Inspiration

Children's Special

ஹலோ குட்டீஸ்!,
இயேசுவை அறியாத அரசன் ஒருவனுடைய அவையில் கிறிஸ்தவ புலவர் ஒருவர் இருந்தார். ஒரு நாள் அரசன் அந்தப் புலவரை வரவழைத்து, நீயும் இயேசு தான் உண்மையான தெய்வம் என்கிறாய், உனக்கு ஒரு பஹள்ந் (டாஸ்க்) தரப்போகிறேன். அந்த பங்ள்ற்-ல் நீ டஹள்ள் ஆகிவிட்டால் இயேசு உண்மையான தெய்வம் என்று நான் ஏற்றுக்கொள்கிறேன் என்றார். பஹள்ந் என்னவென்றால் நான் ஒரு காசை (நாணயம்) மேலே தூக்கிப்போட்டுக் கையில்
பிடிப்பதற்குள்ளாக முழுபைபிளிலும்
சொல்லப்பட்டுள்ளது என்ன என்பதை எனக்கு சொல்ல வேண்டும் என்றார். அதற்கு அந்த புலவர் அரசே, எனக்கு ஒரு வாரம் பண்ம்ங் கொடுங்க என்றார் அரசனும் சரி என்றார். ஒரு வாரத்திற்குப்பின் புலவர் அரசன் முன் நின்றார். அரசனும் எங்கே உனக்கு கொடுத்த பஹள்ந்-ஐ எப்படி செய்கிறாய் என்று பார்க்கிறேன் என்றார். அரசன் காசை வானத்தை நோக்கி, உயர மேலே தூக்கிப்போட்டார். புலவரும் பைபிளைப் பற்றிக் கூறத் தொடங்கினார். ஆதாமும், ஏவாளும் பாவஞ் செய்ததால் தேவன் தனது குமாரன் இயேசுவை
உலகத்திற்கு அனுப்பினார். அவர் சிலுவையில் மரித்து உயிர்த்தெழுந்தார் என்று சொல்லி முடிக்க, காசும் கீழே வந்து விழுந்தது. அரசனுக்கோ ஒரே ஆச்சரியம். எப்படி உன்னால் இதை இவ்வளவு சீக்கிரம் சொல்ல முடிந்தது என்று கேட்ட போது புலவர்

சொன்னார், கடந்த ஒரு வாரமும் நான் இயேசப்பாவிடம் ஜெபம் பண்ணினேன். அவரே எனக்கு இதை சீக்கிரமாய், சுருக்கமாய் சொல்லிக் கொடுத்தார் என்று சொன்னவுடன் அந்த அரசனும் உன்னோடு பேசின இயேசுவே மெய் தெய்வம் என்பதை இப்போது மனதார ஏற்றுக்கொள்கிறேன் என்றார். அன்பு குட்டீஸ், இயேசப்பா நம்ம பாவம் நீக்குவதற்காக சிலுவையில் மரித்து, உயிர்த்தெழந்த உண்மையான தெய்வம் என்பதை அந்த அரசனைப்போல நம்பி ஏற்றுக் கொள்வீங்களா?.


அன்புள்ள இயேசப்பா, என் பாவத்தை நீக்க எனக்காக மரிச்சீங்க, எனக்காக உயிரோடு எழுந்தீங்க என்பதை விசுவாசிக்கிறேன். என் உள்ளத்திற்குள்ள வாங்க இயேசப்பா, என்னைய உங்க பிள்ளையாய் ஏற்றுக் கொள்ளுங்கப்பா இயேசுவின் நாமத்தில் பிதாவே ஆமென்.

நீர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலக ரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் யோவான் 4:42.