்து படிக்க, வேலைகளை செய்ய எனக்கு உதவி செய்யுங்க. இயேசுவின் நாமத்தில் பிதாவே ஆமென்!. மனப்பாட வசனம் உனக்கு இருக்கிற இந்த பலத்தோடே போ, நீ இஸ்ரவேலை மீதியானியரின் கைக்கு நீங்கலாக்கி இரட்சிப்பாய், உன்னை அனுப்புகிறவர் நான் அல்லவா!. நியாயாதிபதிகள் 6:14.