Inspiration

Children's Special

பள்ளியில் நடந்த விழா ஒன்றில் சரண் தன் முன்னாள் ஆசிரியரை சந்தித்தான். அப்போது முன்னாள் மாணவனான சரண் ஆசிரியரிடம் சென்று, சார், என்னை தெரிகிறதா? என்று கேட்டான். ஆசிரியரோ எனக்கு நினைவில் இல்லையே நீயே யார்னு சொல்லுப்பா என்றார். நான் உங்கள் முன்னாள் மாணவன் என்றதும் ஆசிரியருக்கு மிக்க மகிழ்ச்சி. என்ன செய்றீங்க என்று கேட்டார். முன்னாள் மாணவன் நான் ஆசிரியராக இருக்கிறேன் என்றதும் அப்படியா பெரிய மகிழ்ச்சி ஆசிரியராக வேண்டும் என்று உங்களைத் தூண்டியது எது? என்று கேட்டார் ஆசிரியர். என்னுடைய ஆசிரியர் ஒருவரைப் பார்த்து தான் நானும் ஆசிரியராக வேண்டும் என்று விருப்பப்பட்டேன் என்றான். எப்படி? எதைப் பார்த்து எனக்கேட்டார் ஆசிரியர். ஒரு நாள் என்னோடு கூட படிக்கிற பையன் ஒரு விலை அதிகமுள்ள கடிகாரத்தை அணிந்து வந்தான். அது மாதிரி ஒரு வாட்ச் வாங்க எங்களிடம் வசதியில்லை. எனவே அதை எப்படியாவது திருடி எடுத்துக்கொள்ள வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருந்தேன். அவன் அதைக் கழற்றி பையில் வைத்து விட்டு பாத்ரூம் சென்றதைப் பார்த்த எனக்கு, இதுதான் சமயம் இந்த வாட்சை நாம் எடுத்துக்கொள்ள வேண்டியது தான் என்று எடுத்து என் பேண்ட் பாக்கெட்டில் வைத்துக் கொண்டேன். அவன் வகுப்பறைக்குள் வந்தவுடன் தனது வாட்சை காணவில்லை என்று அறிந்து சிறிது நேரம் தேடிப் பார்த்தான். காணாததால் ஆசிரியரிடம் சொன்னான். ஆசிரியரும் யாராவது எடுத்து இருந்தாலும் அதனைத் திரும்பக் கொடுத்து விடுங்கள் என்றார். மாணவர்களிடமிருந்து எந்த பதிலுமில்லை. எல்லோர் முன்பாக நான் எப்படி திருப்பிக் கொடுக்க முடியும் என்று ரொம்ப சங்கடத்தோடு நான் இருந்தேன். ஆசிரியர் வகுப்பறையின் கதவை மூடச்செய்தார். எல்லோரையும் எழுந்து வரிசையாக நிற்கச்சொன்னார். எனக்கு ரொம்ப பயமா இருந்துச்சு. வெட்கமாகவும் இருந்துச்சு. இப்ப எல்லாரும் கண்களை மூடிக்கொள்ளுங்க. நான் சொல்ற வரைக்கும் யாரும் கண்ணைத் திறக்கக் கூடாதுன்னு சொல்லிட்டார். ஒவ்வொருவரின் பாக்கெட்டுகளிலும் கையை விட்டு பார்த்துக் கொண்டே சென்றார். என்னுடைய பாக்கெட்டுக்குள்ளும் கையை விட்டார் கடிகாரத்தையும் எடுத்துக் கொண்டார்.  எல்லோரும் கண்களை மூடியிருந்ததால் யாரும் எதையும், என்னையும் பார்க்கவில்லை. முன்னால் சென்ற ஆசிரியர் எல்லோரும் கண்களைத் திறக்கலாம் என்று சொல்லி விட்டு அந்தப் பையனிடம் அந்த வாட்ச்சை கொடுத்து விட்டார். ஆனால் இதுபற்றி என்னிடம் ஒரு வார்த்தைகூட கேட்கவுமில்லை, திட்டவுமில்லை. வேறு யாரிடமும் இதுபற்றி சொல்லவேயில்லை. அன்றைக்கு அவர் என் மானத்தைக் காப்பாற்றினார். நானும் அப்பவே திருடும் பழக்கத்தை விட்டொழித்தேன். ஆசிரியரின் அந்த குணம் தான் என்னை ஆசிரியனாக்கியது. எனக்கு ஒரு பாடத்தையும் கற்றுத்தந்தது. ஓர் ஆசிரியர் என்பவர் அனைவருக்கும் தந்தை போன்றவர். ”கற்பித்தல்” மட்டுமல்ல பிறருக்கு அதனைத் தன் வழியில் ”காட்டுதல்” என்னும் பணியைச் செய்பவர். நானும் நடந்து காட்டி கற்பிக்க வேண்டும் என்று விரும்பினேன் என்றான். இதைக் கேட்டதும் அந்த ஆசிரியர்  அற்புதம் என்றார். இப்பவாது நான் யாருனு தெரியுதா என்று கேட்டான் முன்னாள் மாணவன். அப்போதும் அவர், உன்னை சரியாக நினைவுபடுத்த முடியவில்லையே என்றார். சக மாணவனுடைய கடிகாரத்தைத் திருடிய என்னை உங்களுக்கு ஏன் தெரியவில்லை என்றான். ஆசிரியர் கூறினார் நானும் அந்த சமயத்தில் கண்களை மூடிக் கொண்டேதான் ஒவ்வொருடைய பாக்கெட்டாக தடவிப் பார்த்தேன் அதனால் வாட்ச்சை எடுத்தது யாருனு இப்ப நீ சொன்னவுடன் தான் எனக்குத் தெரியுது. ஈஸியாக, இலவசமாக நான் அறிவுரை சொன்னாலும், நான் சொன்னபடி வாழ்ந்து காட்டினதால் தானே இன்று நீ ஆசிரியராக உயர்ந்திருக்கிறாய் அற்புதம் என்றார். அதற்கு அந்த முன்னாள் மாணவன் நானும் உங்களைப் போலவே வாழ்ந்து காட்டிக் கற்பிப்பேன் என்றார். வருங்கால ஆசிரியர்களே,  குட்டீ பிள்ளைகளே கதை புரிஞ்சுச்சா! Ok Bye