Inspiration
நீங்கள் இயேசுவோடு இருந்தால் அவர் உங்களோடு இருப்பார்.
என்னோடே இராதவன் எனக்கு விரோதியாயிருக்கிறான்; என்னோடே சேர்க்காதவன் சிதறடிக்கிறான். மத்தேயு 12:30.
ஆண்டவரும் உலக இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள். முற்காலத்தில் இருந்தது போல இப்பொழுது மக்கள் இல்லை. பேச்சுவார்த்தைகளை குறைத்துக் கொளó, செலவுகளை குறைத்துக் கொள், உறவுகளை குறைத்துக் கொள்என்று சிலர் மற்றவர்களுக்கு ஆலோசனை சொல்வது போல் அவர்களை தூண்டி விடுகிறார்கள், விரோதிகளாக்குகிறார்கள்.நீ யாரிடமும் ரொம்ப உறவு வைத்துக் கொள்ளாதே, ரொம்ப ஐக்கியமாகிவிடாதே என்று சொல்வார்கள். ஆனால் இங்கே இயேசு சொல்லுகிறார் என்னோடு இராதவன் எனக்கு விரோதியாக இருக்கிறான் என்று. யூதாஸ் இயேசுவோடு தான்இருந்தான், இயேசு பிரசங்கம் பண்ணும் போது இவன் தேவனுடைய வார்த்தையை கேட்கவில்லை, அவனுக்கு அந்த பணப்பையைக் குறித்து கவலையாக இருந்தது. பாவியான பெண் ஒருத்தி இயேசுவின் பாதத்தில் பரிமளத்தைலம் ஊற்றி தன் தலை முடியினால் துடைத்தால். ஆனால் இவனுக்குள்ளேயே நம்மை சாப்பிட்டியா என்று கேட்க கூட ஆள் இல்லை,இவருக்கு பார் பணிவிடை செய்ய எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்று பொறாமையாக நினைத்து அவருக்கு விரோதி ஆகிவிட்டான்.
இந்த தைலத்தை 300 பணத்துக்கு விற்று தரித்திரருக்கு கொடுத்து இருக்கலாம் என்று சொல்லுகிறான். இயேசு கொடுத்த உணவை சாப்பிட்டு விட்டு, அவர் போட்ட உப்பு தின்றுவிட்டு, அவர் கொடுத்த தண்ணீரை குடித்துவிட்டு அவருக்கே விரோதியாக மாறிட்டான். அவரைக் குற்றப்படுத்துகிறான், குறை சொல்லுகிறான், கடைசியில் 30 வெள்ளி காசுக்காக அவரை காட்டிக் கொடுக்கிறான். இயேசுவை காட்டிக் கொடுத்தாலும் யூதாசுக்கு மனசாட்சி வாதித்தது. யாரிடத்தில் அந்த காசை வாங்கினானோ அவர்களிடத்திலே போய் அதை கொடுக்கிறான். அவர்கள் அதை நீயே வைத்துக்கொள் என்று சொன்னவுடன் அந்த பணத்தை எரிந்து விட்டு நான்று கொண்டு செத்துப் போனான். அவனுடைய இருதயம் ஆண்டவரிடத்தில் போவதற்கு பதிலாக யூத குருக்கள் இடத்தில் போய்விட்டது.
1. நம்மை இரட்சித்திருக்கிறார்.
இயேசு கிறிஸ்து ஒரு மனிதனை ஏன் இரட்சிக்கிறார் என்றால் அவர்கள் அவரோடு இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். நாம் அவரோடு இருந்தால் அவர் நம்மோடு இருப்பார். நாம் அவரோடு இருப்பதற்குப் பெயர்தான்ஜெபம். ரொம்ப நாளாகவே என் வாழ்க்கையிலó போராட்டம்,பிரச்சனை, பாடுகள் இருக்கிறது என்று சொல்லாமல், இப்பத்தான் எனக்கு போராôட்டம் இதை நான் ஜெபித்து மேற்கொள்வேன் என்றுசொல்ல வேண்டும்.பின்பு அவர் ஒரு மலையின்மேல் ஏறி, தமக்குச் சித்தமானவர்களைத் தம்மிடத்தில் வரவழைத்தார், அவர்கள் அவரிடத்திற்கு வந்தார்கள். அப்பொழுது அவர் பன்னிரண்டு பேரைத் தெரிந்துகொண்டு, அவர்கள் தம்மோடுகூட இருக்கவும், பிரசங்கம் பண்ணும்படியாகத் தாம் அவர்களை அனுப்பவும்,வியாதிகளைக் குணமாக்கிப் பிசாசுகளைத் துரத்தும்படி அவர்கள் அதிகாரமுடையவர்களாயிருக்கவும், அவர்களை ஏற்படுத்தினார். மாற்கு3:13-15.இன்றைக்கு ஆண்டவர் நம்மை எதற்காக இரட்சித்திருக்கிறார், தெரிந்தெடுத்திருக்கிறார் என்றால் தம்மோடு கூட இருக்கும்படியாகவும், பிரசங்கம் பண்ணும்படியாகவும் தெரிந்து கொண்டார்.
பேதுருபடிப்பு அறிவே இல்லாத ஒரு மனிதன் எங்கேயாவது ஒரு சத்தம் கேட்டால் இவர் பயந்து விடுவார். தமிழில் ஒரு பழமொழி சொல்லுவார்கள் அரண்டவன்கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்று. மிகவும் பயந்த ஒரு நபர் பேதுரு. ஒரு பெண் வந்து உன்னை நான் இயேசுவுடன் தோட்டத்தில் பார்த்தேன் என்று சொன்னாள், இன்னொரு அம்மா அன்றைக்கு வனாந்தரத்தில் 5 அப்பம், 2 மீனை எல்லாருக்கும் பரிமாறும் போது நீ தான் கொடுத்த நான் உன்னை அங்கு அவருடன் பார்த்திருக்கிறேன் என்று சொன்னாள். அதற்கு பேதுரு ஆமாம் என்று சொல்லி இருந்தால் அன்றைக்கே அங்கு அவருக்கு ஒரு அற்புதம் நடந்திருக்கும், ஆனால் அவர் இல்லை என்று சொல்லி மறுதலித்தார். பின்பு அவர் பரிசுத்த ஆவியைப் பெற்ற போதுதேவவல்லமை அவருக்குள்வந்தது.அப் 4:13-ல் பேதுருவும் யோவானும் பேசுகிற தைரியத்தை அவர்கள் கண்டு, அவர்கள் படிப்பறியாதவர்களென்றும் பேதைமையுள்ளவர்களென்றும் அறிந்தபடியினால் ஆச்சரியப்பட்டு, அவர்கள் இயேசுவுடனேகூட இருந்தவர்களென்றும் அறிந்துகொண்டார்கள். பரிசுத்த ஆவியைப் பெற்ற பின்பு பேதுருவுக்குள் பயமே இல்லை. இயேசுவை மறுதலித்து பயந்து ஓடின பேதுரு, பரிசுத்த ஆவியைப் பெற்ற பின்பு கல்வி அறிவு இல்லாதவனாக இருந்தும் அவன் பேசுகின்ற தைரியத்தைக் கண்டு எல்லாரும் ஆச்சரியப்பட்டார்கள்.
பேசுவதற்கு ஒரு தைரியம் வேண்டும் அந்த தைரியம் பரிசுத்த ஆவியைப் பெற்றபின்பு பேதுருவுக்கு கிடைத்தது. ஒருமுறை இயேசு சீஷர்களின் பாதங்களை கழுவும் போது பேதுரு என் கால்களை நீர் கழுவக் கூடாது என்று சொன்னார். நான் உன் கால்களை கழுவா விட்டால் என்னிடத்தில் உனக்கு பங்கு இல்லை என்று சொன்னவுடன், என் கால்களை மாத்திரம் அல்ல என்னை முழுவதும் கழுவும் என்று பேதுருசொல்லுகிறார். இதற்குப் பெயர்தான் பேதைமை.மனசில் பட்டதை அப்படியே சொல்வது. படிப்பறிவில்லாத, பேதமையுள்ள பேதுரு எவ்வளவு அருமையாக பேசுகிறார் என்று சொல்லி ஜனங்கள் ஆச்சரியப்பட்டார்கள். நம்மை பார்த்து யாராவது ஆச்சரியப்பட்டு இருக்கிறார்களா? உங்கள் கணவரை பார்த்து அல்லது மனைவியை பார்த்து நீங்கள் ஆச்சரியப்பட்டு இருக்கிறீர்களா? அப்படி இருந்தீர்களானால் உங்கள் வீட்டில் உள்ளவர்கள் அனைவருக்கும் உங்கள் மீது மரியாதை இருக்கும். பேதுரு பேசினதை கேட்டு ஆச்சரியப்பட்ட ஜனங்கள் இறுதியில் ஒன்றை கண்டு பிடித்தார்கள் இவர் இயேசுவோடு கூட இருந்தவர் என்று. நாமும் இயேசுவோடு கூட இருக்க வேண்டும்.
2. நமக்குள் ஒற்றுமை வேண்டும்
இன்று ஒருநாள் நான் சர்ச்சுக்கு போகிறேன், ஒருநாள் நான் ஜெபம் பண்ணுகிறேன்று, ஒருநாள் நான் வேதம் வாசிக்கிறேன் என்றுசொல்லுவோமானால்தேவனோடு உள்ள நம்முடைய உறவு அறுந்து போய்விடும். தண்ணீர் இறைக்கின்ற கிணற்றில் தண்ணீரில் நனைந்து கிடக்கும் கயிறு விரைவில் அறுந்து போவது போல, கர்த்தரைத் தேடாமல், அவரோடு இராமல், உலகத்தின் பின்னே போய் கொண்டே இருப்போம் என்றால் நமக்கும் அவருக்கும் இடையில் இருக்கின்ற உறவு அறுந்து போய்விடும். இயேசு சொல்லுகிறார் என்னோடு இராதவன் எனக்கு விரோதியாக இருக்கிறான் என்று. நாம் அவரோடு இராவிட்டால் சாத்தான் நமக்குள் களைகளை விதைத்து விடுவான். அவர் கடின இருதயம் உள்ளவர், விதைக்காத இடத்தில் அறுக்கிறவர் என்று தெரியாதா உனக்கு என்று சொல்லுவான். ஒருவர் நமóமை ஒரு விசேஷத்திற்கு அழைத்திருக்கிறார், ஆனால் நாம் செல்ல முடியவில்லை. அடுத்த முறை அவரை பார்க்கும் போது நமக்குள் குற்றம் மனசாட்சி ஏற்படும்.
ஒரு நபரிடத்தில் சிலர் கடன் வாங்கி இருந்தால் சொன்ன தேதியில் அவர் கடனை திருப்பிக் கொடுக்க முடியவில்லை என்றால் கடன் கொடுத்தவரிடத்தில் இருந்து அவருக்கு போன் வரும். உடனே போனை சுவிட்ச் ஆப் செய்வது அல்லது வேறு ஒரு நம்பரை மாற்றி வைத்துக் கொள்வார்கள். இப்படிப்பட்டவர்களிடம் நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இதற்குக் காரணம் என்னவென்றால் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற முடியாமல் போவது தான், உண்மையில்லாமல் இருப்பது தான். சாத்தான் நம்மை எளிதாக தட்டிவிட்டு சென்று விடுவான். காட்டுக்கு ராஜா சிங்கம், அது என்ன செய்யும் என்றால் கூட்டமாக மேய்ந்து கொண்டிருக்கும் மான்களை அல்லது மாடுகளை கவனித்துக் கொண்டிருக்கும். பின்பு ஒரு சத்தம் போடும், இதைக் கேட்டவுடன் மான்களாக இருந்தாலும் சரி, மாடுகளா இருந்தாலும் சரி உடனே சுதாரித்து ஒரு எதிரி, நம்மை தாக்க, கொல்ல வருகின்றான் என்று அறிந்து ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையை நோக்கி ஓட ஆரம்பிக்கும். முதலில் சிங்கம் கூட்டத்தை கலைத்து தனித்தனியே அவைகளை சிதறடிக்கும், பின்பு தனியாக ஓடிக் கொண்டிருப்பதின் மீது பாய்ந்து அதைகொன்றுவிடும். இன்றைக்கு சாத்தானுடைய வேலையே ஜனங்களை தேவனிடத்தில் இருந்து பிரித்து சிதறடிப்பது தான். தனிமைப்படுத்துவது தான்.
நம்முடைய வேலையை, ஜெபத்தை நிறுத்துவது தான்.தேவப்பிரன்னத்தை அனுபவிக்க விடாமல் அவர்களை தடுப்பதுதான். ல உங்கள் வயிற்றுக்கு நீங்கள் சாப்பிட்டால் தான் பசி அடங்கும். உங்கள் பிரச்சனைக்கு, உங்கள் தேவைக்கு நீங்கள் ஜெபித்தால் தான் அந்த ஜெபத்துக்கு பதில் வரும், ஆசீர்வாதம் உங்களுக்கு கிடைக்கும். இன்னொருத்தர் ஜெபிப்பார், அவர் பார்த்துக்கொள்வார் என்று சொன்னால் அது எப்படிநடக்கும்.சாத்தான் இந்த கடைசி காலத்தில் தனக்கு கொஞ்ச காலம் தான் உண்டு என்பதை அறிந்து ஜனங்களை சிதறடிக்க பார்க்கிறான். தேவனை விட்டு பிரிக்கப் பார்க்கிறான். சாத்தான் இந்த பூமியில் மிக எளிதாக வருகிற இடம் எது என்று உங்களுக்கு தெரியுமா?.தேவப்பிள்ளைகள் கூடுகின்ற இடத்தில் தான். அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியே, நீ வானத்திலிருந்து விழுந்தாயே! ஜாதிகளை ஈனப்படுத்தினவனே, நீ தரையிலே விழ வெட்டப்பட்டாயே! நான் வானத்துக்கு ஏறுவேன், தேவனுடைய நட்சத்திரங்களுக்குமேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன், வடபுறங்களிலுள்ள ஆராதனைக் கூட்டத்தின் பர்வதத்திலே வீற்றிருப்பேன் என்றும், நான் மேகங்களுக்கு மேலாக உன்னதங்களில் ஏறுவேன், உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்றும் நீ உன் இருதயத்தில் சொன்னாயே. ஆனாலும் நீ அகாதமான பாதாளத்திலே தள்ளுண்டுபோனாய். ஏசாயா 14:12-15.கத்தோலிக்க மொழிபெயர்ப்பில் இன்னும் தெளிவாக தேவப் பிள்ளைகள் கூடுகிற இடத்தில் அவன் வருவான் என்றுசொல்லப்பட்டுள்ளது.
3. ஒருமனமாய் ஜெபிக்க வேண்டும்
அல்லாமலும், உங்களில் இரண்டுபேர் தாங்கள் வேண்டிக்கொள்ளப் போகிற எந்தக் காரியத்தைக் குறித்தாகிலும் பூமியிலே ஒருமனப்பட்டிருந்தால், பரலோகத்தில் இருக்கிற என் பிதாவினால் அது அவர்களுக்கு உண்டாகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். மத்தேயு 18:19. என் நாமத்தில் எங்கே இரண்டு பேராவது மூன்று பேராவது ஒருமனப்பட்டு ஜெபிக்கின்ற இடத்தில், தேசத்துக்காக ஜெபிக்கின்ற இடத்தில் நான் வருவேன் என்று தேவன் சொல்லுகிறார். ஒருமனப்பட்டுஇவர்கள் ஜெபிக்கிறார்களா?இதனால்தானே ஆண்டவர் இவர்களுடைய ஜெபத்தை கேட்கிறார் என்று அறிந்த சாத்தான் இன்றைக்கு நிறைய சபைகளில், ஆராதனைகளில், கூட்டங்களில் இறங்கி ஒருவருக்கு விரோதமாக ஒருவர் பேசும்படி செய்கிறான், இருவருக்கு இடையில் கருத்து வேறுபாடுகளையும் உண்டாக்குகிறான், ஏனென்றால் ஒருமனமாக அவர்கள் இருந்தால் தானே ஜெபம் கேட்கப்படும், தேவனை ஆராதிப்பார்கள், ஒற்றுமையாக இருப்பார்கள்.தேவனுக்காக செயல்படுவார்கள் என்று சொல்லிசபைகளை சிதறடிக்கிறான்.என் மேல் அவர்கள் கவனம் வைக்க கூடாது, என் காரியத்தில் அவர்கள் தலையிடக்கூடாது என்று சாத்தான் நினைத்து தேவப் பிள்ளைகளை சிதறடிக்க பார்க்கிறான். ஒருவன் ஆயிரம் பேரையும், இருவர் பதினாயிராம் பேரையும் துரத்துவார்கள் என்று வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது. எனவே நாம் கூடி ஜெபிக்கும் போது ஒருமனமாய் ஜெபிக்கும் போது சாத்தானின் கிரியைகள், சூழ்ச்சிகள் அழிக்கப்படுகிறது. அவனுடைய தந்திரங்கள் செயலிழக்கிறது அவன் நம்மை விட்டு ஓடிப் போவான்.
இன்றைக்கு சபையில் நன்றாகப் பாடி, ஆராதனை செய்து, தேவனை துதித்து மகிமைப்படுத்தி விட்டார்கள் என்றால் அங்கேஒருமனம், ஒற்றுமை உடைக்கப்பட்டு, சபைகள் சிதறடிக்கப்படுகிறது. குடும்பங்களிலும் சாத்தான் ஒருமனதை கெடுத்து மனைவியை கணவனோடு ஒத்துப்போக விடாமல், மாமியார் மாமனாரோடு ஒத்துப்போக விடாமல், கணவன் மனைவியோடு ஒத்துப்போக முடியவில்லை, மற்றவர்களோடும் ஒத்துப்போக முடியவில்லை. கணவன் வேண்டும் ஆனால் அவனை சுற்றியுள்ள அவனுடைய சொந்த பந்தங்கள் தேவையில்லை என்று சொல்ல வைக்கிறான். ஏன் இப்படி நடக்கிறது என்றால் சாத்தான் அவர்கள் ஒருமனதை கெடுத்து ஜெபத்தை நிறுத்தி, அவன் மேல் அவர்கள் கவனம் வைத்துவிடக்கூடாது என்று சொல்லி அவர்களை எப்பொழுதும் பிரச்சனையிலேயே வைக்கிறான். அவர்கள் முடக்கப்பட்டு ஜெபிக்காமல் சிதறடிக்கப்பட வேண்டும் என்று அவன் திட்டம் தீட்டுகிறான். அவனுக்கு நாம் இடம் கொடுக்கக் கூடாது, நமக்குள் அவனை விடவும் கூடாது.
4. பெருமையாய் இருக்க கூடாது
இன்றைக்கு உண்மையாய் ஊழியம் செய்கின்ற ஒவ்வொருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடுகளை கொண்டு வருகிறான். ஒரு மனதை கெடுத்து போடுகிறான். அவனுக்கு நாம் இடம் கொடுக்கக் கூடாது, நமக்குள் அவனை விடவும் கூடாது.நீதிமான் என்னைத் தயவாய்க்குட்டி, என்னைக் கடிந்துகொள்ளட்டும், அது என் தலைக்கு எண்ணெயைப் போலிருக்கும், என் தலை அதை அல்லத்தட்டுவதில்லை, அவர்கள் இக்கட்டுகளில் நான் இன்னும் ஜெபம்பண்ணுவேன். சங் 141 5.பவுல் அப்போஸ்தலன் கொட்டு வாங்கி இருக்கிறார் போல, அதனால் தானó அவர் சாத்தான் கொட்டும் தூதனை போல் இருக்கிறது என்று சொல்லுகிறார். அப்பொழுது தான் ஒரு வலி வரும், வேதனை வரும்நான் என்னை உயர்த்தாதபடிக்கு, கர்த்தர் எனக்கு கொடுத்த வரங்களை, வெளிப்பாடுகளை குறித்த அகந்தை, பெருமை எனக்குள் வராதபடிக்குஅது என்னை குட்டும் சாத்தானுடைய தூதன் என்கிறார். அது என்னை விட்டு நீங்கும்படிக்குமூன்று முறை அதற்காக ஜெபிக்கிறார். சிலருடைய வார்த்தைகளை கேட்டால் நேரடியாக சாத்தானே வந்து பேசுவது போல் இருக்கும். பாம்பின் விஷம் அவர்கள் நாவில் இருக்கும். அவர்கள் பேசுகின்ற வார்த்தை நமது உள்ளத்தை உடைக்கும், நமக்கு விரோதமாய் இருக்கும். நம் உடனே இயேசுவின் நாமத்தினாலே இந்த விஷம் போன்ற வார்த்தைகள் அழிவதாக என்று சொல்லி ஜெபித்து விட வேண்டும்.சர்ப்பங்களையும், தோள்களை மõதிப்பீர்கள், சாவுக்கேதுவான யாதென்றைக் குடித்தாலும், அது உங்களை சேதப்படுத்தாது என்று வசனம் சொல்லுகிறது.
சாத்தான் பிரச்சனைகளை, போராட்டங்களை கொடுத்து தரிசனத்தை இழக்கச் செய்வான்.ஊழியத்தை முடக்க பார்ப்பான் ஆனால் நாம் அவனுக்கு இடம் கொடுத்து விடக்கூடாது. நாம் தேவனோடு இருந்தால் அவன் நம்மை பார்த்து வெட்கப்பட்டு ஓடிப்போய் விடுவான். சாத்தான் என்ன செய்வான் என்றால் நமக்குள் ஒரு பெருமையை, அகந்தையை கொண்டு வந்து நம்மை தேவனுக்காக செயல்பட விடாமல் செய்து விடுவான். ஆதியாகமத்தில் நீங்கள் வாசித்துப் பார்த்தீர்களானால் நோவா காலத்தில் வாழ்ந்த மனிதர்களையும், அவருக்கு முன்னால் உள்ள மனிதர்களையும் தேவன் அளித்து விட்டார். 8 பேரைமாத்திரம் தான் பேழைக்குள் வைத்து அவர்களைபாதுகாத்தார். இந்த அழிவு வரப்போவதை குறித்து நோவா எல்லாரிடமும் சொல்லி இருப்பார். அந்த எட்டு பேருக்கும் கண்டிப்பாகதெரிந்திருக்கும்.இந்த எட்டு பேரை வைத்து ஒரு சந்ததியை உருவாக்கி, அவருடைய ராஜ்யத்தை கட்ட வேண்டும் என்று தேவன் நினைத்தார். இந்த எட்டு பேரும் பழுகிப் பெருகி பூமியை நிரப்பி விட்டார்கள்.
சில பேருக்கு தொழில் வளர்ந்து பணம், வசதி வந்து விட்டால் தலைகால் புரியாமல் திரிவார்கள். தாங்கள் முன்பு இருந்த நிலையை மறந்து விடுவார்கள். அவர்களுக்குள் ஒரு பெருமை அகந்தை வந்துவிடும். அதேபோலஇந்த எட்டு பேருக்குள்ளேயும் வந்துவிட்டது. நாம் பேழைக்குள் இருந்து வந்தோமே, தேவனாலó பாதுகாக்கப்பட்டோமே, இது அவர் தந்து ஜீவன் என்பதை மறந்துவிட்டு இவர்கள் வேற்றுமையாக திரிய ஆரம்பித்தார்கள். கொரோனா வந்த சமயத்தில் நாம் யாவரும் வீட்டை விட்டு வெளியே போக முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்தோம். முழு உலகமும் ஸ்தம்பித்து போய் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றது. இனி வரும் காலங்கள் இதைவிட இன்னும் பயங்கரமாய் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அந்த கொரோனா காலத்தில் இருந்து நாம் மீட்கப்பட்டு,நமகóகு ஜீவனைத் தந்து நம்மை தேவன் வாழ வைத்திருக்கிறார் என்பதை நாம் நினைத்து செயல்பட வேண்டும்.ஜெபம் பண்ண நேரமில்லை,வேதம் வாசிக்க நேரம் இல்லை என்று சொல்லக்கூடாது. பெருமை பாராட்டிக் கொண்டு திரியக்கூடாது.
5. தாழ்மையாக இருக்க வேண்டும்
ஆதியாகமத்தில் ஜனங்கள் ஒன்றுகூடி ஒரு கோபுரத்தை கட்டினார்கள்.பின்னும் அவர்கள், நாம் பூமியின்மீதெங்கும் சிதறிப்போகாதபடிக்கு, நமக்கு ஒரு நகரத்தையும், வானத்தை அளாவும் சிகரமுள்ள ஒரு கோபுரத்தையும் கட்டி, நமக்குப் பேர் உண்டாகப் பண்ணுவோம் வாருங்கள் என்று சொல்லிக்கொண்டார்கள். ஆதி 11 4, தேவனை நேரடியாக நாம் தொழுது கொள்ள வேண்டும், நாம் பூமியின் மீதெங்கும் சிதறி போகாதபடிக்கு நமக்கு ஒரு கோபுரத்தை கட்டுவோம் என்றார்கள். தற்போது எங்கு பார்த்தாலும் ஜாதியின் அடிப்படையில் சபைகளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இவை எல்லாம் நல்ல ஆவி கிடையாது. நீங்கள் இன்ன ஆவியுள்ளவர்கள் என்று உங்களை நீங்களே ஆராய்ந்து பாருங்கள் என்று இயேசு சொல்லி இருக்கிறார். சுகபோகமான வாழ்க்கையை விரும்பாதீர்கள் அது வேண்டாம். அப்படி விரும்பினால் அதற்குரிய பலனை நாம் அனுபவித்தாக வேண்டும். மனுபுத்திரர் கட்டுகிற நகரத்தையும் கோபுரத்தையும் பார்க்கிறதற்குக் கர்த்தர் இறங்கினார். ஆதி 115. என் இரட்சிப்பை கொடுத்தேனே, துதியை சொலலச் சொன்னேனே, கிருபையை தந்தேனே எனக்காக ஏதாவது செய்வார்களா என்று பார்ப்பதற்கும், என்னுடைய காரியங்களில்நற்காரியங்கள் ஏதாவது உன்கிட்ட இருக்கிறதா, எனக்காக கனி கொடுப்பாயா என்றுபார்த்தார்.ஆனால் அங்கு கனி ஒன்றும் கொடுக்கவில்லை, இதனால் கர்த்தர் அவர்கள் கட்டுகிற கோபுரத்தை கட்டாமல்,அவர்களுடைய பாஷையை தாறுமாறாக்கி பூமியின் மீதெங்கும் சிதறிப் போக பண்ணினார். சிதறி போன மொழியை, சிதறிப் போனவர்களை ஒன்று சேர்க்க தான் தேவன் அவருடைய பிள்ளைகளுக்கு அந்நிய பாஷையை மொழியாக கொடுத்தார், அவர்கள் நவமான பாஷைகளை பேசினார்கள். இதை கேட்ட எல்லாரும் இவர்கள் நம்முடைய பாஷையை பேசுகிறார்கள் என்றுஆச்சரியப்பட்டார்கள். அவர்கள் தேவனுடைய மகத்துவங்களை பேசுகிறதை நாம் கேட்கிறோமே என்று சொன்னார்கள். சிதறடிக்கப்பட்ட மக்களை ஒன்று சேர்க்கத் தான் இயேசு இந்த பூமிக்கு இறங்கி வந்தார்.
பெருமையாக, நான் எப்படிப்பட்ட ஆளு தெரியுமா?என்று சொல்லிக் கொண்டு வெளியிலó நம்மை பெரிய ஆளாக காட்டுவது. இப்படி எல்லாம் நாம் இருக்க கூடாது. பேதுருவுக்குள்ளே ஒரு பெருமை இருந்தது பேச்சில் அல்ல பார்வையிலó, எல்லாரும் இயேசுவை மறுதலித்தாலும் நான் மறுதலிக்க மாட்டேன் என்ற ஒரு பெருமையோடு இருந்தார். தேவாலயத்தில் இரண்டு பேர் ஜெபம் பண்ணினார்கள் ஒருவன் பரிசேயன் மற்றொருவன் ஆயக்காரன். பரிசேயன் நான் அவர்களை மாதிரி இவர்களை மாதிரி இராததினால் உம்மை துதிக்கிறேன் என்று சொல்லி பெருமையாக ஜெபிக்கின்றான். ஆயக்காரன் தன் கண்களை வானத்துக்கு ஏறெடுக்க துணியாமல், தன்னை தாழ்த்தி ஜெபம் பண்ணினான்.தேவன் ஆயக்காரனுடைய ஜெபத்தை கேட்டார் அவன் அல்ல இவனே நீதிமானாக்கப்பட்டான் என்று வேதம் சொல்லுகிறது. ஒருநாளும் நமக்கு உள்ளவைகளை வைத்து நாம் பெருமை பாராட்டிக் கொண்டு திரியக்கூடாது. ஆயக்காரனைப் போல நாம் நம்மை தாழ்த்துவோம் என்றால் தேவனிடத்தில் கிருபையைப் பெற்று நீதிமான்கள் ஆக்கப்படுவோம். தன்னை தாழ்த்துகிற எவனும் உயர்த்தப்படுவான், தன்னை உயர்த்துகிற எவனும் தாழ்த்தப்படுவான் என்று வேதம் சொல்கிறது.
1981 ஆம் ஆண்டு ஒருவர் எனக்கு இயேசுவைப் பற்றி விவரித்து சொன்னார். அப்பொழுது நான் விருதுநகரில் ஒரு பாதரிடம் இருந்தேன். அங்கு டி.ஜி.எஸ் தினகரன் அவர்களுடைய கூட்டம் நடைபெற்றது. என்னை கூட்டத்திற்கு வா என்று அழைத்தார்கள்.நான் அந்த கூட்டத்திற்கு கடந்து சென்றேன். அவர் பாடி ஜெபித்தபோது நான் மணிக்கணக்காக நின்று அதைக் கேட்டேன். அவர் கூட்டத்தை நடத்தி விட்டு சென்று விட்டார்.ஆனால் அவர் பேசின அந்த வார்த்தைக்குள் ஜீவன் இருந்தது. அந்த வார்த்தை என்னோடு பேசிக் கொண்டே இருந்தது. அன்றைக்கு நான் என்னை அர்ப்பணித்தேன். என் மீது இறங்கின அந்த தேவக்கிருபை,என்னை தேவனிடத்தில் முழுவதுமாக நடத்தினது. அன்றிலிருந்து எனக்குள் இருந்த பெருமை, அகந்தையெல்லாம் என்னை விட்டுப் நீங்கினது. இப்பொழுது நான் அல்ல எனக்குள் ஒருவர் வாழ்கிறார், அவர்தான் இயேசு அவருக்கு என் வாழ்க்கையே நான் அர்ப்பணித்திருக்கிறேன். தம்முடைய புயத்தினாலே பராக்கிரமஞ்செய்தார், இருதயசிந்தையில் அகந்தையுள்ளவர்களைச் சிதறடித்தார். லூக்கா 1:51
சில பேருக்கு தொழில் வளர்ந்து பணம், வசதி வந்து விட்டால் தலைகால் புரியாமல் திரிவார்கள். தாங்கள் முன்பு இருந்த நிலையை மறந்து விடுவார்கள். அவர்களுக்குள் ஒரு பெருமை அகந்தை வந்துவிடும். அதேபோலஇந்த எட்டு பேருக்குள்ளேயும் வந்துவிட்டது. நாம் பேழைக்குள் இருந்து வந்தோமே, தேவனாலó பாதுகாக்கப்பட்டோமே, இது அவர் தந்து ஜீவன் என்பதை மறந்துவிட்டு இவர்கள் வேற்றுமையாக திரிய ஆரம்பித்தார்கள். கொரோனா வந்த சமயத்தில் நாம் யாவரும் வீட்டை விட்டு வெளியே போக முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்தோம். முழு உலகமும் ஸ்தம்பித்து போய் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றது. இனி வரும் காலங்கள் இதைவிட இன்னும் பயங்கரமாய் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அந்த கொரோனா காலத்தில் இருந்து நாம் மீட்கப்பட்டு,நமகóகு ஜீவனைத் தந்து நம்மை தேவன் வாழ வைத்திருக்கிறார் என்பதை நாம் நினைத்து செயல்பட வேண்டும்.ஜெபம் பண்ண நேரமில்லை,வேதம் வாசிக்க நேரம் இல்லை என்று சொல்லக்கூடாது. பெருமை பாராட்டிக் கொண்டு திரியக்கூடாது.
6. வல்லமையை பெற்றுக் கொள்ள வேண்டும்
தானியேல் வல்லமையான ஒரு தீர்க்கதரிசி, வெளிப்பாடு வரங்களை பெற்றவர். தானியேலின் தீர்க்கதரிசன புத்தகத்தில் இருப்பவைகள்தான் வெளிப்படுத்தின சுவிசேஷத்திலும் இருக்கிறது என்று ஆராய்ச்சி செய்கிறார்கள். தானியேலின் ஜெபத்திற்கு பதில் வரவில்லை, ஆண்டவர் தூதனை அனுப்பி அவனுடைய ஜெபத்திற்கு பதிலை அனுப்பினார். அப்பொழுது சணல்வஸ்திரம் தரித்தவரும் ஆற்றின் தண்ணீர்களின்மேல் நிற்கிறவருமாகிய புருஷன் தம்முடைய வலதுகரத்தையும் தம்முடைய இடதுகரத்தையும் வானத்துக்கு நேராக ஏறெடுத்து, ஒரு காலமும், காலங்களும், அரைக்காலமும் செல்லும் என்றும், பரிசுத்த ஜனங்களின் வல்லமையைச் சிதறடித்தல் முடிவுபெறும்போதே இவைகளெல்லாம் நிறைவேறித் தீருமென்றும் என்றென்றைக்கும் ஜீவித்திருக்கிறவர் பேரில் ஆணையிடக் கேட்டேன். தானி 12 7. பரிசுத்த ஜனங்களுடைய வல்லமையை சிதறடிக்கும் வேண்டுமென்று சாத்தான் மகாகோபம் கொண்டுஇறங்கி இருக்கிறான். உங்கள் வீடுகளில் இறங்கி ஜெபத்தை தடை செய்ய வேண்டும்,குடும்பங்களை கெடுக்க வேண்டும் என்று சொல்லி இறங்கி இருக்கிறார். சிம்சோனை பார்த்து தெலிலாள் கேட்கிறாள் உன் மகா பெரிய பலம் எங்கிருந்து வந்தது என்று. நான் அதை கண்டுபிடிக்க வேண்டும் எனக்கு சொல் என்று கேட்டாள். பரிசுத்த வல்லமையை சிதறடிக்க வேண்டும். உங்கள் பலத்தை சிதறடிக்க வேண்டும் என்று சாத்தான் திரிகிறான். பலத்தை இழக்க வைக்க, நம்பிக்கையை இழக்க வைக்க வேண்டும் என்று சொல்லி சாத்தான் போராடுகிறான். பயங்கரமான காரியங்களை செய்து கொண்டிருக்கிறான், இப்படிப்பட்ட ஒரு காலத்தில்தான் நாம் இருக்கிறோம்.
சீஷர்களை சிதறடித்து விட்டான், ஜெபத்தை நிறுத்தி விட்டான். ஒரு மனதை கெடுத்து விட்டான். அதற்குத்தான் ஆண்டவர் உயிர்த்தெழுந்த பின்பு அவர்களை நோக்கி நீங்கள் போய் மேல் வீட்டாறையில் காத்திருங்கள் என்று சொன்னார். பரிசுத்த ஆவியானவர் உங்கள் மேல் வருவார் என்று சொல்லி அந்த நாளில் அவர்களை ஒன்று சேர்த்தார்.சிதறடிக்கப்பட்ட அனைவரையும் ஒன்று சேர்த்தார். காணாமல் போன அந்த 10 கோத்திரத்தார் இந்த உலகத்தில் எங்கு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால் பரிசுத்த ஆவியானவர் வரும்போதுகாணாமல் போன இந்த 10 கோத்திரத்தாரும் எங்கிருந்தாலும் வருவார்கள் என்று உலகமேபார்க்கும்படிக்கு கர்த்தர் ஒரு பெரிய எழுப்புதலை கொண்டு வரப்போகிறார். இதில் இந்தியாவிலிருந்து ஒரு கோத்திரம் புறப்படும். நாம் ஒரு கோத்திரம் உங்களுக்கு தெரியுமா?நம்மை தேவன் ஒரிஜினலாக மாற்றப் போகிறார். சத்தியத்தை அறிவிக்க சீஷர்களை அனுப்பும் போது கூட தேவன் காணாமல் போன இஸ்ரவேல் வீட்டார் இடத்தில் போங்கள் என்று சொல்லித்தான்அனுப்பினார்.
இன்றைக்கு ஊழியத்தில் பணம் முக்கியமில்லை, ஆத்துமாக்கள் தான் முக்கியம். பவுல் அப்போஸ்தலன் எனக்கு லாபமான அனைத்தையும் நான் நஷ்டமென்று எண்ணுகிறேன் என்று சொல்லுகிறார். மூன்றாம் வானம் வரைக்கும்போனவர். அவர் பிரசங்கம் பண்ணினதை ஒருவன் ஜன்னலில் உட்கார்ந்து கேட்டு கீழே விழுந்து விட்டான்.ஆனால் அவனை மறுபடியும் அவர் உயிரோடு எழுப்பினார். ஒரு போதகர்கூட்டத்தில் பேசின ஒருவர் அன்றைக்கு பவுல் பிரசங்கத்தில் ஒருவன் மாடியில் இருந்து விழுந்து மரித்தவனாய் கிடந்தான் அவனை அவர் உயிரோடு எழுப்பினார். இன்றைக்கு நம்முடைய பிரசங்கத்தில் ஒருவர் அந்த மாதிரி விழுந்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டார். அதற்கு ஒரு போதகர் எழுந்து எனக்கு அடக்கம் பண்ண தெரியும், நான் அவனை அடக்கம் பண்ணுவேன் என்று சொன்னார். ஏனென்றால் அவருக்கு அவனை எழுப்பத் தெரியவில்லை. இன்றைக்கு நம்முடைய ஊழியங்கள் இப்படித்தான் இருக்கிறது. ஏனெனில் நம்மிடத்தில் வல்லமை இல்லை, வரங்கள் இல்லை, நான் ஜெபிக்கவில்லை, வல்லமைக்காக நாம் ஏங்கவில்லை. இந்த வல்லமையை சாத்தான்முடக்கி வைத்திருக்கிறான். நம்மை கட்டுப்படுத்தி வைத்திருக்கிறான்.
இந்த மண்ணுக்குள் ஒரு மாணிக்கம் இருக்கிறது. இந்த மகத்துவமான வல்லமை எங்களிடத்தில் இருந்து வரவில்லை, இந்த மண்பாண்டங்களில் தேவனுடைய வல்லமையை, பொக்கிஷத்தை பெற்றிருக்கிறோம் என்று பவுல் சொல்லுகிறார். இன்றைக்கு இந்த மாம்ச திரை கிழிக்கப்படும் போதுதேவ ஆவியானவர் உங்கள் மேல் வல்லமையாக இறங்குவார். உங்கள் குடும்பத்தில் இந்த வல்லமை வெளிப்பட போகிறது. ஆவிகள் அலறி ஓடப் போகிறது, மந்திர வல்லமைகள் அழிக்கப்படுகிறது. அவர் என்னோடு இராதவன் சிதறடிக்கப்படுகிறான் என்று சொல்லுகிறார். இந்த வல்லமையை மட்டுப்படுத்தி உங்களை எழும்ப விடாதபடிக்கு உங்களுக்குள் ஒரு அவநம்பிக்கையை கொடுத்து, ஊருக்கெல்லாம் ஜெபம் பண்ணுகின்ற, ஊரெல்லாம் ஊழியம் செய்கின்ற ஆனா உன் வாழ்க்கையில் இவ்வளவு ஓட்டை இருக்கே அப்படின்னு உங்களை குற்றப்படுத்துவான். இப்படியே நம்மை சிந்திக்க வைத்து சாத்தான் நம்மை சிறைபடுத்த ஆரம்பிக்கிறான். இனி நீங்கள் அவனை சிறைபடுத்த வேண்டும். தேவனுடைய வல்லமையைபெற்று அவனுடைய கிரியைகள், தந்திரங்கள், சூழ்ச்சிகளை முறியடிக்க வேண்டும். அதற்கு நீங்கள் அவரோடு இருக்க வேண்டும் அப்பொழுது தான் அவர் உங்களோடு இருப்பார். ஆண்டவராகிய தேவன் தாமே உங்களை இரட்சித்து, அபிஷேகித்து, அவருடைய வல்லமையான பாத்திரமாக பயன்படவும், அநேகருக்கு ஆசீர்வாதமாகவும் விளங்கச் செய்வாராக.
சில பேருக்கு தொழில் வளர்ந்து பணம், வசதி வந்து விட்டால் தலைகால் புரியாமல் திரிவார்கள். தாங்கள் முன்பு இருந்த நிலையை மறந்து விடுவார்கள். அவர்களுக்குள் ஒரு பெருமை அகந்தை வந்துவிடும். அதேபோலஇந்த எட்டு பேருக்குள்ளேயும் வந்துவிட்டது. நாம் பேழைக்குள் இருந்து வந்தோமே, தேவனாலó பாதுகாக்கப்பட்டோமே, இது அவர் தந்து ஜீவன் என்பதை மறந்துவிட்டு இவர்கள் வேற்றுமையாக திரிய ஆரம்பித்தார்கள். கொரோனா வந்த சமயத்தில் நாம் யாவரும் வீட்டை விட்டு வெளியே போக முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்தோம். முழு உலகமும் ஸ்தம்பித்து போய் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றது. இனி வரும் காலங்கள் இதைவிட இன்னும் பயங்கரமாய் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அந்த கொரோனா காலத்தில் இருந்து நாம் மீட்கப்பட்டு,நமகóகு ஜீவனைத் தந்து நம்மை தேவன் வாழ வைத்திருக்கிறார் என்பதை நாம் நினைத்து செயல்பட வேண்டும்.ஜெபம் பண்ண நேரமில்லை,வேதம் வாசிக்க நேரம் இல்லை என்று சொல்லக்கூடாது. பெருமை பாராட்டிக் கொண்டு திரியக்கூடாது.