Inspiration
பாதாளத்தின் வாசல்கள் மேற்கொள்வதில்லை
பாதாளத்தின் வாசல்கள் மேற்கொள்வதில்லை மத் 16:18
பாதாளத்தின் வாசல்கள் மேற்கொள்வதில்லை மத் 16:18
ஆண்டவரும் உலக இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள். தேவனுடைய பெரிதான கிருபையினால் இந்த தேவ செய்தியின் மூலம் உங்களைச் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். ஆண்டவராகிய தேவன் இரத்தம் சிந்தி சமóபாதித்த அவருடைய சபைக்கும், அவருடைய மணவாட்டிக்கும், அவரை ஏற்றுக்கொண்ட அவருடைய பிள்ளைகளுக்கும் கொடுத்த வாக்குறுதி, வாக்குத்தத்தம் தான் இது. பாதாளமோ, பாதாளத்தின் கிரியைகளோ, மனிதர்களோ உங்களை மேற்கொள்வதில்லை என்றார். தேவனுக்கு மகிமையாக அவரை துதித்து ஸ்தோத்தரித்து, அவரை பணிந்து, ஆராதிக்க உண்டாக்கப்பட்ட, ஏற்படுத்தப்பட்ட தூதன் தான் லூசிபர். அவன் நாளடைவில் அவனுடைய வேலையைச் செய்யாமல், கடமையைச் செய்யமால் ஏமாற்றி நடித்து தேவனுக்கு விரோதமாக சில தூதர்களை குழுவாக ஏற்படுத்தினான். அவனை தேவன் ஆராய்ந்த போது குற்றம் கண்டுபிடிக்கப்பட்டது. எசே 28:2-ல் மனுபுத்திரனே நீ தீருவின் அதிபதியை நோக்கி சொல்ல வேண்டியது என்னவென்றால் உனó இருதயம் மேட்டிமை கொண்டு நான் தேவன் சமுத்திரத்தின் நடுவே தேவாசனத்தில் வீற்றிருக்கிறேன் என்று சொல்லி உன் இருதயத்தை தேவனின் இருதயத்தைப் போல் ஆக்கினாலும் நீ மனுஷனேயல்லாமல் தேவனல்ல என்று சொல்லி எசே 28:16-ஆம் வசனத்தில் உன் வியாபாரத்தின் மிகுதியினால் உன் கொடுமை அதிகரித்தது. நீ பாவம் செய்,தாய், ஆகையால் நான் உன்னை தேவனுடைய பர்வதத்திலிருந்து ஆகாதென்னு தள்ளி காப்பாற்றுகிற கேரூப்பாய் இருந்த உன்னை அக்கினிமயமான கற்களிலிருந்து நடுவே இராதபடிக்கு அழித்துப் போடுவேன் என்றார். அப்படித் தள்ளப்பட்ட அந்த கேரூப் லூசிபர் தூதன் தான் லூக்கா 10:18-ல் சொல்லப்பட்ட வார்த்தையின்படி சாத்தான் மின்னலைப் போல் வானத்திலிருந்து விழுகிறதைக் கண்டேன் என்றார். அவன் உயர வானத்திலிருந்தும், தேவனுடைய பர்வதமாகிய ஏதேன் தோட்டத்திலிருந்தும், உயரமும் உன்னதமுமான இடத்திலிருந்து கீழே தள்ளப்பட்டு, சபிக்கப்பட்டு விழந்து போனான். அந்த விழுந்து போன பிசாசு இருந்த இடத்தில் தான் தேவன் மனிதனை உருவாக்கி தன்னோடு இருக்கவும், தன்னைத் துதிக்கவும், மகிமைப்படுத்தவும் ஏற்படுத்தினார். ஆகவே மனிதன் தேவனைப் பின்பற்றி அவரை மகிமைப்படுத்தி, ஏதேன் தோட்டத்தில் அவரோடு உலாவினான். எபி 2:7-ல் தேவ தூதரிலும் சற்று சிறியவனாக்கினீர், மகிமையினாலும், கனத்தினாலும் முடி சூட்டி, உம்முடைய கரத்தின் கிரியைகளின் மேல் அவனை அதிகாரியாக்கினீர். சகலத்தையும் அவனுடைய பாதங்களுக்கு கீழ்ப்படுத்தினீர் என்றார். இப்படி தான் உண்டாக்கின மனிதனை கனத்தினாலும், மகிமையினாலும் முடிசூட்டி அந்த விழுந்து போன சாத்தானின் மேல் ஆளுகை செய்யவும், அவனை அடக்கிப் போடவும், அவனுடைய கிரியைகளை எல்லாம் அழித்துப் போடவும் தேவன் மனிதனை ஏற்படுத்தினார். இதை சற்றும் பொருத்துக் கொள்ள முடியாத சாத்தான், தாங்கிக் கொள்ள முடியாத சாத்தான் எப்படியாவது இந்த மனிதனுக்கு தேவன் கொடுத்ததை பரித்துக் கொள்ளவும், தன்னை மனிதன் ஆண்டு கொள்ளாதபடி அவன் அதிகாரத்தைப் பறிக்கவும், தேவன் போல் ஏமாற்றி நடித்து ஆதாமையும், ஏவாளையும் வஞ்சித்தான், ஏமாற்றினான். நீங்கள் கண்கள் திறக்கப்பட்டு தேவர்களைப் போல இருப்பீர்கள் என்றான். எத்தனை நாட்களுக்கு மனிதர்களாய் இருப்பது, எத்தனை நாட்களுக்கு தேவனையே ஆராதிப்பது, உங்களுக்கு துதிபாட, உங்களை பெருமைப்படுத்த ஆட்கள் வேண்டாமா, உங்களைப் பின்தொடர, உங்களுக்கு கொடி பிடிக்க ஆட்கள் வேண்டாமா என்று தான் விழுந்து போன இடத்தில் மனிதனும் விழுந்து தேவனைத் தேட முடியாமல், ஜெபிக்க முடியாமல், அவரைப் பணிந்து ஆராதிக்க முடியாமல் பாதாளத்தின் வாசல்கள் அவனை மேற் கொண்டது. பாதாளத்தின் கிரியைகள், செய்கைகள் அவனை மேற்கொண்டது. அனóறே மனிதன் ஏதேன் தோட்டத்திலிருந்து துரத்தப்பட்டு, நசுக்கப்பட்டு பாதாளத்தின் படுக்கையைப் போட்டுக் கொண்டான். தேவ உறவை ஆத்துமாவில் உள்ள ஜீவனை இழந்து போனான். சாத்தான் பாதாளத்தின் கிரியைகளால் தேவ பிள்ளைகளை மேற்கொண்டான். அப் 19:15,16-ல் பொல்லாத ஆவி அவர்களை நோக்கி இயேசுவை அறிவேன் நீங்கள் யார் என்று சொல்லி பொல்லாத ஆவியுடைய மனுஷன் அவர்கள் மேல் பாய்ந்து பலாத்காரம் பண்ணி அவர்களை மேற்கொள்ள அவரóகள் நிர்வாணிகளும் காயப்பட்டவர்களுமாகி அந்த வீட்டை விட்டு ஓடிப்போனார்கள். ஆம் நாம் தேவனை விட்டுப் பிரியும் போது, விலகும் போது அசுத்த ஆவிகள் அதன் கிரியைகள் நம்மை மேற்கொண்டு அவனுக்கு நம்மை அடிமைப்படுத்த நாம் தேவனைத் துதிக்க முடியாமல், மகிமைப்படுத்த முடியாமல் பாதாளத்தின் கிரியைகளால் சூழப்பட்டுத் தாக்கப்படுகிறோம். ஆகவே தான் சங்கீதக்காரன் சங் 115: 17-ல் மரித்தவர்களும், மவுனத்தில் இறங்குகிறவர்கள் அனைவரும் கர்த்தரை துதியார்கள். ஆம் பாதாளம் கொடிதான இடம். அழுகையும் பற்கடிப்பும் உள்ள இடம். அந்தகாரம் சூழ்ந்த இடம், இந்த இடத்தில் இருக்கிற யாவரும், தள்ளப்பட்ட யாவரும் மவுனத்தில் வாசம் பண்ணி தேவனை மறந்து போவார்கள். சங் 94:17-ல் கர்த்தர் எனக்கு துணையாயிராவிட்டால் என் ஆத்துமா சீக்கிரமாய் மவுனத்தில் வாசம் பண்ணியிருக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. இது தான் பாதாளத்தின் வல்லமை. இப்படியாக வாழ்கிறவர்களைத் தான் பாதாளத்தின் வாசல்களால் மேற்கொள்ளப்பட்டு கண்ணீரோடு, வேதனையோடு துக்கத்தில் வாழ்கிறார்கள். இப்படிப்பட்ட ஒரு இடத்திற்கு, இந்த பாதாள வல்லடிக்கு ஒரு மனிதன் போய் விடாதபடிக்குத் தான் ஆண்டவராகிய இயேசு பேதுருவைப் பார்த்து சொன்னார் இந்த கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன் பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை என்றார். இன்றைக்கு இந்த செய்தியை வாசித்துக் கொண்டிருக்கும் என் அன்பு சகோதர, சகோதரிகளே நம் வாழ்க்கை எப்படியிருக்கிறது, நம் பிள்ளைகள் வாழ்க்கை எப்படியிருக்கிறது. நீங்கள் யாரால் எதனால் மேற்கொள்ளப்பட்டிருக்கிறீர்கள். பாதாளத்தின் வாசல்கள் உங்களை மேற்கொண்டிருக்கிறதா? அல்லது தேவாதி தேவனுடைய வல்லமை அல்லது அவருடைய வார்த்தை உங்களை மேற்கொண்டிருக்கிறதா? நாம் இப்பொழுது நம்மை ஆராய்ந்து பார்த்து அவருக்கு மகிமையாக வாழ நம்மை அர்ப்பணிக்க வேண்டும். இல்லையென்றால் நாம் மவுனத்தில் வாசம்பண்ணி நம்முடைய காலத்தை இழந்து விடுவோம். அதற்குத்தான் ஆண்டவராகிய இயேசு பேதுருவைப் பார்த்து பாதாளத்தின் வாசல்கள் உன்னை மேற்கொள்வதில்லை என்றார். என் ஆண்டவராகிய தேவன் தாமே உங்களை பாதாளத்தின் வல்லடிக்கு விலக்கிக் காப்பார்.
அவர் பாதாளத்திலிருந்து இறங்கவும், அதிலிருந்து ஏறவும் பண்ணுகிறார். 1 சாமு 2:6
நம்முடைய தேவன் யார் பாதாளத்திலிருந்து ஏறவும், தப்புவிக்கவும் பண்ணுகிறார். பூமியில் மனிதர்கள் உயிரோடு வாழும் போது பல பாதாள வல்லமையில் அகப்பட்டு மீளா துயரத்திலிருந்து தப்பினார்கள். ஆதி 37:35, ஆதி 42:38-ல் நான் துக்கத்தோடே என் குமாரனிடத்தில் பாதாளத்தில் இறங்குவேன் என்றான். இவ்விதமாய் அவனுடைய தகப்பன் யோசேப்புக்காக அழுது கொண்டிருந்தான். காரணம் யாக்கோபின் மற்ற பிள்ளைகள் எல்லாம் யோசேப்புக்கு விரோதமாய் எழும்பி அவனை உயிரோடே பாதாளக்குழியில் தள்ளினார்கள். எங்களைக் காட்டிலும் எங்கள் தகப்பன் அவனை அதிகமாய் நேசிக்கிறார், அன்பு காட்டுகிறார். இவன் எங்களுக்கு எப்போழுதும் இடையூராக இருக்கிறான், எதைச் செய்தாலும் தனப்பனிடத்தில் சொல்லி விடுகிறான் என்று அவனுக்கு விரோதமாய் எழும்பி அவனை அடித்து துன்புறுத்தி தகப்பனிடத்திலிருந்து பிரித்து குழியில் தள்ளி, பின்பு தூக்கி எடுத்து இஸ்மவேலருக்கு இருபது வெள்ளிக்காசுக்கு விற்றுவிட்டார்கள். இதை கேள்விப்பட்ட யாக்கோபு பல நாட்கள் துக்கத்தினால் தவிóத்தான், சாப்பிட முடியவில்லை, தூங்க முடியவில்லை. சில நாட்களுக்கு முன்பு கல்லூரியில் படித்த பிள்ளையை காணவில்லை. அவளுடைய பெற்றோர்கள் தேடியும் கிடைக்கவில்லை. கடைசியாக காவல்துறையில் புகார் அளித்து தேடினால் அவள் ஒரு வாலிபனோடு ஓடிவிட்டாள் அவன் சரிõல்லாதவன், குடிகாரன். பெற்றோர்கள், உறவினர்கள் அந்த பெண்ணின் காலில் விழுந்து எப்படியாவது வந்துவிடு வேண்டாம் என்று கதறினார்கள். அவளோ என் வாழ்க்கையை எனக்குப் பார்த்துக்கொள்ளத் தெரியும் போங்கள் என்று சொல்லி அவர்களை அவமானப்படுத்தி அனுப்பிவிட்டாள். அவர்கள் சொன்னார்கள் எங்களை உயிரோடு பாதாளத்தில் தள்ளிவிட்டாள் என்று. இதைப்போல இன்னும் பல குடும்பங்களில் சொத்துப் பிரச்சனை, கணவன் மனைவி சண்டை, பிறரால் அபகரிக்கப்பட்டு, ஏமாற்றப்பட்டு சொத்தை இழந்து, பணத்தை இழந்து, பல நாசமோசங்களுக்கு உள்ளாகி இரத்த கண்ணீர் வடிக்கிற அநேகரைப் பார்த்திருக்கிறேன். நாங்கள் உயிரோடு பாதாளத்தில் தள்ளப்படுகிறோம் என்கிறார்கள், கதறுகிறார்கள், தாங்க முடியாமல் துடிக்கிறார்கள். மற்றொரு பக்கம் ஒரு மனிதன் தேவனுக்கு விரோதமாய் எழும்பும் போது, துணிகரமாய் பாவம் செய்யும் போது பாதாளத்திற்கு தள்ளப்படுகிறான், போகிறான். எண் 16:30-33-ல் கர்த்தர் ஒரு புதிய காரியத்தைச் நேரிடச் செய்தால் பூமி தன் வாயைத் திறந்து இவர்கள் உயிரோடே பாதாளத்தில் இறங்கத்தக்கதாக இவர்களையும், இவர்களுக்கு உண்டான யாவையும் விழுங்கிப் போட்டதேயானால், இந்த மனிதர்கள் கர்த்தரை அவமதித்தார்கள் என்பதை அறிந்து கொள்வீர்கள். அதே போல் அவர்கள் தங்களுக்கு உண்டான எல்லாவற்றோடும் உயிரோடே பாதாளத்தில் இறங்கினார்கள், பூமி அவர்களை மூடிக்கொண்டது. காரணம் தேவனுக்கு விரோதமாய் எழும்பி, அவருடைய சபைக்கு விரோதமாய் எழும்பி தேவனுடைய திட்டத்தை தடுக்கவும், அவர் சித்தத்தை தடை பண்ணவும் இன்றைக்கு பூமியில் அநேக கோராகின் புத்திரர் எழும்பி இருக்கிறார்கள். ஒருமனதை கெடுப்பது, தேவையில்லாமல் ஊழியங்களில் தலையிட்டு தங்கள் வேலையைச் செய்யாமல், தங்கள் காரியத்தை, ஊழியத்தை பார்க்காமல் மற்றவர்களை குறைசொல்லி அவர்களை மனம் நோகப்பண்ணுவது. இந்த கடைசி காலத்தில் கிறிஸ்தவத்திற்கு உள்ளேயும், வெளியேயும் ஒரு வஞ்சிக்கிற கூட்டம் எழும்பி சபையை ஊழியங்களைப் பாழக்கிக் கொண்டிருக்கிறது. இது கோராகின் ஆவி மோசேக்கு விரோதமாய், தேவனுடைய வழிநடத்துதலுக்கு விரோதமாய், பரம கானானை அடைய முடியாதபடிக்கு தடை பண்ணினார்கள். எண் 16:3-ல் மோசேக்கும், ஆரோனுக்கும் விரோதமாய் எழும்பி கூட்டம்கூடி அவர்களை நோக்கி நீங்கள் மிஞ்சிப் போகிறீர்கள் சபையில் எல்லாரும் பரிசுத்தமானவர்கள் கர்த்தர் அவர்கள் நடுவில் இருக்கிறார். இப்படியிருக்க கர்த்தருடைய சபைக்கு மேலாக உங்களை ஏன் உயர்த்துகிறீர்கள் என்று குழப்பத்தை உருவாக்கி ஒருமனதை கெடுத்து, உறவை முறித்து பிரிவினையைக் கொண்டு வந்தார்கள். இன்றைக்கு அநேக குடும்பங்களில், வேலைகளில், தொழிலில், ஊழியத்தில் ஒருமனமாய் செய்ய முடியாமல், ஒருவர் செய்கிற ஊழியத்தை மற்றவர் ஏற்றுக்கொள்ள முடியாமல் நாங்கள் பூரணம் அவர்கள் பாதி என்று குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள். இந்த கடைசி நாட்களில் பூமி தன் வாயைத் திறந்து, அவர்கள் நின்றிருந்த இடம் பிளந்து உயிரோடே அவர்களை மூடிக்கொண்டது. பாதாளம் கொடியது, தேவ கோபம் கொடியது. அவர்கள் தேவ தண்டனையை தங்கள் காலத்திற்கு முன்பே பெற்று விட்டார்கள். அப்போஸ்தலனாகிய பவுல் சொல்கிறார் 1 தீமோத் 5:24-ல் சிலருடைய பாவங்கள் வெளியரங்கமாயிருக்கிறது, நியாயத்தீர்ப்புக்கு முந்திக்கொள்ளும், சிலருடைய பாவங்கள் அவர்களைப் பின்தொடரும் என்ற வார்த்தையின்படி நியாயத்தீர்ப்பு வருவதற்கு முன்பே அவர்களுடைய பாவம் முந்திக்கொண்டு உயிரோடே அவர்களை பாதாளத்தில் தள்ளிவிட்டது. எவ்வளவு பயங்கரமானது. இந்த கடைசி காலத்தில் தேவனை மதிக்காத, நேசிக்காத, சுவிசேஷத்திற்கு விரோதமாய் எழும்புகிற எந்த இராஜ்யமானாலும், எந்த மனிதனானாலும் அவர்கள் முடிவு அதுவாகத்தான் இருக்கப் போகிறது. ஆகவே தான் பரிசுத்த ஆவியானவர் சொல்லுகிறார் எபி 10:31-ல் ஜீவனுள்ள தேவனுடைய கைகளில் விழுகிறது பயங்கரமாயிருக்குமே என்று சொல்லப்பட்டுள்ளது. கோராகின் ஆவியுடையவர்கள் ஒருமனதை கெடுப்பவர்கள், ஐக்கியத்தை உடைப்பவர்கள், தவறாய் வேத வசனத்தைச் சொல்லி ஜனங்களை திசை திருப்புகிறவர்கள். இவர்களுக்கு நாம் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும். தேவன் பாதாளத்தை மனிதர்களுக்கு ஏற்படுத்தவில்லை. பிசாசுகளுக்கும், அவன் தூதர்களுக்கும் தான் ஏற்படுத்தினார் என்று மத்தேயு 25:42-ல் சொல்லப்பட்டுள்ளது. அடுத்ததாக வியாதிப்பட்ட அநேகர் செத்து பிழைத்து பாதாளம் வரை சென்று திரும்பியவர்கள். ஏசாயா 38:10-ல் நான் என் பூரண ஆயுசின் நாட்கள், வருஷங்கள் சேராமல் பாதாளத்தின் வாசல்களுக்கு உட்படுவேன் என்று என் நாட்கள் அறுப்புண்டு போகிறது என்றார். அவ்வளவு கொடிய வியாதி கேன்சர். அவன் சரீரமெல்லாம் பட்டுப் போயிற்று. இதே நிலை தான் யோபுவுக்கும், அவன் சதை, நரம்பு, எலும்பு எல்லாம் உலர்ந்து போயிற்று. இரத்த ஓட்டம் இல்லாமல் படுத்த படுக்கையாகி, பிறர் உதவியில்லாமல் கைவிடப்பட்டு மரித்துப் பிழைத்தான். எசேக்கியா ராஜா அந்தப் பாதையில் கடந்து போனான். வேதம் சொல்லுகிறது சங் 18:5-ல் பாதாளக்கட்டுகள் என்னை சூழ்ந்து கொண்டது. மரணக்கண்ணிகள் என் மேல் விழுந்தது என்று பாதாளக் கட்டுகளிலிருந்த, மரண கண்ணிகளிலிருந்த அநேகரை தேவன் உயிரோடு எழுப்பி அவர்களைத் தப்புவித்தார். பாதாளத்தின் வாசல்கள் அவர்களை மேற்கொள்ளாமல், உயிரோடு விழுங்கப்படாமல் தேவன் அவைகளில் இருந்து எழும்பி வரப்பண்ணினார். பாதாளத்தின் வாசல்கள் மேற்கொள்ளாமல் அவைகளுக்கு தப்புவித்து மீட்டார், பாதுகாத்தார். ஆகவே தான் பேதுருவைப் பார்த்து பாதாளத்தின் வாசல்கள் மேற்கொள்வதில்லை என்றார்.
பாதாளத்தின் திறவுகோலை அவர் கையில் வைத்திருக்கிறார்.
மரித்தேன், ஆனாலும் இதோ சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன் ஆமென். நான் மரணத்திற்கும், பாதாளத்திற்கும் உரிய திறவுகோலை உடையவராக இருக்கிறேன். மõக அருமையான வார்த்தை இது. இன்றைக்கு வீட்டு திறவுகோல் இருக்கிறது, தேசத்தின் பணம் பாதுகாப்பு திறவுகோல் இருக்கிறது. அணு ஆயுத திறவுகோல் இருக்கிறது. ஆனால் மரித்தேன் சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன் எனறவர் பரலோக ராஜ்யத்தின் திறவுகோலையும், பாதாளத்தின் திறவுகோலையும் உடையவராக இருக்கிறார். அதனால் தான் அவர் வேதத்தில் பல தடவைகள் சொன்னார், யோவான் 14:6-ல் நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன் என்றார். நமக்கு வழியும் அவர்தான், சத்தியமும் அவர்தான், ஜீவனும் அவர்தான். அவரிடத்தில் ஆயிரம் திறவுகோல் இருக்கிறது. ஒரு மனிதனுக்கு கண்ணில் அல்லது கைகளின் விரல்களில் உள்ள ரேகை போல மற்றவர்களுக்கு இருப்பதில்லை. இன்றைக்கு பயோமெட்ரிக் கையெழுத்து வந்துவிட்டது. ஆனால் இயேசுவின் திறவுகோல் எப்படிப்பட்ட, பூட்டப்பட்ட, திறக்க முடியாத கதவுகள், பூட்டுகளைத் திறந்துவிடும். காரணம் அவர் மரணத்திற்கும், பாதாளத்திற்கும் உரிய திறவுகோலை உடையவராக இருக்கிறார். இன்றைக்கு பாதாளத்திற்கு முன் குறிக்கப்பட்டவர்கள், நியமிக்கப்பட்டவர்கள் மனசாட்சியில் வாதிக்கப்பட்டு, நொறுக்கப்பட்டு என்னை பரலோகம் கொண்டு போகிறவர் யார்? எனக்காக பரலோகத்தில் யார் இருக்கிறார் என்று ஏங்கி அங்கலாய்க்கிறார்கள். சங் 89:48-ல் மரணத்தைக் காணாமல் உயிரோடிருப்பவன் யார்? தன் ஆத்துமாவை பாதாள வல்லடிக்கு விலக்கி விடுவிக்கிறவர் யார்? என்று தாவீது கதறினான். நான் ஒரு நாளும் தேவ சமூகத்தை விட்டு விலகி, தள்ளப்பட்டு, தேவனை விட்டு பிரிந்து பாதாளத்திற்குச் சென்று விடக்கூடாது. பல இக்கட்டில் மரண கண்ணியில் எதிரிகளின் யுத்தத்தில் தாவீது கெஞ்சி மனதுருகி தேவனை நோக்கி ஏங்கினான். சங் 49:15-ல் ஆனாலும் தேவன் என் ஆத்துமாவை பாதாளத்தின் வல்லமைக்குத் தப்புவித்து மீட்பார். ஏனென்றால் அவரிடத்தில் தான் பாதாளத்தைச் ஜெயித்த, மேற்கொண்ட திறவுகோல் இருக்கிறது. அவர் வழியாய்த் தான் நாம் பாதாள வல்லடிக்கு தப்பமுடியும். இதற்காகத்தான் இயேசு சிலுவையில் பாடுபட்டு இரத்தம் சிந்தி அடக்கம் பண்ணப்பட்டு, யோனா மீனின் வயிற்றில் மூன்று நாள் இருந்தது போல இருந்தார். பூமியிலிருந்து அடக்கம் பண்ணப்பட்ட அந்த நாளிலே அவர் ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டு, பாதாளத்திற்குச் சென்று பிசாசினால் காவல் காக்கப்பட்டு, சிறைப்படுத்தப்பட்டு நித்தியத்திற்கு போக முடியாதா என்று ஏங்கிக் கொண்டிருந்த ஒவ்வொருவருக்கும் பிரசங்கம் பண்ணி, இரட்சிப்பை பற்றிச் சொல்லி நானே வழி, நானே சத்தியம், நானே ஜீவன் என்று பிரசங்கித்தார். 1 பேதுரு 3:19,20-ல் அவர் மாம்சத்தில் கொலையுண்டு, ஆவியில் உயிர்ப்பிக்கப்பட்டார். அந்த ஆவியினாலே அவர் போய் காவலில் உள்ள ஆவிகளுக்குப் பிரசங்கம் பண்ணி, அந்த ஆவிகள் பூர்வ காலத்தில் நோவா பேழையை ஆயத்தம் பண்ணும் நாட்களில் நீடிய பொறுமையோ காத்திருந்தவர்களுக்கு தேவன் பிரசங்கித்து, பாதாளத்தில் படுக்கை போட்ட அவர்களை மீட்டுக் கொண்டு வந்தார். அவர் மட்டும் உயிரோடு எழுந்திருக்கவில்லை, அந்த காவலில் இருந்த அத்தனை பேரையும், பாதாளத்தின் வல்லடிக்குத் தப்பி அவர்களை உயிரோடு எழுப்பினார். மத் 27:52,53-ல் கல்லறைகளும் திறந்தது, நித்திரையடைந்திருந்த அநேக பரிசுத்தவான்களுடைய சரீரங்களும் எழுந்திருந்தது. அவர் உயிர்த்தெழுந்த பின்பு இவர்கள் கல்லறையை விட்டு புறப்பட்டு பரிசுத்த நகரத்தில் பிரவேசித்து அநேகருக்கு காணப்பட்டார். பாதாளத்தின் வல்லடிக்கு மனுக்குலத்தை தப்பி, காவலில் பிசாசினால் கண்காணிக்கப்பட்ட, அடைக்கப்பட்டிருந்த அநேக ஆத்துமாக்களை ஆண்டவராகிய இயேசு மீட்டுக் கொண்டார். அவர்கள் நித்தியவாசிகளும், பிதாவின் பிள்ளைகளுமாகினார்கள். ஆகவேதான் அவர் தமது மரணத்தினால் பிசாசை அழித்து, பாதாளத்திற்குச் சென்று கொண்டிருந்தவர்களும் நித்திய இரட்சிப்பை, நித்திய சுவிசேஷத்தை அறிவித்தார்கள். இன்றைக்கு அந்த திறவுகோல் அவரிடத்தில் தான் இருக்கிறது. அந்த சாவி அவரிடத்தில் தான் இருக்கிறது. அவர் தான் மரணத்திற்கும், பாதாளத்திற்கும் திறவுகோலை உடையவராயிருக்கிறார். இன்றைக்கு அந்த இயேசு யாரெல்லாம் இந்த சத்தியத்தை அறிந்து உணர்ந்து அவரை நோக்கி கூப்பிடுகிறார்களோ, உதவியை நாடுகிறார்களோ அத்தனை பேர்களுக்கும் அவர் மரணத்திற்கும் பாதாளத்திற்கும் உரிய திறவுகோலாய் இருந்து அவர்களைத் தப்புவிக்கிறார். ஆகவே தான் அவர் சொன்னார் ஓசியா 14:13-ல் 1 கொரி 15:55-ல் மரணமே உன் கூர் எங்கே, பாதாளமே உன் ஜெயம் எங்கே என்றார். இன்றைக்கு இந்த மரணத்தை பரிகரித்து பாதாளத்தை ஜெயித்த இயேசு உயிர்த்தெழுந்திருக்கிறார். அவர் சகல திறவுகோலையும் உடையவராய் இருக்கிறார். அந்த இயேசு இந்த செய்தியை வாசிக்கின்ற உங்கள் அத்தனை பேருக்கும் பரலோக ராஜ்யத்தின் திறவுகோலைக் கொடுத்து பாதாளத்தின் திறவுகோலாய் இருந்து அதற்கு உங்களை விலக்கி, தப்புவித்து, பாதுகாத்து பாதாளத்தின் வாசல்கள் உங்களையும், உங்கள் குடும்பத்தையும் மேற்கொள்ளாமல் பாதுகாப்பாக அவருக்கு முன்பாக நிறுத்தி உயர்த்துவாராக.