Inspiration
Children's Special
ஜான் தம்பியும், ராணி அக்காவும் கால்பரீட்சை Leave- வுக்கு பாட்டி வீட்டுக்குப் போகலாம்னு அம்மா சொன்னவுடனே சந்தோஷமா இருந்தாங்க ஏன்னா, அங்கே நிறைய வாத்து வளர்க்கிறாங்கஅவுங்க பாட்டி. ஜானும், ராணியும் பாட்டி வீட்டுக்குப் போனாங்க, பாட்டியோட சேர்ந்து வாத்துக்கு இரை போடுவாங்க, அது தத்தி, தத்தி ஓடுவதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாயிருந்தாங்க. ஒரு நாள் சாயங்காலம் பாட்டி பக்கத்திலிருக்கிற பாட்டி வீட்டுக்குப் போயிட்டாங்க, வாத்தை கையில பிடித்துத் தூக்கனும்னு ஆசையாயிருந்த ஜான், அந்த சின்ன குட்டி வாத்தை தூக்கி வைச்சு விளையாடிக் கிட்டு இருந்தான். அப்ப அந்த குட்டி வாத்து அவன் கையிலே விழுந்ததினாலே அதற்கு அடிபட்டிருச்சு, என்ன செய்வதுன்னு தெரியாம பயந்து போய் ஒரு ஓரமாய் அந்த வாத்தை வைச்சதைப் பார்த்த ராணி அக்கா, டேய் ஜான் என்ன பண்ணியிருக்க பாட்டி கிட்ட சொல்லவா என்றாள் அக்கா, அக்கா சொல்லாதே என்றான், சரி அப்ப என்னோட வந்து வெங்காயம் உரிச்சு வை என்றாள். அவனும் சரிக்கா என்றான். சரி அடுத்து பாட்டி வர்றதுக்குள்ள பாத்திரம் கழுவனும் அதையும் கழுவிறு நான் கொஞ்ச நேரம் டிவி பார்த்துட்டுவர்றேன் என்றதும் அக்கா, நீ மட்டும் டிவி பார்க்கனும் நான் மாத்திரம் பாத்திரம் கழுவனுமா? என்று ஜான் கேட்டான். நீ கழுவலைன்னா பாட்டிக்கிட்ட சொல்லிருவேன்னு பயமுறுத்தினாள். நைட் ஆயிருச்சு சாப்பிடும் போதும் இதே மாதிரி ராணி அக்கா ஜானை பயமுறுத்திக் கொண்டே இருந்தாள். காலையில் எழுந்ததும் ராணியை கேட்டைத் திறக்கச் சொன்னாங்க பாட்டி, ராணி படுத்துக்கிட்டு ஜானைப் போய் கேட்டை திறக்கச் சொன்னாள். டேய் நேத்து வாத்து என்றதும் ஓடிப்போய் கதவைத் திறந்தான். அடுத்து வாத்து இருக்குமிடத்தை க்ளீன் பண்ண ராணியை பாட்டி கூப்பிட்ட போது, அவள் ஜானைக் கூப்பிட்டு நீ போ என்றாள், ஜான் போக மாட்டேன் நீ போ என்றான். உடனே நேத்து வாத்து என்றதும் ஓடினான். அக்கா நேத்து வாத்துன்னு சொல்லியே என்னைப் பயமுறுத்துறாளே பாட்டிட்ட நம்மலே சொல்லிட்டு மன்னிப்பும் கேட்க வேண்டியது தான் என்று தன் மனசுக்குள்ளே சொல்லிக் கொண்டு, பாட்டிட்ட எல்லாவற்றையும் சொல்லி மன்னிப்பு கேட்டான். ஓ …… இந்தக் கதைதான் இங்க நடந்துச்சா சரி சரி தெரியாம தவறு செஞ்சுட்டா மன்னிப்பு கேளு. அப்ப மனசும் நிம்மதியா இருக்கும், அடுத்தும் தவறு செய்யாம உன்னை கவனமாய் பாத்துக்குவ. ஆனா செஞச தப்பை மறைச்சு வைச்சா நிம்மதியும் இருக்காது, எப்பப்பார்த்தாலும் பயந்துக்கிட்டே இருக்கனும், ஒரு தப்பை மறைக்க, இன்னொரு தப்பை செஞ்சிருவ, இனி நல்ல பிள்ளையா இருக்கனும்னு சொன்னார்கள் பாட்டி. உடனே பாட்டி ராணியைக் கூப்பிட்டு இந்த இடத்தை கூட்டுமா என்றார்கள். அவள் ஜானைப் பார்த்து நீ கூட்டு என்றாள். அவனும் நீ கூட்டு என்றான். உடனே அவள் நேத்து….வாத்து என்றதும் பாட்டி சொன்னாங்க வாத்து அது நேத்து, சின்ன பையனை நீ இப்படி பயமுறுத்தலாமா? நீ பெரிய பிள்ளைதானே, என்னட்ட சொல்லியிருக்கலாமே?, பாட்டி, நீங்க திட்டுவீங்கன்னு நெனச்சேன், சாரி பாட்டி என்றாள். ராணி, நேத்து சாயங்காலமே அடிபட்ட வாத்துக்கு மருந்து போட்டுட்டேன். இப்ப அது நல்லாயிருக்கு. வாங்க போய் பார்க்கலாம் என்றார்கள் பாட்டி. இந்த மாதிரி நீங்களும் தப்புக்களை எல்லாம், அப்பா அம்மாவிடம் சொல்லி மன்னிப்பு கேட்டீங்கன்னா, அவுங்க மன்னிப்பாங்க, நம் இயேசு அப்பாவும் மன்னிப்பாங்க பிரண்ஸ் இப்ப ஜெபிப்போமா.
ஜெபம்-
அன்புள்ள இயேசப்பா தப்பு செய்யாம என்னை பாதுகாத்துக் கொள்ளுங்க, எப்போதாவது தவறும் போது மறைக்காம உம்மிடம் சொல்லி மன்னிப்புக் கேட்க உதவி செய்யுங்க. இயேசுவின் நாமத்தில் பிதாவே, ஆமென்.
மனப்பாட வசனம்-
தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான், அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான். நீதி 28:13.