Inspiration

இயேசுவின் பாதத்தில் அமருங்கள

“கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை அவரோடேகூட எழுப்பி, உன்னதங்களிலே அவரோடேகூட உட்காரவும் செய்தார்” எபேசியர் 2:7

ஆண்டவரும் உலக இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துக்கள். தேவனுடைய வார்த்தையின் மூலம் உங்களைச் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

கர்த்தருடைய வேதம் அழகாய் சொல்லுகிறது கிறிஸ்து இயேசுவுக்குள் அவரோடே கூட நம்மை எழுப்பி விட்டார் என்று. நான் ஒரு கூட்டத்திற்கு போயிருந்தேன். அங்கு கடவுளை அறியாத கணவன் மனைவி வந்திருந்தார்கள், அவர்களை குறித்த சாட்சியை கேட்டேனó. ஒரு நாள் போதகருடைய கார் வழியிலே நின்று விட்டது. அப்பொழுது இவர் மெக்கானிக் வேலை செய்வதால் இவரிடம் சரி செய்ய சொல்லியிருக்கிறார். இந்த கார் நிறைய டேமேஜ் ஆகிவிட்டது இதை சரி செய்ய நிறைய செலவாகும் என்று சொன்னார். அப்பொழுது இந்த மெக்கானிக் நீங்கள் என்ன வேலை செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று போதகரிடம் கேட்டார். அதற்கு அவர் நான் இயேசுவைப்பற்றி சுவிசேஷம் அறிவிக்கிறேன் என்றார். அப்பொழுது அந்த மெக்கானிக் என் மனைவி கால் வலியால் நடக்க முடியாமல் இருக்கிறாள் என்றார். அதற்கு அந்த போதகர் வாருங்கள் போய் ஜெபம் பண்ணுவோம் என்று கூப்பிட்டு போனார். ஜெபம் பண்ணின பின்பு மனைவி எழுந்து உட்கார்ந்து விட்டார்கள், கர்த்தர் அற்புதம் செய்தார். அந்தக் காரை ஃப்ரீயாக சரி பார்த்து ஓட வைத்து மெக்கானிக் அந்த போதகரிடம் கொடுத்தார்.கர்த்தர் எவ்வளவு நல்லவர் என்று பாருங்கள். அவரால் முடியாத காரியம் ஒன்றுமில்லை.

இயேசு பூமியில் மரித்து, மூன்றாம் நாள் உயிரோடு எழுந்து பரலோகத்திற்குச் செல்லும் பொது அவர் மட்டும் எழுந்து போகவில்லை ஒரு கூட்டத்தையே மேலே கூட்டிக்கொண்டு போனார். ஆயிரம் ஆயிரம் தேவ தூதர்களோடு கல்லறையில் படுத்திருந்த அநேக பரிசுத்தவான்களோடு மேலே போனார். ஒருநாள் இயேசு பூமிக்கு திரும்ப வரப்போகிறார். நீங்களும் நானும் கர்த்தருக்குள் நிலைத்திருந்தால், பரிசுத்தமாயிருந்தால் நம்முடைய உறவுகள் காண நாம் அவருடன் கூட வானத்தில் எடுத்துக் கொள்ளப்படுவோம். இயேசு சீக்கிரம் வரப்போகிறார். உங்களை இமைப்பொழுதில் அழைத்துச் செல்லுவார். அவரோடே கூட நம்மை எழுப்பி உன்னதங்களிலே கூட்டிட்டுப் போகிற ஆண்டவர் எங்கு உட்கார வைக்கிறார் என்றால் யோவான் 14:3-ல் நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன் என்று சொல்லப்பட்ட வார்த்தையின்படி அவரோடே கூட உங்களை உட்கார வைப்பார். அவர் இன்றைக்கு உங்களைப் பார்த்து சொல்லுகிறார் உங்களுக்கு வீடு இருக்கோ இல்லையோ, சொந்த இடம் இருக்கோ இல்லையோ, உங்களுக்கு ஒரு ஸ்தலத்தை அவர் ஆயத்தம் பண்ணி வைத்திருக்கிறார். அந்த ஸ்தலத்தை ஆயத்தம் பண்ணின பின்பு அவர் இருக்கும் இடத்திலே நீங்களும் இருக்கும்படி, அவர் மறுபடியும் வந்து உங்களை அவரிடத்தில் சேர்த்துக் கொள்ளுவார்.

தேவன் நம்மை ஏன் உட்கார வைக்க வேண்டும்?. இந்த காலத்தில் மனிதனுக்கு உட்கார நேரம் இல்லை. ஓடிக்கொண்டே இருக்கிறான். ஒரே அலைச்சல், வேலை நிமித்தம் வெளிநாடு போகிறார்கள், வியாபாரத்தை நினைத்து தொழிலுக்குப் போய் விடுகிறார்கள். அந்த மனிதன் வந்து இராத்திரி 11 மணிக்கு படுத்து காலையில் எழுந்ததும் போய் விடுகிறார்பிள்ளைகள் அப்பாவை பார்க்க முடியவில்லை இப்படிப்பட்ட உலகத்தில் நாம் வாழ்கிறோம். ஆனால் ஆண்டவர் உங்களை உட்கார வைத்து அழகு பார்க்கிற தேவன், உங்கள் கண்ணீரை துடைக்கிற தேவன், உங்கள் சஞ்சலத்தை நீக்குகிற தேவன், அதற்குத்தான் அவர் வாழ்கிறார், ஜீவிக்கிறார், உயிரோடு இருக்கிறார். யோவான் அவர் மார்பில் சாய்ந்திருந்தான். உயிர்த்தெழுந்த பின்பு அவரைக் கண்டபோது செத்தவனை போல் விழுந்து விட்டான்.1சாமு 7-ம் அதிகாரத்தில் உடன்படிக்கை பெட்டிக்கு முன்பாக தாகோன் முகங்குப்புற விழுந்தது. நீங்கள் இயேசுவோடு உட்காரும்போது எல்லா மார்க்க பேதங்களும், பிசாசின் கிரியைகளும் உங்களுக்கு முன்பாக குப்புறவிழும்,கர்த்தரே தெய்வம் என்று எல்லா முழங்காலும் முடங்கும், நாவுகள் அறிக்கையிடும். அதற்குத்தான் கர்த்தர் உங்களையும் என்னையும் இன்றைக்கு அவரோடுகூட உட்கார வைத்திருக்கிறார்

1. தேவையானது ஒன்றே

லூக்கா 10:39-ல் அவளுக்கு மரியாள் என்னப்பட்ட ஒரு சகோதரி இருந்தாள், அவள் இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து, அவருடைய வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்தாள்.ஜெபம் என்பது என்னவென்றால் உங்களுடைய ஐம்புலன்களை அடக்கி தேவ சமூகத்தில் உட்காருவது தான். ஒரு ராஜாவுக்கு முன்பாக எப்படி உட்கார வேண்டும் என்று தெரிந்திருக்க வேண்டும். ஒரு கமெண்டர் கிட்ட எப்படி உட்கார வேண்டும் என்பது தெரிந்திருக்க வேண்டும். மரியாள் இயேசுவின் பக்கத்தில் உட்கார்ந்து வசனத்தை கேட்டுக் கொண்டிருந்தாள். ஆனால் மார்த்தாளுக்கோ உட்கார நேரம் இல்லை. பற்பல வேலைகளை செய்தாள். இன்றைக்கு நாம் ஓடிக்கொண்டே இருக்கிறோம், சாப்பிட நேரமில்லை தூங்க நேரமில்லை பரபரப்பான உலகத்தில் வாழ்கிறோம். இப்படிப்பட்ட வேலைபளு நிறைந்த உலகத்தில் மரியாள் தன்னை விட்டு எடுபடாத நல்ல பங்கை தெரிந்து கொண்டாள். இயேசு அவளைப் பாராட்டுகிறார். தேவையானது ஒன்றே நாம் இயேசுவின் பாதத்தில் உட்கார வேண்டும்.

சங் 139:2 என் உட்காருதலையும் என் எழுந்திருக்குதலையும் நீர் அறிந்திருக்கிறீர்; என் நினைவுகளைத் தூரத்திலிருந்து அறிகிறீர் என்று சங்கீதக்காரன் சொல்லுகிறான். நீங்கள் எழுந்தாலும், உட்கார்ந்தாலும்அவர் அறிந்திருக்கிறார். கோலியாத் ஒரு பக்கம், சவுல் ஒரு பக்கம் எப்படி இருக்கும் தாவீதுக்கு அந்த நிலையிலும் என் ஆத்துமாவே ஏன் கலங்குகிறாய் ஏன் எனக்குள் தியங்குகிறாய் என்று சொல்கிறார். இம்மட்டும் தாவீதை சவுலின் கையில் ஒப்புக்கொடுக்காத தேவன், கொடிய மிருகங்களுக்கு விலக்கிக் காத்த தேவன், அவர் பாதத்தில் உட்காருகிற உங்களை கைவிடமாட்டார். எவ்வளவு வேலை இருந்தாலும் எல்லாவற்றையும் ஓரமாக வைத்துவிட்டு மார்த்தாளைப் போல அல்ல மரியாளைப் போல அவர் பாதத்தில் இருங்கள்.மீகா தீர்க்கதரிசி சொல்லுகிறார் மீகா 7:8-ல் என் சத்துருவே, எனக்கு விரோதமாய்ச் சந்தோஷப்படாதே, நான் விழுந்தாலும் எழுந்திருப்பேன், நான் இருளிலே உட்கார்ந்தால், கர்த்தர் எனக்கு வெளிச்சமாயிருப்பார் என்று.இயேசு எங்கெல்லாம் மலை மேல் ஏறி உட்கார்ந்து ஜெபம் பண்ணினாரோஅங்கெல்லாம் ஜனங்கள் அவரைத் தேடி போனார்கள். நீங்கள் உட்கார்ந்திருக்கிற, அவரை நோக்கி கூப்பிடுகிற இடத்துக்கு இயேசு வருவார்.

நீங்கள் இருளில் இருந்தாலும் கர்த்தர் உங்களுக்கு வெளிச்சமாய் இருப்பார். கண்ணீரின் பாதையில் நீங்கள் கடந்து சென்றாலும், ஏதோ ஒன்றை இழந்திருந்தாலும், எல்லாராலும் வஞ்சிக்கப்பட்டு ஏமாற்றப்பட்டு தனிமனிதனாக உட்கார்ந்து தலையிலே அடித்து அழுது கொண்டிருந்தாலும் இன்றைக்கு ஆண்டவர் சொல்லுகிறார் நீ தனி மனிதன் அல்ல நான் உன்னோடேகூட இருக்கிறேன்,உன் உட்காருதலை அறிந்திருக்கிறேன். உன் சஞ்சலத்தை நான் அறிந்திருக்கிறேன் இனி அலைய வேண்டாம், புலம்ப வேண்டாம் என்று சொல்கிறார். மார்த்தாளும் மரியாளும் சகோதரிகள் தான். ஒரே வீட்டில் இருந்தார்கள் ஆனால்அவர்களுடைய எண்ணங்கள் வேவ்வேறாக இருந்தது. மரியாள் தன்னை விட்டு எடுபடாத நல்ல பங்கை தெரிந்து கொண்டாளó. இயேசுவின் பாதத்தில் உட்கார்ந்தாள். மார்த்தாளோ பல வேலைகளை செய்து கொண்டிருந்தாள்.உபா 33:3-ல் மெய்யாகவே அவர் ஜனங்களைச் சிநேகிக்கிறார், அவருடைய பரிசுத்தவான்கள் எல்லாரும் உம்முடைய கையில் இருக்கிறார்கள், அவர்கள் உம்முடைய பாதத்தில் விழுந்து, உம்முடைய வார்த்தைகளினால் போதனையடைவார்கள் என்று சொல்லப்பட்டபடி நீங்கள் தேவனுடைய பாதத்தில் உட்காரும் போது போதனையடைவீர்கள், உங்கள் வாழ்விற்கான வழிமுறைகளை அவர் கற்றுக் கொடுப்பார்.சில நேரங்களில் ஜெபத்தில் நாம் நம்முடைய கஷ்டத்தையே சொல்லிக் கொண்டிருப்போம். இதுக்கு பேர் ஜெபம் அல்ல. என் ஆத்துமாவே நீ தேவனையே நோக்கி அமர்ந்திரு இதுதான் ஜெபம்.

2. அலைந்து திரிவதில்லை

2 சாமுவேல் 7:10. நான் என் ஜனமாகிய இஸ்ரவேலுக்கு ஒரு இடத்தை ஏற்படுத்தி, அவர்கள் தங்கள் ஸ்தானத்திலே குடியிருக்கவும், இனி அவர்கள் அலையாமலும், முன்போலும், நான் என் ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் நியாயாதிபதிகளைக் கட்டளையிட்ட நாள் வரையில் நடந்ததுபோலும், நியாயக்கேட்டின் மக்களால் இனிச் சிறுமைப்படாமலும் இருக்கும்படி அவர்களை நாட்டினேன்.

மத்தேயு 12:43-ல் அசுத்தஆவி ஒரு மனுஷனை விட்டுப் புறப்படும்போது, வறண்ட இடங்களில் இளைப்பாறுதல் தேடியும் கண்டடையாமல் அலைகிறான், சாத்தானுக்கு இளைப்பாற இடமில்லை.ஆனால் நமக்கு உட்கார கர்த்தர் ஒரு இடத்தை ஆயத்தம் பண்ணி கொடுத்திருக்கிறார். யோபு 1,2 அதிகாரத்தில் ஒரு நாள் தேவதூதன் வந்து நிற்கும் பொழுது சாத்தான் அங்கு வந்து நிற்கிறான். ஆண்டவர் சாத்தானை பார்த்து கேட்கிறார் சாத்தானே எங்கிருந்து வருகிறாய் என்று, அதற்கு அவன் நான் பூமி முழுவதும் சுற்றி திரிந்து வருகிறேன் என்று சொல்கிறான். இப்பொழுது சாத்தானுக்கு நேரமில்லை அலைகிறான் இது ஒரு சாபம். ஆதி 4-ம் அதிகாரத்தில் காயினுக்கு ஆண்டவர் ஒரு தண்டனை கொடுக்கிறார். என்ன தண்டனை தெரியுமா? ஆதி 4:14-ல் இன்று என்னை இந்தத் தேசத்திலிருந்து துரத்திவிடுகிறீர், நான் உமது சமுகத்துக்கு விலகி மறைந்து, பூமியில் நிலையற்று அலைகிறவனாயிருப்பேன், என்னைக் கண்டுபிடிக்கிறவன் எவனும் என்னைக் கொன்றுபோடுவானே என்றான்.காயினுக்கு ஆண்டவர் ஒரு சாபத்தை போட்டார். நிலையற்றவனாய் அலைவாய். அவனுக்கு நிரந்தரமாக ஒன்னும் கிடையாது. ஆனால் உங்களுக்கும் எனக்கும் நிரந்தரமாக ஒரு ஸ்தலத்தை ஆயத்தப்படுத்தி இருக்கிறார்.

இன்றைக்கு நீங்கள் அவர் பாதத்தில் உட்கார வேண்டும். அவர் உன்னதங்களிலே அவரோடு கூட எழுப்பி உங்களுக்கு ஒரு சிங்காசனத்தை வைத்திருக்கிறார். நான் இருக்கிற இடத்தில் என் பிள்ளைகள் இருக்கட்டும், என் நாமத்தில் அவர்கள் எதைக் கேட்டாலும் கொடுப்பேன். தருவேன் என்று சொல்லி இருக்கிறார். ஆண்டவர் உங்களுடைய வீணó அலைச்சலை,போராட்டங்களை மாற்றி உங்களை நிலைநிறுத்தப் போகிறார். உங்கள் போராட்டத்திற்கு முடிவு வரப்போகிறது. உங்கள் யுத்தம் இன்றோடு முடிவடையப் போகிறது. இன்றைக்கு ஜெப நேரத்தை திருடுகிறவன் அவன் தான். ஆயிரம் பிரச்சனைகள் வந்தாலும் நீங்கள் தேவ சமூகத்தில் உட்காருங்கள். விடியற்காலையில் ஆயத்தமாகி சீனாய் மலையில் வந்து நில்லு என்று மோசேயிடம்கர்த்தர் சொன்னார் அதேபோல் மோசே நின்றார். இன்றிலிருந்து உங்களுடைய ஜெப நேரத்தை ஆண்டவர் மாற்றப் போகிறார். ஜெப நேரம் இனிமையாகப் போகிறது. தேவன் உங்களை வல்லமையாய் பயன்படுத்த போகிறார்.

சங் 1:1-ல் துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும் என்று சொல்லப்பட்டுள்ளது.பேதுரு ரொம்ப நல்ல மனிதன், ஆனால் அவர் உட்கார்ந்த இடம்தான் சரியில்லை. பரிகாசக்காரர் உட்கார்ந்திருந்த இடத்தில் இருந்தார். அவர்கள் இயேசுவை அடித்தார்கள், காரி துப்பினார்கள், ஞான திருஷ்டியில் சொல் உன்னை அடித்தது யார் என்று கேட்கிறார்கள். வேலைக்கார பெண் பேதுருவைப் பார்த்து சொல்லுகிறார் நீ தோட்டத்தில் அந்த மனிதனோடு இருந்தீர் தானே, உன்னை நான் அங்கே பார்த்தேன் என்று. உட்காரக் கூடாத இடத்தில் உட்கார்ந்தால்பேதுரு இயேசுவை எனக்கு தெரியாது என்று மறுதலித்து ஓடிப்போய் விட்டார். நீங்கள்தேவையில்லாத இடத்தில் உட்கார்ந்து பேசுவதை விட்டுவிட்டு தேவ சமூகத்தில் உட்கார்ந்து ஜெபிக்க வேண்டும்,

இயேசுவின் பாதத்தில் உட்கார்ந்து அவருடைய கிருபைகளை, அபிஷேகத்தை, அற்புதங்களைப் பெற்றுக்கொள்ளுங்கள். எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்ட நாளில் செய்யப்பட்ட அற்புதங்களைஇன்றைக்கும் அவர் உங்களுக்குச் செய்வார். சாத்தானின் சதிகளால், நியாயக் கேட்டினóமக்களால் நெருக்கப்படுகிறீர்களா? பணப் பற்றாக்குறை ஏற்படுகிறதா?.வேலையை விட்டு வரும்போது ஒரு பயம்சமாளிச்சிருவோமா என்ற கேள்வி வருகிறதா?. நீங்கள் அவர் பாதத்தில் அமர்ந்திருந்தால் தெற்கத்தியவெள்ளங்களை திருப்புவது போல உங்கள் குடும்பத்தினருடைய வாழ்க்கையையும் திருப்பி நல்வழிப்படுத்துவார்.

3. உயர்த்தப்படுவீர்கள்

நீங்கள் இயேசுவின் பாதத்தில் உட்கார்ந்து இருந்தால் சிங்காசனத்தில் உங்களை அவர் உட்கார வைப்பார். தானியேல் மூன்று வேளையும் ஜெபம் பண்ணுவார். அந்தி சந்தி மத்தியான வேளையிலும் ஜெபம் பண்ணுவார். தானியேல் 9:3-ல் நான் உபவாசம்பண்ணி, இரட்டிலும் சாம்பலிலும் உட்கார்ந்து, தேவனாகிய ஆண்டவரை ஜெபத்தினாலும், விண்ணப்பங்களினாலும் தேட என் முகத்தை அவருக்கு நேராக்கினேன் என்று சொல்கிறார். சாக்கு உடை அணிந்து சாம்பலில் உட்கார்ந்தார். ஆண்டவர் தானியேலை ஏன் இங்கு உட்கார வைத்தார் தெரியுமா?.1 சாமு 2:8 அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து எடுத்து, எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார், அவர்களைப் பிரபுக்களோடே உட்காரவும், மகிமையுள்ள சிங்காசனத்தைச் சுதந்தரிக்கவும் பண்ணுகிறார் என்ற வார்த்தையை நிறைவேற்றத் தான்.

பூமியின் அஸ்திபாரங்கள் கர்த்தருடையவைகள், அவரே அவைகளின்மேல் பூச்சக்கரத்தை வைத்தார்.இங்கேயே ஒரு சிங்காசனம், ராஜ மேன்மை எஸ்தருக்கு கிடைத்தது. அவள் தாய் தகப்பன் இல்லாதவள், தேவன் எஸ்தருக்கு ஒரு சிங்காசனத்தை வைத்து, அதில் அவளை உட்கார வைத்து,அவள் வாழ்க்கையை ஒரு வசதியாக வாழ்க்கையாக மாற்றினது உண்மை என்றால் உங்களையும் மாற்றுவார், உங்கள் குடும்பத்தை உயர்த்துவார், உங்களுக்கு குழந்தை பாக்கியம் தருவார். உங்களுக்கு ஒரு அற்புதம் செய்வார்,உங்கள் வியாதிக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பார். அவர் சிறியவனைப் புழுதியில் இருந்து எடுத்து ராஜாக்களோடும், பிரபுக்களோடும் உட்கார வைக்கிறார். இன்றைக்கு நீங்கள் கர்த்தருடைய சமூகத்தில் உட்கார்ந்து இருந்தால் அவர் உங்களை உன்னதங்களில் உட்கார வைப்பார். 40 வருடம் அலைந்து திரிந்த இஸ்ரவேல் மக்களுக்கு கர்த்தர் பாலும் தேனும் பொழிகிற நிலையான ஒரு இடத்தை தந்தவர், உங்களுக்கும் நிலையான இடத்தை தருவார்.

மாற்கு 5:2-4-ல் அவர் படவிலிருந்து இறங்கினவுடனே, அசுத்த ஆவியுள்ள ஒரு மனுஷன் பிரேதக்கல்லறைகளிலிருந்து அவருக்கு எதிராக வந்தான். அவனுடைய குடியிருப்பு கல்லறைகளிலே இருந்தது; அவனைச் சங்கிலிகளினாலும் கட்ட ஒருவனாலும் கூடாதிருந்தது. அவன் அநேகந்தரம் விலங்குகளினாலும் சங்கிலிகளினாலும் கட்டப்பட்டிருந்தும், சங்கிலிகளை முறித்து, விலங்குகளைத் தகர்த்துப்போடுவான்; அவனையடக்க ஒருவனாலும் கூடாதிருந்தது.சாத்தானுடைய குடியிருப்பு கல்லறை. நம்முடைய குடியிருப்பு பரலோகம். நீதிமானின் கூடாரத்தில் இரட்சிப்பின் கெம்பீர சத்தம் உண்டாகும். இந்த பிசாசு பிடித்திருந்த லேகியோனை ஒருவனாலும் அடக்க முடியவில்லை. ஒன்றுக்கு மேற்பட்ட பிசாசு அவனுக்குள் இருந்தது. அவனை ஆண்டவர் பாதத்தில் உட்கார வைத்தார். மாற் 5:15-ல்இயேசுவினிடத்தில் வந்து, லேகியோனாகிய பிசாசுகள் பிடித்திருந்தவன் வஸ்திரந்தரித்து, உட்கார்ந்து, புத்தி தெளிந்திருக்கிறதைக் கண்டு, பயந்தார்கள்.அவன் புத்தி தெளிந்து கர்த்தருடைய பாதத்தில் உட்கார்ந்திருந்தான், எல்லா போராட்டத்திலிருந்தும் விடுதலையைப் பெற்றான். என் ஆண்டவராகிய தேவன் தாமே உங்களை அவரோடேகூட எழுப்பி உன்னதங்களில் அவரோடேகூட உட்கார வைப்பாராக.