Inspiration
உண்மையான கிறிஸ்துமஸ் சந்தோஷம்!
ஹலோ குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா!, ஹேப்பி கிறிஸ்துமஸ் ( ஏஹல்ல்ஹ் இட்ழ்ண்ள்ற்ம்ஹள் )
கிறிஸ்துமஸ்னவே உங்களுக்கு ஒரே ஜாலி, குஷி தானே! (ஏஹப்ச் வங்ஹழ்ப்ஹ் கங்ஹஸ்ங்) ஹாப் இயர்லி வு, புது டிரஸ், கிப்ட்ஸ், கேக், பிரியாணி எல்லாம் கிடைக்கும். கிறிஸ்மஸ் தாத்தாவோடு கேரல்ஸ் எல்லாம் வருவாங்க முக்கியமா வீட்ல எல்லாம் ஸ்டார் கட்டுவாங்க ரொம்ப சந்தோஷமா இருக்குமில்ல. அது நல்லது தான் இந்த சந்தோஷம் எங்கிருந்து நற்ஹழ்ற் ஆகும் தெரியுமா?
2000 ஆயிரம் வருஷத்துக்கு முன்னால பரலோகத்திலிருந்த தேவன் மனிதனாய் பெத்லகேம் ஊரிலே, மரியாள் வயிற்றிலே பிறந்தபோது தான்!. இதை தேவதூதன் மேய்ப்பர்களிடம் எப்படி சொன்னான் தெரியுமா? இதோ! எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்னு சொன்னான். ஆமாம் இயேசப்பாவுடைய பிறப்பு நம்ம எல்லாருக்கும் ரொம்ப சந்தோஷம் தானே, அதனால் தானே கிறிஸ்துமஸ் வந்துச்சு.
இன்னும் இதைவிட பெரிய சந்தோஷம் இருக்கு தெரியுமா….? நமக்காக மனிதனாய் பிறந்த இயேசப்பா நமக்காக பாடுபட்டு, நம்முடைய பாவங்களை போக்குவதற்காக சிலுவையிலே நமக்குப் பதிலாக மரித்து மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தாங்க, இந்த சந்தோஷமான நற்செய்தியை நம்பி, இயேசப்பா, என் பாவங்களையெல்லாம் மன்னித்து, என் உள்ளத்திற்குள்ள வாங்க இயேசப்பா என்று நாம் கூப்பிட்டால் போதும் அவர் நம்ம உள்ளத்தில் வந்திருவார், இரட்சகராக பிறந்திருவார். நம்ம உள்ளத்திலிருந்து பாவம், பயமெல்லாம் நீங்கி, ஒரு புது சந்தோஷம், நம்பிக்கை வரும் இது தான் உண்மையான கிறிஸ்துமஸ் சந்தோஷம். இப்ப புரியுதா? உங்களுக்கு அந்த சந்தோஷத்தை பெற்றோரோ, பெரியர்களோ, எந்தப் பொருளுமோ தரவே முடியாது.
இயேசப்பா இந்த உலகத்தில் பிறக்கிறதற்கு இயேசப்பாவுடைய அம்மா மரியாள் தன் வயிற்றிலே, உள்ளத்திலே இடங்கொடுத்து ஏற்றுக்கொண்டதாலே, என் இரட்சகராகிய என் தேவனில் சந்தோஷமாயிருக்கிறேன்னு சொன்னாங்க. குட்டீஸ் நீங்களும் இயேசப்பாவை உங்க இரட்சகரா, அப்பாவா ஏற்றுக்கொள்வீங்களானால்? உடனே இயேசப்பா அந்த இரட்சிப்பின் சந்தோஷத்தை நிச்சயமாய் தந்திருவார். நீங்க பெறóற இன்பத்தை உலகத்துக்கும், உங்க ஊழ்ண்ங்ய்க்ள் -க்கும் சொல்ல மறந்திராதீங்க!. ஞந், குட்டீஸ் சங்ஷ்ற் வங்ஹழ் சந்திப்போம், ஆஹ்ங்!
ஜெபம்.
அன்புள்ள இயேசப்பா நீங்க என் பாவத்தை மன்னித்து, என் உள்ளத்திற்குள்ள வாங்க, உங்கள என் இரட்சகரா, அப்பாவா ஏற்றுக்கொள்கிறேன். உண்மையான கிறிஸ்துமஸ் சந்தோஷத்தை எனக்கும், என் ஊழ்ண்ங்ய்க்ள் – க்கும் தாங்க. இயேசுவின் நாமத்தில் பிதாவே ஆமென்.
மனப்பாட வசனம்.
என் ஆத்துமா கர்த்தரை மகிமைப்படுத்துகிறது, என் ஆவி என் இரட்சகராகிய தேவனில் களிகூருகிறது. லூக்கா 1:46,47 இயேசுவே – இரட்சகர் மத் 1:21.
Youth Special - Sis. Prema David