Inspiration
வேண்டுதல் செய்கிறவர்
நானோ உன் விசுவாசம் ஒழிந்துபோகாதபடிக்கு உனக்காக வேண்டிக்கொண்டேன்; நீ குணப்பட்டபின்பு உன் சகோதரரை ஸ்திரப்படுத்து என்றார். லூக்கா 22:32.
ஆண்டவரும் உலக இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் அன்பின் வாôழ்த்துக்கள்.
இன்றைக்கு நமக்காக வேண்டிக்கொள்கிற ஒரு தேவன் இருக்கிறார். நமக்காக இந்த உலகத்தில் வேண்டிக்கொள்ள யார் முன்வருவார்கள்?. நமக்காக ஒரு கண்ணைக்கொடுக்க, ஒரு கிட்னியைக் கொடுக்க இந்த உலகத்தில் ஆட்கள் இல்லை. பல வருடங்களுக்கு முன்பாக எனக்கு தெரிந்த ஒரு சகோதரன் கிட்னி மிகவும் பழுதடைந்து விட்ட நிலையில் மருத்துவமனையில் இருந்தார். மருத்துவர்கள் அவரிடம் சொன்னார்கள் உங்கள் உறவினர்கள் அல்லது உடன்பிறந்தோர் யாராவது உங்களுக்கு ஒரு கிட்னி கொடுத்தால் உங்களை காப்பாற்றி விடலாம் என்று சொன்னார்கள். அவர் எல்லாரிடமும் சென்று தனக்கு ஒரு கிட்னி தானமாக தரும்படிக் கேட்டுக் கொண்டார்.ஆனால் யாரும் அவருக்கு தன்னுடைய கிட்னியைதானமாக தருவதற்கு முன்வரவில்லை. காரணம் இவருக்கு கிட்னியை தானமாக கொடுத்தால், அவர்களும் ஆறு மாத காலம் எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டில் ஓய்வு எடுக்க வேண்டியது இருக்கும். நாங்களும் வேலைக்கு போக முடியாது, நீயும் வேலைக்கு போக முடியாது அதனாலó கடவுள் உனக்கு விட்ட வழியை நீ பார்த்துக்கொள் என்றுசொல்லிவிட்டார்கள். அவர் மிகவும் அழுது அழுது பரிதாபமாக மரித்துப் போய்விட்டார். இன்றைக்கு இந்த உலகத்தில் நமக்கு ஆயிரம் பேர் இருந்தாலும், நண்பர்கள் இருந்தாலும், உறவினர்கள் இருந்தாலும், நமக்காக ஒரு காரியத்தை செய்வதற்கு, ஏன் எதையும் செய்ய முன் வரமாட்டார்கள். உனக்கு இந்த உதவியை செய்வது மூலம் எனக்கு என்ன லாபம், எனக்கு என்ன கிடைக்கும் என்று சொல்லி அவர்கள் தானாகவே விலகிக் கொள்வார்கள்.
பேதுருவைப் பார்த்து ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சொல்லுகிறார் நானோ உன் விசுவாசம் ஒழிந்து போகாதபடி உனக்காக வேண்டிக்கொள்கிறேன் என்று சொல்லுகிறார். மூன்றரை வருடங்கள் என்னை பின்பற்றினாயே, எனக்காக உன் ஜீவனையும் கொடுப்பேன் என்று சொன்னாயே, உனக்காக நான் வேண்டிக் கொள்கிறேன் என்று இயேசு சொல்கிறார். பேதுரு எப்போதாவது இயேசுவிடம் போய் ஆண்டவரே நான் உங்களை மறுதலிச்சு, பின்வாங்கி போய்விடுவேனானால் அப்பொழுது எனக்காக வேண்டிக்கொள்ளுங்கள் என்று சொன்னதும் கிடையாது. ஆனால் சிலுவையைப் பற்றிய பாடுகளை சீஷர்களிடம்இயேசு சொன்னபோது இயேசுவை கடிந்து கொண்டார். இது உமக்கு நேரிடக்கூடாது என்று சொல்லி இருக்கிறார். இயேசு செய்த அந்த ஒரு வேண்டுதலினால் மறுதலித்து அந்த நபரையே, எனக்கு தெரியாது என்று சொன்ன பேதுருவை, இயேசு மரித்த பின்பு யூதருக்கு பயந்து கதவுகளை பூட்டிக்கொண்டுஅறைக்குள் இருந்த அந்த பேதுரு, இயேசு ஏறெடுத்த ஒரு வேண்டுதலினாலே மறுபடியும்சபைக்கு தலைவராக, ஒரு பொறுப்பாளராக மாறுகிறார். இயேசுவுக்காக தன் ஜீவனை கொடுக்கிறவராக கர்த்தர் அவரை மாற்றி விட்டார். அந்த இயேசு நீங்கள் உருவாகும் முன்னே, இந்த பூமியிலே நீங்கள் வெளிப்படும் முன்னே, உங்களுக்காக வேண்டுதல் செய்துவிட்டார். உங்கள் போராட்டத்தில் எழுந்திருக்க முடியாமல், ஜெபிக்க முடியாமல், துதிக்க முடியாமல் தடுமாறி கிடக்கிற உங்களுக்காகஇயேசு வேண்டுதல் செய்கிறார். உங்களுக்காக கெத்சமனே தோட்டத்தில் பலத்த ஜெபம் ஏறெடுத்தார். இருதயம் நொறுங்குண்டு வியர்வையின் பெருந்துளிகள் இரத்தமாக இந்த பூமியில் விழும்படி ஜெபித்தார். இயேசு கிறிஸ்து உங்களுக்காக எப்பொழுதும் பிதாவின் வலதுபாரிசத்தில் வேண்டுதல் செய்கிறவராக இருக்கிறார்.
1. இயேசு நமக்காக வேண்டினார்
யோவான் 17 ஆம் அதிகாரம் முழுவதும் இயேசு செய்த ஜெபத்தைக் குறித்து சொல்லப்பட்டிருக்கிறது. கெத்சமனே தோட்டத்தில் வியர்வையின் பெருந்துளிகள் இரத்தமாக விழும்படி ஜெபித்தார். நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன், உலகத்துக்காக வேண்டிக்கொள்ளாமல், நீர் எனக்குத் தந்தவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன், அவர்கள் உம்முடையவர்களாயிருக்கிறார்களே. யோவான் 17:9. ஆண்டவரை நம்பாமல், அவரைத் தேடாமல், உலகம் போதும், பாவ காரியங்கள் போதும் என்று சொல்லி, உலகத்தின் பின்னாக ஓடிக்கொண்டிருக்கிறவர்களுக்காக, அவர் வேண்டிக் கொள்ளாமல், கவலையோடு, பாரத்தோடு, வேதனையோடு இயேசு எனக்கு இதிலிருந்து விடுதலை தர மாட்டாரா? என்று ஏங்கிக் கொண்டிருக்கிற ஒவ்வொருவருக்காகவும் அவர் வேண்டிக் கொள்கிறார். அவரை நம்புகிற பிள்ளைகளுக்காக இன்றைக்கும் அவர் பிதாவின் வலது பாரிசத்தில் அமர்ந்து வேண்டுதல் செய்து கொண்டிருக்கிறார்.
2. இயேசு எப்படி நமக்காக வேண்டுதல் செய்கிறார்
அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றி, அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டு, அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து, அக்கிரமக்காரருக்காக வேண்டிக்கொண்டதினிமித்தம் அநேகரை அவருக்குப் பங்காகக் கொடுப்பேன், பலவான்களை அவர் தமக்குக் கொள்ளையாகப் பங்கிட்டுக்கொள்வார். ஏசாயா 53:12. அவர் உங்களுக்காக தம்முடைய ஆத்துமாவை மரணத்தில் ஊற்றிவேண்டுதல் செய்தார். இந்த கோடைகாலத்தில் நம் உடம்பில் உள்ள வெப்பத்தை குறைப்பதற்காகநாம் குளிர்ச்சியான பானங்களை அருந்துவோம். அப்படி சாப்பிடக்கூடிய பானங்களில் ஒன்றுதான் கரும்பு ஜöஸ். வியாபாரி அந்த கரும்பில் ஒரு சொட்டு தண்ணீர் இல்லாத அளவுக்கு அதை முற்றிலுமாக பிழிந்து எடுப்பார். இன்றைக்கு உனக்காக ஜெபிக்கிறேன், உதவி செய்கிறேன் என்று சொல்லுகிறவர்கள் இருக்கலாம், ஆனால் இயேசு சாதாரணமாக ஜெபிக்கவில்லை, தன்னுடைய ஆத்துமாவை மரணத்தில் ஊற்றி ஜெபிக்கிறார். நாம் ஜெபிக்காமல் தூங்கினாலும், நாளைக்கு என்ன நடக்கப்போகிறது என்று நமக்கு தெரியாமல் இருந்தாலும், சடுதியாய் மரணம் வந்தாலும், இன்னும் பல பிரச்சினைகளின் வழியாக நாம் கடந்து சென்றாலும், ஜெபிக்க முடியாத மனநிலையில் நாம் இருந்தாலும் இயேசு நமக்காக வேண்டுதல் செய்கிறார். அந்த வியாபாரி கரும்புச் சக்கையை எப்படி அந்த இயந்திரத்தில் வைத்து பிழிஞ்சு எடுக்கப்படுகிறது போலஉலகத்தோற்றத்திற்கு முன்பாகவே தேவன் நமக்காக தன்னுடைய இருதயத்தை பிழிந்து, மரணத்தில் ஊற்றி ஜெபித்தார். அவருடையவியர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய் இந்த பூமியில் விழுந்தது. அவர் சிந்தின இரத்தத்தினால் தான் இன்றைக்கு நாம் வாழ்கிறோம், பிழைத்திருக்கிறோம். நீங்கள் ஜெபிக்காமல் போனாலும்அவர் உங்களுக்காக எப்பொழுதும் வேண்டுதல் செய்து கொண்டிருக்கிறார். குடும்பத்தில் பிரச்சனையா?உங்களால் ஜெபிக்க முடியவில்லையா? துதிக்க முடியவில்லையா?பாடல்களைப் பாட முடியவில்லையா? சோர்ந்து போய் இருக்கிறீர்களா? உங்களுக்காக ஒருவர் வேண்டுதல் செய்வதை நீங்கள் நினைத்தீர்களானால்உங்கள் வாழ்க்கையில் ஜெபம் தானாக வந்துவிடும்.
அன்னாள் வாழ்க்கையை பாருங்கள் பல வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்தாள். வருடம் வருடம் ஆலயத்திற்கு சென்ற தேவனை ஆராதித்து வந்தாள். அவள் வருடந்தோறும் ஆலயத்திற்கு சென்று வந்தாலும்தேவனுடைய சமூகத்தில் தன் இருதயத்தை ஊற்றவில்லை. இன்றைக்கு உங்களிலும் கூட அநேகர் வாரவாரம் சபைக்கு செல்வீர்கள், உபவாச ஜெபத்தில் கலந்து கொள்வீர்கள், ஆராதனையில் கலந்து கொள்வீர்கள் ஆனால் தேவன் உங்களோடு என்ன பேசினார் என்று கேட்டால் உங்களுக்கு சொல்ல தெரியாது. இதைப்போல தான் அன்னாளும் வருட வருடம் அதே ஆலயத்திற்கு சென்றாள், ஆனால் தன் இருதயத்தை ஊற்றி அவள் ஜெபிக்கவில்லை. ஒருநாள் தன்னுடையஆத்துமாவை மரணத்தில் ஊற்றி ஜெபித்த ஆண்டவரை நினைத்துஅவரிடம் என் இருதயத்தை ஊற்றுவேன் என்று சொல்லி சத்தமிட்டு அழுது ஜெபித்தாள். கண்ணீரோடு விண்ணப்பம் பண்ணினாள், அவள் விண்ணப்பம் பண்ணி முடித்த பின்பு துக்கமுகமாய் இருக்கவில்லை. அவள் இருதயத்தில் இருந்து சுமைகள், பாரங்கள், கவலைகள் அனைத்தும் அவளை விட்டு வெளியேறியது. அவள் இருதயம் மென்மையாயிற்று. இன்றைக்கு உங்கள் வாழ்க்கையில் கூட ஜெபிக்க முடியாத, துதிக்க முடியாத நிலை இருக்கலாம், ஐயோ மற்றவர்களுக்கு என் வாழ்க்கையில் உள்ள போராட்டங்கள் தெரிந்து விடக்கூடாது என்று சொல்லி கலங்கி நிற்கிறீர்களா? ஆண்டவர் ஜெபித்ததான அந்த ஜெபத்தை நீங்கள் நினைத்து பாருங்கள், தானாகவே ஜெபிக்க ஆரம்பித்துவிடுவீர்கள்.
பவுல் அப்போஸ்தலன் தன் ஊழியப் பாதையின் அனுபவத்தை எழுதுகிறார்.1 கொரி 15:31-ல் நான் அனுதினமும் சாகிறேன்; அதை நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவினால் உங்களைக்குறித்து, நான் பாராட்டுகிற மேன்மையைக்கொண்டு சத்தியமாய்ச் சொல்லுகிறேன்.நான் அனுதினமும் சாகிறேன் ஆனாலும் உயிரோடு இருக்கிறேன், என் வாழ்க்கையில் பிரச்சனை வரும் போராட்டம் வரும் அது எல்லாம் ஆண்டவரிடம் சொல்லி விட்டு, எனக்கு தேவன் வைதóதிருந்த இலக்கை நோக்கி நான் ஓடுகிறேன் என்கிறார். வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன், என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.என் நுகம் மெதுவாயும் என் சுமை இலகுவாயும் இருக்கிறது என்றார். மத் 11:28-30-ல் சொல்லப்பட்டுள்ளபடி நீங்களும் உங்களுடைய கவலைகள், சுமைகள், வேதனைகளை எல்லாம் தேவன் மேல் இறக்கி வைத்து விட்டால்உங்கள் இருதயத்தை மென்மையாக, இலகுவாக மாற்றி விடுவார். தானியேலின் நண்பர்கள் அக்கினிசூழையில் தூக்கிப் போடப்பட்ட போதும், அந்த சூழ்நிலையிலும் அவர்கள் நாங்கள் தேவனையே நம்பி இருப்போம் என்று சொல்லி தேவனை விசுவாசித்து உறுதியாய் நின்றார்கள். நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களை தப்புவிக்க வல்லவராய் இருக்கிறார். அப்படியே அவர் தப்புவியாமல் போனாலும் நீர் நிறுத்தின சிலையை நாங்கள் வணங்கமாட்டோம் என்று விசுவாசத்தில் உறுதியாய் நின்றார்கள். தேவனுக்காக வைராக்கியமாய் ஜீவித்தார்கள். உங்களுடைய ஆத்துமாவை ஒருமுகப்படுத்தி நீங்கள் வேண்டுதல் செய்வீர்கள் என்றால் உங்கள் வாழ்க்கையில் இருக்கிற பிரச்சனைகள், போராட்டங்கள் எல்லாவற்றையும்நீங்கள் ஜெயித்து விடுவீர்கள். இயேசு சொன்னார் இந்த உலகத்தின் அதிபதி வருகிறான் அவனுடைய காரியங்கள் ஒன்றும் என்னிடத்தில் இல்லை என்று சொல்லுகிறார். நாமும் அவரைப் போல அவனுடைய காரியங்கள் ஒன்றுக்கும் நம்முடைய வாழ்க்கையிலó இடம் கொடாமல், இயேசுகிறிஸ்து விரும்புகிற வண்ணமாய் வாழ்வோம். நீங்கள் சந்தோஷத்தை இழந்து பலவீனப்பட்டு ஏதோ ஒரு காரியத்தினால் முடக்கப்பட்டு இருக்கிறீர்களா? உங்கள் வாழ்க்கையில் உள்ள சஞ்சலங்களை நீக்கி, உங்களை சந்தோஷப்படுத்த போகிறார். இனி நீங்கள் கவலைகளை, பாரங்களை, போராட்டங்களை, வருத்தங்களை சுமந்து கொண்டு திரியாமல் அவரைப் போல ஜெபித்து எல்லாவற்றிலும ஜெயம் எடுக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார்.
இன்றைக்கு நீங்கள் ஜெபிக்காமல், ஆண்டவரிடம் போய் சரியாக வேண்டுதல் செய்யாமல் இருப்பீர்களானால் உங்கள் வாழ்க்கையில் துக்கம் அதிகரிக்க தான் செய்யும். இந்த உலகத்தில் அநேகர் தங்கள் வாழ்க்கையில் துக்கமும் மனஅழுத்தமும் அதிகரிப்பதினால் கோடீஸ்வரர்கள், டாக்டர்கள் எத்தனையோ பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். சாத்தான் ஒவ்வொரு மனிதனையும் ஒரு நொடிப்பொழுதில் அவர்கள் சிந்தையை மாற்றி தவறான முடிவுக்கு, தவறான வழிகளுக்கு அழைத்துச் சென்றுவிடுகிறான். வேதத்தில் யாபேஸ் என்ற ஒரு மனிதன் இருந்தான், அவன் தன் தாய் தன்னை துக்கத்தோடு பெற்றெடுத்தார் என்று சொல்லுகிறார். அதனால்தான் தனக்கு யாபேஸ் என்ற பெயர் வைத்ததாகவும் சொல்லுகிறார். ஆனால் அவர் தன் வாழ்க்கை அப்படியே இருக்கட்டும் என்று விட்டுவிடவில்லை. தன் வாழ்க்கையை ஆசீர்வதிக்கிற தேவனிடத்தில் தன்னை ஒப்புக்கொடுக்கிறார். யாபேஸ் தன் சகோதரரைப்பார்க்கிலும் கனம்பெற்றவனாயிருந்தான். அவன் தாய்: நான் துக்கத்தோடே அவனைப் பெற்றேன் என்று சொல்லி அவனுக்கு யாபேஸ் என்று பேரிட்டாள்.யாபேஸ் இஸ்ரவேலின் தேவனை நோக்கி: தேவரீர் என்னை ஆசீர்வதித்து, என் எல்லையைப் பெரிதாக்கி, உமது கரம் என்னோடிருந்து, தீங்கு என்னைத் துக்கப்படுத்தாதபடிக்கு அதற்கு என்னை விலக்கிக் காத்தருளும் என்று வேண்டிக்கொண்டான்; அவன் வேண்டிக்கொண்டதை தேவன் அருளினார். 1 நாளா 4:9,10யாபேஸ் தேவனிடத்தில் ஜெபம் பண்ணின போது தேவன் அவரை அநேகருக்கு ஆசீர்வாதமுள்ளவராக, கனம் பெற்ற மனிதனாக மாற்றினார். யாபேஸ் வேண்டிக்கொண்டதை தேவன் அவருக்கு அருளிச் செய்தார். இன்றைக்குஜெபிக்கிற, வேண்டுதல் செய்கிற உங்களுடைய கண்ணீரை வேண்டுதலை அலைச்சல்களை தேவன் மகிழ்ச்சியினால் நிரப்பப் போகிறார். உங்கள் கண்ணீரை அவர் கணக்கில் வைத்திருக்கிறார். யாபேஸ்அதற்குப் பின்பு துக்க முகமாய் இருக்கவில்லை,தேவன அவன் வேலை, தொழில், வருமானம் எல்லாவற்றிலும் தேவன் அவனை கனம்பெற்றவனாக உயர்த்தி மேன்மைப்படுத்தினார்.
இன்றைக்கு நீங்கள் ஜெபிக்காமல், ஆண்டவரிடம் போய் சரியாக வேண்டுதல் செய்யாமல் இருப்பீர்களானால் உங்கள் வாழ்க்கையில் துக்கம் அதிகரிக்க தான் செய்யும். இந்த உலகத்தில் அநேகர் தங்கள் வாழ்க்கையில் துக்கமும் மனஅழுத்தமும் அதிகரிப்பதினால் கோடீஸ்வரர்கள், டாக்டர்கள் எத்தனையோ பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். சாத்தான் ஒவ்வொரு மனிதனையும் ஒரு நொடிப்பொழுதில் அவர்கள் சிந்தையை மாற்றி தவறான முடிவுக்கு, தவறான வழிகளுக்கு அழைத்துச் சென்றுவிடுகிறான். வேதத்தில் யாபேஸ் என்ற ஒரு மனிதன் இருந்தான், அவன் தன் தாய் தன்னை துக்கத்தோடு பெற்றெடுத்தார் என்று சொல்லுகிறார். அதனால்தான் தனக்கு யாபேஸ் என்ற பெயர் வைத்ததாகவும் சொல்லுகிறார். ஆனால் அவர் தன் வாழ்க்கை அப்படியே இருக்கட்டும் என்று விட்டுவிடவில்லை. தன் வாழ்க்கையை ஆசீர்வதிக்கிற தேவனிடத்தில் தன்னை ஒப்புக்கொடுக்கிறார். யாபேஸ் தன் சகோதரரைப்பார்க்கிலும் கனம்பெற்றவனாயிருந்தான். அவன் தாய்: நான் துக்கத்தோடே அவனைப் பெற்றேன் என்று சொல்லி அவனுக்கு யாபேஸ் என்று பேரிட்டாள்.யாபேஸ் இஸ்ரவேலின் தேவனை நோக்கி: தேவரீர் என்னை ஆசீர்வதித்து, என் எல்லையைப் பெரிதாக்கி, உமது கரம் என்னோடிருந்து, தீங்கு என்னைத் துக்கப்படுத்தாதபடிக்கு அதற்கு என்னை விலக்கிக் காத்தருளும் என்று வேண்டிக்கொண்டான்; அவன் வேண்டிக்கொண்டதை தேவன் அருளினார். 1 நாளா 4:9,10 யாபேஸ் தேவனிடத்தில் ஜெபம் பண்ணின போது தேவன் அவரை அநேகருக்கு ஆசீர்வாதமுள்ளவராக, கனம் பெற்ற மனிதனாக மாற்றினார். யாபேஸ் வேண்டிக்கொண்டதை தேவன் அவருக்கு அருளிச் செய்தார். இன்றைக்குஜெபிக்கிற, வேண்டுதல் செய்கிற உங்களுடைய கண்ணீரை வேண்டுதலை அலைச்சல்களை தேவன் மகிழ்ச்சியினால் நிரப்பப் போகிறார். உங்கள் கண்ணீரை அவர் கணக்கில் வைத்திருக்கிறார். யாபேஸ்அதற்குப் பின்பு துக்க முகமாய் இருக்கவில்லை,தேவன அவன் வேலை, தொழில், வருமானம் எல்லாவற்றிலும் தேவன் அவனை கனம்பெற்றவனாக உயர்த்தி மேன்மைப்படுத்தினார்.
4. நாம் எதற்காக வேண்டுதல் செய்ய வேண்டும்
நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் ஒரு அடையாளத்தை வேண்டிக்கொள், அதை ஆழத்திலிருந்தாகிலும், உன்னதத்திலிருந்தாகிலும் உண்டாகக் கேட்டுக்கொள் என்று சொன்னார். ஏசாயா 7:11 என்று சொல்லப்பட்டுள்ளது. நீங்கள் ஆண்டவரிடத்தில் வேண்டுதல் செய்யும்போது தேவன் உங்களுக்கு அடையாளத்தை காட்டுவார். அந்த அடையாளம் பூமிக்கு கீழ் இருந்தாலும், வானத்திற்கு மேலே இருந்தாலும் உன் அறிவுக்கு எட்டாததாக இருந்தாலும் தேவன் அதை உங்களுக்கு வெளிப்படுத்துவார். குடும்பத்தினர் இரட்சிப்புக்காக ஜெபித்துக் கொண்டிருக்கிற நீங்கள் தேவனிடத்தில் ஒரு அடையாளத்தை கேளுங்கள் நிச்சயம் தேவன் உங்களுக்குவெளிப்படுத்துவார். ஒரு சகோதரி தன் கணவர் இரட்சிப்புக்காக ஜெபித்துக் கொண்டிருந்தார்கள், ஆனால் தொடர்ந்து எல்லா ஜெபத்திலும் கலந்து கொள்வார்கள். ஒருநாள் அவர் ஜெபத்திற்கு வரும்போது அவர் கணவரும் அவருக்கு தெரியாமல் பின்னாகவே வந்து கொண்டிருந்தார். அவர்கள் ஆலயத்திற்கு வந்து ஜெபிப்பதை பார்த்து, அவரும் இயேசுவால் தொடப்பட்டு இன்றைக்கு அவர்கள் குடும்பமாக ஆலயத்திற்கு செல்கிறார்கள், சந்தோஷமாக இருக்கிறார்கள். தேவன் அந்த சகோதரியின் சஞ்சலத்தை சந்தோஷமாக மாற்றி இருக்கிறார். இதேபோல் உங்கள் வீடுகளில் உள்ளசஞ்சலத்தை மாற்றி மகிழ்ச்சியினால் நிரப்புவார். இனி உங்கள் வீடுகளில் புலம்பலின் சத்தம், வாக்குவாதத்தின் சத்தம், சண்டையின் சத்தம், இரைச்சலின் சத்தம் கேட்காது., கொந்தளிப்புகளை அடக்கி அமர பண்ணுகிற தேவன் உங்களுக்கு நிச்சயம் உதவி செய்வார். உங்கள் வாழ்க்கையில் இருக்கிற எல்லா கொந்தளிப்புகளையும் அடக்கி அமரச் செய்து உங்களை சந்தோஷத்தினால் நிரப்புவார்.
உம்முடைய பரிசுத்த பிள்ளையாகிய இயேசுவின் நாமத்தினாலே அடையாளங்களும் அற்புதங்களும் நடக்கும்படி செய்து, பிணியாளிகளைக் குணமாக்கும்படி உம்முடைய கரத்தை நீட்டி, உம்முடைய ஊழியக்காரர் உம்முடைய வசனத்தை முழுதைரியத்தோடும் சொல்லும்படி அவர்களுக்கு அநுக்கிரகஞ்செய்தருளும் என்றார்கள்.அவர்கள் ஜெபம்பண்ணினபோது, அவர்கள் கூடியிருந்த இடம் அசைந்தது. அவர்களெல்லாரும் பரிசுத்தஆவியினால் நிரப்பப்பட்டு, தேவவசனத்தைத் தைரியமாய்ச் சொன்னார்கள். அப் 4:30,31.சீஷர்கள் இயேசுவைப் பற்றி சொல்வதைக் கேட்டு அன்றைக்கு இருந்த அதிகாரிகள் அவர்களை சிறைச்சாலையில் அடைத்தார்கள். அந்த சூழ்நிலையிலும் அவர்கள்தேவனை நோக்கி வேண்டுதல் செய்தார்கள். உம்முடைய பரிசுத்த பிள்ளையாகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாக அடையாளங்களும், அற்புதங்களும் நடக்கும்படி செய்தருளும் என்று வேண்டினார்கள். இன்றைக்கு இந்த செய்தியை வாசிக்கின்ற உங்கள் வாழ்க்கையிலும் தேவன் அற்புதங்களின் மூலம்,அடையாளங்களின் மூலம் தம்முடைய வார்த்தையை உங்களுக்கு உறுதிப்படுத்தப் போகிறார். எல்லா அடிமைத்தனத்திலிருந்தும் தேவன் உங்களுக்கு விடுதலையை தந்து உங்களை ஆசீர்வதித்து நடத்துவார்.
5. சுகமாகும்படி நாம் வேண்டிக் கொள்ள வேண்டும்
ஆபிரகாம் தேவனை நோக்கி வேண்டிக்கொண்டான்; அப்பொழுது தேவன் அபிமெலேக்கையும், அவன் மனைவியையும், அவன் வேலைக்காரிகளையும் குணமாக்கி, பிள்ளைபெறும்படி அநுக்கிரகம்பண்ணினார் ஆதி 20:18. ஆபிரகாம் நல்ல விசுவாச வீரர், இன்னும் ஒரு விசை மாத்திரம், இன்னும் ஒரு விசை மாத்திரம் என்று சொல்லி ஆண்டவருடன் நேருக்கு நேர் பேசின தைரியமுள்ள மனிதன். ஆனால் மற்ற மனிதர்களை பார்க்கும்போது பயப்படுவார். தன் மனைவி சாராள் அழகுள்ள பெண்ணாக இருந்ததினால் அவள் நிமித்தம் தன் உயிருக்கு ஆபத்து வரக்கூடாது என்பதற்காக வெளியிடங்களுக்குச் செல்லும் போது தன்னை சகோதரன் என்று சொல்லும்படி சாராளிடம் கூறினார். அதனால் அபிமெலேக் என்ற ராஜா உன் சகோதரி தானே என்று சொல்லி அவளை தன் அரண்மனைக்கு அழைத்துச் சென்றார். அன்று இராத்திரியில் கர்த்தர் அபிமெலேக்கோடு பேசினார், அவள் இன்னொருவன் மனைவி அவளைத் தொடாதே என்று. இதனால் தேவன் அபிமெலேக்கு குடும்பத்தை வாதித்தார். அவன் மனைவிக்கு பிள்ளை இல்லை, அவன்நாட்டில் உள்ள மக்களுக்கு, அவன் மந்தைகள் எல்லாவற்றிற்கும் பிள்ளை இல்லாமல் போக பண்ணினார். எல்லா ஆசீர்வாதங்களையும் அவன் இழந்தான். பின்பு அபிமெலேக்கு சாராள் ஆபிரகாமின் மனைவி என்பது தெரிய வந்தபோது ஆபிரகாமை அழைத்து கடிந்து கொண்டார். இவள் உன் சகோதரி என்று நீ சொன்னதினால் தானே நான் அழைத்து வந்தேன். இவள் உன் மனைவியாய் இருக்கிறாளே உன் மனைவியை அழைத்துக் கொண்டு போ என்று சொல்லி அவளை அவனிடம் ஒப்படைத்தான். ஆபிரகாம் தேவனிடத்தில் வேண்டுதல் செய்த போது தேவனó அபிமெலேக்கையும், அவன் குடும்பத்தையும் ஆசீர்வதித்தார். கர்ப்பத்தின் கனியை கிடைக்கச் செய்தார். அவர்களுக்கு மிருக ஜீவன்கள் விசாலமாய் பெருகினது. இன்றைக்கு நீங்களும் உங்களை துன்பப்படுத்துகிறவர்களுக்காக, நேசிக்காதவர்களுக்காக, தூசிக்கிறவர்களுக்காக ஜெபம் செய்ய வேண்டும்.
எகிப்து தேசத்தில் பார்வோன் என்ற அரசன் இருந்தார், அவன் இஸ்ரவேல் மக்களை அடிமைப்படுத்தி, துன்பபóபடுத்தினார். ஆண்டவரைப் பற்றி எவ்வளவு தான் சொன்னாலும் அந்த ஆண்டவர் யார் என்று கேள்வி கேட்பார். கேள்வி மேல கேள்வி கேட்டு பிரச்சனை செய்தவர். தேவனை விசுவாசிக்காதவர். வாதைகள் வந்தபோதுமோசேயை அழைத்து எங்களுக்காக வேண்டிக்கொள் என்று சொன்னார். யாத் 8:8 பார்வோன் மோசேயையும் ஆரோனையும் அழைப்பித்து: அந்தத் தவளைகள் என்னையும் என் ஜனங்களையும் விட்டு நீங்கும்படி கர்த்தரை நோக்கி வேண்டிக்கொள்ளுங்கள், கர்த்தருக்குப் பலியிடும்படி ஜனங்களைப் போகவிடுவேன் என்றான். கடவுள் யார் என்று கேட்ட பார்வோன் எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள் என்று சொல்லும் அளவுக்கு தேவனó அவருக்குள் ஒரு அசைவை கொண்டு வந்தார். இதேபோல இன்றைக்கு உங்கள் வீடுகளிலும்அசையாத நிலையில் கடின இருதயத்தோடு இருக்கும் உங்கள் பிள்ளைகளை தேவன் அசையப் பண்ணப் போகிறார்.உங்கள் ஜெபத்தின் மூலம் இந்த காரியத்தை தேவன் செய்யப் போகிறார். உங்கள் குடும்பத்தில் இரட்சிக்கப்படாத நிலையில் உள்ள ஒவ்வொருவரையும் தேவன் உங்கள் ஜெபத்தின் மூலம் இரட்சிக்கப் போகிறார்.
6. சமாதானத்திற்காக வேண்டிக்கொள்ள வேண்டும்
எருசலேமின் சமாதானத்துக்காக வேண்டிக்கொள்ளுங்கள்; உன்னை நேசிக்கிறவர்கள் சுகித்திருப்பார்களாக. சங்கீதம் 122:6 எருசலேமின் சமாதானத்திற்காக நாம் வேண்டிக் கொள்ள வேண்டும். கடைசியாக இயேசு இந்த உலகத்தை விட்டு கடந்து செல்லும்போது நம்மிடத்தில் ஒரு கோரிக்கையை வைத்துச் சென்றார். அதை நிறைவேற்றுவதும் நிறைவேற்றாமல் இருப்பதும் நம்முடைய கரத்தில் தான் இருக்கிறது. இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம், ஆதலால், அறுப்புக்கு எஜமான் (அறுவடையின் எஜமான்) தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள் என்றார். மத் 9:37,38 இந்த வசனத்தின்படி தேவன் நம்மை நம்பி ஒரு பெரிய வேலையை, பொறுப்பை கொடுத்திருக்கிறார்.பெரிய அறுவடையை வைத்திருக்கிறார், ஒரு பெரிய ஆசீர்வாதத்தை நமக்கு தந்திருக்கிறார். பெரிய திட்டத்தை வைத்திருக்கிறார். அறுப்புக்கு எஜமான் தம்முடைய அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக் கொள்ளுங்கள்என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த ஆண்டவர் என்றைக்கு உங்கள் ஜெபத்தையும் கேட்டு உங்களுக்கு பதில் தருவார். என் ஆண்டவர் தாமே உங்களை ஆசீர்வதித்து வழிநடத்துவார்.