Inspiration

உன்னை விழுங்கினவர்கள் தூரமாவார்கள்

அப்பொழுது உன் வனாந்தரங்களும், உன் பாழிடங்களும், நிர்மூலமான உன் தேசமும், இனிக் குடிகளின் திரளினாலே உனக்கு நெருக்கமாயிருக்கும், உன்னை விழுங்கினவர்கள் தூரமாவார்கள். ஏசாயா 49:19

ஆண்டவரும் உலக இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் யாவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள். இந்த தேவ செய்தியின் மூலமாக உங்களைச் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

வனாந்தரத்தில் கேட்க ஆட்கள் இல்லாமல், பார்க்கவும் ஆட்கள் இல்லாமல், ஒருவரும் இல்லாத மனிதராக காட்டுக்குள் குடியிருப்பது போல் வாழ்கின்ற வாழ்க்கைக்கு பெயர் தான் வனாந்தரத்திலóவாழும் வாழ்க்கையாகும். உங்களுடைய வனாந்தர வாழ்க்கையில் உங்கள் சுற்றிலும் குடியிருக்கிறவர்கள் அதிகமாவார்கள், கட்டங்கள் அதிகமாகும், ஆனாலும் உன்னை விழுங்கியவர்களை தேவன் தூரமாக்குவார், அவர்கள் தூரமாவார்கள். விழுங்குதல் என்றால் என்ன? மருத்துவமனைக்கு சென்றால் மருத்துவர்கள் நமக்கு மாத்திரைகள் கொடுப்பார்கள். அந்த மாத்திரையை நாம் ரசித்து ருசித்து சாப்பிடுவதில்லை. கண்ணை மூடிக்கிட்டு அப்படியே விழுங்கிய விடுவோம். அந்தக் காலத்தில் சிறுபிள்ளைகளுக்கு வயிற்றுவலி வந்தால் பூச்சிக்கடி என்று சொல்லி வாயை திறக்கச் சொல்லி வேப்பெண்ணெய் ஊற்றி விடுவார்கள்.சிறுபிள்ளைகள் அப்படியே விழுங்கி விட வேண்டும். அந்தக் காலத்தில் எந்த ஒரு விஞ்ஞானமும் இல்லை, எந்த ஒரு மெடிசனும் இல்லை.வேப்பெண்ணை நன்றாக வேலை செய்தது. உங்களை முழுங்கினவர்கள் அல்லது விழுங்கினவர்கள் தொண்டைக் குழியில் அப்படியே வைத்திருக்கிறார்கள். அவர்கள் உன்னை விட்டு தூரமாய் போவார்கள்.

சாத்தானுக்கு பற்கள் இல்லை. நீங்கள் சாத்தானை நன்றாக அறிந்திருந்தால் தான் அவனை முற்றிலும் முறியடிக் முடியும். அவனைப் பற்றி தெரிந்திருந்தால் தான் நீங்கள் அவனை ஈஸியாக மேற்கொள்ள முடியும். அவன் எப்படிப்பட்டவன் என்றால் பற்கள் இல்லாத, வயதான கிழவன். அவன் ஒருகாலத்தில் பரலோகத்தில் தேவனை துதித்துக் கொண்டிருந்தவன். என்றைக்கு அவன் கீழே விழுந்தானோ, அன்றைக்கே அவனுடைய பற்கள் உடைந்து போய் விட்டது. அதனால் அவன் மெல்ல முடியாது, அப்படியே விழுங்கிவிடத்தான் வேண்டும். இன்றைக்கு சிலரை அவன் விழுங்கி வைத்திருக்கிறான். அவனுடைய வேலைகள் என்னவென்றால் யார் யார் இன்றைக்கு தேவனைத் தேடுகிறார்களோ, பரிசுத்தமான வாழ்க்கை வாழ்கிறார்களோதேவன் மேல் பக்தியாயó இருக்கிறார்களோ, யார் நீதியாய், உண்மையாய் நடக்கிறார்களோ அவர்கள் எந்த மதமாக இருந்தாலும் அதை அவனால் தாங்க முடியாமல் அவர்களை அப்படியே அழிக்க வகைதேடி அலைவான். வகைதேடி என்றால் என்ன? ஒவ்வொருவரையும் அப்படியே கண்காணித்துக் கொண்டிருப்பதுதான் வகைதேடுவது.

இன்றைக்கு நீங்கள் பார்க்கின்ற, பேசுகின்ற எல்லாரிடத்திலும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். சாத்தான் கீழே விழுந்ததினால் கர்த்தரை தேடுகிறவர்களைஎப்படி விழுங்கலாம் என்று வகைதேடிச் சுற்றித்திரிந்து கொண்டிருக்கிறான். தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள், ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான். 1 பேதுரு 5:8-ல் சொல்லப்பட்டுள்ளபடிநீங்கள் எதைச் செய்தாலும் தெளிவாக, சரியாக செய்ய வேண்டும். தெளித்த புத்தியுள்ளவர்களாக இருக்க வேண்டும். எந்த ஒரு காரியத்திலும், தெளிவான ஒரு முடிவை எடுக்க வேண்டும். சாத்தான் தெளிவில்லாதவர்களை எளிதாக அடித்து விடுவான், மடக்கி விடுவான்.எனவே தெளிந்த புத்தியுள்ளவர்களாக இருக்கு வேண்டும்.நீங்கள் எலலாவற்றிலும் விழிப்புணர்வோடு தெளிந்த புத்தியுள்ளவர்களாய் இருக்க வேண்டும்.நீங்கள் படுத்திருந்தாலும் உங்களுடைய ஆத்துமாவை விழிப்பாய் வைத்திருக்க வேண்டும்.தேவனுடைய சத்தத்தைக் கவனமாய் கேட்க வேண்டும்.

புத்தியுள்ள கன்னிகைகளுக்கும் புத்தியில்லாத கன்னிகைகளுக்கும் வித்தியாசம் இருந்தது. புத்தியுள்ள கன்னிகைகளுக்கு பெயர், மணவாட்டிகள். புத்தியில்லாத கன்னிகைகளுக்கு பெயர் மறுமனையாட்டிகள். நீங்கள் புத்தியுள்ளவர்களாக இருந்தால் மணவாட்டியாக இருப்பீர்கள். இருமனம் உள்ளவன் தன் வழிகளில் எல்லாம் நிலையற்றவனாய் இருக்கிறான். சாத்தான் அப்படித்தான் ஒவ்வொருவரையும் நிலையற்றவர்களாய் மாற்றி விடுகிறான். எல்லாரும் இயேசுவை நேசிக்கலாம், எல்லாரும் இயேசுவை பின்பற்றலாம் ஆனால் நீங்கள் மணவாட்டிகளா அல்லது மறுமனையாட்டிகளா என்பது இயேசுவுக்கு மட்டும் தான் தெரியும். உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கத்தைப்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடி சுற்றித் திரிகிறான. சிங்கம் கெர்ச்சிப்பதைப் பார்த்து காட்டில் உள்ள மற்ற மிருகங்களுக்குள் பயம்வந்து விடும், அதுபோல பிள்ளைகளுக்கு பரீட்சை வந்து விட்டால்உடனேபயத்தில் காய்ச்சல் வந்துவிடும். பயம்வந்து உடனே எங்களுக்காக ஜெபியுங்கள் என்று ஜெபிக்க கேட்பார்கள். பிசாசின் வேலையே கெர்ச்சிக்கிறது தான், உன் மகள் படிக்க மாட்டாது, உன் வீட்டுக்காரருக்கு ஒரு வேலையும் தெரியாது. நீ இப்படி போயிடுவ என்று சொல்லி உங்களை பயமுறுத்திக் கொண்டிருப்பதுதான். நீங்கள் தெளித்த புத்தியுள்ளவர்களாக இருக்க வேண்டும். விழித்திருங்கள், மணவாட்டியாய் இருங்கள் மறுமனையாட்டியாக அல்ல.

உங்களுக்கு விரோதமாய்கெர்ச்சித்து, உங்களை பயமுறுத்துகிற சிங்கத்தைப் பார்த்து பயப்படத் தேவையில்லை. இந்த உலகத்தில் கெர்ச்சித்து பயமுறுத்துகிற அவனை காட்டிலும், உங்களோடு இருக்கிறது தேவன் பெரியவர். கெர்ச்சிக்கிற சிங்கம் போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடி சுற்றித் திரிகிறான். எவனை திங்கலாம் அல்லது விழுங்கலாம்என்று சுற்றித் திரிகிறான். நீங்கள் சாப்பிடும் போது நிதானமாகச் சாப்பிட் வேண்டும். பல்லுக்கு கொடுக்க வேண்டிய வேலையை வயிற்றுக்கு கொடுக்கக் கூடாது. அசைபோடாத மிருகம் எப்படி இருக்குமோ அதைப்போலவே அசைபோடாத பிசாசு, பல் இல்லாத பிசாசு ஜனங்களை விழுங்கிய கொண்டு இருக்கிறான். இன்றைக்கு உங்களுக்கு வரவேண்டிய ஆசீர்வாதங்களை சாத்தான் விழுங்கி வைத்திருக்கிறான். நீங்கள் வீடுகளில் பிள்ளைகளையும், மற்றவர்களையும் பேசும்போது நல்ல வார்த்தைகளை சொல்லி பேச வேண்டும். உங்களுக்கென்று தேவன் ஆயத்தம் பண்ணி வைத்திருக்கும் ஆசீர்வாதங்களை நீங்கள் காணாதபடிக்கு, கேளாதபடி சாத்தான் மறைத்து வைத்திருக்கிறான்,இந்த உலகம் மறைத்து வைத்திருக்கிறது, தேவத்திட்டத்தை மறைத்து வைத்திருக்கிறான்.

இன்றைக்கு தேவன் உங்களுக்கு வைத்திருக்கிற நன்மையை, தேவ திட்டத்தை முடக்குகிறதற்கு சாத்தான் அதை விழுங்கி வைத்திருக்கிறான். அது இன்னும் உள்ளே இறக்கவில்லை, தொண்டையில் நான் இருக்கிறது. ஏற்ற வேளையில் வெளியில் வரும்படி தேவன் செய்வார். யோசேப்பு எகிப்திலிருந்த காலத்தில் பார்வோனுக்கு ஒருசொப்பனம் வந்தது.அப்பொழுது அழகும் புஷ்டியுமான ஏழு பசுக்கள் நதியிலிருந்து ஏறிவந்து புல் மேய்ந்தது. அவைகளின்பின் அவலட்சணமும் கேவலமுமான வேறே ஏழு பசுக்கள் நதியிலிருந்து ஏறிவந்து, நதி ஓரத்தில் மற்றப் பசுக்களண்டையிலே நின்றது.அவலட்சணமும் கேவலமுமான பசுக்கள் அழகும் புஷ்டியுமான ஏழு பசுக்களையும் பட்சித்துப்போட்டது, இப்படிப் பார்வோன் கண்டு விழித்துக்கொண்டான். ஆதி 41:2-4.தேசத்தில் நடக்கப்போகிறதான ஆபத்தை குறித்து கர்த்தர் பார்வோனோடுபேசி, எகிப்து தேசத்தை தேவனó காப்பாற்றினார்.பார்வோன் தேவனை நம்பாத மனிதனுக்கேதேவன ஆசீர்வாதம் தருவார் என்றால் கர்த்தரே வழிஎன்று அவரையே நம்பி நிற்கிற உங்களுக்கு ஒரு அற்புதம் கட்டாயம் நடக்கும்.இன்றைக்கே அந்த அற்புதம் உங்கள் வாழ்க்கையில் நடக்கும்.

வரி வசூலிக்கிறவன் வந்து பேதுருவிடம் உங்கள் போதகர் வரி பணம் செலுத்துகிறது இல்லையா? என்று கேட்டான். நீங்கள் ஜெபம் பண்ணினால் வரிப்பணம் செலுத்தமாட்டீர்களா?என்று கேட்டான். உங்களுக்கு வர வேண்டிய ஆசீர்வாதங்களை அபகரிக்க இந்த உலகத்தில் நிறைய பேர் இருக்கிறார்கள். இயேசு பேதுருவõடம் நீ கடலுக்கு போய் தூண்டில் போட்டு, வலையை அல்ல தூண்டில் போட்டு முதலில் அகப்படும் மீனைப் பிடித்து அதன் வாயைத் திறந்து பார், அதில் ஒரு வெள்ளிப்பணத்தை காண்பாய், அதை எடுத்து உனக்காகவும்,எனக்காகவும் வரியை செலுத்து என்று சொன்னார்.சாத்தான் நம்மை விழுங்க வகைதேடி அழைந்து கொண்டிருக்கிறான். யார் யார்உங்களை விழுங்கினார்களோ அவர்கள் எல்லோரும் உங்கள் வீட்டை விட்டு புறப்பட்டு போவார்கள், உங்கள் வருமானத்தை, தொழிலை,ஆசீர்வாதத்தை திருடினவன் உங்களை விட்டு ஓடிப் போகப் போகிறான். உத்தமனுக்கு கர்த்தர் துணை.சாத்தான் எவைகளை விழுங்கினான் என்று இப்பொழுது பார்ப்போமó.

1. பரிசுத்தமானது விழுங்கப்பட்டது

பரிசுத்தமானதை விழுங்குகிறதும், பொருத்தனை செய்தபின்பு யோசிக்கிறதும், மனுஷனுக்குக் கண்ணியாயிருக்கும். நீதி 20:25. பரிசுத்தமானதை நாம் விழுங்கக் கூடாது. உதாரணத்துக்காக ஜெபம்பண்ணு என்று சொன்னால் நான் அப்புறமேல்பண்ணிக்கொள்கிறேன் என்றுசொல்வது. நம்முடைய பெலவீனத்தில்நமக்கு பெலன் தர தேவன் நம்மோடு இருக்கிறார். பரிசுத்தமானவைகளை விழுங்கக்கூடாது. பன்றிகள் முன்பாக முத்துக்களைப் போடக்கூடாது,போட்டால் அது பீறிப்போட்டு விடும்.சாத்தான் விழுங்கிய அத்தனை நன்மைகளையும் ஆண்டவர் திரும்பகக்கப்பண்ணப் போகிறார். கர்த்தர் மீனுக்குக் கட்டளையிட்டார், அது யோனாவைக் கரையிலே கக்கிவிட்டது. யோனா 2 10 யோனா தேவசித்தத்திற்கு மாறாக ஆண்டவர் போகச் சொன்ன இடத்திற்குப் போகாமல் தர்ஷீசுக்கு கப்பல் ஏறி போன போது கடலில் கொந்தளிப்பு உண்டானது. அது அடங்கும்படியாக அவர்கள் யோனாவை எடுத்து கடலில்போட்டார்கள், இந்த பாதகத்தை எங்கள் மீது சுமத்தாதிரும்என்று சொல்லி ஆண்டவரிடம் கெஞ்சினார்கள். கர்த்தர் அங்கேயே ஒரு மீனை ஆயத்தப்படுத்தி இருந்ததால் இது அவனை மூன்று நாள் தன் வயிற்றிலே வைத்திருந்தது. அதனால் அந்த மீன் உமிழ் நீர் கூட விழுங்க முடியவில்லை.அந்த மீன் எவ்வளவு கவனமாக கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து நடந்தது.

யோனா மூன்று நாள் மீனின் வயிற்றில் இருந்ததார்.. அங்கிருந்து ஆண்டவரே கடல்பாசி என்னை சூழ்ந்த கொண்டது என்று. மரணத்தின் விளிம்பில் இருக்கிறேன் என்று சொல்லி அவன் ஜெபிக்கிறார். நீங்கள் நன்றாக இருக்கும் காலத்தில் ஜெபிக்காமல் இருந்தீர்கள் என்றால்தீங்கிற்கு உங்களை அர்ப்பணித்து தான் ஆண்டவர் உங்களை கொண்டு வருவார். மண்ணானது தான் இருந்து மண்ணுக்கும் ஆவி தன்னை தந்த தேவனிடத்திற்கும் திருப்புவது போல் தீங்கு வராததற்கு முன்பு, மருத்துவமனைக்கு போவதற்கு முன்பு, நீங்கள்நன்றாக இருக்கும் போது கர்த்தரைத் தேடுவது நல்லது, ஜெபம் பண்ணுவது நல்லது. நன்றாக இருக்கும் காலத்தில் கர்த்தரை தேடி நேரமில்லை என்பாயானால் தீங்கு நாட்களில் தேவஊழியரை கூப்பிட்டு உங்களுக்காக ஜெபிக்கசொல்லுகிறீர்கள். கர்த்தர் மீனுக்கு கட்டளையிடóடார் அது யோனாவை கரையில் கக்கி விட்டது. சாத்தான் விழுங்கிய அனைத்தையும்தேவன் உங்கள் மடியில் கக்கப்பண்ணுவார். உங்களுக்குள்ளதை அவன் அபகரித்துக் வைத்திருக்கிறான். அவனிடத்திலிருந்து பறித்து தேவன் உங்களுக்குத் திரும்ப கொடுப்பார்.

உம்மை அறியாத ஜாதிகளின்மேலும், உமது நாமத்தைத் தொழுதுகொள்ளாத வம்சங்களின்மேலும், உம்முடைய உக்கிரத்தை ஊற்றிவிடும்; அவர்கள் யாக்கோபைப் பட்சித்து, அவனை விழுங்கி, அவனை நிர்மூலமாக்கி, அவன் வாசஸ்தலத்தைப் பாழாக்கினார்களே.எரே 10 25.ஆபகூக் 1:13-ல் தீமையைப் பார்க்கமாட்டாத சுத்தக்கண்ணனே, அநியாயத்தை நோக்கிக்கொண்டிருக்கமாட்டீரே; பின்னை துரோகிகளை நீர் நோக்கிக்கொண்டிருக்கிறதென்ன? துன்மார்க்கன் தன்னைப் பார்க்கிலும் நீதிமானை விழுங்கும்போது நீர் மௌனமாயிருக்கிறதென்ன?துன்மார்க்கன் நீதிமானை விழுங்கப் பார்க்கிறான்.துன்மார்க்கனுக்கு முடிவு கட்ட இயேசு சீக்கிரம் இந்த பூமிக்கு வரப்போகிறார். இயேசுவின் தலையில் முள்முடி வைக்கப்பட்டபோது சாத்தானின் தலைஉடைக்கப்பட்டுபோயிற்று. எப்படி உடைந்தது என்றால் எரேமியா 51:44-ல் நான் பாபிலோனில் இருக்கிற பேலைத் தண்டிப்பேன்; அது விழுங்கினதை அதின் வாயிலிருந்து கக்கப்பண்ணுவேன்; ஜாதிகள் இனி அதினிடத்திற்கு ஓடிவரமாட்டார்கள், பாபிலோனின் மதிலும் விழும். சாத்தான் விழுங்கினதை அவன் வாயிலிருந்து கக்கப்பண்ணுவேன் என்று தேவன் சொல்லுகிறார். உங்களுக்கு வரவேண்டிய நன்மையை யாரோ ஒருவர் வாங்கி விட்டார்கள். அந்த வேலையை வேறொருவனுக்கு கொடுத்தது விட்டார்கள். அந்தக் தொழிலை வேறொருவன் அபகரித்து விட்டான். அந்த இடத்தைப் வேறொருவன் வாங்கி விட்டான். இன்றைக்கு கர்த்தர் உங்களுக்குச் சொல்லுகிறார் நீங்கள் இழந்த அத்தனை ஆசீர்வாதங்களையும் தேவன் உங்களுக்குத் திரும்ப தருவார். அவன் விழுங்கியதை திரும்ப கக்கப் பண்ணுவார், இனி தரித்திரம் உங்கள் வாழ்க்கையில் வருவதில்லை, சாபம் உங்கள் வாழ்க்கையில் வருவதில்லை, பணப்பற்றாக்குறை உங்கள் வாழ்க்கையில் வருவதில்லை.

1 கொரி 15:54 –ல் அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளும்போது, மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது என்று எழுதியிருக்கிற வார்த்தை நிறைவேறும்.ஏசாயா 25:8-ல் அவர் மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; கர்த்தராகிய தேவன் எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடைத்து, தமது ஜனத்தின் நிந்தையை பூமியிலிராதபடிக்கு முற்றிலும் நீக்கிவிடுவார்; கர்த்தரே இதைச் சொன்னார். இயேசுகிறிஸ்து மரணத்தை ஜெயமாக விழுங்கி விட்டார். இன்றைக்கு அந்த ஆண்டவர் மரணத்திற்கு அதிகாரியாக இருந்த பிசாசானவனை விழுங்கி விட்டார்.கர்த்தராகிய தேவன் எல்லா முகங்களிலிருந்து அவர்களுடைய கண்ணீர்கள் யாவையும் துடைத்தார். அவர்கள் தேவனாயிருப்பார். இன்றைக்கு தேவன் அநேகருக்கு வியாதியிலிருந்து சுகம் தந்து இருக்கிறார். ஒரு மனிதனுக்கு அழிவு, ஆபத்து, மரணம் எப்பொழுது வரும் என்று தெரியாது.ஆனால் நீங்கள் இயேசுவை அறிந்திருந்தீர்களானாôல்அந்த இயேசு உங்களுக்கு வரவேண்டிய தீமையை, சாத்தானை விழுங்கி விடுவார். அவர் வேடனுடைய கண்ணிக்கும் பாழாக்கும் கொள்ள நோய்க்கும் உங்களை தப்புவிப்பார். அதற்குத்தான் அவர் உயிரோடு இருக்கிறார், வாழ்கிறார். இன்றைக்கு அந்த ஆண்டவர் உங்களுக்கு வரவேண்டிய தன்மையை, ஆசீர்வாதத்தை,சாத்தான் விழுங்கி இருக்கிறதை அவனை அழித்து ஒவ்வொன்றாக உங்களுக்குத் திரும்ப கிடைக்கச் செய்து அவனுக்கு முன்பாக உங்களை உயர்ந்துவார்.உங்களைஐசுவரியவானாக்குவார், இழந்ததை திரும்ப பெறுவீர்கள். யோனாவை மீன் கரையில் கக்கினது, கடலில் அல்ல. ஆழ்கடலில் அல்ல கரையில் கக்கினது.

2. மரணமானது ஜீவனாலே விழுங்கப்பட்டது

இந்தக் கூடாரத்திலிருக்கிற நாம் பாரஞ்சுமந்து தவிக்கிறோம்; இந்தப் போர்வையைக் களைந்துபோடவேண்டுமென்று விரும்பாமல், மரணமானது ஜீவனாலே விழுங்கப்படுவதற்காகப் போர்வை தரித்தவர்களாயிருக்கவேண்டுமென்று விரும்புகிறோம். 2 கொரி 5:4 மரணமானது ஜீவனாலே விழுங்கப்படுவதற்கு ஏதுவானது. ஜீவனை மரணம் விழுங்கவில்லை, மரணத்தை ஜீவன் விழுங்கி விட்டது. நீங்கள் ஜெபிக்கும் போதுஉங்கள் ஆத்துமா ஜீவன் பெருகிறது. பிரியமானவனே உன் ஆத்துமா வாழ்கிறது போல நீ எல்லாவற்றிலும் வாழ்த்து சுகமாயிருக்கும்படி உன்னை வேண்டுகிறேன். ஜீவன் வர வர நம்முடைய வாழ்க்கையில் இருக்கிற, சரீரத்தில் இருக்கிற எல்லாம் பலவீனங்களும் மாறுகிறது. பெலவீனத்தில் பெலன் கொண்டார்கள். சாராள் கர்ப்பந்தரிக்க பெலன் இல்லாத போதும் அவரை விசுவாசித்தாள்.எனக்கு கர்த்தர் சொன்ன வார்த்தை கண்டிப்பாக நிறைவேறும் என்று விசுவாசித்தப்படியே அவளுக்கு நடந்தது. என்னென்றால் இந்த மரணத்தை விழுங்கின தேவன் இன்றைக்கும் ஜீவனோடு இருக்கிறார். அவர்தான் தீச்சூளையின் நடுவில் மூன்று வாலிபர்கள் இருக்கும் போது ஒரு தீ கூட அவர்கள் மேல் படாமல் அவர்களை பாதுகாத்தார். அவர்களுக்கு ஏஸியாக அவர் மாறிவிட்டார். சிங்க கெபியில் தானியேலை விழுங்க காத்திருந்த சிங்கத்தின் வாயைதேவன் கட்டிப்போட்டார். ராஜாவுக்கு முன்பாக தானியேலை அவதூறாக சொன்னவர்களை சிங்கங்கள் விழுங்கிப் போட்டது. உங்களுக்கு வியாதி வந்தால் நீங்கள் பயப்படாதீர்கள், உங்கள் வியாதியை பார்த்துப் பயப்படாமல் தைரியமாக இருக்க வேண்டும், வியாதி வந்து விட்டால் உடனே ஜெபிக்க வேண்டும்.

ஜான்வெஸ்லி என்ற ஒரு தேவஊழியர் இருக்கிறார். அவர் அநேக மரித்தவர்களை உயிரோடே எழுப்பி இருக்கிறார். அவருடைய மனைவி திடிரென்று நோய்வாய் பட்டு இறந்த விட்டார்கள். அவர் வெளி தேசத்தில் ஊழியத்தில் இருந்தார்.நான் வரும் வரைக்கும் என் மனைவியின் சரீரத்தை அடக்கம் பண்ண வேண்டாம் என்று சொல்லி விட்டு, மூன்று நாட்கள் கழித்து வீட்டிற்குள் சென்று தன் மனைவியை பார்த்துக் பேசினார்.நான் வீட்டிற்குள் வந்திருக்கிறேன் வாங்க என்று கேட்காமல் இப்படி படுத்திருக்கிறாய் என்று சொல்லி வட்டு இயேசுவின் நாமத்தினாலே தன் மனைவிக்காக ஜெபித்த போது அவர்கள் மீண்டும் உயிரோடு எழும்பி விட்டார்கள்.ஒவ்வொரு வருடமும் உங்களை அற்புதமாய் நடத்துகிற தேவன் உங்களோடு இருக்கிறார். எந்த சாத்தான் உங்களுடைய ஆசீர்வாதங்களை விழுங்கி இருக்கிறானோ அவன் இன்றைக்கு உங்களை விட்டு ஓடிப் போகிறான். உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும். அடங்காத உங்கள்பிள்ளைகள் அடங்குவார்கள். வழிதப்பி போன கணவர் மனம் திரும்பி வருவார். மீனின் வயிற்றுக்குள் போன யோனாவை அற்புதமாய் வெளியே கொண்டு வந்த ஆண்டவர், மீனின் வாயிலிருந்து வெள்ளிப் பணத்தை வெளியே கொண்டு வந்தவர், இன்றைக்கு உங்களை ஆசீர்வதித்து, அற்புதமாய், அதிசயமாய் நடத்த போகிறார். என் ஆண்டவராகிய தேவன் தாமே நீங்கள் இழந்த அத்தனை நன்மைகளையும் திரும்ப கொடுத்து உங்களை உயர்த்துவாராக.