Inspiration

கிருபையினால் கிடைத்த ஆசீர்வாதம்

அவள் இருந்த வீட்டில் தேவதூதன் பிரவேசித்து: கிருபை பெற்றவளே, வாழ்க, கர்த்தர் உன்னுடனே இருக்கிறார், ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள் என்றான். லூக்கா 1:28

ஆண்டவரும் உலக இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள். தேவனுடைய வார்த்தையின் மூலம் உங்களை சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

ஆண்டவராகிய தேவன் நீங்கள் இருக்கும் இடத்திற்கு தேவ தூதனை அனுப்புவார். மரியாள் இருந்த வீட்டில் தேவதூதன் உள்ளே வந்து மரியாளை பார்த்து கிருபை பெற்றவளே என்றான். மரியாளுக்கு சிறுவயதிலே ஒரு நம்பிக்கை வந்து விட்டது, கன்னிப்பெண் கருத்தாங்கி, கன்னிகையாக ஒரு மகனை பெறுவாள் என்று சொன்ன அந்த வார்த்தை. இந்த வார்த்தை என் வாழ்க்கையில் நிறைவேற கூடாத என்று சொல்லி, அந்த நாட்களில் அநேக பெண்கள் திருமணம் வேண்டாம் என்று சொல்லி காத்திருந்தார்கள். சில சமயம் நாம் ரயிலுக்கு காத்திருப்போம். இந்திய ரயில்வேயில் எனக்குபிடித்த வாசகம் பயணிகளின் கனிவான கவனத்திற்கு என்று சொல்வார்கள், அப்படி சொன்னால் வண்டி தாமதமாக வரும் என்று அர்த்தம். ஒரு தீமையை, தாமதத்தை அவர்கள் கனிவான கவனத்துக்கு என்று சொல்லி நம்மை அமைதிப்படுத்த முடியும் எனóறால் கர்த்தரால் முடியுமா முடியாதா?. ரயிலுக்காக அப்படி காத்திருக்கிறோம், அதை கேட்டவூடனே அமைதியாகிறோம். கன்னிப்பெண் கருத்தாங்கி ஒரு மகனை பெறுவாள் என்று சொன்ன உடனே கர்த்தருக்காக மரியாள் திருமணம் முடிவதற்கு முன்பே காத்திருந்தாள்.

1. உலக இரட்சகர்

மரியாள் இருந்த வீட்டுக்குள் கர்த்தர் ஒரு தூதனை அனுப்பி அவளைப் பார்த்து கிருபை பெற்றவளே என்று சொல்லுகிறார். மரியாள் ஜெபம் பண்ணி ஜெபம் பண்ணி அந்த ஜெபத்திற்கு சம்பளமாக தேவனுடைய கிருபையை பெற்றாள். நானும் ஜெபம் பண்ணுகிறேன் எனக்கு குழந்தை இல்லையே, கடன் பிரச்சனை மாறவில்லையே, எனக்கு எந்த பிரச்சனையும் தீரவில்லையே என்று புலம்பி கொண்டிருக்கிறீர்களா?, எது கிடைத்ததோ இல்லையோ கர்த்தர் உங்களை பார்த்து சொல்லுகிறார் உங்கள் மேல் ஒரு கிருபை இருக்கின்றது என்று. நீங்கள் உயிரோடு இருக்கும் நாளெல்லாம் மரியாளோடு இருந்த கிருபை உங்கள் மேலும் இருக்கும். ஆகவே தான் தூதனை அனுப்பி கிருபை பெற்றவளேஎன்று சொல்லுகிறார். நீங்கள் தயவு பெற்றவர்களாக, இரக்கம் பெற்றவர்களாக இருக்கிறீர்கள்.

ஸ்திரீகளுக்குள் கிருபை பெற்றவள், ஆசீர்வதிக்கப்பட்டவள் என்று சொல்லுகிறார். நீங்கள் அல்லும் பகலும் தேவனை நோக்கி ஜெபிக்கும் போது பரமபிதா உங்களை விட்டு விடுவாரா? உங்கள் குடும்பத்தை விட்டுவிடுவாரா? குடிக்கின்ற உங்கள் கணவனை நரகத்திலó தள்ளி விடுவாரா? விடமாட்டார். இந்த சூழ்நிலையை மாற்றுவார், அநேகருடைய ஸ்தோத்திரத்தினாலே கிருபை பெருக போகின்றது. என் கணவர் என்னை பாராட்டவே மாட்டேங்கிறார். யார் பாராட்டினாலும் பாராட்டாவிட்டாலும் கடமையையே செய்வோம் என்று பெண்கள் செயல்படுகிறார்கள். இந்த எதிர்பார்ப்பை தாவீது ராஜா சொல்லுகிறார் சங் 62:5-ல் என் ஆத்துமாவே தேவனையே நோக்கி அமர்ந்திரு. நான் நம்புகிறது அவராலே வரும். இதை கத்தோலிக்க மொழி பெயர்ப்பில் நான் எதிர் பார்க்கிறது அவரிடத்தில் இருந்து வரும் என்று சொல்லப்பட்டுள்ளது.

ஸ்திரீகளுக்குள் முதலில் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட வேண்டுமென்றால் கர்த்தருடைய கிருபை உங்கள் மேல் இறங்க வேண்டும். நீங்கள் திருமணம் முடித்து வரும் போது எத்தனை பவுன் நகை போட்டு அனுப்புனாங்க என்று நியாபகம் உங்களுக்கு இருக்கு. உங்கள் கணவர் வீடு கட்டணும், பிள்ளைக்கு வளைகாப்பு பண்ணனும் என்று சொல்லுவீர்கள். உங்கள் வீட்டில் நகை கொடுக்கலாம். ஆஸ்தி கொடுக்கலாம், வீடு கொடுக்கலாம், கார் வாங்கி கொடுக்கலாம், fixed டெபாசிட் போடலாம் ஆனால் வேத வசனம் சொல்லுகிறது நீதி 19:14-ல் வீடும் ஆஸ்தியும் பிதாக்கள் வைக்கும் சுதந்திரம்.

புத்தியுள்ள மனைவியோ கர்த்தர் அருளும் ஈவு என்று வேதம் சொல்லுகிறது. நகை கொடுக்கிறாங்களோ இல்லையோ என்னுடைய மனைவி கிருபையோடு வந்தாள் என்று சொல்லி பாராட்டுங்கள். புத்தியுள்ள மனைவி கர்த்தர் தரும் ஈவு. வீடு யார் வேண்டுமானாலும் கொடுக்கலாம், நகை யார் வேண்டுமானாலும் போடலாம். எது வேணுமானாலும் கொடுத்திடலாம், புத்தியை தருகிறவர் யார்? இரட்சிப்பை தருகிறவர் யார்? கர்த்தர். பெண்கள் ஆசீர்வதிக்கப்பட வேண்டுமானால் முதலில் கிருபை பெற வேண்டும்.

ஒரு குழந்தை பிறக்க போகிறது, அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவராயிருப்பார். அவர் ராஜ்யத்துக்கு முடிவேயில்லை என்று சொன்னவுடனே மரியாள் இந்த வாழ்த்துதலுக்கு கலங்கிவிடடார்கள், பயந்துவிட்டார்கள். அது போல நீங்கள் கலங்கிட்டீங்களா?, நீங்கள் ஜெபம் பண்ணும் போது உங்கள் கணவர் குடித்துவிட்டு வருவார். அப்பொழுது தான் ஜெபம் பண்ண முடியாது என்று சாத்தான் ஜெபத்தை நிறுத்த முடிவு செய்வான். சாத்தான் நம்மை அலைக்கழித்து விட்டு தான் போவான். அவனுக்கு கொஞ்ச காலம் தான் இருக்கிறது. நமக்கோ நீண்ட காலம்.

2. இரட்சிப்பு

கொர்நேலியு என்று ஒரு மனிதன் இருந்தான். அவனுக்கு உண்மையான கடவுள் யார் என்று தெரியாது, ஆனால் மூன்று வேளையும் ஜெபிப்பான். பக்தி உள்ளவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கர்த்தர் தெரிந்து கொண்டிருக்கிறார். கொர்நேலியு மூன்று வேளையும் ஜெபம் பண்ணி, தான தர்மங்களை செய்து, ஏழைகளுக்கு உதவி செய்தார். இயேசு எந்த மனிதனுக்குள் வருகிறாரோ அவன் நன்மை செய்கிறவனாக, ஜெபிக்கிறவனாக மாறுவான். கர்த்தர் ஒரு தூதனை கொர்நேலியு வீட்டிற்கு அனுப்பி சொல்கிறார் பேதுரு என்ற ஒரு மனிதன், செசரியாவில் தோல் பதனிடும் சீமோன் வீட்டில் இருக்கிறான்.நீ ஆள் அனுப்பி அவனை அழைத்து வரச்சொல், நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப் படுவதற்கான வார்த்தைகளை அவன் சொல்லுவான் என்றார். நீங்கள் ஜெபம் பண்ணும்போதெல்லாம் கர்த்தர் ஒரு தூதனை அனுப்புவார். நீங்கள் அவசரப்படாதீர்கள்,

எங்களால் தேவனுக்கு மகிமையுண்டாகும்படி, தேவனுடைய வாக்குத்தத்தங்களெல்லாம் இயேசுகிறிஸ்துவுக்குள் ஆம் என்றும், அவருக்குள் ஆமென் என்றும் இருக்கிறதே. 2 கொரி 1:20. அப்போஸ்தலனாகிய பவுல் சொல்லுகிறார் ஆம் என்றும், இல்லை என்றும் அவரிடத்திலிருந்து வருவதில்லை. ஆமென் என்றே சொல்லுகிறார். உங்கள் ஜெப குறிப்புகளுக்கெல்லாம் ஆமென் என்று தேவன் சொல்லிக் கொண்டு இருக்கிறார், உங்களுக்காக பரிந்து பேசிகிட்டே இருக்கிறார். காலையில் எழுந்தவுடனே ஆபேல் உடைய இரத்தத்தை காட்டிலும் நமக்காக நன்மையானதை பேசுகின்ற இயேசுவின் இரத்தத்துக்குள் வந்திடுங்கள். கர்த்தர் இன்றைக்கு வழியை திறக்கப் போகிறார்.

3. பரிசுத்த ஆவியின் அபிஷேகம்

தேவ தூதனுடைய வாழ்த்துதலை கேட்டவுடனே மரியாள் பயந்து, கலங்கி திகைத்து நானோ கணவனை அறியேன். இது எப்படி ஆகும் என்றாள். உடனே பரத்திலிருந்து ஒரு வார்த்தை வருகிறது பரிசுத்த ஆவி உன்மேலó வருவார் என்று. உங்கள் அப்பா போட்டு விட்ட சீதனத்தை காட்டிலும், சொத்துக்களை காட்டிலும், நகையை காட்டிலும் பரிசுத்த ஆவியானவர் மேலானவர். உன்னதத்தின் ஆவியானவர் உயர்ந்தவர். ஆவியானவர் வந்து விட்டால் உன்னத பெலன் உங்கள் மேலó வந்திடும். பரிசுத்த ஆவியானவர் உங்களுக்குள்ளே பரிசுத்த ஆவியை ஊற்றுகிறார். ஒவ்வொரு விசுவாசியும் இந்த பரிசுத்த ஆவியினாலó நிரம்ப வேண்டும். உன்னதருடைய வல்லமை உங்கள் மேல் நிழலிடும். நீங்கள் வேறு மனுஷராவீர்கள்.குடும்பத்தில் சண்டையின் ஆவி ஓடும். வாக்குவாதத்தின் ஆவி ஓடும். குடும்ப சூழ்நிலை மாறிவிடும்.

இயேசு உயிர்த்தெழுந்த போது லூக் 12:49-ல் பூமியிலே அக்கினியை போட வந்தேன். இந்த பூமியிலó பரிசுத்த ஆவி என்ற அக்கினியை போட வந்தேன். அது பற்றி எரிய விரும்புகிறேன் என்றார். நீங்கள் சாதாரண நபர் அல்ல, எரிந்து பிரகாசிக்கின்ற நபர். யூதருக்கு பயந்து சீஷர்கள் எல்லாத்தையும் விட்டு வந்தோம் என்று புலம்பினார்கள். யோவா 19:20-ல் வசித்துப் பார்த்தால் சீஷர்கள் எல்லாரும் யூதருக்கு பயந்து கதவுகளை மூடி வைத்து கொண்டு அழுது கொண்டிருக்கிறார்கள். அப்படி அழுது கொண்டிருந்த இடத்திலó இயேசு தோன்றினார். இயேசு தான் உயிர்த்தெழுந்த உடனே ஸ்திரீகளுக்கு காணப்பட்டார். மாற்கு 16:10-ல் அவளிடத்திலிருந்து அவர் ஏழு பிசாசுகளைத் துரத்தியிருந்தார். அவள் புறப்பட்டு, அவரோடே கூட இருந்தவர்கள் துக்கப்பட்டு அழுது கொண்டிருக்கையில் அவர்களிடத்தில் போய், அந்த செய்தியை அறிவித்தாள். சீஷர்கள் கதவுகளை மூடி அழுது கொண்டிருக்கும் போது திடீரென்று இயேசு உள்ள போய் சமாதானம் சொல்லுகிறார்.

4. சுவிசேஷம் அறிவித்தல்

லூக் 24:10-12-ல் இவைகளை அப்போஸ்தலருக்குச் சொன்னவர்கள் மகதலேனா மரியாளும், யோவன்னாளும், யாக்கோபின் தாயாகிய மரியாளும் இவர்களுடனேகூட இருந்த மற்ற ஸ்திரீகளுமே. இவர்களுடைய வார்த்தைகள் அவர்களுக்கு வீண்பேச்சாகத் தோன்றினதினால், அவர்கள் இவர்களை நம்பவில்லை. பேதுருவோ எழுந்திருந்து கல்லறையினிடத்திற்கு ஓடி, அதற்குள்ளே குனிந்து பார்க்கையில், சீலைகளைத் தனிப்பட வைத்திருக்கக்கண்டு, சம்பவித்ததைக் குறித்துத் தன்னில் ஆச்சரியப்பட்டுக் கொண்டு போனான். அவர் இங்கே இல்லை, அவர் உயிர்த்தெழுந்தார். கடவுள் பற்ற வைத்தது என்றைக்கும் அணையாது. இன்றைக்கு சுவிசேஷம் அறிவிக்க வேண்டும், அறிவிக்காமல் இருக்கிறதால தான்ó அநேகர்ó தற்கொலை பண்ணிக் கொள்கிறார்கள். அந்த இரத்தப்பழி உங்கள் மேல் வரும். சுவிசேஷம் அறிவிக்காதிருந்தால், இந்த இரட்சிப்பை அறிவிக்காதிருந்தால் ஐயோ என்று பவுல் சொல்லுகிறார்.

நாட்கள் பொல்லாதவைகளாக இருக்கிறது. காலத்தை வீணடிக்காதிருங்கள், வீணான மனுஷனாகாதிருங்கள், அதற்கு தான் ஆண்டவர் இந்த நாட்களில் நமக்கு பரிசுத்த ஆவியை கொடுத்து நம்மேல் ஊற்றிப் பற்றவைத்துள்ளார். உலக முழுவதும் சுவிசேஷம் வேகமாக அறிவிக்கப்படுகிறது. இந்தியாவில் சுவிசேஷத்தினிமித்தம் அநேகர் சிறையிலே தள்ளப்பட்டு விட்டார்கள். இரத்த சாட்சிகளாய் மரிக்கிறார்கள்.கர்த்தருடைய வருகை வரப்போகின்றது இனி நாம் காலத்தை வீணடிக்க கூடாது.

1 சாமு 1:15-ல் அதற்கு அன்னாள் பிரதியுத்தரமாக அப்படியல்ல, என் ஆண்டவனே, நான் மனக்கிலேசமுள்ள ஸ்திரீ, நான் திராட்சரசமாகிலும் மதுவாகிலும் குடிக்கவில்லை, நான் கர்த்தருடைய சந்நிதியில் என் இருதயத்தை ஊற்றிவிட்டேன். அங்கே அன்னாள் ஜெபம் பண்ணி தன் இருதயத்தை ஊற்றினாள். கர்த்தர் ஒரு சாமுவேலை எழுப்பினார். இன்றைக்கு நீங்கள் இருதயத்தை ஊற்றி கண்ணீரோடு ஜெபித்தால் உங்கள் வீட்டில் கர்த்தர் சாமுவேலை எழுப்புவார். தீர்க்கதரிசிகளை எழுப்புவார், இதே போல் நீங்களும் அநேக ஆவிக்குரிய பிள்ளைகளை பேற்றேடுப்பீர்கள்.உங்கள் வாழ்க்கையில் உள்ள அந்தகாரத்தை மாற்றுவார், நிந்தை மாறும், அவமானம் மாறும், கட்டுகள் உடையும். தோல்விகள் ஜெயமாய் மாறும்.

லூக் 8:3-ல் ஏரோதின் காரியக்காரனான கூசாவின் மனைவியாகிய யோவன்னாளும், சூசன்னாளும், தங்கள் ஆஸ்திகளால் அவருக்கு ஊழியஞ் செய்துகொண்டு வந்த மற்ற அநேகம் ஸ்திரீகளும் அவருடனே இருந்தார்கள். பெண்கள் ஆஸ்திகளால் ஊழியம் செய்தார்கள், அள்ளிக் கொடுத்தார்கள். நீங்களும் ஆசீர்வதிக்கப்பட ஊழியம் செய்ய வேண்டும். நீங்கள் ஸ்திரீகளுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக, கிருபை பெற்றவர்களாக, பரிசுத்த ஆவியை பெற்றவர்களாக இருக்க வேண்டும், அதனால் தான் நம்மை ஆண்டவர் இரட்சித்து பூமியிலே வைத்திருக்கிறார். என் ஆண்டவராகிய தேவன் தாமே இந்நாளில் இப்படிப்பட்ட கிருபைகளை உங்களுக்கும் கொடுத்து உங்களை ஆசீர்வதித்து நடத்துவாராக.