Inspiration
ஹலோ குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா?
உற்சாகமாக பள்ளிக்கு சென்ற முகில் முகவாடலாய் வீட்டிற்கு வந்தான். வந்தவன் யூனிபார்மும் மாற்றாமல், Snacks-ம் சாப்பிடாமல் போய் படுத்துக்கொண்டான். தம்பி, என்னடா என்ன முடியலையா என்று அம்மா அவனைக் கேட்டது தான் தாமதம், ஓ-ன்னு அழத்தொடங்கிட்டான். தம்பி என்னன்னு சொல்லுமா, யாரும் பசங்க அடிச்சாங்களாமா? இல்லைன்னு தலையாட்டினான். கீழே ஏதும் விழுந்திட்டியா? இல்லைன்னு மீண்டும் தலையாட்டினான், அப்ப ஏன்டா அழுகிற, பாப்பா வேற எதுக்கு அழுகுது சொல்லுடா என்றார்கள் அம்மா. அது மிஸ் வந்து என்ன மக்குன்னு திட்டிட்டாங்க, நான் ஒழுங்கா சரியா? Home Work செய்யலைன்னு திட்றாங்க, நான் இனிமே ஸ்கூலுக்கு போக மாட்டேன்-ன்னு அழுதான் முகில். நீ நல்ல படிக்கனும்னு தான் மிஸ் சத்தம் போட்டிருப்பாங்க. சரி அழுகாதே இங்கே வா, நான் உனக்கு ஒரு வசனம் சொல்லித்தர்றேன். அந்த வசனத்தை மனப்பாடமா நல்ல படிச்சு, ஜெபம் பண்ணிட்டு Home Work செய். அப்புறம் பாரு அந்த மிஸ் உன்னை Good Bye சொல்லுவாங்க. ஆ……ய் அப்படியா நிஜமாவா? ஆமாமப்பா என்ற அம்மா, அந்த வசனத்தை தினமும் சொல்லிக் கொடுத்து, அதை அப்படியே சொல்லி ஜெபம் பண்ணினான். Home Work-ஐயும் நல்லா பண்ணிட்டுப் போனான். முகிலின் Home Work நோட்டை மிஸ் Correction பண்ணி முடித்தபின் Good என்று எழுதியிருந்தார். அதுமட்டுமல்ல அவனைப் பார்த்து Good Bye என்றும் பாராட்டினார்கள். உடனே அவன் இயேசப்பாவுக்கு நன்றி என்றான். மிஸ் என்னது என்ன சொல்ற என்றார்கள். அதற்கு முகில் மிஸ் நீங்க ஒருநாள் என்ன மக்குன்னு திட்டிட்டீங்க, அன்னைக்கு நான் அழுதிட்டேயிருந்தேன்னா அப்ப எங்க அம்மா ஒரு வசனம் சொல்லித்தந்தாங்க. அந்த வசனத்தை தினமும் சொல்லி சொல்லி ஜெபம் பண்ணு உங்க மிஸ் உன்னை எர்ர்க் ஆர்ஹ்-ன்னு சொல்லுவாங்கன்னு சொன்னாங்க. அதே மாதிரி நீங்களும் Good Bye-ன்னு சொன்னவுடனே, அதான் நான் இயேசப்பா நன்றின்னு சொன்னேன். எங்க அந்த வசனத்தை நம்ம Class பிள்ளைகளுககும் சொல்லு பார்ப்போம். Ok மிஸ்.
மனப்பாட வசனம்.
உங்களில் ஒருவன் ஞானத்தில் குறையுள்ளவனாயிருந்தால் யாவருக்கும் சம்பூரணமாய் கொடுக்கிறவரும், ஒருவரையும் கடிந்து கொள்ளாதவருமாகிய தேவனிடத்õல் கேட்கக்கடவன். யாக் 1:5
ஜெபம்.
அன்புள்ள இயேசப்பா, எனக்கும் ஸ்கூலுக்கு போகப பிடிகóகலை. படிப்பு வரவே மாட்டேங்குது எத்தனை முறை சொல்லித்தந்தாலும், புரியவே மாட்டேங்குது. எனக்கு ஞானம் தாங்க. என்னையும் Good Bye, Good Girl–ன்னு சொல்லும்படி நன்கு படித்து எல்லாத் தேர்வுகளிலும் வெற்றி பெற உதவி செய்யுங்க. இயேசுவின் நாமத்தில் பிதாவே ஆமென்.